25.12.10

நீ பாதி நான் பாதி பெண்ணே!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீ பாதி நான் பாதி பெண்ணே!
-------------------------------------------------
இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவர் ஒருவரின் ஆக்கம் அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள். பிடித்திருந்தால், அவரை ஊக்கப் படுத்தும் முகமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உட்தலைப்பு: "உடலில் தரமுடியாவிட்டாலும் மனதிலாவது பாதி இடம் தந்தால் இல்லறம் நல்லறமே!".

இது கலியுகம். கலியுகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று அறிந்த நம் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டுப் போனவைதான் இன்று நடக்கின்றது. தவசிகள், ஞானிகள், சித்தர்கள் என்று தமது பிறப்பு மற்றும் தவ வலிமையால் மேன்மையுற்றவர்கள் அவர்கள்.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். இன்று உலகம், மனிதன் வாழ்க்கை உட்பட அனைத்தும் இயந்திரமயமாகி விட்டது. அதை அறிந்திருந்த அவர்கள், இயந்திர உலகத்தில் மனிதன்  மனதை எவ்வாறு கட்டு படுத்தி வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இறைவனிடத்தில் நமது மனதைச் செலுத்தி வீடு பேறு என்னும் மோட்சம் நிலையை அடைய வேண்டிய வழிமுறைகளையும்  நமக்கு உணர்த்திவிட்டுச் சென்று உள்ளார்கள்.

இன்றையப் பொருளாதாரச் சூழலில் அதற்கு, அதாவது இறைவனிடம் மனதைச் செலுத்துவதற்கு நமக்கு முழு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்பதுதான் உண்மை!

சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்  .

நமது நாட்டில் உள்ள எண்ணற்ற கோவில்களுக்கு இருவகையான வழிகளில் ஸ்தல புராணம் உண்டு. ஒன்று சித்தாந்தம் மற்றது வேதாந்தம்.

சித்தாந்தம் என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப்போன அல்லது ஒத்துப் போகின்ற வழிகளில் இருக்கும். இங்கு தனிநபர் ஆராய்ச்சிக்கு முழு இடம் உண்டு.  

வேதாந்தம் என்பது சித்தாந்தத்தைப் போன்றதுதான். ஆனால் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றி வருபவை ஆகும். அங்கு தனி நபர் ஆராய்ச்சிக்கு இடம் இல்லை.

சித்தாந்தத்தைப் பின்பற்றிக் கூறப்படும் ஸ்தல புராணம் ஒன்றைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

வாசுதேவநல்லூர் என்னும் நல்லூரின் முற்பெயர் வாசவனூர். அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் என்னும் புகழ்பெற்ற ஆலயம் அங்கே உள்ளது.

தென்மேற்குத் தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த ரம்மியமான பகுதியில், அமைந்துள்ள ஊர்   வாசுதேவநல்லூர். பொதிகைமலைச் சாரல் அவ்வப்போது வந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டுப்போகும்.

வாசுதேவநல்லூரின் கடைப் பகுதியில், முற்காலத்தில், ஒரு பெரும் தவசி, நித்தமும் சிவன் மீதே சிந்தனை வயப்பட்டு சிவபூசை செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த குடிலின் கிழக்குப் பகுதியில், மக்களின் பயன் பாட்டில் நடைபாதை ஒன்றும் இருந்தது.

ஒரு நாள் பூஜைக்கு வேண்டிய பால் இல்லாமல் போய் விடுகின்றது. அதிகாலைப் பொழுது. தவசி குடிலின் வாயிலில் வந்து நின்று யாராவது பாலுடன் செல்கிறார்களா என்று பார்க்கத் துவங்கினார்.
 
வாசுதேவன் என்னும் பெயர்கொண்ட மாயக் கண்ணனின் மனம் கவர்ந்த ஆயர்குல வழி வந்த பெண்கள், தங்கள் கிராமத்திலிருந்து, கறந்த பாலுடன் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு அதை விற்கும் பொருட்டுச் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் பெண்களிடம், தவசி தன் கோரிக்கையை வைக்க, அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். கடைசியாக நடந்து வந்த இளம் பெண் ஒருத்தி மட்டும் முன் வந்து அவருக்கு, அவர் நீட்டிய பாத்திரத்தில் பாலை ஊற்றித் தருகின்றாள்.

அன்பிற்கு இலக்கணமான அந்த ஆயர் குலத்து இளம் பெண், பொருள்
ஏதும் வாங்கிக் கொள்ளாமல் தவசியின் பூஜைக்கு வேண்டிய பாலை தந்துவிட்டுச் சென்ற அன்றைய தினம், அவள் கொண்டு சென்ற பால் முழுவதும்  விற்றுத் தீர்ந்து விடுகின்றது. அவளுடைய கிராமத்தில்
இருந்து சென்ற மற்ற பெண்களுக்குக் கொண்டு சென்ற பாலில்
சரிபாதிகூட விற்கவில்லை.

மறுநாளும் வழக்கம் போல பால் விற்க செல்லும் அந்த இளம்பெண், செல்லும் வழியில் நிற்கும் தவசியின் சிவ பூஜைக்கு வேண்டிய பாலைக் கொடுத்துவிட்டுச் செல்ல, அன்றும் அதுவே நடக்கிறது.

அப்படியே அனுதினமும் அது வாடிக்கையாகி விடுகிறது. ஒவ்வொரு நாளும் அவள் கொண்டு செல்லும் பால் மட்டும் விரைவில் விற்று விடுகின்றது. ஆனால் மற்றவர்களின் பால் மட்டும் மிச்சமாகிவிடுகிறது.

அனுதினமும் நடக்கும் அந்த நிகழ்வை, அவளுடைய கிராமத்துப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வியந்த வண்ணம் அவள் என்ன மாயம் செய்கிறாள் என்பதை அறிய விரும்பினார்கள். ஒரிரு நாட்கள் ஆரம்பம் முதல் அவளின் அனைத்து செயலையும் கண்காணித்தார்கள். தவசிக்குக் காசு வாங்காமல் பால் கொடுத்துவிட்டுச் செல்வது அவர்கள் கண்களையும், மனதையும் உறுத்தியது.

அவளுடைய உடன்பிறப்புக்களிடம் போட்டுக் கொடுத்தார்கள். தவசியுடன், அவளுக்குத் தகாத உறவு இருப்பதாகவும் சொல்லி வைத்தார்கள்.

சந்நியாசியிடம், அதாவது தவசியிடம் தங்கள் சகோதரிக்கு என்ன உறவு என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், மறைமுகமாகச் சென்று, அவளைக் கையும் களவுமாகப் பிடிக்க நினைத்தார்கள் அந்த இளம் நங்கையின் சகோதர்கள்.

அதை அறியாத அந்த ஆயர்குலத்துப் பெண்ணோ எப்பொழுதும் போல சிவ பூஜைக்கு வேண்டிய பாலைச் சந்நியாசியிடம் கொடுக்கும்போது, மறைவாக அவளைத் தொடர்ந்து வந்த அவளுடைய சகோதர்கள், அதைக் கண்ணுற்று, கோபமடைந்ததோடு அரிவாள் கொண்டு அவ்விருவரையும் வெட்டிச் சாய்க்க முற்பட்டார்கள்.

திடுக்கிட்ட சந்நியாசி, அவர்களிடமிருந்து தப்பிக்க ஒடத்துவங்கினார். பால்காரப் பெண்ணோ சகோதரர்களின் செய்கையைக் கண்டு அவளும் சன்னியாசி சென்ற வழியிலேயே தானும் ஓடத்துவங்கினாள்.

சற்று தூரம் ஓடிய சந்நியாசி, காட்டின் துவக்கப் பகுதியில் இருந்த ஒரு பெரிய புளியமரத்தின் பொந்துக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டார். மரப் பொந்திற்குள் அவர் ஒழிவதைப் பார்த்த பால்காரப் பெண்ணும், சகோதர்களிடம் உண்மையை சொல்லிப் புரியவைப்பது இயலாத காரியம் என்று எண்ணி, தான் வணங்கும் சிவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு, சந்நியாசியே தஞ்சம் என்று தானும் அந்த புளியமரத்து பொந்துக்குள் சந்நியாசியோடு சென்று ஒழிந்து கொண்டாள்.

இருவரையும் துரத்தி வந்த பால்காரியின் சகோதர்கள், அவர்கள் பொந்திற்குள் நுழைவதைக் கண்ணுற்று, அதன் அருகே, வந்து நின்று வெளியே வரும்படி கோபத்துடன் குரல் கொடுத்தார்கள்.

எந்த பதிலும் இல்லை.

மீண்டும் மீண்டும் குரல் கொடுக்க, எந்தப் பதிலும் வரவில்லை. எந்தச் சலனமும் இல்லை.

புளியமரப் பொந்திற்குள் மறைந்திருப்பவர்களை, அதிரடியாக வெளியே வரவைக்க வேண்டும் என்று எண்ணி, தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் பொந்தைப் பிளக்கத் துவங்குகிறார்கள்.

என்ன நடந்தது?

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

பொந்தை முழுமையாகப் பிளந்து பார்த்தால், அதிச்சிதான் மிஞ்சியது.

அவர்கள் இருவரையும் அங்கே காணவில்லை!

அடைக்கலம் தேடித் தன்னுடன் வந்தவளுக்குத் தன் மனதிலும் உடம்பிலும் சரிபாதி இடம் தந்து அவளுடன் மாயமாகிவிட்டார் தவ வலிமை மிகுந்த அந்த சிவ சந்நியாசி!

அந்த அதிசயத்தை அறிந்த பொது மக்கள் அந்த இடத்திற்குச் சென்று வழிபாடு  செய்யலாயினர்.

அதை இறைவனின் அதிசயத் திருவிளையாடலாக எண்ணிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மன்னனும் ஒரு பெரும் கோவிலை எழுப்பி அர்த்தனாரீஷ்வர் சிலையை நிறுவி, கோவிலுக்குக் குடமுழுக்கும் செய்தான். பொன்,  பொருள், நிலம் என்று அக்கோவிலின் பராமரிப்புச் செலவுகளுக்கு வேண்டிய தான தர்மங்களையும் செய்தான்.

அந்தப் பகுதி மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு அனைத்து வகையான செல்வங்களையும் அக்கோவிலுக்கு தானமாகத் தந்தனர்.

அக்கோவில் இன்றும் சிறப்பாக இருக்கிறது. மக்களால் வழிபடப் பெறுகிறது.

திருவிழாக்கள் நடக்கும் நாட்களில், சந்நியாசி சிவனை பூஜித்த இடத்திற்கு ஊர் மக்கள், மேளதாளம், வான வேடிக்கை என சகல சாஸ்திர சம்பிராதாயங் களுடன் வந்து முறைப்படி பூஜைகளைச் செய்த பிறகுதான் மற்ற நிகழ்ச்சி களைச் செய்யத் துவங்குவார்கள்.

"சிந்தாமணி நாதர் பிறந்த இடம்!" என்று பெருமையுடன் சொல்லி, அந்த இடத்தில் மண் எடுத்துக்கொண்டு போய்த்தான் ஊர்த் திருவிழாக்களைத் துவங்குவார்கள். காலங்காலமாக நடக்கும் அது இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
 
ஊரில் பத்து நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஊர் மக்கள் அனைவரும் பக்தி மேலோங்க அதில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இக்கதையின் மூலம் அடியேன் சொல்ல வந்த முக்கியமான செய்தி இதுதான்:

"உடலில் தரமுடியாவிட்டாலும், மனையாளுக்கு மனதிலாவது பாதி இடம் தந்தால் இல்லறம் நல்லறமே!".
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம்: S. கண்ணன். பஹ்ரெய்ன்


ஆக்கத்தைத் தந்த வகுப்பறை மாணவர் கண்ணனின் எழில்மிகு தோற்றம்

வாழ்க வளமுடன்!

28 comments:

  1. //இன்றையப் பொருளாதாரச் சூழலில் அதற்கு, அதாவது இறைவனிடம் மனதைச் செலுத்துவதற்கு நமக்கு முழு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்பதுதான் உண்மை!///
    நேரம் இல்லை என்பது சரியான கூற்று அல்ல. இந்த அளவு சாதனங்கள் இல்லாத நாட்களில் எல்லாவற்றையும், கைகளாலேயே செய்து கொண்டு,முன்னேற்றம் மெதுவாக இருந்த காலத்தில் மக்கள் இறைவனுக்காக அதிக நேரம் ஒதுக்கியுள்ளார்கள்.

    உங்கள் ஆக்கம் நன்றாக உள்ளது. தங்க‌ள் ஊர் கோவிலின் ஸ்தல புராணம் என்று நினைக்கிறேன்.ஸ்தல புராணங்களை ஆராய்ந்தால் சரித்திரத்திற்கு உண்டான விட்டுப் போன தொடர்புகள்கிடைக்கும்.
    தஙளைப் போன்ற‌ இளைஞர்கள் ஸ்தல புராணங்களில் கூட ஆர்வம் செலுத்துவது ஆறுதல் அளிக்கிறது.எதிர் காலத்தில் நமது மரபுகளையும், நம்பிக்கைகளையும் எடுத்துச் சொல்ல உங்களை போல ஒரு சிலராவது இருப்பார்கள் என்ற எண்ணமே மகிழ்ச்சி அளிக்கிறது.

    வாசு தேவ நல்லுரில் நெடுஞ்சாலைத் துறைப் பாலம் கட்டியபோது என் பெரியப்பாதான் பொறியாளார். 1920 போலக் கட்டியிருக்கக் கூடும்.அதுதான் அவர் கட்டிய முதல் அரசுப் பணி. அதன் திறப்பு விழாவுக்கு ஆங்கிலேய ஆளுனர் வந்துள்ளார்.திறப்பு விழாவுக்குச் சென்ற பெரியப்பாவை என் தாத்தா மறைந்த செய்தி துரத்தி வந்து விட்டது.திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமலேயே பெரியப்பா நெல்லை திரும்ப வேண்டி வந்து விட்டதாம்.என் அப்பா தன் நாட் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.அந்த வகையில் வாசுதேவ நல்லூர் எங்கள் குடும்பத்துடன் தொடர்புள்ளது.
    உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.உங்கள் ஆக்கத்திற்கு,மைனர்வாள் எப்படி
    பின்னூட்டம் இடுகிறார் என்று பார்ப்போம்.சந்நியாசி கொஞ்சம் மைனர்வாளிடம் வாங்கிக்கட்டிக் கொள்வார் என்று எனக்குத் தோன்றுகிறது.
    உங்கள் புதிய புகைப்படம் ஜோர்.!

    ReplyDelete
  2. மறக்காமல் ஐயா கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டார். கவியரசரின் பாடலும் கைகொடுத்துவிட்டது.

    மஹாகவி பாரதியார் கிறிஸ்து பற்றி எழுதுயுள்ளதைப் பார்ப்போம்.

    "உண்மை என்ற சிலுவையில் கட்டி
    உணர்வை ஆணித்தவம் கொண்டடித்தால்
    வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
    வான மேனியில் அங்கு விளங்கும்..."

    நம் இந்திய வழக்கப்படி சிலுவைக்கு ஒரு புனித விளக்கம் பாரதி அளிக்கிறார்.

    சிலுவைதான் இறுதி உண்மை, சத்தியம்!அதில் தவம் என்ற ஆணி கொண்டு அறைந்து, நம்மை சத்தியத்துடன் இணைத்துக் கொண்டால்,நம் ஐம்புல‌ங்களை அடக்கினால் அந்த வளமையான இறைக் காட்சி, தெய்வ தரிசனம் வானவெளியில் கிடைக்கும்!
    யோகி யேசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.

    ReplyDelete
  3. அதிகாலைப்பொழுது வணக்கம் வாத்தியார் ஐயா!

    தாய்மை உள்ளம் கொண்ட அன்பு வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் சகோதரி - சகோதர்களுக்கு பிராத்தனையுடன் கூடிய மெர்ரி மெர்ரி க்ரிஸ்மஸ்!
    ஹாப்பி ஹாப்பி க்ரிஸ்மஸ்!

    ReplyDelete
  4. வணக்கம் வாத்தியார் ஐயா வணக்கம்!

    அம்மையும் அப்பனும் நேரில்
    வந்து காட்சி தந்தார்போல மிகவும் தத்துருவமாக

    { ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை }

    இந்த உலகிற்கு உணர்த்திய அர்த்த நாரீஸ்வரர் படத்தை தந்த தாங்களும் ஒரு பொக்கிஷம் தான் ஐயா

    ReplyDelete
  5. ஐயா வணங்குகின்றேன்!

    திருவாளர் முத்து ராம கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன் நன்றி!.

    ReplyDelete
  6. எல்லோரையும் மனதார வணங்குகின்றேன் இந்த நன்னாளில் !

    தனி நபர் ஒழுக்கம்,
    தனி நபர் ஒழுக்கம் என்றால் என்ன என்று கேட்கும் அனைவருக்கும் இன்று நட்சுன்னு ஒரே ஒரு பதில்

    " இயேசுநாதர் அவதரித்த அன்னை மேரி மாதா!"

    முதல்

    " மாயக்கண்ணன் அவதரித்த தேவகி!"

    மற்றும்

    "வளர்ப்பு தாய் யசோதா!"

    வரைக்கும் அன்பின் வடிவமாகவும், கற்பின் சிகரமாகவும்,
    தவத்தின் பிளம்பாகவும் இன்னும் சிறப்பித்து சொல்ல போனால் தெய்வ
    தன்மையுடன் இருந்தமையால் தான்

    " தெய்வம்!"

    கூட அந்த தாய்மார்களின் வயிற்றில் வந்து ஜனித்து துல்லி விளையாடும் அளவிற்கு மாபெரும் பாக்கியத்தை பெற்றார்கள்.

    ReplyDelete
  7. ஐயா

    என்றுமே நல்லதுக்கு முக்கியத்துவம்
    தரும் வாத்தியார் ஐயா அவர்களுக்கு மானசிகமான வணக்கம்.

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியருக்கு (வாத்தியாருக்கு)
    அருமை கண்ணனை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    அருமை கண்ணனுக்கு,
    இனிமையான பதிவு தந்ததற்கு மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்

    அன்புடன்,
    ராதாகிருஷ்ணன்
    ஹூசுடன்
    திசம்பர் 24, 2010

    ReplyDelete
  9. Interesting presentation.
    Sincere Christmas Greetings and Wishes to everybody.
    Shanmugam

    ReplyDelete
  10. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    பக்தி மலருக்கு ஏற்ற அருமையான பதிவு. பஹ்ரைன் இளவரசரின் மிடுக்குடன்
    தோற்றமளிக்கும் இளைஞர் திரு.கண்ணன் அவர்களின் ஆக்கம் தொடர்க,மேலும் மேலும் வளர்க, வாழ்த்துக்கள்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  11. ஐயா!

    ஊக்கங்களை எமக்கு மட்டும்அல்லாது

    " வாத்தியாரின் வகுப்பறைக்கு!"

    வருகை தரும் அனைவருக்கும் எழுத்தின் மூலமும்,
    மனதாலும்,
    நல் ஆசிர்வதத்தாலும்
    அல்ல அல்ல குறையாத

    "அமுத சுரபியாக!"

    வாரி வழங்கி வரும் அன்பு உறவுகளுக்கு ஆத்மார்த்தமான
    வணக்கங்கள்

    ReplyDelete
  12. ஐயா

    ஐயா சுவாமி! திருவாளர்

    " அரச அப்பரே!"

    ஆளை விடுங்க சுவாமி!

    ReplyDelete
  13. சாமியார்னாலே யாரையாவுது செட் பண்ணிக்கிட்டு எங்கேயாவுது ஏதாவுது பண்ண,
    எக்குதப்பா இருந்து தொலைச்சு அப்புறமா (காமிரா வலையிலே சிக்கி) ஊர்காரங்க கையிலே மாட்டுறதுங்குறது ஒரு ஃபாஷனாப் போச்சு..
    ஆனா இந்த சாமியார் அப்பாவி..பாவம்..
    பால்காரம்மா வூட்டு ஆளுங்க சைலன்ட்டா மறைஞ்சுருந்து பார்க்கும் சீன்
    'சுப்பிரமணியபுரம்' படத்து கிளைமாக்ஸ் சீனை நினைவு படுத்தியது..
    பொந்துக்குள்ளே பூந்து கிரேட் எஸ்கேப் ஆகுற சீன் பாரதிராஜா படத்து 'கிழக்கே போகும் ரயில்'லின் கடைசி சீனில் ஓடி ட்ரெயினில் ஏறுகிற ஜோடியை நினைவு படுத்தியது..ட்ரெயினுக்குப் பதிலா இங்கே மரப் பொந்து..
    ஆமா..சாமியார் மரத்துக்கடியில் சுரங்கம் ஏதும் செட் பண்ணியிருந்திருப்பாரோ?எப்பிடி 'எஸ்' ஆனாருன்னு கடைசி வரைக்கும் தெரியாமப் போச்சே..?

    ReplyDelete
  14. ///"சாமியார்னாலே யாரையாவுது செட் பண்ணிக்கிட்டு எங்கேயாவுது ஏதாவுது பண்ண,எக்குதப்பா இருந்து தொலைச்சு அப்புறமா (காமிரா வலையிலே சிக்கி) ஊர்காரங்க கையிலே மாட்டுறதுங்குறது ஒரு ஃபாஷனாப் போச்சு..
    ஆனா இந்த சாமியார் அப்பாவி..பாவம்.."////

    நல்ல வேளை வாசுதேவநல்லூர் சாமியார் மைனர் கையிலே சிக்காமல்
    தப்பித்துவிட்டார்.ரிஷிமூலம், நதிமூலம் பார்க்க‌க் கூடாது என்பார்கள்.ஏதோ ஒரு நிகழ்வு, செயல்தான் அவர்களை விரக்தி அடைய‌ச் செய்கிறது.அது மைனர் சொன்னது போலவும் இருக்கலாம்.வேறு காரணங்களாகவும் இருக்கலாம்.

    என் நண்பர் ஒருவர் துறவி ஆகிவிட்டார்.காரணம், பங்காளிகள்
    ஒருவரை ஒருவர் பழிவாங்கும் படலத்தில் இறங்கி குடும்பத்தில் பல உயிர்கள் போய் விட்டன‌. இறுதியில் நண்பர் மட்டுமே மிஞ்சினார்.
    எல்லோருடைய சொத்துக்களும் அவருக்குக் கிடைத்தாலும், அதனை அவரால் மன அமைதியுடன் அநுபவிக்க இயலவில்லை.அப்போது அவரை ஆன்மீகம் அணைத்துக் கொண்டது.சாமியார் ஆகிவிட்டார்.

    ReplyDelete
  15. ///////////
    kmr.krishnan said...
    உங்கள் ஆக்கத்திற்கு,மைனர்வாள் எப்படி
    பின்னூட்டம் இடுகிறார் என்று பார்ப்போம்.சந்நியாசி கொஞ்சம் மைனர்வாளிடம் வாங்கிக்கட்டிக் கொள்வார் என்று எனக்குத் தோன்றுகிறது.
    உங்கள் புதிய புகைப்படம் ஜோர்.!///////
    KMRK சார் கணக்கை tally பண்ணியாகிவிட்டது..
    KMRK சொன்னபடி இந்த போட்டோ போஸ் எனக்கு ஏற்கனவே அறிமுகம்தான் என்றாலும் இன்றைய பதிவில் ஸ்தல புராணத்துடன் இங்கே மாப்பிள்ளை கண்ணன் வீற்றிருக்கும் இந்த போஸ் அவருக்கு நல்ல தெய்வீக நாட்டமுள்ள பெண் ரசிகர்களை கவர்ந்து கொடுக்கும் என்று தோன்றுகிறது..

    //// இக்கதையின் மூலம் அடியேன் சொல்ல வந்த முக்கியமான செய்தி இதுதான்:
    "உடலில் தரமுடியாவிட்டாலும், மனையாளுக்கு மனதிலாவது பாதி இடம் தந்தால் இல்லறம் நல்லறமே!".\\\\\\
    என்று கண்ணன் சொல்லியிருப்பதன் மூலம் அவர் எப்படிப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு ஆயத்தமாகவுள்ளார் என்று மகளிருக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார்..
    வாசுதேவ நல்லூர் வட்டாரத்து மாப்பிள்ளை தேடும் பெண்கள் இந்த மாப்பிள்ளையை கொஞ்சம் கவனிக்கவும்..

    ReplyDelete
  16. ஐயா வணங்குகின்றேன்

    மைனர் வாழ் மைத்துனருக்கு, இந்த ஒட்டு ஓட்டு என்று ஓட்டீநீர்கள் என்றால் எப்படி மைத்துனரே வண்டியை நீண்ட காலம் ஓட்ட முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்.

    உலகதீர்க்கு தெரிந்த உண்மையை சொல்ல வந்ததில் வாத்தியாரின் ஆசிர்வாதத்துடன் சொன்னேன் ஒழிய தாங்கள் பொருள் கொள்வது போல அல்ல.

    தாங்கள் கூறிய பின்னர் தான் எமக்கு புரிகின்றது இப்படியும் ஒரு வழி உண்டா என்று

    எதோ ஒரு வகையில் எமக்கு என்று பிறந்தவர் கிடைத்தால் பெரும் பாக்கியம் தான் .

    இந்த பெரும் பாக்கியத்தில் முக்கிய பங்கு மைத்துனர் மைனர்வாளுக்கு தான் சாரும் அந்த வகையில் மிகம கடமைபட்டுள்ளேன் மைத்துனரே!!!!

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    எப்படிப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு ஆயத்தமாகவுள்ளார் என்று மகளிருக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார்..
    வாசுதேவ நல்லூர் வட்டாரத்து மாப்பிள்ளை தேடும் பெண்கள் இந்த மாப்பிள்ளையை கொஞ்சம் கவனிக்கவும்..
    Saturday, December 25, 2010 6:58:00 PM

    ReplyDelete
  17. இந்த பெரும் பாக்கியத்தில் முக்கிய பங்கு மைத்துனர் மைனர்வாளுக்கு தான் சாரும் அந்த வகையில் மிகம கடமைபட்டுள்ளேன் மைத்துனரே!!!!

    ஆக, இறுதியில் மைனரை மைத்துனராக்கி பெண் தேடும் மிகப்பெரும் பொறுப்பை அவர் தலையில் கட்டிய விதம் என்னை பிரமிக்கவைத்துவிட்டது கண்ணன் அவர்களே..

    ReplyDelete
  18. /////G.Nandagopal said...
    ஆக, இறுதியில் மைனரை மைத்துனராக்கி பெண் தேடும் மிகப்பெரும் பொறுப்பை அவர் தலையில் கட்டிய விதம் என்னை பிரமிக்கவைத்துவிட்டது கண்ணன் அவர்களே..\\\\\\\

    கண்ணன் எல்லாத்தையும் எழுதி என் மேல பொறுப்பு சுமத்திட்டு கடைசிலே நான் சொன்ன இந்த மேட்டரை quote பண்ணி முடிச்சுருக்கார் பாருங்க..

    'வாசுதேவ நல்லூர் வட்டாரத்து மாப்பிள்ளை தேடும் பெண்கள் இந்த மாப்பிள்ளையை கொஞ்சம் கவனிக்கவும்..'

    ReplyDelete
  19. புரிகிறது. புரிகிறது. மைனர்வாள் போன்றோரின் சிபாரிசும் ஆதரவும் இருப்பதால் பெண் கிடைப்பதும் சுலபம். பின்னாளில் பிரச்சினை என்றால் கோப்பை (FILE ) அவரிடமே தள்ளிவிட்டுவிடலாம் என்பதும் இதிலுள்ள மிகப்பெரிய அனுகூலம்.

    பின்னாளில் நல்லா வருவீங்க கண்ணன். நல்லா இருங்க.

    ReplyDelete
  20. ///"மைனர்வாள் போன்றோரின் சிபாரிசும் ஆதரவும் இருப்பதால் பெண் கிடைப்பதும் சுலபம். பின்னாளில் பிரச்சினை என்றால் கோப்பை (FILE ) அவரிடமே தள்ளிவிட்டுவிடலாம் என்பதும் இதிலுள்ள மிகப்பெரிய அனுகூலம்"///.

    மாமுவும்,ம‌ருமவனுமா பெண் தேடும் படலத்தில் இறங்கியாச்சா?!டெல்லிக்கார அத்தையிட்மும் சொல்லி வையுங்கள். எல்லோருமா சேர்ந்து கண்ணனுக்கு ஏற்ற
    ராதையைக் கண்டுபிடியுங்கள்.தஞ்சாவூர்‍=நெல்லை சம்பந்தம் அவ்வளவு சிலாக்கியமில்லை. எனவே இந்தப் பக்கம் பெண் நான் பார்க்கவில்லை.திருமண நாள் அன்று வாழ்த்துரை வழங்க மட்டும் வருகிறேன்.விருந்து பலமாக இருக்க வேண்டும். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளை அய்யாவிடம் சொல்லி
    ஏற்பாடு செய்யவும். மெனு அய்யாதான் போடவேண்டும்.தஞ்சாவூர் தலை வாழை இலை, கும்பகோணம் வெற்றிலை,வறுவல் சீவல்,வாசனை சுண்ணாம்பு,வண்ணாத்தி புருஷன் கடை விடயம்(பீடா) நம்ம சப்ளை. ஓகேயா?

    ReplyDelete
  21. ஆத்மார்த்தமான வணக்கம் ஐயா!
    என்ன ஒரு பெரும் பாக்கியம். அடியேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்ததீர்க்கு .
    இரத்த பந்தம் எல்லாம்
    நமக்கு ஏன் வீன் வேலை ,
    வீணான அலைச்சல் என்று ஒதுங்கும் இன்றைய தேதியில்
    மாப்பிளை தோழனாக வரும் மைனர்வாள் மைத்துனனோ பெண்தேட , என்றுமே உள்ளதை விட்டு மறையாத "மாண்புமிகு ஐயவோ வாழ்த்து கூற!" .
    "வாத்தியாரோ தலைமைதாங்க!" அன்புள்ளம் படைத்த "பாசமலர் சகோதரிகள் மணப்பெண் தோழியாக வர , அவர்களுடைய குழந்தை செல்வம் மான மருமகன், மருமகள் மண்டபத்தில் ஓடி ஆடி விளையாட,
    அன்னிமார்களோ (மதினி மார்களோ) கேள்வியும் கிண்டலும் செய்ய,
    நல்ல உள்ளம் படைத்த
    "சான்றோர்களோ ஆண்டவனின் பிரதிநிதியாக வந்து எங்களைவாழ்த்த!"

    சக சகோதன்மார்கள் அனைத்து கல்யாண வேலையை முன்னின்று செய்ய "வாசு மாநகரம் விழாகோலம் ஆக!"
    ஆக வேண்டிய செல்வத்தை மணமகனே ஏற்க்க, பாசமார் படசித்திரத்தில் "கவியரசரின்!" பாடல் வரிகளில் எதற்குமே ஈடு இணையாகாத ஒரு வைர வரி
    வருமே

    "தங்க கடிகாரம் வைர மணியாவிம் தந்து மனம் பேசுவார் பொருள் தந்து மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை ......... பேசுவார் என்ற கடைசியாக வருமே ஒரு வரி அது போல
    "நல்ல பாக்கியம் உள்ள பெண் மட்டும் கிடைத்தால் போதும்!"
    "ஆண்டவனை சாட்சியாக வைத்து கூறுகின்றேன்!"
    மனதில், உடலில், ஒழுக்கத்தில் உள்ள முழு தகுதி கொண்டு
    >>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<
    kmr.krishnan has left a new comment on the post "நீ பாதி நான் பாதி பெண்ணே!":

    ReplyDelete
  22. ////kannan said...
    தங்கக் கடிகாரம்.. வைர மணியாரம்...\\\\\\\
    இதெல்லாம் ரொம்ப ஓவர்..கிராம் விக்குற விலையிலே..
    கோல்ட் கேஸ் வாட்ச் வேணும்னா கிடைக்கும்..ஒரு காரட் ரேஞ்சிலே வைர மோதிரமே இன்னிக்கு லட்ச ரூபாய் ஆவுது..மாப்ள கொஞ்சம் நடப்பு நிலவரத்தைக் கணக்குப் பண்ணி கனவை ப்ரொசீட்பண்றது நல்லது..

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா!

    மைனர் வாழ் மைத்துனரே!

    மாப்பிளை தோழனாக வர போகின்ற தங்களிடமா நடக்காததை கூற போகின்றேன்.

    சொன்னாள் நம்ம மாட்டீர்கள் உண்மையிலே வரபோகின்ற
    பெண்ணின் அணிகலன்களுக்காக ஒரு
    தொகையை சேமித்து வைத்துள்ளேன்.
    அதனில் ஒரு மணி துளியாவது வைரமும்இருக்க வேண்டும்
    என்று நினைத்து தான்.

    இப்பம் என்ன சொல்லுறீங்க மாப்ஸ்?

    >>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<

    "தங்க கடிகாரம் வைர மணியாவிம் தந்து மனம் பேசுவார் பொருள் தந்து மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

    ReplyDelete
  24. டெல்லிக்கார அத்தையிட்மும் சொல்லி //

    அத்தையா? யாருக்கு? அவ்வ்வ்வ்வவ்வ்வ்

    ReplyDelete
  25. தஞ்சாவூர்‍=நெல்லை சம்பந்தம் அவ்வளவு சிலாக்கியமில்லை//

    என்ன இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கீங்க?

    அப்போ தஞ்சாவூரில் பிறந்து கண்ணனுக்காகக் காத்திருக்கும் ராதைகளின் கதி என்னாவது?

    ReplyDelete
  26. பெண்ணின் அணிகலன்களுக்காக ஒரு
    தொகையை சேமித்து வைத்துள்ளேன்.
    அதனில் ஒரு மணி துளியாவது //

    இப்படி இங்க எழுதறது இருக்கட்டும். shaadi .com / bharatmatrimony .com இங்கெல்லாம் முதல்ல வலை விரிங்க.

    அப்படியே உங்க DOB பிறந்த நேரம் / ஊர் விவரங்கள் கொடுங்க. நான் உங்க ஜாதகத்தைப் பார்த்து எதாவது கண்டுபிடிக்கமுடியுதான்னு பார்க்கறேன்.

    ReplyDelete
  27. உண்மையிலே வரபோகின்ற
    பெண்ணின் அணிகலன்களுக்காக ஒரு
    தொகையை //

    ம்ம் அப்படியே 'பாச மலர்' சகோதரிக்கு பட்டுப்புடவையும் அந்த தொகைக்குள்ள வந்துடுமில்ல?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com