+++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்தி மலர்: கடவுள் செய்து வைத்துள்ள மாற்று ஏற்பாடுகள்!
---------------------------------------------------------------------
இன்றைய வகுப்பறையின் பக்தி மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்
அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
உட்தலைப்பு: மனதிற்கு இதமான சில தத்துவங்கள்
இறைவனின் படைப்பில் மான் மிகவும் அழகானது. அந்த மானும் மனிதன் மாதரி சில நேரங்களில் நமக்கு சில உறுப்புகளைக் கடவுள் அழகாக வைக்கவில்லை என்று மனவருத்தம் கொள்ளுமாம்
மனிதனுக்கு என்னதான் அழகையும், உடற்கட்டையும், படிப்பையும், போகத்தையும் கடவுள் கொடுத்திருந்தாலும் மனிதன் மனநிறைவு கொண்டதாகச் சரித்திரம் இல்லை!
தங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்து மன வருத்தம் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். கடவுளின் படைப்பில் நாம் அனைவருமே அழகுதான். அழகானவர்கள்தான்!
யாருக்கு உடல் நலக் குறைவோ (நீண்ட தீராத பிணி) அல்லது உடல் ஊனமோ அவர்கள்தான் வருத்தம் கொள்ளலாம். மற்றவர்கள் வருத்தமடைவது நியாயமல்ல!
மானும் அதே மாதரி ஓடைக்குச் சென்று நீர் பருகும் பொழுதெல்லாம் தன்னுடைய உருவ பிம்பத்தை நீரில் பார்த்து வேதனைப்படுமாம்.
அதோடு சந்தோஷமும் படுமாம். “ச்சே என்ன காலு இது ஒல்லி
ஒல்லியா குச்சிமாதிரி? கடவுள் தடி தடியா அழகா குட்டையா வைக்கமா போயிட்டாரே இந்த உருவத்திற்கும் இந்த அழகுக்கும் இந்தக் கால்
தேவையா?” என்று வேதனைப்படுமாம். கொம்பு இருப்பதால்
சந்தோஷமும் கொள்ளுமாம்.
“ஆ எவ்வளவு அழகான கொம்பைக் கடவுள் எனக்குத் தந்திருக்கிறார்? கிளை கிளையா அழகா பிரிந்து போகின்றதே? எனக்கு கிடைத்த கொம்பைப் போன்ற கொம்புகள் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையே?” என்று மனதைத் தேர்த்திக் கொள்ளுமாம்.
ஒரு நாள் மான் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் புலி
ஒன்று மானைத் தேடி வந்து, தூரத்த ஆரம்பித்தது. தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள மான் மிகவும் வேகத்தோடு ஓடியது. ஓடும்
வழியில் கொம்பு ஒரு மரத்தின் தாழ்வான கிளையில் மாட்டிக்
கொண்டது. மானின் கால்களோ வேகமாக ஓடத் துடித்தது. கொம்போ ஒத்துழைக்கவில்லை. புலியோ அதைத் தின்பதற்கு நெருங்கி வந்து கொண்டிருந்தது. கடுமையான போரட்டத்திற்கு பிறகு மானின் கொம்பு உடைந்துவிட்டது. மானும் தப்பித்து ஓடி ஒரு புதரில் மறைந்து கொண்டது.
மான் தன்னுடைய அழகில்லா கால்கள் தன்னை காப்பாற்ற துடித்ததையும், அழகான் கொம்பு மறுத்ததையும் நினைத்து வருத்தப்பட்டது. மேலும் கொம்பு உடைந்தற்கு வருத்தம் கொள்ளவில்லை அது மற்றொரு பக்க கொம்பையும் வெறுக்கத் துவங்கியது.
அந்தமாதரி எந்த பொருளில் எல்லாம் மிகுந்த அழகிருக்கிறதோகோ அதில் எல்லாம் நமக்குத் துன்பமும் இருக்கும். எந்தப் பொருளில் எல்லாம் அழகில்லையோ அதில் துன்பம் இருக்காது.
அழகான மனைவி அல்லது கணவன் ஒருவர் கண்ணுக்கு மற்ரவர் விருந்தாவார்கள் (அவர்கள் ஆபரணம் போன்றவர்கள்) குணமான
மனைவி அல்லது கணவன் ஒருவர் மனதிற்கு மற்ரவர் மகிழ்ச்சியைக் கொடுப்பார்கள்.(அவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள்)
மனம் அழகில் மயங்கும் தன்மையையுடையது.
சீதை மாயமானின் அழகில் மயங்கிப் பின் துன்புற்றார். துன்பத்திற்குக் காரணம் மனசுதான். ஆசையை உருவாக்குவதும் மனசுதான். மனசு என்ற குதிரைக்கு நாம் கடிவாளமிட்டு அடக்கி ஆளவேண்டும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ராஜநாகம் மிகவும் அழகாக இருக்கும். அதே நேரத்தில் எந்த பாம்புகளுக்கும் இல்லாத கொடிய விஷத்தைக் கொண்டுள்ளது அதன் தனிச் சிறப்பு.
அந்தப் பாம்பு எப்பொழுதும் மனிதனின் தலையில்தான் எகிறி கொத்துமாம். கொத்து வாங்கியவன் நிமிடத்தில் டிக்கெட் வாங்கி விடுவான். அதாவது சிவலோகம் அல்லது வைகுண்டம் சென்று விடுவான்.
அந்த ராஜ நாகத்தினால் காட்டில் வாழும் மற்ற விலங்குகள் எல்லாம் துன்பத்தை அனுபவிக்கும். அந்த பாம்பைப் பார்த்தால் யானை கூடப் பயந்து ஒதுங்கிச் செல்லுமாம்.
வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் இருக்கவே செய்வார். கடவுள் கடவுள் கருணைமிக்கவர். எந்தொவொரு ஆரம்பத்திற்கும் முடிவை வைத்திருப்பார். தீர்வை வைத்திருப்பார். துன்பத்திற்கும் முடிவைக் கொடுப்பார்.
கொடுமைக்காரர்களுக்கும் ஒரு முடிவை வைத்திருப்பார்.
அகந்தையில் (தான் என்ற கர்வத்தோடு) இருப்பவர்களூக்கும் பாடம் புகட்டுவார். அந்தப் பாம்புகள் அதிக அளவில் குஞ்சு பொரிக்கும்.
பெரும்பாலும் நதிக்கரை ஓரங்களில்தான் அவைகள் பொரிக்கும்.
அந்தக் குட்டிகள் எல்லாம் நீரை நோக்கி ஓடும். அவற்றிற்கு நீந்துவது
மிகவும் பிடிக்கும். மீன்களையும், தவளைகளையும் பிடித்து அவைகள் சாப்பிடும். பாவம், அந்த ராஜ நாகத்தை முதலை பிடித்து நின்றுவிடும். அதோடு மட்டுமில்லாமல் முதலை அவைகளிருக்கும் கரைக்கே வந்து, நிறைய பாம்புக் குட்டிகளைப் பிடித்துத் தின்று விடும். ராஜநாகம்
நிறையக் குஞ்சுகளைப் பொரித்தாலும் ஒவ்வொரு தடவையும் 2
அல்லது 3 குட்டிகள் மட்டுமே உயிரோடிருக்கும். அப்படி முதலைகள் தின்னவில்லையென்றால், காட்டில் விலங்குகள் ஒன்றும் இருக்காது. அதாவது மிஞ்சாது.
கடவுள் வல்லமை உடைய ஒன்றைப் படைத்துவிட்டால் அதற்கு ஈடாக, மாற்று ஏற்பாடாக, வேறு ஒரு வல்லமையையும் படைத்து இருப்பார்.
மனிதர்களுக்கும் மாற்று ஏற்பாடாகக் கடவுள் சர்வ வல்லமை படைத்த ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்.
அதன் பெயர் ஊழ். உங்கள் மொழியில் சொன்னால் விதி. (Destiny)
எத்தனை உடல் வலிமை இருந்தாலும், எத்தனை மன வலிமை
இருந்தாலும், எத்தனை புத்திசாதுர்யம் இருந்தாலும், எத்தனை
செல்வம் இருந்தாலும் - கோடிகளை வீசி எதையும் வசமாக்கும்
திறமை இருந்தாலும், எத்தனை பெரிய பதவி இருந்தாலும்,
எத்தனை செல்வாக்கு இருந்தாலும், விதியின் முன் அவைகள்
ஒன்றும் செல்லாது!
ஆடுபவர்களை, ஆட்டம் போடுபவர்களை எல்லாம் விதி, ஒருநாள், அடக்கி, ஒடுக்கி, முடக்கி வைத்துவிடும். எத்தனையோ பேர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள்.
விதியைவிட வலியது எது?
அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்நுறும் - குறள் எண் 380
அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவர்கள் இப்படி அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்:
what is stronger than fate? If we think of an expedient (to avert it), It will itself be with us before the thought
சர்வ வல்லமை படித்த கடவுளை அனுதினமும் வணங்குவோம்.
அவன் தாள் பணிவோம்; அக மகிழ்வு கொள்வோம்!
-------------------------------------------------------------------------
ஆக்கத்தைத் தந்த மாணவி, தன் பெயரையும் ஊரையும் வெளியிட வேண்டாம் என்று அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். ஆகவே அவற்றை வெளியிடவில்லை.
நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தில், அடுத்த ஆக்கத்தில், அவரே தன் பெயரை வெளியிடுவார் என்று நம்புவோமாக!
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
ஒவ்வொரு உயிர்க்கும் அதன் தேவைக்கேற்ப ஆண்டவன் ஒரு திறமையை தருகிறான்,ஆகவே அதை பயன் ப்டுத்தி சிறப்பாக வாழ வேண்டும்.
ReplyDeleteஅருமையான கட்டுரை....
ReplyDeleteஅழகு என்று எதையும் நினைத்து கர்வம் கொள்ள வேண்டாம்.......
அழகின்மை என்று வருத்தமும் கொள்ள வேண்டாம்.......
காரணம், படைத்தவனோடு.... நமக்கும் ஒருநாள் அது விளங்கும் என்பதை....
அருமையாக கூறியுள்ளீர்கள்.
"அழகான மனைவி... அன்பான மனைவி அமைந்தாலே பேரின்பமே" என்றான் ஒரு கவிஞன்....
ஆக "அழகோடு அன்பில்லா மனைவி அமைந்தால் அது பெரும் துன்பமே" என்றும் கொள்ளலாம்...
இன்றைய உலகில் பெரும்பாலும் எது பிற்காலத்தில் பெரிதும் உதவும் என்று பொத்தி பொத்தி வளர்க்கிறோமோ (வைத்திருக்கிறோமோ) அது பயனில்லாமல் போய்விடும்... எது பயன்படாது என்று அலட்சியம் செய்கிறோமோ அதுவே பெரிதும் உதவும்.....
விஷம் மருந்தாகும்.... மருந்தும் விசமாகும்...... இரண்டும் தேவை என்பதை அறிந்து தான் இறைவன் தந்துள்ளான்...
அதனால் தான் எல்லா மதங்களும் இறைவன் படைப்பை குறைகூற வேண்டாம் என்றும் கூறுகின்றன....
குறிப்பாக இஸ்லாத்திலே இறந்தவர்களுக்காக கூட அழக்கூடாது... அது இறைவன் செயலை குறைபடுவதாக அமையும் என்பார்கள்....
அதோடு நடப்பது அனைத்தும் அவனுடைய அனுமதி... ஆணை... விருப்பப் படி தான் நடக்கும் என்றும்... ஆகவே அவர்கள் எப்போதும் "இன்சுளால் அல்லா" அதாவது இறவன் அனுமத்தித்தால் நாளை சிந்திப்போம் என்றும் கூறுவார்கள்..... அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது நமது வேதம்....
இறைவனின் படைப்பில் எல்லாம் அழகே... எல்லாமும் அவசியமே என்பதை அழகாக கூறியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.
///"நிறையக் குஞ்சுகளைப் பொரித்தாலும் ஒவ்வொரு தடவையும் 2 அல்லது 3 குட்டிகள் மட்டுமே உயிரோடிருக்கும். அப்படி முதலைகள் தின்னவில்லையென்றால், காட்டில் விலங்குகள் ஒன்றும் இருக்காது. அதாவது மிஞ்சாது.///
ReplyDeleteஇதற்குப் பெயர்தான் 'சுற்றுச் சூழல் பாதுகாப்பு'(eco balance) என்று உலக அளவில் அலசப்படும் செய்தி. இறைவன் அல்லது இயற்கையின் திட்டஙளைப்புரிந்து கொண்டு அதனுடன் சண்டையிடாமல், இசைவுடன் வாழப் பழக வேண்டும்.
மஹாகவி பாரதியார் தன் வசனக் கவிதையியில்,
"....தெய்வங்களே!
எம்மை உண்பீர்,எமக்கு உணவாவீர்,
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உண வாவீர்
உமக்கு நன்று.
தெய்வஙளே!
காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது.
அழித்தல் நன்று,அழிக்கப்படுதலும் நன்று.
உண்பது நன்று,உண்ணப்படுதலும் நன்று.
சுவை நன்று,உயிர் நன்று,நன்று,நன்று." என்பார்.
ஆக்கத்தை எழுதிய பெயர் தெரியாத சகோதரிக்குப் பாராட்டுக்கள்.சும்மா 'டைம் பாஸ்'(time pass)செய்தியாக தேர்வு செய்யாமல், கனமான செய்தியைச் சொல்லியதற்குமூத்த மாண்வர்கள் சார்பில் நன்றி.நம்புங்கள். உங்கள் நடை எளிமையாக நேரடியாக, சரளமாக உள்ளது. இப்படி எழுதுவதுதான் கடினம்.தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
வணக்கம் ஐயா!
ReplyDeleteஅற்புதமான படைப்பை தந்த அன்பு சகோதரிக்கு ஆத்மார்த்தமான பாராட்டுகள்.
நான் தான் முதலிலோ?
ReplyDeleteபாடம் மிக்க நன்றாக இருக்கிறது ஐயா!
Thanks for sharing good things. I hope VATHIYAAR portal becomes a library..
ReplyDeleteThanks to all.
Your Daily Reader,
Arunbalaji
91 9443985892
நல்ல ஆக்கம்...பெயர் வெளியிட என்ன தயக்கம் என தெரியவில்லை...பரவாயில்லை...எழுத்து நடையில் வாத்தியாரின் சாயல் தெரிகிறது...தொடர்ந்த்ய் எழுதுங்கள்...
ReplyDelete//////arthanari said...
ReplyDeleteஒவ்வொரு உயிர்க்கும் அதன் தேவைக்கேற்ப ஆண்டவன் ஒரு திறமையை தருகிறான், ஆகவே அதை பயன் படுத்தி சிறப்பாக வாழ வேண்டும்.//////
கட்டுரையின் சாராம்சமும் அதுதான்!
Alasiam G said...
ReplyDeleteஅருமையான கட்டுரை....
அழகு என்று எதையும் நினைத்து கர்வம் கொள்ள வேண்டாம்.......
அழகின்மை என்று வருத்தமும் கொள்ள வேண்டாம்.......
காரணம், படைத்தவனோடு.... நமக்கும் ஒருநாள் அது விளங்கும் என்பதை....
அருமையாக கூறியுள்ளீர்கள்.
"அழகான மனைவி... அன்பான மனைவி அமைந்தாலே பேரின்பமே" என்றான் ஒரு கவிஞன்....
ஆக "அழகோடு அன்பில்லா மனைவி அமைந்தால் அது பெரும் துன்பமே" என்றும் கொள்ளலாம்...
இன்றைய உலகில் பெரும்பாலும் எது பிற்காலத்தில் பெரிதும் உதவும் என்று பொத்தி பொத்தி வளர்க்கிறோமோ (வைத்திருக்கிறோமோ) அது பயனில்லாமல் போய்விடும்... எது பயன்படாது என்று அலட்சியம் செய்கிறோமோ அதுவே பெரிதும் உதவும்.....
விஷம் மருந்தாகும்.... மருந்தும் விசமாகும்...... இரண்டும் தேவை என்பதை அறிந்து தான் இறைவன் தந்துள்ளான்...
அதனால் தான் எல்லா மதங்களும் இறைவன் படைப்பை குறைகூற வேண்டாம் என்றும் கூறுகின்றன....
குறிப்பாக இஸ்லாத்திலே இறந்தவர்களுக்காக கூட அழக்கூடாது... அது இறைவன் செயலை குறைபடுவதாக அமையும் என்பார்கள்....
அதோடு நடப்பது அனைத்தும் அவனுடைய அனுமதி... ஆணை... விருப்பப் படி தான் நடக்கும் என்றும்... ஆகவே அவர்கள் எப்போதும் "இன்சுளால் அல்லா" அதாவது இறவன் அனுமத்தித்தால் நாளை சிந்திப்போம் என்றும் கூறுவார்கள்..... அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது நமது வேதம்....
இறைவனின் படைப்பில் எல்லாம் அழகே... எல்லாமும் அவசியமே என்பதை அழகாக கூறியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.//////
அந்த சகோதரியின் சார்பில் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஆலாசியம்!
/////kmr.krishnan said...
ReplyDelete///"நிறையக் குஞ்சுகளைப் பொரித்தாலும் ஒவ்வொரு தடவையும் 2 அல்லது 3 குட்டிகள் மட்டுமே உயிரோடிருக்கும். அப்படி முதலைகள் தின்னவில்லையென்றால், காட்டில் விலங்குகள் ஒன்றும் இருக்காது. அதாவது மிஞ்சாது.///
இதற்குப் பெயர்தான் 'சுற்றுச் சூழல் பாதுகாப்பு'(eco balance) என்று உலக அளவில் அலசப்படும் செய்தி. இறைவன் அல்லது இயற்கையின் திட்டஙளைப்புரிந்து கொண்டு அதனுடன் சண்டையிடாமல், இசைவுடன் வாழப் பழக வேண்டும்.
மஹாகவி பாரதியார் தன் வசனக் கவிதையியில்,
"....தெய்வங்களே!
எம்மை உண்பீர்,எமக்கு உணவாவீர்,
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உண வாவீர்
உமக்கு நன்று.
தெய்வஙளே!
காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது.
அழித்தல் நன்று,அழிக்கப்படுதலும் நன்று.
உண்பது நன்று,உண்ணப்படுதலும் நன்று.
சுவை நன்று,உயிர் நன்று,நன்று,நன்று." என்பார்.
ஆக்கத்தை எழுதிய பெயர் தெரியாத சகோதரிக்குப் பாராட்டுக்கள்.சும்மா 'டைம் பாஸ்'(time pass)செய்தியாக தேர்வு செய்யாமல், கனமான செய்தியைச் சொல்லியதற்கு மூத்த மாண்வர்கள் சார்பில் நன்றி. நம்புங்கள். உங்கள் நடை எளிமையாக நேரடியாக, சரளமாக உள்ளது. இப்படி எழுதுவதுதான் கடினம். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.//////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார். அந்த சகோதரியின் சார்பாக இதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்!
////kannan said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
அற்புதமான படைப்பை தந்த அன்பு சகோதரிக்கு ஆத்மார்த்தமான பாராட்டுகள்.////
நல்லது. நன்றி கண்ணன்!
////middleclassmadhavi said...
ReplyDeleteநான் தான் முதலிலோ?
பாடம் மிக்க நன்றாக இருக்கிறது ஐயா!////
முதல், இரண்டாவதில் என்ன இருக்கிறது? நீங்கள் வந்தால் போதாதா?
////arun balaji said...
ReplyDeleteThanks for sharing good things. I hope VATHIYAAR portal becomes a library..
Thanks to all.
Your Daily Reader,
Arunbalaji////
நல்லது. எல்லாம் உங்களுக்காகத்தான். நன்றி அருண்!
////Arul said...
ReplyDeleteநல்ல ஆக்கம்...பெயர் வெளியிட என்ன தயக்கம் என தெரியவில்லை...பரவாயில்லை...எழுத்து நடையில் வாத்தியாரின் சாயல் தெரிகிறது...தொடர்ந்த்து எழுதுங்கள்...//////
ஆகா, எழுதுவார் என்று நினைக்கிறேன். நன்றி!
நல்ல பதிவு.
ReplyDeleteபடைத்தவருக்கும் / பதித்தவருக்கும்
நிறைய பாராட்டுக்கள்.
-கிமூ-
நல்ல பதிவு ,
ReplyDeleteஅவர் மேலும் நிறைய பதிவுகள் இட வாழ்த்துக்கள் ,
/////-கிமூ- said...
ReplyDeleteநல்ல பதிவு.
படைத்தவருக்கும் / பதித்தவருக்கும்
நிறைய பாராட்டுக்கள்.
-கிமூ-////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி!
////Soundarraju said..
ReplyDeleteநல்ல பதிவு ,
அவர் மேலும் நிறைய பதிவுகள் இட வாழ்த்துக்கள்/////
உங்களின் வாழ்த்திற்கு அவர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே!
//////எந்த பொருளில் எல்லாம் மிகுந்த அழகிருக்கிறதோகோ அதில் எல்லாம் நமக்குத் துன்பமும் இருக்கும். எந்தப் பொருளில் எல்லாம் அழகில்லையோ அதில் துன்பம் இருக்காது.//////
ReplyDelete/////// துன்பத்திற்குக் காரணம் மனசுதான். ஆசையை உருவாக்குவதும் மனசுதான். மனசு என்ற குதிரைக்கு நாம் கடிவாளமிட்டு அடக்கி ஆளவேண்டும்!///////
///////விதியின் முன் அவைகள் ஒன்றும் செல்லாது!ஆடுபவர்களை, ஆட்டம் போடுபவர்களை எல்லாம் விதி, ஒருநாள், அடக்கி, ஒடுக்கி, முடக்கி வைத்துவிடும்.///////
அனைவரும் மனதில் கொள்ளவேண்டிய அருமையான கருத்துக்களை தனது ஆக்கத்தில் கொடுத்துள்ள சகோதரிக்கு பாராட்டுக்கள்.
/////V Dhakshanamoorthy said...
ReplyDelete//////எந்த பொருளில் எல்லாம் மிகுந்த அழகிருக்கிறதோகோ அதில் எல்லாம் நமக்குத் துன்பமும் இருக்கும். எந்தப் பொருளில் எல்லாம் அழகில்லையோ அதில் துன்பம் இருக்காது.//////
/////// துன்பத்திற்குக் காரணம் மனசுதான். ஆசையை உருவாக்குவதும் மனசுதான். மனசு என்ற குதிரைக்கு நாம் கடிவாளமிட்டு அடக்கி ஆளவேண்டும்!///////
///////விதியின் முன் அவைகள் ஒன்றும் செல்லாது!ஆடுபவர்களை, ஆட்டம் போடுபவர்களை எல்லாம் விதி, ஒருநாள், அடக்கி, ஒடுக்கி, முடக்கி வைத்துவிடும்.///////
அனைவரும் மனதில் கொள்ளவேண்டிய அருமையான கருத்துக்களை தனது ஆக்கத்தில் கொடுத்துள்ள சகோதரிக்கு பாராட்டுக்கள்.////
உங்களின் பாராட்டுக்களுக்கு அவர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் தட்சணாமூர்த்தி!
நன்றி சகோதரி.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
//////////////ஒரு நாள் மான் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் புலி
ReplyDeleteஒன்று மானைத் தேடி வந்து, தூரத்த ஆரம்பித்தது. தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள மான் மிகவும் வேகத்தோடு ஓடியது. ஓடும்
வழியில் கொம்பு ஒரு மரத்தின் தாழ்வான கிளையில் மாட்டிக்
கொண்டது. மானின் கால்களோ வேகமாக ஓடத் துடித்தது. கொம்போ ஒத்துழைக்கவில்லை. புலியோ அதைத் தின்பதற்கு நெருங்கி வந்து கொண்டிருந்தது. கடுமையான போரட்டத்திற்கு பிறகு மானின் கொம்பு உடைந்துவிட்டது. மானும் தப்பித்து ஓடி ஒரு புதரில் மறைந்து கொண்டது.\\\\\\\\\\\\
இந்த இடங்களில் எழுத்து நன்றாக, இயல்பாக வந்திருக்கிறது..
சம்பவங்களை வர்ணித்து சொல்லும் ஆற்றல் வசப்படும் என்று தோன்றுகிறது..தத்துவத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து நடப்பு விஷயங்கள் தொடர்பான ஆக்கங்களை எழுத முயற்சித்தால் பொழுதுபோக்குவதற்குரிய ஆக்கங்கள் வரிசையில் இன்னும் ஒரு படைப்பாளி சேருவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
வணக்கம்!
ReplyDeleteநல்ல பதிவு. அற்புதமான படைப்பை தந்த அன்பு சகோதரிக்கு பாராட்டுகள்.
சந்திரசேகரன் சூர்யா நாராயணன்
USA
. . .அப்பப்பா. . . .
ReplyDeleteஎத்தனை வலிமையான கருத்துக்கள்
இத்தனை எளிமையாக . .
எண்ணங்கள் தெளிவானால்
எதுவும் சுகமாகும் என..
அஞ்சுக்கும் ஆறுக்கும் ஒப்புமைபடுத்திய பாங்கினை பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன. . .?
///1.தலைப்பு:
ReplyDelete’ஒய்யாரக் கொண்டையாம், உள்ளார ஈறும் பேனுமாம்’னு கேள்விப்பட்டிருப்பீங்களே. அந்த ஒய்யாரக் கொண்டைதான் ‘பதிவோட தலைப்பு....உதா’ரணமாக’ ”வயசுக்கு வந்த பாட்டி” எனத் தலைப்பிடுங்கள். பதிவிற்குள் “ கடந்த ஒரு வருடமாக 79 வயசிலேயே இருந்த என் பாட்டி இன்று 80வது வயசுக்கு வந்தார். அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்” என
மொக்கை போடுங்க///
இது நமது வகுப்பரை மாணவர் செங்கோவியின் வலைப்பூவில் இருந்து நகல் எடுத்துப்போட்டது.மொக்கைக்கு நல்ல உதாரணம்.
மைனர் போன்ற சிறிய செட்டுக்கு ஏற்ற பதிவு.சென்று பார்க்கலாம். அதில் "அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரைப் பயணமும்" என்ற கட்டுரைக்கு என்
பின்னூட்டத்தை ப்டித்துப்பார்க்கவும்
இரண்டுமே நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDelete// Uma said...
ReplyDeleteஇரண்டுமே நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்.//
Dear Uma sister,
Thanks for ur comment.