28.11.10

இசைந்தபடி பேசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்றைய வாரமலரை, நமது வகுப்பறை மூத்த மாணவர் ஒருவரின் கட்டுரை அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்!
----------------------------------------------------------------------------------------
இசைந்தபடி பேசுவது எப்படி?

அந்தக் காலத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் ஒரு வாக்கியத்தினை மட்டும் கொடுத்து விட்டு அந்த வாக்கியம் ஒரு பாடல் அல்லது நாடகத்தில் எங்கே வருகிறது என்று விளக்கச் சொல்லி  கேள்வி  இருக்கும். அதற்கு  "இடம் சுட்டிப் பொருள் விளக்குக"என்று பெயர். ஆங்கிலத்தில் explain with reference to the context  என்று சொல்வார்கள்.

மகான்களின் பொன் மொழிகளைப் படிக்கும் போதும் இந்த ERC ஐப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உபதேசங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தோன்றும்.

மகான்களின் உபதேசங்கள் ஒரு குறிப்பிட்ட சீடருக்கு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சொல்லியது. அதற்கு நேர்மாறான கருத்துக்கள் சொல்லப் பட்டிருந்தால் அது வேறு ஒரு சீடருக்கு வேறு ஒரு சமயத்தில் கூறப்பட்டதாக இருக்கும். இர‌ண்டையும் சேர்த்து வைத்துப் படிக்கும் போது மகான் குழ்ப்புவதாகப் பலரும் எண்ணுவார்கள்.

பரமஹம்சரின் வாழ்விலிருந்து  ஒரு சம்பவத்தைப் படித்தால்  இது புரியும்.

பரமஹம்சருக்கு இளைஞர்களாகப் பல சீடர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். மாறுபாடான குண இயல்புகள் உடையவர்கள். அவர்களின் குண இயல்புகளில் உள்ள குறைகளைக் களைந்து 
சமநோக்கு உடைவர்களாக மாற்றம் செய்வதே ஒரு நல்ல குருவின் வேலை.

பரமஹம்சரின் ஒரு சீடர் யோகின். பிற்காலத்தில் இவர் யோகானந்தர் என்று பெயர் தாங்கித் துறவு பூண்டார். செல்வக் குடும்பத்தில் பிறந்து வளந்தவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார்.கரப்பான் பூச்சியைக் கூட அடிக்கத் தயங்குவார்.கூச்ச சுபாவமும், தயக்கமும், பயமும் கலந்த ஒருவிதமான‌ மன நிலை உடையவர்.

கல்கத்தாவில் படகில் பயணம் செய்து வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் செல்வார்கள்.அப்படி ஒருமுறை தட்சிணேஸ்வரத்திற்கு யோகின் படகில் வந்து கொண்டு இருந்தார். அந்தப் படகில் பயணம் செய்தவர்கள் பரமஹம்சரைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டு  வந்தார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்த யோகின் மனத்துக்குள்ளேயே மருகினார்.அவர்களுக்கு ம‌று மொழி கூற விரும்பினாலும் அவரால் பேச முடியாமல் துக்கம் நெஞ்சை அடைத்தது.பேசாமல் கரை இறங்கி பரமஹம்சரின் காலடியில் விழுந்து கதறினார்.நடந்தவற்றைக் கேட்டு அறிந்த பரமஹம்சர் யோகினிடம் கண்டிக்கும் தொனியில்,

"யோகின்!என்ன இப்படிக் கோழையாக இருக்கிறாய்.அவர்கள் உன் குருவை நிந்திக்கும் போது எப்படி அவர்களை சும்மா போக விட்டாய்? ஓங்கி ஒரு சத்தமாவது போட்டிருக்க வேண்டாமா? இப்படி பயங்கொள்ளியாக இருந்தால் ஆன்மீகத்திலோ, வாழ்விலோ எப்படி முன்னேறுவாய்?இப்போது வெட்டிப்பேச்சு பேசியவர்களை சும்மா விட்டு விட்டாய். வேறு யாரேனும் எனக்கு நேரடியாக‌வே தீங்கு செய்தால் கூட என்னைப் பாதுகாக்காமல் அழுது
கொண்டு  நிற்பாயா?"

யோகின் பதில் கூறமுடியாமல் தலை கவிழ்ந்தார்.

யோகினுக்கு ஏற்பட்டது போலவே படகு சம்பவம் வேறு ஒரு நாள் தாரக் (பின்னர் துரியானந்தர்?) என்ற தோழருக்கு ஏற்பட்டது. உடனே கடும் கோபமான தாரக், படகின் இரண்டு பக்கமும் காலால் உதைத்து கொண்டு,
"இப்போ என் குருவைப் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் படகைக் கவிழ்த்து விடுவேன்" என்று கூப்பாடு போட்டாரம்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமஹம்சர் தாரக்கிடம், "என்னப்பா  இது! இவ்வளவு கோபப்படலாமா? என்னை அவர்கள் திட்டினால்தான் என்ன? நான் என்ன உயரம் குறைந்தா போய்விடுவேன்? எனக்கும் நீ செய்ய இருந்த‌  கொலைப்பழியில் பங்கு உண்டு என்று ஊர் பேசும்படி செய்து விடுவாய் போல உள்ளதே! வேண்டாம் அப்பா, எனக்காக யாரிடமும் சண்டை போடாதே!" என்றாராம்.

இந்த சம்பவம் கூறவரும் கருத்து என்ன? யாரிடம் பய உணர்வும் தயக்கமும் இருந்ததோ அந்த சீடருக்கு பயத்தைப்போக்கும் வண்ணம் குருதேவர் பேசினார். பயமே இல்லாமல் இருந்த சீடரை பிறருக்குத் தீங்கு இழைத்துவிடுவாரோ என்று எண்ணி நிதானத்துக்கு வரும்படி பேசினார். இதில் முர‌ண்பாடு ஏதும் இல்லை.

கண்ணபரமாத்வைப் பற்றி பாரதி கூறுவார்,  "ஆளுக்கு இசைந்தபடி பேசி..." என்பதாக.

குருதேவரும் கண்ண‌னைப் போலத்தானே!

யாருக்கு எது தேவையோ அதைக் கொடுத்து விடுவார்.

ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (kmrk), தஞ்சாவூர்

 அந்தக்கால்ப் புகைப்படம்
kmrk மேடையில் பேசும்போது எடுக்கப்பெற்ற படம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

97 comments:

  1. Very Super. I really admire the interest of people who can write for others at this age. Thanks a bunch.

    ReplyDelete
  2. என் ஆக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்ததற்கு நனறி அய்யா!ஹானலுலூவில் இருந்து ந‌ம் வ‌குப்பறை மாணவர் ஒருவர் பாராட்டி மெயில் அனுப்பி விட்டார். எனவே பலரும் படிக்கிறார்கள் என்பது தெரிகிறது.பின்னூட்டம் இடுவதில் ஏனோ ஒரு தயக்கம்.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் திரு kmrk
    அருமையான பதிவு.. மிக எளிமையாக எடுத்து கொடுத்துள்ளீர்கள் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் ஒரு பாமரனும் எளிதாக படித்து புரிந்து கொள்ளும் வகையல் தருவதுதான் கற்றோருக்கு அழகு..எந்த இடத்தில யாருக்கு எப்பிடி சொல்லி புரிய வைப்பது!உங்கள் போன்றவருக்கே கைவந்த கலை ..பாரதியாரின் பாடலுக்கு பொழிப்புரை தேவை இல்லை சாதாரண மக்களும் படித்து புரிந்து கொள்ளலாம் .. சினிமா -சிந்து பைரவிய்ல் பாடறியேன் படிப்பறியேன் .....கடற்கரைய்ல் சிவகுமார் பாடல் சாதகம் செய்யும் போது ஒரு செம்படவன் பாசிமாலை கொடுத்த நிகழ்வு !!! படித்தவர் படித்தவர்கள்தான்!!!!.நீங்கள் நீங்கள்தான் !!!...

    ReplyDelete
  4. இது இதுதான் KMRK டச் என்று சொல்லப்படுகிற தனிப்பட்ட அவரின் முத்திரை.
    இதை இதைத்தான் வளரும் குழந்தைகளாகிய நாங்கள் உங்களிடமிருந்து
    எதிர்பார்க்கிறோம். நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர்.
    உங்களின் அனுபவங்களையும் அதிலிருந்து தாங்கள் சுவீகரித்துக்கொண்ட
    நியதிகளையும் எங்களுக்கு அவ்வப்போது எடுத்துரைத்து எங்களை நெறிபிரளாமல்
    கொண்டுசெல்லவேண்டியது தங்களைப்போன்ற பெரியோர்களின் கடமை.
    பொதுவாக 60 வயதை கடந்துவிட்டால் ஒய்வு பெறவேண்டும் என்று சொல்வார்கள்.
    ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கு பொறுப்பு என்பது இனிமேல்தான் அதிகமாகும்.
    இதுநாள் வரை உங்களுக்காக வாழ்ந்ததிலிருந்து ஒய்வு பெற்று இனிமேல் மற்றவர்களுக்காக
    வாழ வேண்டிய பொறுப்பைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
    இந்த கதையில் வந்த நியதியைப் போல் பகவத்கீதையிலும் ஒரு நியதியை பகவான் சொல்லுவார்
    "ஒரு யுகத்தின் தர்மங்களை இன்னொரு யுகத்தில் கடைபிடிக்கக்கூடாது" என்று.
    நான் கூறியது சரிதானே அருட் தந்தை அவர்களே.
    நந்தகோபால்

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்...!

    குரு என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிக அருமையான விளக்கம்+உதாரணம்! KMRK சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! இந்த அருமையான கட்டுரையை வலையேற்றிய எங்கள் குருவுக்கு மிக்க நன்றிகள்...!

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  6. //" hotcat said...
    Very Super. I really admire the interest of people who can write for others at this age. Thanks a bunch"//

    Thank you Sankar!'At this age' may mean two things.One is 'my advanced age'.The other is the 'present times' I do not know what exactly you mean.

    ReplyDelete
  7. //"hamaragana said...
    அன்புடன் வணக்கம் திரு kmrk
    அருமையான பதிவு.. மிக எளிமையாக எடுத்து கொடுத்துள்ளீர்கள் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் ஒரு பாமரனும் எளிதாக படித்து புரிந்து கொள்ளும் வகையில் தருவதுதான் கற்றோருக்கு அழகு.."//
    பாராட்டுக்கு மிக்க நன்றி நடராஜன் சார்!உங்க‌ளைப் போன்ற அன்பர்கள் கட்டாயம் படித்துப் பாராட்டுவீர்கள் என்று எதிர்பார்ப்பே எழுதத் தூண்டுகிறது.


    வெகுஜனப் பத்திரிகைகளுடைய மனஓட்டம் மாறி வெகு காலம் ஆகிவிட்டது. என் ஆக்கங்க‌ள் எல்லாம் அங்கே குப்பைக் கூடைக்குப் போகும். ஏதோ வாத்தியாரின் பெருந்த‌ன்மை காரணமாக என் எழுத்துக்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.'எளிமையாக இருக்கிறது' என்பது ஆறுதலாக இருக்கிறது. நாம் சொல்ல வந்ததைப் பிறர் நாம் புரிந்து கொள்வதைப் போலவே புரிந்துகொள்ள வேண்டுமே என்ற தவிப்பு ஒரு எழுத்தாளனுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அந்தத் தவிப்பே எளிமையாக உருமாற வேண்டும்.அப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னால்தான் எழுத்தாளனுக்குத் தெரியவ்ரும்.
    மீண்டும் நன்றி!

    ReplyDelete
  8. //"ஒரு யுகத்தின் தர்மங்களை இன்னொரு யுகத்தில் கடைபிடிக்கக்கூடாது" என்று. நான் கூறியது சரிதானே அருட் தந்தை அவர்களே."//

    பாராட்டுக்கு நன்றி ந‌ந்த‌கோபால்.என் குண‌த்தில் ஏதோ ஒரு 'நெருடலை'க்க‌ண்டுதான் ம‌றைபொருளாக ஏதேதோ சொல்கிறீர்க‌ள். நான் கொஞ்ச‌ம் ய‌தார்த்த‌மான‌வ‌ன். எதையும் சுற்றி வ‌ளைக்காம‌ல் நேர‌டியாகச் சொல்பவன்.ஜாதி பற்றி நாம் விவாதிக்க வேண்டுமானால் மின் அஞ்சலில் விவாதிக்க‌லாம். அத‌ற்கான வா‌ய்ப்பை அளித்தும், இங்கே வ‌ந்து ஏதோ பூட‌க‌மாக‌ச் சொல்கிறீர்க‌ள்.இன்னும் கொஞ்ச‌ம் வெளிப்ப‌டையாக‌வும் எளிமையாக‌வும் க‌ருத்துக்க்ளைச் சொல்லும்ப‌டி ப‌ணிந்து வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. //M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!

    குரு என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிக அருமையான விளக்கம்+உதாரணம்! KMRK சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!"//

    மிக்க நன்றி திருவேல் முருகன் சார்!

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,

    என்னைப் போன்றவருக்கும் புரியும்படியான ஒரு அற்புதமான ஆக்கத்தை தந்த திரு KMRK ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். இந்த ஆக்கத்தை எழுத்து நடையில் வகுப்பில் பதிவேற்றிய எங்கள் ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

    வகுப்பறையில் நானும் பலநாட்கள் வருவதுண்டு அனால் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை, தற்பொழுது பின்னூட்டமும் செய்ய பழகுகின்றேன் & விரும்புகின்றேன் (வருகையை மெய்யூட்ட) அனுமதி கிடைக்கும் என எதிர்பார்கின்றேன்.

    அன்புடன் வளரும் மாணவர்களில் ஒருவன்.

    ReplyDelete
  11. kmr.krishnan said...
    //" hotcat said...
    Very Super. I really admire the interest of people who can write for others at this age. Thanks a bunch"//

    Thank you Sankar!'At this age' may mean two things.One is 'my advanced age'.The other is the 'present times' I do not know what exactly you mean.

    எப்படி இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக்களைப் படிப்பதில் தங்கள் சுய சார்பிலான கருத்துக்களுடன் கலந்து ஒரு புது வடிவமான புரிந்துணர்வு வருவது இயல்பான விஷயமே..அதனால்தான் திருக்குறளுக்கு பரிமேலழகரில் ஆரம்பித்து இன்று வரை அவரவர் மனதில் தோன்றியபடி விளக்கவுரைகளை எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..எழுத்து என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிந்தாலும் பலப்பல புதுப் புது அர்த்தங்களை உள்ளடக்கியதே..உதாரணத்துக்கு இந்த 'age' விவகாரம்..

    ReplyDelete
  12. நான் தங்களது கேள்விகளுக்குண்டான பதிலை தங்களின்
    மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.
    தங்களது குணத்தில் எனக்கு எந்தவிதமான நெருடலும் இல்லை
    என்னைப்பொறுத்தவரை நீங்கள் மிகவும் மென்மையானவர் என்பதை
    மாணவன் வகுப்பறையில் மணி என்பவருடனான கருத்துப் பரிமாற்றத்தில்
    கண்டுகொண்டேன். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் உங்கள் அளவுக்கு என்னால் பொறுமையை
    கடைபிடித்திருக்க முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    நான் தங்கள் குணத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு பெரிய மனிதன் கிடையாது என்பதையும்
    தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி
    நந்தகோபால்

    ReplyDelete
  13. பெரியவுகலெல்லாம் பெரியவுங்களைப் பத்திப் பேசுற இடத்துலே வயசுப் பசங்க விலகிப் போயிடுறதுதானே நியாயம்?
    என்னளவுக்கு ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சது..
    எனக்கென்னவோ இவரை விட இவரோட ஜூனியர் குரு விவேக்ஜி குடுக்குற பஞ்ச் டயலாக்தான் ரொம்பப் புடிக்கும்..

    'Arise, Awake and stop not till the goal is reached'

    'You will be nearer to heaven through football than through the study of the Gita.'

    சும்மா 'நச்'சுன்னு இல்லே?

    வயசுப் பசங்களுக்கு தோதா,
    செம ஸ்ப்பிரிட்டா..

    ReplyDelete
  14. மகாத்மா காந்திஜியிடம் ஒருவர் கேட்டார், "நீங்கள் மக்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன?" என்று. அதற்கு மகாத்மா சொன்னார் "என் வாழ்க்கைதான் மக்களுக்குச் செய்தி" என்று. மகான்கள் வாழ்ந்துவிட்டுச் சென்ற பின்னும் அவர்களுடைய வாழ்க்கையே பிறருக்கு வழிகாட்டியாக அமைந்து விடுகிறது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டை அன்பர் கே.எம்.ஆர். எடுத்துக் கொடுத்திருக்கிறார். இராமகிருஷ்ண பரமஹம்சர் பள்ளிப்படிப்பு படிக்காதவர். காளிதான் அவர் குரு, நண்பர், வழிகாட்டி எல்லாம். அப்படிப்பட்டவர் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்ச்சிகளைக் கேட்டால் நமக்கெல்லாம் புல்லரிக்கும். அவற்றில் மூழ்கி முத்தெடுத்தவர் நமது முத்து இராமகிருஷ்ணன். அவரது இந்த கட்டுரை யாரிடம், எப்போது, எங்ஙனம் பேசவேண்டுமென்பதை ஒருவரே மாறுபட்டுப் பேசினாலும், நல்ல விளைவை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும் என்பதை நிதர்சனமாகப் புரிந்து கொள்ளலாம். நல்லவைகளைப் புரிந்து கொள்ள வயது தடையாக இருக்க வேண்டியதில்லை. அவருக்கு நன்றி, எடுத்துக் கொடுத்த ஆசிரியர் ஐயாவுக்கும் நன்றி. (P.S: His wife should note that Mr.KMR has given his young age photo for his write-up)

    ReplyDelete
  15. மைனர்
    சந்தடிசாக்கில் என் போன்றோரை எல்லாம் பெருசுக என்று ஒதுக்குவதில்தான்
    உங்களுக்கு எல்லாம் எத்துணை சந்தோசம்.
    இவ்வளவு காலத்திர்க்கப்புறம் அவாளை வருத்தப்படுத்த வேண்டாம் என்று
    KMRK சார் அந்த போட்டோவை காட்டியிருக்கமாட்டார் என்றே நான் நினைக்கிறேன்.
    KMRK சாரின் வேறு சில பரிமாணங்களை எமக்கு அறிமுகப்படித்தியற்கு திரு தஞ்சாவூரான்
    அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
    நந்தகோபால்

    ReplyDelete
  16. //"என்னைப் போன்றவருக்கும் புரியும்படியான ஒரு அற்புதமான ஆக்கத்தை தந்த திரு KMRK ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்"//

    நன்றி தேடல் அவர்களே!"என்னைப் போன்றவருக்கும்" என்று சொல்வது உங்க‌ளுடைய அடக்கத்தைக் காண்பித்தாலும்,'தேடல்' என்ற உங்க‌ள் புனைப்பெயர் உள்ளே இருக்கும் உன்னத ஆசாமியை உலகுக்குக் காட்டுகிறது.
    தேடல் உள்ளவர்களுக்கே புரிதல் கிடைக்கும்.புரிந்து கொண்டவர்களே பெருமை அடைவார்கள்!நன்றி.

    ReplyDelete
  17. ///"எழுத்து என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிந்தாலும் பலப்பல புதுப் புது அர்த்தங்களை உள்ளடக்கியதே..உதாரணத்துக்கு இந்த 'age' விவகாரம்.."///


    மைனர்வாள்! நுட்ப‌மாக‌ப் புரிந்து கொள்வ‌தும், அதைச் சுட்டிக்காட்டி பின்னூட்ட‌ம் இடுவ‌தும் உங்க‌ளுடைய‌ பாணி.இந்த‌ வ‌ய‌து விவ‌கார‌ம் உங்க‌‌ளுக்காக‌வே வைக்க‌ப்ப‌ட்ட‌ பொறி.சிக்குவீர்க‌ள் என்று நான் எண்ணீயதுபோலவே நடந்தது. புதுப்புது அர்த்தம் கொள்ள இதோ ஒரு ஜோக்:
    Leave letter:
    --------------
    "Sir,
    Please sanction two days leave as I am going to my village to sell my lands along with my wife"

    ReplyDelete
  18. இசைந்தபடி பேசுவது எப்படி?
    ஆக்கம் சிறப்பாக உள்ளது.நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-28

    ReplyDelete
  19. நீங்கள் மிகவும் மென்மையானவர் என்பதை
    மாணவன் வகுப்பறையில் மணி என்பவருடனான கருத்துப் பரிமாற்றத்தில்
    கண்டுகொண்டேன். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் உங்கள் அளவுக்கு என்னால் பொறுமையை கடைபிடித்திருக்க முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்''//

    ந‌ன்றி ந‌ந்த‌கோபால் அவ‌ர்க‌ளே!ம‌ணி இங்கேயும் வ‌ந்து பின்னூட்ட‌ம் இட்டு வ‌ருப‌வ‌ரே! என‌வே கொஞ்ச‌ம் ஜாக்கிர‌தை உண‌ர்வுட‌ன் அணுகுங்கள்.இப்போதுதான் கோவிந்த‌னின் கொக்க‌ரிப்பால் ஏற்ப‌ட்ட‌ வெப்ப‌ம் ச‌ற்றே வ‌குப்ப‌றையில் அட‌ங்கி உள்ள‌து. புதிதாக‌ ஏதாவ‌து புய‌லை ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ இட‌த்தில் நாம் துவங்க‌ வேண்டாம். அட‌க்கியே வாசிப்போம்.

    ReplyDelete
  20. //////////
    G.Nandagopal said... மைனர்
    சந்தடிசாக்கில் என் போன்றோரை எல்லாம் பெருசுக என்று ஒதுக்குவதில்தான்
    உங்களுக்கு எல்லாம் எத்துணை சந்தோசம்.\\\\\\\\
    நீங்க சவூதிக்கு return ஆனவுடன் இட்ட முதல் கமெண்ட்டுக்கு நான் சொன்ன பதில் பின்னூட்டத்தை நீங்கள் இன்னும் படிக்கவே இல்லை..அதனால்தான் இப்பிடி நீங்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்..படித்துவிட்டு பதில் சொல்லவும்..

    ReplyDelete
  21. நன்றி..KMRK சார்..ஜோக் செம ஷார்ப்பா படிச்சா 'ரெண்டு நாளிலே இடத்தைக் கூட வித்துடலாம்.. மத்ததை எப்பிடி?
    இதுதான் எனக்கு முதல்ல புரியுது..'
    அப்புறமாத்தான் 'ஓஹோ..இவுரு பொண்டாட்டியையும் கூட அழைச்சுகிட்டு போயி நிலத்த விக்க லீவு கேக்குராரோ'ன்னு..
    எனக்கு இப்பிடி புரியுறதுதான் பல பேருக்கு பிரச்சினையே..
    முதல்ல சுவிட்ச் போட்டா மாதிரி விளங்குறது என்னவோ டச்சிங்கான மேட்டர்தான்..

    ReplyDelete
  22. //"எனக்கென்னவோ இவரை விட இவரோட ஜூனியர் குரு விவேக்ஜி குடுக்குற பஞ்ச் டயலாக்தான் ரொம்பப் புடிக்கும்..

    'Arise, Awake and stop not till the goal is reached'

    'You will be nearer to heaven through football than through the study of the Gita.'

    சும்மா 'நச்'சுன்னு இல்லே?

    வயசுப் பசங்களுக்கு தோதா,
    செம ஸ்ப்பிரிட்டா.."//


    மைன‌ர் குறிப்பிடும் "விவேக்ஜி" சுவாமி விவேகா‌ன‌ந்த‌ர்! (யாராவ‌து சினிமா நகைச்சுவை ந‌டிகர் விவேக்கை நினைத்துவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வே அவ‌ச‌ர‌மாக‌ இதை எழுதுகிறேன்)

    "'Arise, Awake and stop not till the goal is reached' "

    சுவாமி விவேகான‌ந்த‌ரும் ச‌ரி ,அவ‌ருடைய‌ குருவான‌ ஸ்ரீப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ரும் ச‌ரி
    தாங்க‌ள் புதிதாக‌ ஏதோ செய்ய‌ வ‌ந்த‌தாக‌ எப்போதும் கூறிக் கொண்ட‌தில்லை.

    விவேகான‌ந்த‌ர் கூறிய‌ மேற்க‌ண்ட‌ க‌ருத்து க‌ட‌ உப‌நிட‌த‌த்தில் உள்ள‌‌தின் அருமையான‌ ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பே! ஆங்கில‌த்துக்கு ம‌ட்டுமே விவேகான‌ந்த‌ர் பொறுப்பு. க‌ருத்து வேதாந்த‌‌மான‌ க‌ட‌ உப‌நிட‌த‌த்தினுடைய‌து.

    ""உத்திஷ்ட‌த‌=எழுந்திரு! ஜாக்ர‌த‌=விழிப்புண‌ர்வு கொள்!
    ப்ராப்ய‌வ‌ரான் நிபோதித‌=இல‌ட்சிய‌த்தை அடையும் வ‌ரை அய‌ர்வ‌டையாதே!"

    'You will be nearer to heaven through football than through the study of the Gita.'

    கீதை திண்ணையில் அம‌ர்ந்து பேசுவ‌த‌ற்கு ம‌ட்டும்தான் என்ற‌ போக்கினை
    மாற்ற‌ நினைத்து சுவாமிஜி கூறிய‌ க‌ருத்து இது.கீதையைப்ப‌டிக்காம‌ல் கால் ப‌ந்து விளையாடினால் போதும் என்று பொருள் கொள்ள‌க்கூடாது.

    செய‌ல் புரிய‌ ம‌றுத்த‌ அர்ஜுன‌னுக்கு ப‌க‌வான் கூறும் போது,"செய‌லில் இருந்து யாரும் த‌ப்பிக்க‌ முடியாது. நானே கூட‌ எப்போதும் செய‌ல் புரிந்து கொண்டே இருக்கிறேன்.நான் செய‌ல் புரியாம‌லேயே என‌க்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் நானும் செய‌ல் புரியாம‌ல் இருப்ப‌தில்லை. என‌வே நீயும் செய‌லில் இருந்து வில‌காதே. உன்னால் வில‌க‌வும் முடியாது. உன் தாம‌ச‌ குண்த்தை விட்டு எழுந்திரு! போருக்குத் த‌யா‌ராகு!"என்கிறார்.

    கீதை செய‌ல் புரிய‌த் தூண்டும் நூல். என‌வே செய‌லில் இற‌ங்கி விட்ட‌வ‌ர்க‌ள்,
    கீதையை ந‌டைமுறைக்குக் கொண்டுவ‌ந்துவிட்ட‌வ‌ர்க‌ள், கீதையை ப‌டிக்க‌ வேண்டிய‌து இல்லை.கால் ப‌ந்து விளையாட்டு என்ப‌து இங்கே செய‌ல் புரிவ‌த‌ற்கு உதார‌ண‌மாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌து.


    செய‌ல் முறை வேதாந்த‌ம் என்ப‌து என்ன‌செய்யும் என்னும் போது சுவாஜி கூறினார்: "அது ஒரு காரோட்டியை த‌லை சிற‌ந்த‌ காரோட்டியாக‌ மா‌ற்ற‌ம்
    செய்யும்.ஒரு ஆசிரிய‌ரை த‌லை சிற‌ந்த‌ ஆசிரிய‌ராக‌ மாற்ற‌ம் செய்யும்.
    ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியை த‌லை சிற‌ந்த‌ தொழிலாளியாக‌
    மாற்றிவிடும்!"
    என‌வே கால்ப‌ந்து என்ப‌து கீதையை விட‌ மேன்மையான‌து என்று யாரும் பொருள் கொள்ள‌க்கூடாது!

    ReplyDelete
  23. அவற்றில் மூழ்கி முத்தெடுத்தவர் நமது முத்து இராமகிருஷ்ணன்'//

    இன்னும் தயங்கிக்கொண்டே கரையில்தான் நிற்கிறேன்.மூழ்கியிருந்தால் என்றோ அவ‌ருடைய சாம்ராஜ்யத்திற்குப் போயிருப்பேன்.மூழ்க‌வும் இல்லை முத்தெடுக்கவும் இல்லை.என்பால் கொண்ட அன்பால் உயர்த்திச் சொல்கிறீர்கள், கோபால்ஜி!நன்றி கோபால்ஜி!

    என்னை 'பெரிசு, பெரிசு' என்று சொல்லி இளைஞர்கள் விலகிப் போவதால்
    என் வாலிப வயது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறேன். அந்தப்படம் எடுத்த நிகழ்வு உங்க‌ளுக்குத் தெரியும்.பேட்ஜை உற்றுப் பாருங்கள். எங்கே, எப்போது எடுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  24. //V Dhakshanamoorthy said...
    இசைந்தபடி பேசுவது எப்படி?
    ஆக்கம் சிறப்பாக உள்ளது.நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி//


    பாராட்டிற்கு ந‌ன்றி ந‌ண்ப‌ரே!

    ReplyDelete
  25. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தோழர் முத்துராமகிருஷ்ணன் அவர்களின் இன்றைய ஆக்கம் மிகவும் அருமை. வளர்க அவரின் ஆக்கங்கள்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  26. விளக்கம் அருமை KMRK சார்..புரியாமல் ஏனோதானோவென்று படிப்பவர்களுக்குப் பொய் சேரும் விதத்தில் விளக்கியிருப்பது அருமை..எனக்கு இந்த 'கட உபனித' மேட்டர் புதுசு..நன்றி..

    ReplyDelete
  27. இட்ம் பொருள் ஏவல் என்பது இதுதான்.

    ReplyDelete
  28. ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தோழர் முத்துராமகிருஷ்ணன் அவர்களின் இன்றைய ஆக்கம் மிகவும் அருமை. வளர்க அவரின் ஆக்கங்கள்.
    அன்புடன், அரசு."//
    ந‌ன்றி அர‌சு அவ‌ர்க‌ளே! த‌ங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளின் பாராட்டு டானிக் போல் உள்ள‌து.தொட‌ர்ந்து ஆத‌ர‌வு கிடைத்தால் தொடர்ந்து எழுதலாம்தான். மீண்டும் நன்றி!

    ReplyDelete
  29. minorwall said...
    விளக்கம் அருமை KMRK சார்..புரியாமல் ஏனோதானோவென்று படிப்பவர்களுக்குப் பொய் சேரும் விதத்தில் விளக்கியிருப்பது அருமை..எனக்கு இந்த 'கட உபனித' மேட்டர் புதுசு..நன்றி.."//


    ந‌ம‌து வேத‌ம், வேதாந்த‌ம்(வேத‌த்தின் முடிபு), இதிஹாச‌ங்க‌ள், புரா‌ண‌ங்க‌ள்,
    ப‌க‌வ‌த் கீதை, ப்ர‌ம்மசூத்ர‌ம் ஆகிய‌வைப‌ற்றி எந்த‌வித‌ காழ்ப்புண‌ர்வும் இன்றி ப‌டித்தால் இன்னும் ப‌ல‌ புதிய‌ செய்திக‌ளை அறிய‌லாம்.


    "அறிவு எல்லா திசையிலிருந்தும் எங்களை வந்து அடையட்டும்‌" என்று முழங்கும் ரிக் வேத மந்திரம் நம்மை வழி நடத்தட்டும்.

    ReplyDelete
  30. arthanari said...
    //"இட்ம் பொருள் ஏவல் என்பது இதுதான்".//


    ந‌ன்றி அர்தநாரி சார்!இது ஒரு கோணம்தான்.ஒரே செய்தியை ப‌ல‌ரும் ப‌ல‌ கோண‌த்தில் இருந்து பார்த்தால்தான் பொதுவான‌ க‌ருத்தை எட்ட‌ முடியும். மீண்டும் ந‌ன்றி

    ReplyDelete
  31. Aano bhadra krtavo yantu vishwatah.(- RIG VEDA)
    "Let noble thoughts come to me from all directions"

    ReplyDelete
  32. பகவத் கீதையில் உள்ள கர்ம யோகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
    " பார்த்தா , பொறுப்பை என் தலையில் கட்டிவிட்டு நீ கடமையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே.
    மனிதனாகப்பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் இருக்கிறதோ இல்லையோ அவரவர் தங்கள் கடமைகளை சரிவர செய்தே ஆகவேண்டும்.
    என்னையே எடுத்துக்கொள். இந்த மூவுலகிலும் நான் அடையாதது என்று எதுவேமேயில்லை. நான் எதை அடைய நினைத்தாலும் என்னால் எளிதில் அடைந்துவிடமுடியும். இருந்தாலும் பலனை எதிர்பார்க்காமல் கடமை ஆற்ற முடியும் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்'
    இந்த அற்புத வரிகளை KMRK அவர்கள் நினைவுபடுத்தியதற்கு நன்றி.
    பார்க்கப்போனால் KMRK அவர்களின் மொத்த பரிமாணங்களையும் அளவிட முடியாது போலிருக்கிறதே.
    நந்தகோபால்

    ReplyDelete
  33. மைனர் சார்,
    உங்கள் பின்னூட்டத்தை வந்தவுடன் முதல்வேலையாக படித்துவிட்டேன்.
    KMRK , தஞ்சாவூரார் , ஆலாசியம் உள்ளிட்ட அனேக பிதாமகர்களும், மகாரதர்களும்
    மேலும் தங்களைப் போன்றுள்ள அபிமன்யுக்களும்
    அடங்கிய நம் வகுப்பறையில் நான் இதில் எந்த தகுதியுடன்
    எனது பிரவேசத்தை துவக்குவது என்றுதான் தெரியவில்லை.
    அதனால்தான் KMRK சாருடன் சற்று
    அளவளாவி 'பூக்களுடன்
    சேர்ந்து இந்த நாரும் மணக்கட்டுமே' என்று முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன்.
    மேலும் இவர்கள் எல்லாம் சொல்லாத எதை நாம் புதிதாக சொல்லிவிடப்போகிறோம்
    என்கின்ற அச்ச உணர்வும் ஒரு காரணம்.
    நந்தகோபால்

    ReplyDelete
  34. //"பார்க்கப்போனால் KMRK அவர்களின் மொத்த பரிமாணங்களையும் அளவிட முடியாது போலிருக்கிறதே".
    நந்தகோபால்//

    அளவிடமுடியாதது என்றால் அது இறைத்தன்மை மட்டுமே.
    குறைகுடம் கூத்தாடுகிறது. கற்றது கை மண்ணளவு! கல்லாதது உலகளவு!

    ReplyDelete
  35. KMRK Said .....\\\\\\\
    ந‌ன்றி ந‌ந்த‌கோபால் அவ‌ர்க‌ளே!ம‌ணி இங்கேயும் வ‌ந்து பின்னூட்ட‌ம் இட்டு வ‌ருப‌வ‌ரே! என‌வே கொஞ்ச‌ம் ஜாக்கிர‌தை உண‌ர்வுட‌ன் அணுகுங்கள்.இப்போதுதான் கோவிந்த‌னின் கொக்க‌ரிப்பால் ஏற்ப‌ட்ட‌ வெப்ப‌ம் ச‌ற்றே வ‌குப்ப‌றையில் அட‌ங்கி உள்ள‌து. புதிதாக‌ ஏதாவ‌து புய‌லை ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ இட‌த்தில் நாம் துவங்க‌ வேண்டாம். அட‌க்கியே வாசிப்போம்.

    தங்களது ஆலோசனைக்கு மிகவும் நன்றி KMRK சார் அவர்களே. திருப்பி எய்யக்கூடிய அளவுக்கு அஸ்திரங்களும் தேவைப்பட்டால் பிரயோகிக்கலாம் என்கின்ற அளவிற்கு தெய்வீக அஸ்திரங்களும் தங்களைப்போன்றோரின் ஆசிகளும் என்றென்றைக்கும் என்னிடம் இருக்கும்.
    நந்தகோபால்

    ReplyDelete
  36. கிருஷ்ணன் சார், வாராவாரம் சும்மா எழுதித் தள்ளிண்டிருக்கேள்.

    மகான்களைப் பற்றி எனக்கு அவ்வளவு புரிதல் கிடையாது. படித்தாலும் மேலோட்டமாகத்தான் படிப்பது வழக்கம். அதனால இதுல டீப்பா போக விரும்பலை. மேலும் வரலாற்றிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருத்தரை பிடித்துவிட்டால் அவரை தெய்வம் ரேஞ்சுக்கு உயர்த்தி, தனக்குப் பிடித்த, சாதகமான விஷயங்களைப் பற்றி மட்டுமே (கற்பனை கலந்து) அதில் எழுதப்பட்டிருக்கும். (நிறைய இருட்டடிப்புகளும் இருக்கும்). (மற்றபடி இது ராமக்ரிஷ்ணரைப் பற்றிய கருத்து இல்லை). நடுநிலையுடன் ஒருவரைப் பற்றிய பிளஸ் / மைனஸ் விவரமாக அலசப்பட்டிருக்கும் புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படிப்பது வழக்கம். எதைப் படித்தாலும் எனக்கு சரி என்று தோன்றுவதையே எடுத்துக் கொள்வதும் வழக்கம்.

    ReplyDelete
  37. VERY VERY GOOD POSTING. THANK YOU SIR.

    ReplyDelete
  38. ஒரு கதவில் நுழைக்க ஒரு மிருக கூட்டம் பல தாக்குதல்கள் நடத்தியது.
    தனி ஆளாக நின்று போரிட்டேன். போர் ஆரம்பமான போதே தெரிந்து விட்டது ஆள் பலமோ, பண பலமோ நம்முடன் இல்லை என. வீழ்ந்தாலும் நம் உடம்பு கூட நம் விருப்பதிற்கு மாறாக அக்கதவில் நுழைப்பதை அனுமதிக்க கூடாது என்று வெறி கொண்டு மிருக அவதாரம் எடுத்து உள்ளே இருப்பதை அழித்து
    அக்கதவை நானே நினைத்தாலும் திறக்க முடியாதபடி ஆணி அறைந்து
    மூடி விட்டு கிளம்பிவிட்டேன்.

    பல வருட தாக்குதலின் போது உதவிக்கு வரா ஒரு கூட்டம் நான் மூடிய பின்பு
    அக்கதவை திறக்க பெரும் பாடு படுகிறது. உள்ளே இருக்கும் அழிவை கண்டு உச்சு கொட்டுகிறது. இதை கண்டு வேடிக்கை பார்பதா, விரக்தி அடைவதா விளங்கவில்லை. குழப்பமே மிஞ்சுகிறது.

    பார்போம் நல் வழியில் கதவு திறக்கிறதா என. என்னை பொறுத்த மட்டில் கதவு திறந்தாலும் ஒன்றுதான் திறக்கா விட்டாலும் ஒன்றுதான்.

    ReplyDelete
  39. /////G.Nandagopal said... மேலும் இவர்கள் எல்லாம் சொல்லாத எதை நாம் புதிதாக சொல்லிவிடப்போகிறோம்
    என்கின்ற அச்ச உணர்வும் ஒரு காரணம்.\\\\\\\\\\

    'அஸ்வத்தாமன், அபிமன்யு' ன்னு ஏக கலாட்ட பன்ன்றப்போவே தெரியும் நீங்க எந்த ரேஞ்சுலே எழுதுவீங்கன்னு..

    so , உங்க படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    ரிலீசுக்கு முன்னாடி நம்ம (பத்துபேர் கொண்ட) படைப்பாளிகள் சங்கத்துலேருந்து சின்னதா ஒரு அறிமுக ஷோ வெச்சுக்கிட்டு 'இந்த சீன் எழுதும்போது ரொம்ப டென்ஷன் ஆகி இப்பிடி ஆயிடுச்சு, அப்பிடி ஆயிடுச்சு, மறக்கவே முடியாது, அந்த இம்பாக்ட் கதை நல்லாவே வந்துருக்கு, இது வரைக்கும் இல்லாத ஒரு வித்தியாசமான கதையமைப்பு, எழுதி வாசிசுக் காமிச்சு என்கிட்டே ஒபினியன் கேட்டப்போவே தெரியும்..இது நிச்சயம் செம ஹிட்டாகும், தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது வரவு, புறநானூற்றுக்குப் பின் ஒரு புதுநானூறு, அப்பிடி இப்பிடின்னு' அளந்து வுட்டு க்ரூப் இண்டேரக்ஷன் இன்ட்ரோ குடுத்து கலக்கிடுவோம்..இப்ப எல்லாருமே இப்பிடித்தானே எல்லாத்தையும் ரிலீஸ் பண்றாங்க..

    மொக்கை மேட்டரைக் கூட செமையா பில்ட் அப் கொடுக்குராங்களே..உங்க மேட்டர் நிச்சயமா தரம்,காரம்,மனம்,குணம் எல்லாம் நிறைந்ததா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்..

    ச்சும்மா அச்சமா இருக்குன்னு அது இதுன்னு டயலாக் அடிக்காம சீக்கிரமா களத்துலே குதிங்க..மாமூ..

    ReplyDelete
  40. //"கிருஷ்ணன் சார், வாராவாரம் சும்மா எழுதித் தள்ளிண்டிருக்கேள்...."

    பின்னூட்டத்திற்கு நன்றி டெல்லி உமாஜி! 'சும்மா' என்பதற்குப் பல பொருள். நான் எழுதும் செய்திகள் சுமார்தான் என்பதாகக் கொள்ளலாம்.வேலை வெட்டி இல்லாமல், ஆழமான செய்தியின்றி நிறைய‌ எழுதுகிறீர்கள் என்று கொள்ளலாம்.பணம் காசு இல்லாமல் வெட்டி வேலை செய்கிறீர்கள் என்று கொள்ளலாம்.எந்தப் பொருளில் சொன்னாலும், உண்மையைத்தான் சொல்கிறீர்கள்.

    ஆனால் 'சும்மா' என்ற சொல், சும்மா சொல்லக்கூடாது, மிக ஆழமான சொல்.'சும்மா இருக்க முடியவில்லையே' என்றுதான் ஞானிகளும் மகான்களும் ஏங்கி இருக்கிறார்கள்.

    "செம்மான் மகளைத் திருடுந் திருடன்
    பெம்மான் முருகன் பிறவா னிறவான்
    சும்மா இருசொல் லறவென் றலுமே
    அம்மா பொரு ளொன்று மறிந்திலனே."

    கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர்."சும்மா இரு" என்று இரண்டு சொல் சொன்னானாம் முருகன். அருண‌கிரிக்கு ஒன்றும் புரியவில்லையாம்.

    மஹாகவி பாரதியார் கூட 'சும்மா'என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குச் சும்மாத்தான் சொன்னேன்.

    சும்மா போற போக்கில படிச்சு வையுங்க,உமாஜி!‌

    ReplyDelete
  41. நடுநிலையுடன் ஒருவரைப் பற்றிய பிளஸ் / மைனஸ் விவரமாக அலசப்பட்டிருக்கும் புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படிப்பது வழக்கம். எதைப் படித்தாலும் எனக்கு சரி என்று தோன்றுவதையே எடுத்துக் கொள்வதும் வழக்கம்."//

    நடுநிலை என்பது எது? பிளஸ்/ மைனஸில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? மைனஸ்தான் என்றால் நம் மனநிலையினை அது சுத்தப்படுத்த உதவாது. என் பாட்டியம்மா நான் சிறுவனாக இருந்தபோது,
    "நல்ல கனவா வரணும் என்று வேண்டிக்கோப்பா" என்று படுக்கைக்குப் போகுமுன் சொல்லுவார்கள்.

    தர்மரும் துரியோதனனும் ஊரில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயப் புறப்பட்டார்கள். தருமர் திரும்பி வந்து "ஊரில் எல்லோரும் நல்லவர்களாகவே உள்ளார்கள்" என்றார். துரியோதனன் திரும்பிவந்து, "ஊரில் ஒரு நல்லவன் கூட‌ இல்லை. எல்லோரும் கெட்டவர்களே!"என்றார்.

    அரை டம்பளர் காப்பி மேஜை மேல் வைக்கப்பட்டது.இருவர் அதனைப் பார்த்தார்கள்.ஒருவர் சொன்னார், "பாதி டம்பளர் காப்பியால் நிறைந்துள்ளது"
    மற்றொருவர் சொன்னார், "பாதி டம்பளர் காலியாக உள்ளது"

    கோவிலும் ,குப்பை மேடும் அருகருகில் இருந்தால், நான் கோவில் மட்டுமே என் கண்ணில் படட்டும் என்று வேண்டிக்கொள்வேன்.

    முப்பரிமாணமுள்ள க்ளோப்பிற்கு எது நடு? இந்த ப்ரபஞ்சத்தின் நடு எது?
    நடுநிலை வகிப்பது/ அல்லது உணர்வது மிகவும் கஷ்டமான செயல்.தர்ம சங்க‌டம் என்பது நடுநிலை வகிப்பவர்களுக்கு அதிகமாக வரும்.மதில் மேல் பூனையாக எத்தனை காலம் இருப்பது?ஒரு சார்புடையவர்களுக்கு குறைந்தது, தர்ம சங்கடத்திலிருந்தாவது விடுதலை கிடைக்கும்.சுயேச்சை வேட்பளாரா?
    வெற்றி பெருவது கொஞ்ச‌ம் சிரம‌ம்தான்.


    ஒரு குருவை ஏற்றுக் கொண்டு அவரை ஆஸ்ரயிப்பது, முறையாகத் திருமணம் செய்து கொண்டு ஒரு கணவனுடன் நல்ல முறையில் குடித்தனம் நடத்துவது போன்ற‌து.அப்போது அந்தக் கணவனின் குறைகளை மனைவி பெரிது படுத்துவதில்லை.ஏழை நடைபாதை வாசிகளில் கணவனின் எல்லா
    வேண்டாத பழக்கங்க‌ளுக்கும் மனைவி சம்பாதித்துக் கொடுத்து துணை நிற்பாள்.அன்பு ஏற்பட்டு விட்டால் குறைகள் கூட நிறைகளாகத் தெரியும்.

    எல்லாம் சும்மாத்தான் சொன்னேன் உமாஜி! ஃப்ரீதான். காசு இல்லாமல் சும்மா படித்து வையுங்கள்.

    ReplyDelete
  42. balajikannan said...
    //"resent sir"//

    Hope you wanted to say "present sir"; but you have said "resent sir"

    If you are really expressing your resentment over my writings, I shall like to know the reason for it.

    ReplyDelete
  43. vprasanakumar said...
    //"VERY VERY GOOD POSTING. THANK YOU SIR."//

    Thank you Mr. prasannakumar. This is real encouragement.

    ReplyDelete
  44. ராஜ் said...
    //"ஒரு கதவில் நுழைக்க ஒரு மிருக கூட்டம் பல தாக்குதல்கள் நடத்தியது.
    ETC. ETC.,ETC,"///

    I DO NOT UNDRSTAND YOU SIR. Will you please explain?Hope you will not mind.

    ReplyDelete
  45. ///'அஸ்வத்தாமன், அபிமன்யு' ன்னு ஏக கலாட்ட பன்ன்றப்போவே தெரியும் நீங்க எந்த ரேஞ்சுலே எழுதுவீங்கன்னு..

    so , உங்க படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.."//

    மைனரின் இந்த வேண்டுகோளை நானும் வழி மொழிகிறேன், நந்தகோபரே!

    மைனர்வாள்! "கொல்லப்பட இருந்த 35 வயது குழந்தை" என்ற என் ஆக்கத்தில் அந்த எஸ் எம் எஸ் யாருக்கு அனுப்பப்பட்டது, மாமூ யார்?
    கோபர்களின் தலைவர் யார்? என்பதெல்லாம் இப்போது தெளிவாயிருக்குமே!?'மாமூ' என்று நந்தகோபாலை அழைத்துப் புதிரை நீங்களே விடுவித்து விட்டீர்களே!

    ஆமாம் நண்பர் ஹாலாஸ்யம் ஏன் சைலென்ட்?

    ReplyDelete
  46. ///////kmr.krishnan said...
    மைனர்வாள்! "கொல்லப்பட இருந்த 35 வயது குழந்தை" என்ற என் ஆக்கத்தில் அந்த எஸ் எம் எஸ் யாருக்கு அனுப்பப்பட்டது, மாமூ யார்?
    கோபர்களின் தலைவர் யார்? என்பதெல்லாம் இப்போது தெளிவாயிருக்குமே!?'மாமூ' என்று நந்தகோபாலை அழைத்துப் புதிரை நீங்களே விடுவித்து விட்டீர்களே!\\\\

    we confirmed it already..but this time you, the author confirmed this point..thanks..

    ReplyDelete
  47. மைனர் மற்றும் KMRK அவர்களுக்கு,
    என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் மிகுந்த நன்றி.
    தாங்கள் இருவரும் என்னிடம் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருப்பதை பார்க்கும்போது
    சற்றே எனக்கு உதறல் எடுக்கிறது. நான் ஏதாவது எழுதவேண்டுமென்றால் அது பக்தியோகத்தை
    குறித்து தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அய்யா அவர்கள் அது குறித்து
    எழுதவிருப்பதாக அறிந்தவுடன் இப்போது எதை எழுதுவது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
    நான் எது எழுதினாலும் அது அனுபவித்து அறிந்ததாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
    ஏன் என்றால் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் என்றால் படிப்பவர்களுக்கு
    சொல்லப்பட்ட விஷயங்களில் ஒரு நம்பிக்கை வரும்.
    இல்லாவிட்டால் 'சும்மா' படிப்பவர்கள் கூட அதை படிக்காமல் போய்விடக்கூடும்.
    இருப்பினும் தங்கள் இருவரின் ஆசியுடன் விரைவில் துவக்க உள்ளேன்.
    நன்றி
    நந்தகோபால்

    ReplyDelete
  48. ராஜ் said...
    //"ஒரு கதவில் நுழைக்க ஒரு மிருக கூட்டம் பல தாக்குதல்கள் நடத்தியது.
    ETC. ETC.,ETC,"///
    KMRK said...
    I DO NOT UNDRSTAND YOU SIR. Will you please explain?Hope you will not mind.

    ராஜ் அவர்களே
    அய்யா அவர்களைப்போல நானும் கேட்க நினைத்தேன்.
    திடீரென்று வெறும் உவமானங்களை மட்டும் வைத்து பின்நூட்டமளித்தால்
    என்ன எதுவென்று புரிவதில்லை. ஒருவேளை நாங்கள்தான் ஏதாவது
    ஏடாகூடம் செய்துவிட்டோமா என்று ஒரே குழப்பம்.
    தாங்கள்தான் அதை தீர்த்து வைக்க வேண்டும். பொதுவாக யாருடைய
    மனதும் புண்படக்கூடாது என்று நினைப்பவர்கள் நாங்கள்.
    நந்தகோபால்

    ReplyDelete
  49. 'சும்மா' என்பதற்குப் பல பொருள்.//

    நீங்க சொன்ன எந்த அர்த்தத்திலும் நான் சொல்லவில்லை. ஒரு பாராட்டாகத்தான் 'சும்மா' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினேன். இவ்வளவு தீவிரமா எழுத்து ஆர்வத்தோட எழுதறேள்னு அதுக்கு அர்த்தம். பின்னூட்டம் போடும்போது நான் ரொம்ப யோசிப்பதில்லை. அந்த நேரத்துக்கு என் மூட் எப்படி இருக்கோ / என்ன தோணுதோ அதை அப்படியே எழுதுவதுதான் வழக்கம். பேசுவதும் அப்படித்தான். பேசும்போது 'சும்மா பின்னிட்ட'ன்னு சொல்ல மாட்டோமா. அது மாதிரிதான். மற்றபடி யாரையும் காயப்படுத்தற மாதிரியோ / கிண்டல் பண்றது மாதிரியோ எப்பவும் பின்னூட்டம் போட்டது கிடையாது.

    ReplyDelete
  50. ///////kmr.krishnan said...
    மைனர்வாள்! "கொல்லப்பட இருந்த 35 வயது குழந்தை" என்ற என் ஆக்கத்தில் அந்த எஸ் எம் எஸ் யாருக்கு அனுப்பப்பட்டது, மாமூ யார்?
    கோபர்களின் தலைவர் யார்? என்பதெல்லாம் இப்போது தெளிவாயிருக்குமே!?'மாமூ' என்று நந்தகோபாலை அழைத்துப் புதிரை நீங்களே விடுவித்து விட்டீர்களே!\\\\

    we confirmed it already..but this time you, the author confirmed this point..thanks..
    முதலில் மைனர் அவர்கள் சொன்னபோது நான் அதை நம்பவில்லை.
    என்னையெல்லாம் கூட KMRK அவர்கள் கருத்தில் கொள்வார் என்று நான்
    நினைத்தது கூட இல்லை. ஏனெனில் வகுப்பறையில் உங்களுக்கென்று தனி
    அங்கீகாரம் பெற்றவர் நீங்கள். அதுவுமில்லாமல் பரம்பரை பரம்பரையாக எழுதிக்கொண்டு
    வருபவர்கள் அல்லவா நீங்கள்.
    நன்றி
    நந்தகோபால்

    ReplyDelete
  51. அருணகிரிநாதர் வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை நினைத்து
    மனம் வெதும்பி தன் மீதே வெறுப்புற்று மலைமேல் இருந்த குதித்து
    தற்கொலை செய்த கொள்ள முயன்றபோதுதான் முருகன் அவரை
    கீழே விழாமல் தாங்கிப் பிடித்து இறக்கி விட்டபோது சொன்ன பிரசித்தி
    பெற்ற வரிகள் தான் " சும்மா கிட "
    முருகனே சொல்லிவிட்டபடியால் தானோ என்னவோ சில பேர்
    எல்லாவற்றையும் "சும்மா" என்று செய்கிறார்கள் போலும்.
    நந்தகோபால்

    ReplyDelete
  52. @kmrk and others.

    நெஞ்சை தொட்ட வரிகள் மற்றும் கட்டுரையை படித்ததும் என் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு போராட்டம் நினைவுக்கு வந்தது. பின்னூட்டம்
    எழுதி விட்டேன். பொறுத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  53. இன்னும் 2 பின்னூட்டத்தில கூட 'சும்மா'ன்னு எழுதிருக்காங்க, கவனிங்கோ. (நாராயண, நாராயண)

    ReplyDelete
  54. vannakkam sir, how are you? of all the posts you have made so far, this one stands as my favourite. it is an interesting view that you have offered as an explanation to the self contradictory statements made by gurus.

    do you read oshos books?you could find a lot of self contradictory statements in them. i find sadhguru jaggi vasudev as the least self contracdictory of all the modern gurus.do you have personal favouries sir ? coz, im a very spiritually curious person by nature.

    ReplyDelete
  55. பிளஸ்/ மைனஸில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்//

    நான் சொன்னது இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்து எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களைப்பற்றி. நான் எதைப் படித்தாலும் positive ஆன விஷயங்களையே எடுத்துக்கொள்வேன். ஒருத்தரைப் பற்றி ஜால்ரா அடித்து எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை என்னால் படிக்க முடியாது.

    ReplyDelete
  56. தர்ம சங்க‌டம் என்பது நடுநிலை வகிப்பவர்களுக்கு அதிகமாக வரும்.//

    எல்லா சூழ்நிலையிலும் நான் நடுநிலைதான் வகிப்பேன்னு நான் சொல்லலியே. எனக்குத் தேவையில்லாத, என்னால் எதுவும் செய்ய இயலாத பிரச்சனையில் நான் தலையிடவே மாட்டேன்.

    ReplyDelete
  57. இப்போது எதை எழுதுவது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். //

    நந்தகோபால், இப்படி யோசிச்சிட்டே இருந்தா எப்படி? உங்க வீட்டிலேர்ந்து கிளம்பி ஏர்போர்ட் போனது, அப்புறம் விமானத்தில் நீங்கள் பார்த்த காட்சிகள் இது மாதிரி எழுத்தாளர் கண்ணோட்டத்தில பார்த்தீங்கன்னா எழுத நிறைய விஷயங்கள் கிடைக்கும். 'சும்மா' பயப்படாம எழுதுங்கோ.

    ReplyDelete
  58. பின்னூட்டங்கள் சற்று சுவாரசியமாகவும் உயிரோட்டமாகவும் இருக்க வேண்டி
    நான் மற்றவர்கள் பின்னூட்டங்களை சற்றே கலாய்ப்பதை சம்பந்தப்பட்டவர்கள்
    sportive ஆக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    நந்தகோபால்

    ReplyDelete
  59. உமா அவர்களே,
    தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி.
    என்னுடைய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு
    கொஞ்சமாவது உபயோகப்படுகிறமாதிரி
    இருந்தால் தேவலையின்னு நினைத்தேன்.
    அதுதான் கொஞ்சம் யோசனையாயிருக்கிறது.
    மற்றபடி எதையும் சீரியஸ் ஆக அணுகாமல்
    காசுவலாக கடந்துபோகும் தங்களின் அணுகுமுறை
    ரொம்பவும் பிடித்திருக்கிறது.
    அதிகம் மெனக்கெடாமல் எல்லாம் நல்லதாகவே
    நடக்க அந்த ஆண்டவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.
    நந்தகோபால்

    ReplyDelete
  60. எல்லாம் நல்லதாகவே
    நடக்க அந்த ஆண்டவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.//

    நன்றி!

    ReplyDelete
  61. hello kmrk sir, my first post was meant for subbaiah sir, i dint notice that it was you who had written the post. nice post sir. thanks

    valid opinions umaji, (in your first post) also keen remarks by kmrk sir in reply to umaji. being totally free from bias is a hard state to reach and being so brings a lotta tricky stuatons withit.
    being a thula rashi with an exalted moon in navamsha , myself too, used to insist hard on being balanced without any prejudice or bias.but i realised it would bring a lot of trouble and enemity along with it.what say you sir?



    vathiar sir, padangal eppo varrum sir? nan google books la astakavrga lessons by b.v raman sir padichen .neraya sandhegangal pottu confusion pannuthu sir. 1 4 5 , 7 ,9 and 10 paralgal add pannina 169 mela vantha antha jathakaar athigam asaipadathavara irrupaara? is the reverse true if the addup is less than 169?


    sir, are you going to start a website for our lessons? why do you have to go thru so much trouble? my good wishes sir.book eppo varum sir. vanga avaal. k.p system books romba interestinga irruku.

    ReplyDelete
  62. 'சும்மா' என்பதற்குப் பல பொருள்.//

    நீங்க சொன்ன எந்த அர்த்தத்திலும் நான் சொல்லவில்லை. ஒரு பாராட்டாகத்தான் 'சும்மா' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினேன். இவ்வளவு தீவிரமா எழுத்து ஆர்வத்தோட எழுதறேள்னு அதுக்கு அர்த்தம். .."///

    ந‌ன்றி உமாஜி! என‌க்கும் நன்றா‌கத் தெரியும் நீங்கள் என்னைப் பாராட்டித்தான் சொல்கிறீர்கள் என்று!. இந்த‌ முறை முத‌ல் பின்னூட்ட‌த்திலிருந்தே நாங்க‌ள்
    மூவ‌ர் கூட்ட‌ணி அமைத்து சொல்லாரா‌ய்ச்சியைத் துவங்கிவிட்டோம்.முழுதும் படித்தால் பல நகைச்சுவை காட்சிகள் கண்ணில் படும்.அதில் உங்க‌ளுடைய
    சும்மாவையும் சேர்த்துக்கொண்டோம். அவ்வளவே! கந்தர் அனுபூதி செய்யுளில் வ‌ரும் "சும்மா இரு சொல் அற‌" என்ப‌தைப்ப‌ற்றி ஏதாவ‌து சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன்.நழுவிட்டீர்களே!
    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  63. //G.Nandagopal said
    "நான் ஏதாவது எழுதவேண்டுமென்றால் அது பக்தியோகத்தை
    குறித்து தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அய்யா அவர்கள் அது குறித்து
    எழுதவிருப்பதாக அறிந்தவுடன் இப்போது எதை எழுதுவது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
    நான் எது எழுதினாலும் அது அனுபவித்து அறிந்ததாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
    ஏன் என்றால் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் என்றால் படிப்பவர்களுக்கு
    சொல்லப்பட்ட விஷயங்களில் ஒரு நம்பிக்கை வரும்.
    இல்லாவிட்டால் 'சும்மா' படிப்பவர்கள் கூட அதை படிக்காமல் போய்விடக்கூடும்.///

    ந‌ந்த‌கோப‌ரே!
    ப‌க்தியோக‌த்தைப் பற்றி நான் எழுதப்போவதாகச் சொல்லவில்லையே! ஒரு வேளை வாத்தியார் அய்யாவைச் சொல்கிறீர்களோ!? நீங்கள், மைனர் எல்லாம் எழுதினால் டெல்லிக்காரம்மா "சும்மா" படிக்க மாட்டார்கள்.க‌ருத்தூன்றிப் ப‌டிப்பார்க‌ள். இளைய சமுதாயம் அல்லவா?

    ReplyDelete
  64. G.nandagoopaal said
    //"ஏனெனில் வகுப்பறையில்
    உங்களுக்கென்று தனி
    அங்கீகாரம் பெற்றவர் நீங்கள்."//

    அப்படியெல்லாம் இல்லை நந்த கோபரே! 1987 பேர் கொண்ட வகுப்பறையை நடத்தும் வாத்தியார், யார் ஒருவருக்கும் தனி அங்கீகாரம் எல்லாம் தர முடியாது.
    நான் சற்றேனும் ஏறுமாறாக நடந்தால் கண்டிக்கத் தயங்கமாட்டார். ஆரம்பத்தில் அவருடைய மோதிரக் கையால் குட்டு வாங்கியும் இருக்கிறேன்.

    ReplyDelete
  65. //G.Nandagopal said...
    "அருணகிரிநாதர் வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை நினைத்து
    மனம் வெதும்பி தன் மீதே வெறுப்புற்று மலைமேல் இருந்த குதித்து
    தற்கொலை செய்த கொள்ள முயன்றபோதுதான் முருகன் அவரை
    கீழே விழாமல் தாங்கிப் பிடித்து இறக்கி விட்டபோது சொன்ன பிரசித்தி
    பெற்ற வரிகள் தான் " சும்மா கிட "
    முருகனே சொல்லிவிட்டபடியால் தானோ என்னவோ சில பேர்
    எல்லாவற்றையும் "சும்மா" என்று செய்கிறார்கள் போலும்.
    நந்தகோபால்//


    "சும்மா இரு சொல் அற‌" என்று சொல்லிவிட்டு,தான் சும்மா இருக்காமல், ச‌ந்தக் க‌வி பாடும் ஆற்ற‌லையும் அருளிவிட்டான் க‌ம்ப‌த்த‌டி முருக‌ன்.அருண‌கிரியாரும் த‌ன் 'நெஞ்ச‌க்கன ‌க‌ல்லு நெகிழ்ந்து உருக' திருப்புக‌ழைப்பாடிப் பரவச மாகிவிட்டார்!

    ReplyDelete
  66. //G.Nandagopal said...
    "பின்னூட்டங்கள் சற்று சுவாரசியமாகவும் உயிரோட்டமாகவும் இருக்க வேண்டி
    நான் மற்றவர்கள் பின்னூட்டங்களை சற்றே கலாய்ப்பதை சம்பந்தப்பட்டவர்கள் sportive ஆக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    நந்தகோபால்"//

    ந‌ந்த‌கோப‌ர் சொல்வ‌தை என் சார்பாக‌வும்,ஜ‌ப்பான் மைன‌ர் சார்பாக‌வும் வ‌ழி மொழிகிறேன்.
    த‌தாஸ்து!அப்ப‌டியே ஆக‌ட்டும்!
    Amen!

    ReplyDelete
  67. Uma said
    //"ஒருத்தரைப் பற்றி ஜால்ரா அடித்து எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை என்னால் படிக்க முடியாது"//

    ஏதாவது ஓர் உதாரணம் கொடுத்தால் புரியும்மில்ல?!

    ReplyDelete
  68. Uma said...
    இன்னும் 2 பின்னூட்டத்தில கூட 'சும்மா'ன்னு எழுதிருக்காங்க, கவனிங்கோ. (நாராயண, நாராயண)"//

    க‌வ‌னிச்சுட்டேன். அதையும் ம‌றுப‌டியும் கோத்து வாங்கியிருக்கோம். க‌வ‌னிங்கோ!(கோவிந்தா!கோவிந்தா!

    ReplyDelete
  69. Uma said
    //"எனக்குத் தேவையில்லாத, என்னால் எதுவும் செய்ய இயலாத பிரச்சனையில் நான் தலையிடவே மாட்டேன்?//.

    எது போல‌!? என் இந்தப் ப‌திவுக்குப் பின்னூட்ட‌ம் இட்ட‌தைப் போல‌வா?
    'இந்த‌ மாதிரி மேட்ட‌ர் எல்லாம் நான் க‌ண்டுக்கிற‌தில்லை .ந‌ம்ம‌ ரேஞ்ஜே தனி' என்ப‌து போல் பின்னூட்ட‌ம் இட்டதைப்போலவா?(சும்மா தமாஷ் தான்‍)!

    ஆமையை ஓட்டுப் பக்கம் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார்களாம். அந்தப்பக்கமாகப் போன அந்தணர்
    "சிவ!சிவ! நாம் ஏன் இதெல்லாம் சொல்லணும்!ஆமையைக் கவிழ்த்துப்போட்டு அடித்தால் சாகும்‌.ன‌ம‌க்கேன் வ‌ம்பு என்று முணு முணுத்தாராம்.அப்ப‌டிய‌ல்லாவா இருக்கிற‌து. (மீண்டும்
    சும்மா தமாஷ் தான்)

    ReplyDelete
  70. mike said...
    //"hello kmrk sir, my first post was meant for subbaiah sir, i dint notice that it was you who had written the post. nice post sir. thanks

    valid opinions umaji, (in your first post) also keen remarks by kmrk sir in reply to umaji. being totally free from bias is a hard state to reach and being so brings a lotta tricky stuatons withit.
    being a thula rashi with an exalted moon in navamsha , myself too, used to insist hard on being balanced without any prejudice or bias.but i realised it would bring a lot of trouble and enemity along with it.what say you sir?"//

    Thank you for your appreciation.
    Balancing act is the most tedious job on earth. On the one side,the real life situation makes you to err. On the other side your conscience cautions you to keep off the error. Which path I have to follow? This was the question we encounter day in and day out.If we have really achieved that state of perfect balance, we shall be called a mahathma.

    Thank you!

    ReplyDelete
  71. ////Thank you Sankar!'At this age' may mean two things.One is 'my advanced age'.The other is the 'present times' I do not know what exactly you mean./////

    Actually while I was writing I mean your experience as the age.Since you gave 2 perceptions, I agree to both. In this information world, people are scare to give out information as it would profit others....

    ReplyDelete
  72. //"என்னுடைய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு
    கொஞ்சமாவது உபயோகப்படுகிறமாதிரி
    இருந்தால் தேவலையின்னு நினைத்தேன்.
    அதுதான் கொஞ்சம் யோசனையாயிருக்கிறது.
    மற்றபடி எதையும் சீரியஸ் ஆக அணுகாமல்
    காசுவலாக கடந்துபோகும் தங்களின் அணுகுமுறை
    ரொம்பவும் பிடித்திருக்கிறது.
    அதிகம் மெனக்கெடாமல் எல்லாம் நல்லதாகவே
    நடக்க அந்த ஆண்டவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.
    நந்தகோபால்"//

    இது இருந்தா அது இல்லை;அது இருந்தா இது இல்லை!

    உப‌யோக‌ப்ப‌டும்ப‌டி எழுதினா சீரிய‌ஸா எதையும் எடுத்துக்காத‌வங்க படிக்கமாட்டாங்க.சரி லைட்டா எதாவது எழுதினா உபயோகமா இருக்குமா என்பது சந்தேகமே!இது எப்படின்னா, "சில‌ர் சிரிப்பார்;சில‌ர் அழுவார்; நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..."என்ப‌து போல‌.இர‌ண்டு குதிரை மீதோ,
    இர‌ண்டு ப‌ட‌கிலோ ச‌வாரி செய்ய‌ முடியாது.

    கேஷுவ‌லா எடுத்துக்கொள்வ‌து,அதிக‌ம் மென‌க்கிடாம‌ல் இருப்ப‌து என்ப‌து எல்லாம் ப‌ல‌ரிட‌ம் இருப்ப‌தைப் பார்த்துத்தான் நிறைய‌ 'டைம் பாஸ்' விஷ‌ய‌ங்க‌ள் ந‌டைமுறைக்கு வ‌ந்துவிட்ட‌ன‌.வெகு ஜ‌னப் ப‌த்திரிகைக‌ளில் இப்போது 75% சினிமா சினிமா சினிமா ம‌ட்டுமே!தொட‌ர்க‌தை, நாவ‌ல் போன்ற‌வை, தொலைக்காட்சி‌ மெகா சீரிய‌ல் என்ற‌ சுனாமியால் அடித்துப் போக‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌.ஒரு எழுத்தாள‌ன் த‌ன் ம‌ன ஓட்ட‌த்தை சுய‌ச்சார்புட‌ன்
    எழுத‌முடியாத‌ சூழ‌ல்.எது விலை போகும் என்று ஒரு ப‌த்திரிகை வெளியிடுப‌வ‌ர் நினைகிறாரோ அதைத் தான் எழுத்தாள‌ன் எழுத‌ வேண்டிய‌ சூழ‌ல்.அங்கே பொருந்த‌ முடியாத‌வ‌ர்க‌ளுக்கு, த‌ங்க‌ள் எழுத‌த்துடிக்கும் ந‌மைச்ச‌லை பூர்த்தி செய்து கொள்ள‌ வ‌லைத‌ள‌ம் ந‌ல்ல‌ முதுகு தேய்த்துக் கொள்ளும் க‌ல்லாக‌ப் ப‌ய‌ன்ப‌டுகிற‌து.

    ReplyDelete
  73. நந்தகோபால், இப்படி யோசிச்சிட்டே இருந்தா எப்படி? உங்க வீட்டிலேர்ந்து கிளம்பி ஏர்போர்ட் போனது, அப்புறம் விமானத்தில் நீங்கள் பார்த்த காட்சிகள் இது மாதிரி எழுத்தாளர் கண்ணோட்டத்தில பார்த்தீங்கன்னா எழுத நிறைய விஷயங்கள் கிடைக்கும். 'சும்மா' பயப்படாம எழுதுங்கோ"//


    ஏர்போர்ட் போகும் போது மோஹினி பிசாசு உங‌ளை வ‌ழிம‌றைத்த‌து, பூத் ப‌ங்க‌ளாவுக்கு அழைத்துப் போன‌து,ஏர் ஹோஸ்டெஸ் கிட்ட உங்க‌‌ள் ப‌ய‌ங்களைச் சொல்லியது, அவர்கள் உங்க‌ளுக்கு குழி மோர் காயச்சிக் கொடுத்தது,வூடூ, ஒய்ஜாப் பலகை, ஆவியிடம் பேசுதல்,அப்பறம் பம்பு ஸ்டவ்வில் வெங்கடாசலபதி ஆவிர்பவித்து நாம் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் எழுதிக் காண்பித்த‌து,சென்னை‌ வாரா‌வ‌தி அருகில் மங்காத்தா ஆடிய‌வ‌ர்க‌ளுக்கு இடை‌யில் ஏற்ப‌ட்ட‌ மோத‌ல்,..... எவ்வ‌ள‌வு உப‌யோக‌மான‌ விஷயங்க‌‌ள் உள்ள‌ன.இதை‌யெல்லாம் எழுதினா "ப‌ய‌ப்ப‌டாமல்" ப‌டிக்க‌ நாங்க‌ ரெடி. நீங்க‌ ரெடியா?

    ReplyDelete
  74. ஆசிரியரே வணக்கம்.

    திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
    அக்னிஹோற்ற பூஜை சுமார் 13 வருடத்திற்கு முன்னர் ஒரு அந்தணர் மூலம் மந்திர உபதேசம் பெற்று செய்துவந்தேன். பின்னர் வேலைக்கு என்று சென்றுவிட்ட பின்னர் அந்த பூஜையை முறையாக செய்ய முடியவில்லை அதற்க்கு உரிய நேரத்தில் .

    இந்த பிரச்சனையை கூறி ஒரு வழி கூற எமது குருநாதரிடம் கேட்ட பொழுது தினமும் இறைவனை வேண்டிகொண்டால் போதும் என்றார். ஆனால் சாப்பாடு பழக்கம் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார். அதன் படி இன்று வரை கடைப்பிடித்து வருகின்றேன் .

    அன்று அவர் கூறியது டீ, காபி, அசைவ சாப்பாட்டு வகைகளை விட்டு விடவேண்டும் என்பது
    ஆகும். அதன்படி இன்றுவரை
    மறந்துபோகி கூட எதனையும் தொட வில்லை பிரம்மசாரியதிர்க்கு எதிரானதை.

    இப்பொழுது எமது கேள்வி நாளைக்கு கல்யாணம் ஆகிவிட்ட பின்னர் என்ன செய்வது. யாம் உள்ளது அரபு நாட்டில் என்பதால் எமது நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது . எமக்கு மற்றதை சாப்பிட வேண்டும் என்று ஆசைக்கு கூட ஆசை இல்லை . ஆனால் மற்றவை புரிய வைக்க யாம் படும் பாடு மிகவும் பரிதாம்.

    முன்னர் பூஜை செய்த இடம் மஹாராஷ்டிரா ஆகும் .இப்பொழுது குருநாதரை தொடர்பு கொள்ள வழி இல்லை ஐயா.


    ............................


    ஒரு குருவை ஏற்றுக் கொண்டு அவரை ஆஸ்ரயிப்பது, முறையாகத் திருமணம் செய்து கொண்டு ஒரு கணவனுடன் நல்ல முறையில் குடித்தனம் நடத்துவது போன்ற‌து.அப்போது அந்தக் கணவனின் குறைகளை மனைவி பெரிது படுத்துவதில்லை.ஏழை நடைபாதை வாசிகளில் கணவனின் எல்லா
    வேண்டாத பழக்கங்க‌ளுக்கும் மனைவி சம்பாதித்துக் கொடுத்து துணை நிற்பாள்.அன்பு ஏற்பட்டு விட்டால் குறைகள் கூட நிறைகளாகத் தெரியும்.

    ReplyDelete
  75. கண்ணன் சார் அவர்களே!நான் உங்க‌ளுக்கு எந்த ஆலோசனையும் வழங்கக் கூடிய அளவில், தாந்திரிக முறையில் பயிற்சி உள்ளவன் அல்ல.நான் அக்னிஹோத்ரம் எல்லாம் செய்தவ‌னுமல்ல.இனி செய்யப்போவதும் இல்லை.
    என‌வே இவ‌ற்றைப்ப‌ற்றி ந‌ன்கு அறிந்த‌வ‌ர்க‌ளை அணுகவும்.நன்றி.

    ReplyDelete
  76. புரிதலுக்கு நன்றி.

    "சும்மா இரு சொல் அற‌" என்ப‌தைப்ப‌ற்றி ஏதாவ‌து சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன்//

    முன்ன பின்ன அதெல்லாம் படிச்சிருந்தாத்தானே சொல்ல முடியும்? இப்போதைக்கு இதையெல்லாம் படிக்க பொறுமை இல்லை அவ்வளவுதான். ரொம்ப நாளா விட்டிருந்த படிக்கும் வழக்கத்தை இப்போதான் திரும்பி ஆரம்பிச்சிருக்கேன். இப்பதான் 'வேங்கையின் மைந்தன்' முடிச்சேன். படிக்க வேண்டிய லிஸ்ட் நிறைய இருக்கு. ஒரு மூட் வந்தாத்தான் படிக்க முடியும்.

    ReplyDelete
  77. நீங்கள், மைனர் எல்லாம் எழுதினால் டெல்லிக்காரம்மா "சும்மா" படிக்க மாட்டார்கள்.க‌ருத்தூன்றிப் ப‌டிப்பார்க‌ள்.//

    எனக்குப் பிடிச்ச டாபிக் / சுவாரசியமான எழுத்து என்றால் ரொம்ப involve ஆகிப் படிப்பது வழக்கம்.

    ReplyDelete
  78. ஏதாவது ஓர் உதாரணம் கொடுத்தால் புரியும்மில்ல?!//

    இப்ப இருக்கிற தலைவர்களையே எடுத்துக்கோங்கோ. அவர்களின் ஆதரவாளர்கள் புத்தகம் எழுதினால் 'ஆஹா ஒஹோ'ன்னு புகழ்ந்துதான் எழுதுவாங்க. அவர்கள் செய்த 'வரலாற்றுப் பிழைகள்' பற்றி எங்குமே குறிப்பிடப்படமாட்டாது. இது எல்லா பெரிய தலைகளுக்கும் (ஆன்மீகவாதிகள் உட்பட) பொருந்தும்.

    ReplyDelete
  79. 'இந்த‌ மாதிரி மேட்ட‌ர் எல்லாம் நான் க‌ண்டுக்கிற‌தில்லை .ந‌ம்ம‌ ரேஞ்ஜே தனி' //

    நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் என் ரேஞ்ஜே தனிதான்.

    ReplyDelete
  80. Wednesday, December 01, 2010 4:26:00 AM

    அது என்ன? மாமி கார்த்தால பில்ட்டர் காபி கலந்து கொடுத்ததுமே கம்ப்யூட்டர் முன்னாடி ஆஜராயிடுவேளோ? (இல்ல ஒருவேளை கலந்து குடுத்துட்டா?)

    ReplyDelete
  81. கண்ணன், அக்னிஹோத்திரம் பற்றி ஒரு நல்ல சாஸ்திரிகளிடம் கேட்டீங்கன்னா சொல்வார்.

    ReplyDelete
  82. உமா said ...////////
    அது என்ன? மாமி கார்த்தால பில்ட்டர் காபி கலந்து கொடுத்ததுமே கம்ப்யூட்டர் முன்னாடி ஆஜராயிடுவேளோ? (இல்ல ஒருவேளை கலந்து குடுத்துட்டா?)
    ஹா ...ஹா....... கலக்கறேள்....போங்கோ

    ReplyDelete
  83. உமா said ...////////
    அது என்ன? மாமி கார்த்தால பில்ட்டர் காபி கலந்து கொடுத்ததுமே கம்ப்யூட்டர் முன்னாடி ஆஜராயிடுவேளோ? (இல்ல ஒருவேளை கலந்து குடுத்துட்டா?)
    KMRK சார் ..அந்தப்பக்கம் எப்படி சொன்னா எனக்கு கொஞ்சம் convinced ஆக இருக்கும். ஹீ...ஹீ. ஹீ

    ReplyDelete
  84. உமா said /////////

    இப்பதான் 'வேங்கையின் மைந்தன்' முடிச்சேன். படிக்க வேண்டிய லிஸ்ட் நிறைய இருக்கு. ஒரு மூட் வந்தாத்தான் படிக்க முடியும்.

    பொன்னியின் செல்வன் கதைக்கு முன்னாலே வந்ததோன்னா இது..

    ReplyDelete
  85. //Uma said...
    "அது என்ன? மாமி கார்த்தால பில்ட்டர் காபி கலந்து கொடுத்ததுமே கம்ப்யூட்டர் முன்னாடி ஆஜராயிடுவேளோ? (இல்ல ஒருவேளை கலந்து குடுத்துட்டா?)"//

    எவ்வ‌ள‌வோ விஷ‌ய‌ம் அழ‌காக‌ விவாதிக்க‌ எடுத்துக் கொடுத்தும், திசை திருப்பும் வித‌மா மாற்றி விட்டீர்க‌ளே!
    Good conversationalist
    என்ப‌வ‌ர், சம்பாஷணையை தொட‌ரும்ப‌டிக்கும், அதிலிருந்து நிறைய‌ செய்திக‌ளை சேக‌ரித்துக்கொள்ளும்ப‌டியும் பேசுவார்.‌

    ReplyDelete
  86. KRMK said \\\\\\\\\\\\\\\\\\\

    ந‌ந்த‌கோப‌ரே!
    ப‌க்தியோக‌த்தைப் பற்றி நான் எழுதப்போவதாகச் சொல்லவில்லையே! ஒரு வேளை வாத்தியார் அய்யாவைச் சொல்கிறீர்களோ!? நீங்கள், மைனர் எல்லாம் எழுதினால் டெல்லிக்காரம்மா "சும்மா" படிக்க மாட்டார்கள்.க‌ருத்தூன்றிப் ப‌டிப்பார்க‌ள். இளைய சமுதாயம் அல்லவா?

    முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ள நமது இந்துமத இறை வழிபாட்டு முறையில் எப்போது எப்படி எந்த காரணத்திற்காக எந்த தெய்வத்தை எந்த வழிபாட்டு முறையில் வழிபடவேண்டும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்ததையே நான் பக்தி பற்றி

    எழுதும்போது எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் வாரமலரில் பக்திமலர் ஒன்று நீங்கள் எழுதப்போவதாக நான் படித்த ஞாபகம்.

    அதனால் அப்படி சொன்னேன்.

    ReplyDelete
  87. G.Nandagopal said...

    ஹா ...ஹா....... கலக்கறேள்....போங்கோ//

    ஹி ஹி

    ReplyDelete
  88. பொன்னியின் செல்வன் கதைக்கு முன்னாலே வந்ததோன்னா இது..//

    அதுக்கு அப்புறம் வந்ததுன்னு நினைக்கிறேன். சரியாத் தெரியல. பொன்னியின் செல்வன்லாம் எப்பயோ படிச்சாச்சு.

    ReplyDelete
  89. எவ்வ‌ள‌வோ விஷ‌ய‌ம் அழ‌காக‌ விவாதிக்க‌ எடுத்துக் கொடுத்தும், திசை திருப்பும் வித‌மா மாற்றி விட்டீர்க‌ளே!//

    சரி, நான் இதோட நிறுத்திக்கிறேன்.

    ReplyDelete
  90. //"ஆனால் வாரமலரில் பக்திமலர் ஒன்று நீங்கள் எழுதப்போவதாக நான் படித்த ஞாபகம்"//

    வெள்ளிக்கிழமை பக்திமலர் என்றும், சனிக்கிழமை இளைஞர் மலர் என்றும், ஞாயிறு அன்று வாரமலர் என்றும் வாத்தியார் அய்யாதான் திட்டம் வகுத்து இருந்தார்.நிறைய ஆக்கங்கள் வரவில்லையோ என்று நினைக்கிறேன்.அதுவுமில்லாமல் வகுப்பறயில் வந்து விழுந்த குண்டு கொஞ்சம் எல்லாவற்றையும் நிலை குலைய வைத்து விட்டது போலும்.எனவே உங்கள் பக்தி யோகத்தைப் பற்றிய ஆக்கங்கள் துவங்கட்டும்.

    ReplyDelete
  91. அய்யா அவர்களின் ஆசியுடன் எழுதத் துவங்கிவிட்டேன்
    விரைவில் வலையேற்றம் நிகழ ஸ்ரீ பழனியாண்டவர்
    அருள்புரிவாராக

    ReplyDelete
  92. uma said
    ---------

    "மேலும் வரலாற்றிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது...."

    "வேஙையின் மைந்தன் படித்துக்கொண்டு இருக்கிறேன். பொன்னியின் செல்வன் எப்பவோ படிச்சாச்சு."

    என்னமோ போங்கோ! ஒண்ணும் புரியலை!

    ReplyDelete
  93. இதுக்கு நான் விவரமா எழுதினாதான் புரியும். இன்னொரு நாள் இதைப்பற்றி விவாதிப்போம். மற்றபடி கல்கியின் கதைகள் எல்லாம் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த கதாசிரியர்களில் அவரும் ஒருவர்.

    ReplyDelete
  94. /////////kmr.krishnan said...
    "மேலும் வரலாற்றிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது...."

    "வேஙையின் மைந்தன் படித்துக்கொண்டு இருக்கிறேன். பொன்னியின் செல்வன் எப்பவோ படிச்சாச்சு."

    என்னமோ போங்கோ! ஒண்ணும் புரியலை!/////////

    என்னா KMRK சார் நீங்களே ஒரு கட்டுரை எழுதி பெரியவுங்க சொல் பேச்சு எல்லாம் ரெண்டு விதமா இருந்தாலும் நாமதான் கரெக்டாப் புரிஞ்சுக்கோணும்ன்னு விளக்கமா எழுதியிருந்தீங்க..இப்போ என்னடான்னா?

    ReplyDelete
  95. சரியாகத்தான் சொன்னீர்கள் மைனர்.'பெரியவங்க' உபதேசங்க‌ளை அப்படிதான் யாருக்கு, எப்போது, எதற்காகச் சொல்லப்பட்டது என்பதை அறிந்து கொண்டு நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் வளர்ச்சி நிலையில் இருக்கும் நாம் நம்மைப் பற்றியே சரியான கணிப்புக்கு வர வேண்டாமா? மாமன்னன் ராஜராஜ சோழன் கல் வெட்டுக்களில் பொறித்தவை அவ்வளவும் அவன் புகழுக்காகவா எழுதி வைத்தான்?
    "நாம் கொடுத்தனவும், நம் அக்கன்(அக்கா குந்தவை நாச்சியார்) கொடுத்தனவும், நம் பெண்டுகள்(மனைவி,துணைவிமார்கள்,) கொடுத்தனவும்,கொடுப்பார்(பொதுமக்கள்,ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை இன்றி) கொடுத்தனவும் கல்லிலும், செம்பிலும் எழுதப் பணித்தோம்"என்று எழுதி வைத்து சொத்துக் கணக்கு முழுவதையும் ஒளிவு மறைவின்றி வெளிப் படுத்தி ஆட்சி செய்தாரே அந்த வரலாறு நமக்குத் தெரிவதோடு,அது நமக்குப் பிடிக்கவும் வேண்டும் என்று கருதுகிறேன்.
    மைனஸ் யாரிடம் தான் இல்லை?
    "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றின்
    மிகைநாடி மிக்க கொளல்"
    குணம் அதிகமாக உள்ள பெரியவர்களின், குற்றத்தை நாம் கண்டு விலகினால் இழப்பு நமக்குத்தான்.
    நான் இங்கே இதுவரை குறிப்பிட்டு எழுதிய மஹான்கள் இருவருமே புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களே!அதுவா எனக்கு முக்கியம்?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com