27.11.10

எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் நிலை வேண்டும்
எங்கள்கவி பாரதி எண்ணப்படி வேண்டும்
தங்கத் தமிழ் தணிகைத் தமிழ் மதுரைத்தமிழ் வேண்டும்
தமிழே என் ஊனாக உயிராக வேண்டும்”


என்று எனது நண்பரும், பிரபல கவிஞருமான கவித்தென்றல் காசு.மணியன் அவர்கள் மேடைதோறும் முழங்குவார்.

அந்த வைர வரிகளைச் சற்று மாற்றி நான் இப்படிச் சொல்வேன்.

“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்
எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”


ஏன் அப்படிச் சொல்வேன்?

விவரம் பதிவில் உள்ளது. படித்துப்பாருங்கள்
______________________________________________
இலவசத்தைப் பற்றி ஒரு கதை உண்டு:

முற்காலத்தில், நாகபட்டினம் அருகே ஒரு நிலச்சுவான்தார் இருந்தார். அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. ஜமீந்தார், மிராசுதார், பண்ணையார் என்று எப்படி  வேண்டு மென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆசாமி கஞ்சன். அவர் வாங்கிவந்த வரம் அப்படி! பண்ணையில் ஆயிரக் கணக்கான மூட்டைகள் நெல் விளைந்தலும், ஆசாமி பத்துக் காசுகள்கூட தர்மம் செய்ய மாட்டார். யாருக்கும் ஈய மாட்டார். கொடுக்க மாட்டார். மதியம் வைத்த சோற்றில் தயிரையும், தண்ணீரையும் ஊற்றி வைத்து, இரவில் சின்ன வெங்காயம் ப்ளஸ் மாங்காய் ஊறுகாய் ஆகையவற்றைத் தொட்டுக் கொண்டும் கடித்துக்கோண்டும் உண்பார்.

ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் வந்து சொன்னார்:

“பக்கத்து நாட்டிலிருந்து ஆயிரம் இளம் பெண்கள் கப்பலில் வருகிறார்கள்”

இவர் கேட்டார்: “எதற்கு?”

“அங்கே வறட்சியாம். வேலை தேடி வருகிறார்கள். சம்பளம் எதுவும் கொடுக்க வேண்டாம். இருக்க இடம்.உடுக்க உடை. உண்ண உனவு கொடுத்தால் போதும். சொல்லும் வேலையை செய்வார்கள். அத்துடன் எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவர்கள்”

எல்லா’ வேலைகளுக்கும் லாயக்கானவர்கள் என்று அவர் சொன்னதில் ஒரு உள் அர்த்தம் உள்ளது. அதை நான் பதிவில் எழுத முடியாது. உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

மிராசுதார் உடனே கேட்டார்: “அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“கேட்கிறவர்களுக்குக் கேட்கிறபடி கொடுக்கப் போகிறோம்”

“அப்படியென்றால் எங்கள் வீட்டிற்கு மூவரை எழுதிக்கொண்டு, ஏற்பாடு செய்”

“என்ன கணக்கு?”

“எனக்கு ஒன்று. என் அப்பனுக்கு ஒன்று. என் தம்பிக்கு ஒன்று!” என்று இவர் சொல்ல, வந்தவர் எழுதிக்கொண்டு போய்விட்டார்.

என்ன நடந்தது?

மீதிக்கதை மின்னஞ்சலில். 

மீதிக்கதை மட்டுமல்ல - கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

11 comments:

  1. வாத்தியார் இது தாங்கள் ஏற்க‌னவே சொன்ன கதைதான். ஓ புதிய மாணவர்களுக்கான மீள் பதிவோ. இருக்கட்டும். இன்னொரு தடவை படித்து வைப்போம்.

    ReplyDelete
  2. already you told this sir!!!
    pls add me in your mail list sir

    ReplyDelete
  3. ஆனந்த் கூறியது சரிதான். இது மீள்பதிவுதான். இருந்தால் என்ன? மீண்டும் ஒருமுறை வாசித்தால் கண்கள் ஒன்றும் கெட்டுவிடாது!

    ReplyDelete
  4. ungal idam annai kalaivani kudi kondu ullal. thangal kathai ezhuthavathil vallavar thaan. super sir.

    athigam pugzhalagiren enru ninaikka veandaam.

    ReplyDelete
  5. வாத்தியார் இது தாங்கள் ஏற்க‌னவே சொன்ன கதைதான்

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    /////“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”
    ஏன் அப்படிச் சொல்வேன்?/////

    /////- கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!/////
    iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
    .
    கதைக்கான காரணத்தை எனக்குத்தெரிந்தவரையில் தெரிவித்துள்ளேன்.

    குறிப்பு:- அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு இது பொருந்தாது.

    இலவசத்தைப் பெற்று ஞாயமான முறையில் பயன் படுத்தாமல்,

    இலவசத்தைப் பெற்று அல்ல, திருடி வியாபாரம் செய்வது.

    தானம் கொடுத்த மாட்டை பல்லைப்பிடித்து பார்த்துவிட்டு தானம் கொடுத்தவரையே குறை சொல்வது,

    புண்ணியத்துக்கு புடவைக்கொடுத்தால்,பின்னாடி போய் முழம்போட்டுப் பார்த்து விமர்சிப்பது.

    நமது வகுப்பறையில் நடந்தவற்றை
    நினைத்தால்,இவைகள் தான் நினைவுக்கு வருகிறது.

    நன்றி!
    தங்களன்புள்ள மாணவன்,

    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-27
    //////////////////////

    ReplyDelete
  7. ஒருவன் செய்த தவ்றூ எல்லாரையும் பாதிக்கிறதூ.

    ReplyDelete
  8. மீள் பதிவாக இருந்தாலும் ரசிக்க வைத்தது..மின்ன்ஞ்சலை எதிர்நோக்கியுள்ளோம்..

    --செங்கோவி

    ReplyDelete
  9. அன்புடன் வணக்கம் நல்லதொரு தொடர் கதைய்ல தொடரும் போட்ட மாதிரி நேற்று பதிவுலும் போட்டீர்கள் மின்னஞ்சலுக்கு வரும் என்று ..!!
    சரி ஸ்ரீ குருநாதர் உத்தரவு::: இணைய தளம் வரும் வரை காத்திருக்க வேண்டியாதுதான் !!!!

    ReplyDelete
  10. ///"அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு இது பொருந்தாது.
    இலவசத்தைப் பெற்று ஞாயமான முறையில் பயன் படுத்தாமல்,
    இலவசத்தைப் பெற்று அல்ல, திருடி வியாபாரம் செய்வது.
    தானம் கொடுத்த மாட்டை பல்லைப்பிடித்து பார்த்துவிட்டு தானம் கொடுத்தவரையே குறை சொல்வது,
    புண்ணியத்துக்கு புடவைக்கொடுத்தால்,பின்னாடி போய் முழம்போட்டுப் பார்த்து விமர்சிப்பது.
    நமது வகுப்பறையில் நடந்தவற்றை
    நினைத்தால்,இவைகள் தான் நினைவுக்கு வருகிறது."//

    வ‌.த‌ட்சிணாமூர்த்தி சார்! இதுவ‌ரை 'உள்ளேன் அய்யா' மாண‌வ‌னாக‌ ம‌ட்டும்
    இருந்த தாங்கள் இப்போதுதான் கொஞ்சம் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.

    அடேங்க‌ப்பா! உள்ளே பெரிய‌ இல‌க்கிய‌ க‌ர்த்தா ஒளிந்துகொண்டு இருப்பார் போல‌ உள்ள‌தே!

    ///"புண்ணியத்துக்கு புடவைக்கொடுத்தால்,பின்னாடி போய் முழம்போட்டுப் பார்த்து விமர்சிப்பது."/// இது ந‌ல்ல‌ ந‌ய‌மான‌ சொற்க‌ள்.'தான‌ம் கொடுத்த‌ மாட்டைப் ப‌ல்லைப் பிடுங்கிப் பார்ப்ப‌து'என்ப‌துதான் பொதுவாக‌ச் சொல்லும் சொல்ல‌டை.புட‌வை ச‌மாசார‌ம் உங்க‌‌ள் ச‌ர‌க்கு என்றால் நிச்ச‌ய‌மாக‌ நீங்க‌ள்
    ந‌ன்கு உங்க‌ளை வெளிப்ப‌டுத்திக் கொள்ள‌லாம்.‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்.

    ReplyDelete
  11. KMR.krishnan சார் அவர்களுக்கு, வணக்கம்.
    பின்னூட்டத்தில் தங்களின் பதிவினைப் பார்த்தேன்.தங்களின் கருத்துகளுக்கு நன்றி.
    * * * * * * * * * * * * * * * * *
    "தானம் கொடுத்தமாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே" ,
    (இது பழமொழி )

    மாட்டின் வயதை --அதனுடைய பல்லின் எண்ணிக்கையைப் பார்த்து கணக்கிடுவார்கள்.
    * * * * ** * * * * * * * * * * ** *
    நமது வகுப்பறையின் வாத்தியார் அய்யா அவர்கள் வகுப்பறை மாணவர்களுக்கு, தனது ஈடு இணை இல்லாத உழைப்பின் மூலம் (இலவசமாக) தானமாக பாடங்களைக் கொடுக்கிறார்கள். புத்திசாலி நண்பர் ஒருவர்," "தானம் கொடுத்தமாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்துவிட்டு",தரமானதாக இருந்ததால், மாட்டிற்கு கொம்பு சீவி அழகாக வண்ணம் தீட்டி வியாபாரம் செய்கிறார்".

    * * * * * * * * * * * * * ** * * *
    ///////“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்
    எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”
    ஏன் அப்படிச் சொல்வேன்?///////
    ////////மீதிக்கதை மட்டுமல்ல - கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!/////////

    இதனைப் படிக்கும்போது, கதைக்கான காரணமாக எனது மனதில் ஏற்பட்ட நினைவுகளைப் பதிவு செய்துள்ளேன்.

    * * * ** * * * ** * ** * * *
    ////////////'தான‌ம் கொடுத்த‌ மாட்டைப் ப‌ல்லைப் பிடுங்கிப் பார்ப்ப‌து'என்ப‌துதான் பொதுவாக‌ச் சொல்லும் சொல்ல‌டை///////////
    தாங்கள் கூறியுள்ள சொல்லடை யின்படி "ப‌ல்லைப் பிடுங்கிப் பார்ப்ப‌து",எதற்காக என்பதை தெரிந்துக்கொள்வதற்கு விபரம் தெரிவிக்கவும்

    நன்றி!
    வணக்கம்
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-28

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com