++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class: வலைப்பூவைப் (Blog) பூட்டிவைப்பது எப்படி?
இன்றையப் பொருளாதார சூழ்நிலையில், பணத் தேடலில், மனிதன் பலவற்றை இழந்து விட்டான். படிக்கும் பழக்கத்தை நிறையப் பேர்கள்
இழந்து விட்டார்கள்.
தவறிப் படிப்பவர்கள் கூட நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை. கேட்டால் நேரம் இல்லை என்பார்கள்.
எழுதுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆளில்லை. 'கல்கி’ போன்ற பெரிய எழுத்தாளர்கள் உருவாகாததற்குக் காரணம் அதுவே!
வெகுஜனப் பத்திரிக்கைகள்கூட, திரைத்துறையைச் சார்ந்த செய்திகளையும், படங்களையும், கட்டுரைகளையும் வைத்துத், தங்கள் பத்திரிக்கையை முன்னிறுத்துவதில் போராடுகின்றன. தங்களைத் தக்க வைத்துக்கொள்வதில்
சிரமப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
அதுபோல நல்ல செய்தித்தாள்களைப் படிப்பதற்கும் ஆளில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன!
Times of India எனும் நாளிதழ் எவ்வளவு பெருமை வாய்ந்த நாளிதழ்! அவர்கள் கோவையில் அடுத்த மாதம் தங்கள் நாளிதழை இங்கேயே அச்சிட்டு வெளியிட உள்ளார்கள். அதற்காக கோவையில் உள்ள வாசகர்களைக் கவரும் விதமாக சந்தாத் தொகையைக் குறைத்து, சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள். ஏராளமான வாசகர்களைத் தங்கள் பக்கம் இழுத்துள்ளார்கள். இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாள் இதழின் ஆண்டுச் சந்தா எவ்வளவு தெரியுமா? 299:00 ரூபாய்கள் மட்டுமே. சேருகிறவர்களுக்கு 150 ரூபாய் மதிப்புள்ள பயனப் பை (Traveling Bag) ஒன்றையும் அன்பளிப்பாகத் தருகிறார்கள்.
அதைப்பற்றிய விவரம் கீழே உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைப் பதிவில் கடந்த 4 ஆண்டுகளாக எழுதிவருகிறேன். சராசரியாக ஒவ்வொரு பதிவும் 4,000 வாசகர்களால் படிக்கப்படுகிறது.
பின் தொடர்பவர்கள் பட்டியலில் இன்றையத் தேதியில் சுமார் 1,988 பேர்கள் இருக்கிறார்கள்
இது எப்படிச் சாத்தியப்பட்டது?
ஜோதிடப்பாடங்களால் மட்டுமா? அல்ல!
எதை எழுதினாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் தருவதாக அது இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது தொடரும். அந்தப் பணி தொடரும்.
உதாரணங்கள், வர்ணனைகள், குட்டிக்கதைகள் என்று சுவாரசியமானவற்றைக் கலக்கலாகச் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வெறும் ஜோதிடம் என்றால் கசக்கும். ஜோதிடத்தை எளிமைப்
படுத்தி சுவாரசியமான நடையில் எழுதிக் கொண்டிருப்பதால்,
அனைவராலும் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. அறிந்து
கொள்ள முடிகிறது. நாட்டு மருந்துடன் தேனைக்கலந்து
கொடுப்பார்கள். அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சுவரசியம் தூக்கலாக இருக்கும்
“ வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா”
என்று துவங்கியவர், நடுவில் இப்படி எழுதியிருப்பார்:
“கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்.........
வண்ணப்பறவை நம்மை அணைத்தால் தன்னை மறப்போம் என்பதை எப்படிச் சுவாரசியாமச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்..
இன்னொரு உதாரணம்:
“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
இதழ் சிந்தும் சுவையை எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார் பாருங்கள். இதழ் சிந்தும் சுவை என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிமேல் எழுத உள்ள அரிய மற்றும் முக்கியமான ஆக்கங்கள் திருட்டுப்போகாமல் இருக்க நமக்கென்று, நமது வகுப்பறை வாசகர்களுக்கென்று இணைய தளம் ஒன்று உருவாகிக்
கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் வலை ஏறும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
வலைப்பூவிலும் எனது ஆக்கங்கள் தொடரும். புதியவர்கள்
இதைப் படித்தால் போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமது நண்பரும், வகுப்பறைக்கு வந்து போகும் பார்வையாளர்களில் ஒருவருமான திருவாளர் சித்தூர் முருகேசன் அவர்கள், நமக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவர் ஒரு பெரிய பத்திரிக்கையில் நிருபராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தேர்ந்தவர். அந்த இரண்டு மொழிகளிலுமே அவருக்கு வலைப்பூக்கள் உள்ளன. ஜோதிடத்தையும் நன்கு
அறிந்தவர். அவர் பின்னூட்டத்தில் சொன்ன செய்தியை, நீங்கள் அறிந்து கொள்வதற்காக அப்படியே கொடுத்துள்ளேன்:
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவர் சொன்னபடி லாயத்தைப் பூட்டிவைக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே லாயத்தில் நுழைய முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 100 பேர்களுக்கு மட்டுமே லாயத்தின் சாவியைக் கொடுக்க முடியும். கூகுள் அதற்கு 100 என்ற எண்ணிக்கை வரைமுறையை வைத்துள்ளது. அதையும் பாருங்கள்.
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்
1988 கண்மணிகள் இருக்கும் இடத்தில் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதி என்பது அதர்மமாகப் படுகிறது. ஆகவே திருட்டைத் தடுப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. அதை செயல் படுத்துவோம். இனிமேல் திருடர்கள்
நுழையாமல் தடுப்பதற்கு, எழுதுபவற்றில் முக்கியமான
பாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்
உள்ளவர்களை மட்டும் அதில் சேர்த்துக் கொள்வோம்.
மற்றறவர்கள் இதில் எழுதும் ஆக்கங்களைப் படித்தால் போதும்.
மற்றவை நாளை
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மிகவும் அருமை அய்யா, பயனுள்ள குறிப்புகள் தங்கள் சேவை மென்மேலும் செழிக்கட்டும்..!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதங்கள் சொல்வது உண்மைதான்..
ReplyDeleteபிரதி எடுப்பதை தடுக்கும் வசதி சில வலை பூக்களில் பயன்படுத்தபட்டு உள்ளது.. நீங்கள் அதை முயன்று பார்க்கலாம்.
டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு சந்தாதரர் ஆக யாரை அணுக வேண்டும் ? கூகுளில் தேடினேன். கிடைக்கவில்லை.
ReplyDeleteதயவு செய்து உதவவும்.
அன்புள்ள ஆசிரியர் ஐயா! உங்கள் ஆய்வின், உழைப்பின் விளைவான அரிய எழுத்துக்கள் திருடப்பட்ட பிறகு ஒருவித சோகம் கப்பிய நிலையில் வகுப்பறை விளங்குவதை கவனிக்கிறேன். இந்த நிலைமையை மாற்றத் தாங்கள் பல மாற்றங்களைச் செய்யவிருக்கிறீர்கள், நல்லது, செய்யுங்கள். அப்படியாவது உங்கள் உழைப்பை மற்றவர் திருடுவதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். திருடுவதுகூட பெரிதல்ல, அப்படி திருடியது இன்ன இடத்திலிருந்து என்று சொல்லும் தைரியம்கூட இல்லாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். சரி! ஊடகங்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். பத்திரிகைகள் படிக்கும் வழக்கம் குறைந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அன்று கலைமகள், அமுதசுரபி, ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், உமா, காவேரி, இப்படி பல இலக்கியங்கள், சிறுகதைகள், நாவல்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகள் இருந்தன. சினிமாவுக்கென்று பேசும்படம், குண்டூசி, தமிழ்சினிமா போன்றவை மட்டும்தான், அதுவும் அவை தரமானவை. ஆனால் இன்று எல்லாமே சினிமாதான். கதை, தொடர்கதை இவையெல்லாம் மறைந்தே போய்விட்டன. கல்கி ரா.கி., எஸ்.ஏ.பி.,எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், பூவை எஸ்.ஆறுமுகம் இவர்களெல்லாம் பத்திரிகைகளை தரமாக நடத்த உதவினார்கள். இன்று ????
ReplyDeleteஎதை எழுதினாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் தருவதாக அது இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது தொடரும். அந்தப் பணி தொடரும்"//
ReplyDeleteநன்றி அய்யா! வகுப்பறையைத் தான் முதலில் திற்ந்து வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டேன்.2 நாட்களாக தாங்கள் வகுப்பு அறைக்கு வரவில்லையே என்று அயர்வோடு காத்திருந்தேன்.
வெகு ஜனப் பத்திரிகைகளில் இப்போது 75% சினிமா சினிமா சினிமா மட்டுமே!தொடர்கதை, நாவல் போன்றவை, தொலைக்காட்சி மெகா சீரியல் என்ற சுனாமியால் அடித்துப் போகப்பட்டுவிட்டன.ஒரு எழுத்தாளன் தன் மன ஓட்டத்தை சுயச்சார்புடன்
ReplyDeleteஎழுதமுடியாத சூழல்.எது விலை போகும் என்று ஒரு பத்திரிகை வெளியிடுபவர் நினைகிறாரோ அதைத் தான் எழுத்தாளன் எழுத வேண்டிய சூழல்.அங்கே பொருந்த முடியாதவர்களுக்கு, தங்கள் எழுதத்துடிக்கும் நமைச்சலை பூர்த்தி செய்து கொள்ள வலைதளம் நல்ல முதுகு தேய்த்துக் கொள்ளும் கல்லாகப் பயன்படுகிறது.
ஐயா,
ReplyDelete1988 மாணவர்கள் இருக்கும் இடத்தில் வெறும் 100 பேரை மட்டும் அனுமதிப்பதை அதர்மம் என எண்ணுவதிலேயே தெரிகிறது உங்கள் நல்ல மனது. நன்றி.
--செங்கோவி
அன்புடன் வணக்கம்
ReplyDelete""""எழுதுபவற்றில் முக்கியமான
பாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்
உள்ளவர்களை மட்டும் அதில் சேர்த்துக் கொள்வோம்."""
என்னையும் ஒரு மாணவனாக சேர்த்து கொள்ளுங்கள் !!
எங்களுக்கு நீங்கள் ஸ்ரீ குருநாதராக கிடைத்தது இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம்
வணக்கம் ஐயா!
ReplyDeleteமகாபாரதத்தில் இருந்து ஒரு கதை.
குல குருநாதர் துரோணாச்சாரியார் தமது மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் வில்லித்தை சொல்லிகொடுக்கும் பொழுது
ஒரு நாள்! ஒரு மரத்தில் ஒரு வெள்ளை நிற புறா அமர்ந்து உள்ளது , அம்மரத்தை சுட்டி காட்டி அம்பு எய்ய பயிற்ச்சி தரும் பொழுது ஒவ்வொரு மாணவரிடமும் தற்பொழுது தங்களுக்கு என்ன தெரிகின்றது என்று கேட்கின்றார் ஒருவன் சொல்லுகின்றான் மரம் என்று, மற்றவன் கிளை, மற்றவனோ இலை என்று பட்டியல் நீண்டுகொண்டு செல்லுகின்றது அதில் அர்ச்சுனன் மட்டும் "புறா!" என்று தாம் வகுப்பீர்க்கு வந்த காரணத்தை மிகவும் சரியாக சொல்லுகின்றார் இன்னும் சொல்ல போனால் எதற்க்காக சத்ரியனாக பிறந்தோமோ அந்த கர்மம் என்று சொல்லுகின்ற வேலையை கூறுகின்றார்.
மேற்கண்ட கதையில் வருவதை போல ஒரு கடைநிலை மாணவனுக்கு உரிய திறமைதான் எம்மிடம் உள்ளதால் ஆசியரின் ஆசிர்வாதம் மட்டும் என்றனைக்கும் வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.
ஆசிரியருக்கு எது நல்லது என்று படுகின்றதோ அதனையே தாராளமாக பழனியப்பனின் ஆசிவாததுடன் செயல் படுத்த இந்த மாணவனும் துணை நிற்பேன் ஐயா
உள்ளேன் ஐயா!
ReplyDeleteஎமது இயபாட்டீற்க்கு மற்றும் கருத்தீர்க்கு பதில் தந்த
அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியை காணிக்கையாக்குகின்றேன் .
குறிப்பாக வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் பூவில் இயற்கையாக உள்ள இனிப்பு சுவைபோல என்றும்
"வாத்தியாரின் வகுப்பறையில்!" துணை நிற்கும் ஐயா உயர்திரு முத்துராமக்ரிஷ்ணன் அவர்களுக்கும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete////Blogger பிரவின்குமார் said...
ReplyDeleteமிகவும் அருமை அய்யா, பயனுள்ள குறிப்புகள் தங்கள் சேவை மென்மேலும் செழிக்கட்டும்..!/////
நல்லது. நன்றி நண்பரே!
ஐயா,
ReplyDeleteதமிழில் அதிக வாசகர் வீச்சுக் கொண்ட உங்கள் தளம் திருடப்பட்டதை அறிந்து வருத்தம் அடைகிறேன்.
உங்கள் எழுத்து சேவையை 100க்கு மட்டும் சுருக்கும் உங்கள் நிலைக்கு மாற்றாக சில யோசனைகள் சொல்கிறேன். இதனால் நீங்கள் விரும்பும் படி பதிவுகள் பாதுகாக்கப்படும். பிடித்திருந்தால் பயன்படுத்துங்கள்.
ஒன்று, வேர்ட்பிரஸ் தளத்தில் கணக்கைத் தொடங்கிக் கொண்டு பதிவிட்டால் ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக கடவுச்சொல் கொடுத்து பூட்டமுடியும்
அல்லது இரண்டு, கூகிள் குழுமம் ஒன்றை தொடக்கி அதில் உங்கள் வாசகர்களை தேர்வு செய்து இணைத்துக்கொள்ளுங்கள்.
அல்லது மூன்று, புதிதாக ஒரு கூகிள் கணக்கை தொடக்கி அந்த கணக்கை இதே 100 பேருக்கு ப்ளாக்கரில் அனுமதிக் கொடுத்து அதன் கடவுச் சொல்லை வேண்டியவர்களுக்கு கொடுக்கலாம்.
பின்னூட்டத்தில் திரு கண்ணன் அவர்கள் துரோணாச்சாரியார் தனது சீடர்களுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்த கதையைக் கூறியிருக்கிறார். அதன் சரியானதுதான். ஆனால் வியாசர் கொடுத்தபடி கதையை என்னுடைய http://www.bharathipayilagam.blogspot.com என்கிற தளத்தில் "குறிக்கோளை அடைதல்" என்ற தலைப்பிட்ட கட்டுரையாகக் கொடுத்திருக்கிறேன். கதையில் ஒருசில சின்னச்சின்ன மாறுதல்கள்தான் என்றாலும் வியாச பாரதத்தைப் பின்பற்றி அந்தக் கதையைத் தெரிந்துகொள்ள என்னுடைய மேற்சொன்ன கட்டுரையை தயவுசெய்து படியுங்கள். நன்றி.
ReplyDeleteஉண்மைதான்.! தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் மாற்று கருத்து ஏதாவது இருக்குமா என்று தேடினேன்.. ஒன்றுமில்லை..
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்...!
Dear sir,
ReplyDeleteThank you. Please proceed your devotional service.
////Vinoth said...
ReplyDeleteதங்கள் சொல்வது உண்மைதான்..
பிரதி எடுப்பதை தடுக்கும் வசதி சில வலை பூக்களில் பயன்படுத்தபட்டு உள்ளது.. நீங்கள் அதை முயன்று பார்க்கலாம்./////
எல்லாவற்றையும் செய்ய உள்ளேன். பொறுத்திருக்க வேண்டுகிறேன்!
////Vinoth said...
ReplyDeleteடைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு சந்தாதரர் ஆக யாரை அணுக வேண்டும் ? கூகுளில் தேடினேன். கிடைக்கவில்லை. தயவு செய்து உதவவும்./////
கோவையில் மட்டும்தான் அச்சலுகை. நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள்?
/////Thanjavooraan said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் ஐயா! உங்கள் ஆய்வின், உழைப்பின் விளைவான அரிய எழுத்துக்கள் திருடப்பட்ட பிறகு ஒருவித சோகம் கப்பிய நிலையில் வகுப்பறை விளங்குவதை கவனிக்கிறேன். இந்த நிலைமையை மாற்றத் தாங்கள் பல மாற்றங்களைச் செய்யவிருக்கிறீர்கள், நல்லது, செய்யுங்கள். அப்படியாவது உங்கள் உழைப்பை மற்றவர் திருடுவதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். திருடுவதுகூட பெரிதல்ல, அப்படி திருடியது இன்ன இடத்திலிருந்து என்று சொல்லும் தைரியம்கூட இல்லாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். //////
பல மனவளக்கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளேன். சோகம் என்னை அண்டாது. வந்தாலும் சில நொடிகளில் அனுப்பிவிடுவேன். வேலைப் பளுவினால் ஒருவாரமாகப் பதிவில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை சார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////சரி! ஊடகங்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். பத்திரிகைகள் படிக்கும் வழக்கம் குறைந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அன்று கலைமகள், அமுதசுரபி, ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், உமா, காவேரி, இப்படி பல இலக்கியங்கள், சிறுகதைகள், நாவல்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகள் இருந்தன. சினிமாவுக்கென்று பேசும்படம், குண்டூசி, தமிழ்சினிமா போன்றவை மட்டும்தான், அதுவும் அவை தரமானவை. ஆனால் இன்று எல்லாமே சினிமாதான். கதை, தொடர்கதை இவையெல்லாம் மறைந்தே போய்விட்டன. கல்கி ரா.கி., எஸ்.ஏ.பி.,எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், பூவை எஸ்.ஆறுமுகம் இவர்களெல்லாம் பத்திரிகைகளை தரமாக நடத்த உதவினார்கள். இன்று ????////
இன்றும் பலர் எழுதத் தயாராக உள்ளார்கள். வெளியிடத்தான் பத்திரிக்கைகள் இல்லை சார்!
////kmr.krishnan said...
ReplyDeleteஎதை எழுதினாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் தருவதாக அது இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது தொடரும். அந்தப் பணி தொடரும்"//
நன்றி அய்யா! வகுப்பறையைத் தான் முதலில் திற்ந்து வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டேன்.2 நாட்களாக தாங்கள் வகுப்பு அறைக்கு வரவில்லையே என்று அயர்வோடு காத்திருந்தேன்.////
கோபாலன் சாரும், முத்துராமகிருஷ்ணரும் இருக்கும்போது எனக்கு எப்படி அயர்வு வரும்?
எனக்கு வராதபோது, உங்களுக்கும் வரக்கூடாது!. வேலைப் பளுவினால் ஒருவாரமாகப் பதிவில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை கிருஷ்ணன் சார்!
///kmr.krishnan said...
ReplyDeleteவெகு ஜனப் பத்திரிகைகளில் இப்போது 75% சினிமா சினிமா சினிமா மட்டுமே!தொடர்கதை, நாவல் போன்றவை, தொலைக்காட்சி மெகா சீரியல் என்ற சுனாமியால் அடித்துப் போகப்பட்டுவிட்டன.ஒரு எழுத்தாளன் தன் மன ஓட்டத்தை சுயச்சார்புடன்
எழுதமுடியாத சூழல்.எது விலை போகும் என்று ஒரு பத்திரிகை வெளியிடுபவர் நினைகிறாரோ அதைத் தான் எழுத்தாளன் எழுத வேண்டிய சூழல்.அங்கே பொருந்த முடியாதவர்களுக்கு, தங்கள் எழுதத்துடிக்கும் நமைச்சலை பூர்த்தி செய்து கொள்ள வலைதளம் நல்ல முதுகு தேய்த்துக் கொள்ளும் கல்லாகப் பயன்படுகிறது.////
எதிர்காலத்தில் இணைய எழுத்துக்கள்தான் கோலோச்சப்போகிறது!
////செங்கோவி said...
ReplyDeleteஐயா, 1988 மாணவர்கள் இருக்கும் இடத்தில் வெறும் 100 பேரை மட்டும் அனுமதிப்பதை அதர்மம் என எண்ணுவதிலேயே தெரிகிறது உங்கள் நல்ல மனது. நன்றி.
--செங்கோவி/////
எழுத்தில்/படிப்பில் ஆர்வமுள்ள அனைவருக்கும் வரவிருக்கும் இணைய தளத்தில்இடமுண்டு
/////hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வணக்கம்
""""எழுதுபவற்றில் முக்கியமான பாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களை மட்டும் அதில் சேர்த்துக் கொள்வோம்."""
என்னையும் ஒரு மாணவனாக சேர்த்து கொள்ளுங்கள் !!
எங்களுக்கு நீங்கள் ஸ்ரீ குருநாதராக கிடைத்தது இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம்//////
குருநாதர் என்பது பெரிய சொல். நீங்கள் வாத்தியார் என்றே குறிப்பிடலாம். உங்களுக்கு இல்லாத இடமா? நிச்சயம் உங்களுக்கு இடமுண்டு!
/////kannan said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
மகாபாரதத்தில் இருந்து ஒரு கதை.
குல குருநாதர் துரோணாச்சாரியார் தமது மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் வில்லித்தை சொல்லிகொடுக்கும் பொழுது
ஒரு நாள்! ஒரு மரத்தில் ஒரு வெள்ளை நிற புறா அமர்ந்து உள்ளது , அம்மரத்தை சுட்டி காட்டி அம்பு எய்ய பயிற்ச்சி தரும் பொழுது ஒவ்வொரு மாணவரிடமும் தற்பொழுது தங்களுக்கு என்ன தெரிகின்றது என்று கேட்கின்றார் ஒருவன் சொல்லுகின்றான் மரம் என்று, மற்றவன் கிளை, மற்றவனோ இலை என்று பட்டியல் நீண்டுகொண்டு செல்லுகின்றது அதில் அர்ச்சுனன் மட்டும் "புறா!" என்று தாம் வகுப்பீர்க்கு வந்த காரணத்தை மிகவும் சரியாக சொல்லுகின்றார் இன்னும் சொல்ல போனால் எதற்க்காக சத்ரியனாக பிறந்தோமோ அந்த கர்மம் என்று சொல்லுகின்ற வேலையை கூறுகின்றார்.
மேற்கண்ட கதையில் வருவதை போல ஒரு கடைநிலை மாணவனுக்கு உரிய திறமைதான் எம்மிடம் உள்ளதால் ஆசியரின் ஆசிர்வாதம் மட்டும் என்றனைக்கும் வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.
ஆசிரியருக்கு எது நல்லது என்று படுகின்றதோ அதனையே தாராளமாக பழனியப்பனின் ஆசிவாததுடன் செயல் படுத்த இந்த மாணவனும் துணை நிற்பேன் ஐயா////
ஆகா, உங்களின் இந்த ஒரு பின்னூட்டமே நூறு பின்னூட்டங்களுக்கான தெம்பைக் கொடுக்கிறது. நன்றி கண்னன்!
/////kannan said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
எமது இயபாட்டீற்க்கு மற்றும் கருத்தீர்க்கு பதில் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியை காணிக்கையாக்குகின்றேன் .
குறிப்பாக வாத்தியார் அவர்களுக்கும் மற்றும் பூவில் இயற்கையாக உள்ள இனிப்பு சுவைபோல என்றும் "வாத்தியாரின் வகுப்பறையில்!" துணை நிற்கும் ஐயா உயர்திரு முத்துராமகிரிஷ்ணன் அவர்களுக்கும்.////
நல்லது. நன்றி கண்ணன்!
நீச்சல்காரன் said...
ReplyDeleteஐயா,
தமிழில் அதிக வாசகர் வீச்சுக் கொண்ட உங்கள் தளம் திருடப்பட்டதை அறிந்து வருத்தம் அடைகிறேன்.
உங்கள் எழுத்து சேவையை 100க்கு மட்டும் சுருக்கும் உங்கள் நிலைக்கு மாற்றாக சில யோசனைகள் சொல்கிறேன். இதனால் நீங்கள் விரும்பும் படி பதிவுகள் பாதுகாக்கப்படும். பிடித்திருந்தால் பயன்படுத்துங்கள்.
ஒன்று, வேர்ட்பிரஸ் தளத்தில் கணக்கைத் தொடங்கிக் கொண்டு பதிவிட்டால் ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக கடவுச்சொல் கொடுத்து பூட்டமுடியும்
அல்லது இரண்டு, கூகிள் குழுமம் ஒன்றை தொடக்கி அதில் உங்கள் வாசகர்களை தேர்வு செய்து இணைத்துக்கொள்ளுங்கள்.
அல்லது மூன்று, புதிதாக ஒரு கூகிள் கணக்கை தொடக்கி அந்த கணக்கை இதே 100 பேருக்கு ப்ளாக்கரில் அனுமதிக் கொடுத்து அதன் கடவுச் சொல்லை வேண்டியவர்களுக்கு கொடுக்கலாம்./////
Content Theftஐ தடுக்கும் வசதியுடன் இணைய தளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
அதுதான் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று எண்ணுகிறேன். உங்கள் யோசனைகளுக்கு நன்றி நண்பரே!
/////Thanjavooraan said...
ReplyDeleteபின்னூட்டத்தில் திரு கண்ணன் அவர்கள் துரோணாச்சாரியார் தனது சீடர்களுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்த கதையைக் கூறியிருக்கிறார். அதன் சரியானதுதான். ஆனால் வியாசர் கொடுத்தபடி கதையை என்னுடைய http://www.bharathipayilagam.blogspot.com என்கிற தளத்தில் "குறிக்கோளை அடைதல்" என்ற தலைப்பிட்ட கட்டுரையாகக் கொடுத்திருக்கிறேன். கதையில் ஒருசில சின்னச்சின்ன மாறுதல்கள்தான் என்றாலும் வியாச பாரதத்தைப் பின்பற்றி அந்தக் கதையைத் தெரிந்துகொள்ள என்னுடைய மேற்சொன்ன கட்டுரையை தயவுசெய்து படியுங்கள். நன்றி./////
தகவலுக்கு நன்றி கோபாலன் சார்!
////தங்கம்பழனி said...
ReplyDeleteஉண்மைதான்.! தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் மாற்று கருத்து ஏதாவது இருக்குமா என்று தேடினேன்.. ஒன்றுமில்லை..
நன்றி! வாழ்த்துக்கள்...!////
உண்மைத்தான் கூறியிருக்கிறேன். உண்மைக்கு ஏது மாற்றுக்கருத்து?
/////CJeevanantham said...
ReplyDeleteDear sir,
Thank you. Please proceed your devotional service./////
ஆகா! என் கடன் எழுதும் பணியைத் தொடர்வதே -! உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவு இருக்கும்வரை!
வலைப்பூவிற்கு பதில் தனி டொமைனில் தாங்கள் போரம் ஸ்டைலில் பதிவிடலாம் அதில் இண்டராக்டிவிற்கு எளிதாக இருக்கும். வகைப்படுத்துதலுக்கும் எளிதாக இருக்கும். phpbb போன்ற இலவச போரங்களுக்குரிய மென்பொருட்கள் கிடைக்கிறது அல்லது vbBulletin போன்றவைகளும் உள்ளன அய்யா.
ReplyDelete