அது உங்கள் சாய்ஸ்!
Choice என்னும் ஆங்கிலச் சொல் பொறுக்கி எடுத்தல் அல்லது
தேர்வு செய்தல் என்று பொருள்படும் Things choosen or things
selected
இன்னும் விளக்கமாக இப்படியும் சொல்லலாம்:
Act of choosing; the voluntary act of selecting or separating from
two or more things that which is preferred; the determination
of the mind in preferring one thing to another; election.
The power or opportunity of choosing; option.
இந்த option என்னும் சொல் இன்னும் நெருக்கமான பொருளைக்
கொடுக்கும்
சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
உலகில் பல விஷயங்கள் அல்லது செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு
விடப்பட்டுள்ளன. சில விஷயங்களும், செயல்களும் உங்கள்
விருப்பத்திற்கு விடப்படவில்லை; விருப்பத்திற்கு அப்பாற்பட்டவை.
பிறப்பை எவனும் தேர்ந்தெடுக்க முடியாது.
தாய், தந்தையை எவனும் தேர்ந்தெடுக்க முடியாது
உடன்பிறப்புக்களையும் தேர்ந்தெடுக்க முடியாது
உறவுகளையும் தேர்ந்தெடுக்க முடியாது!
அதுபோல இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது.
தற்கொலைக்கு முயன்றவனில் பலபேர் மனவருத்தங்களுடன்
இன்றும் இருக்கிறான்.
இதுபோன்று பல விஷயங்கள் உங்கள் Choiceற்கு
அப்பாற்பட்டவை
அவைகள் எல்லாம் விதிப்படி நடப்பவை
விதித்தபடி நடப்பவை
அவற்றில் உங்கள் விருப்பத்திற்கு இடமேயில்லை!
மணவாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இருப்பதுபோல் தோன்றும்
அது காதல் திருமணமானாலும் சரி அல்லது பெற்றோர்கள்
செய்து வைக்கும் திருமணமானாலும் சரி,அதுவும் விதித்தபடிதான் நடக்கும்!
மெல்லியலாள் தோளில் சாய்ந்தாலும் சாய்வாள்
அல்லது தன் காலில் சாயவைத்தாலும் வைப்பாள்
தேவதையாகவும் இருக்கலாம்
அல்லது பிசாசாகவும் வந்து சேரலாம்!.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல
ஒரு ஆணின் தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்!
எல்லாம் வாங்கி வந்த வரம்
நம் மொழியில் சொன்னால் ஜாதகப் பலன்
நண்பனிடம் ஒருவன் கேட்டான்: “உங்கள் வீட்டில்
யார் முடிவெடுப்பீர்கள்? நீயா? அல்லது உன் மனைவியா?”
புன்னகையுடன் பதில் வந்தது!
“பெரிய விஷயங்களுக்கெல்லாம் நான் முடிவெடுப்பேன்.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவள் முடிவெடுப்பாள்!”
“விளக்கமாகச் சொல்லுடா!”
“ஃபிரிஜ்ஜை மாற்றுவது, புதுக் கார் வாங்குவது, ஏரியா பார்த்து வீடு
மாறுவது, பையனை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது போன்ற சின்ன
விஷயங்களுக்கெல்லாம் அவள் முடிவெடுப்பாள். எந்தக் கட்சிக்கு
ஓட்டுப் போடுவது, யார் வீட்டுக் கல்யாணத்திற்குப் போவது போன்ற
பெரிய விஷயங்களுக்கெல்லாம் நான் முடிவெடுப்பேன்!”
எப்படியிருக்கிறது பாருங்கள்?:-)))))
ஒரு சிந்தனையாளன் சொன்னான்:
“எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள்
அல்லது நாட்டிற்கு ஒரு தத்துவஞானி கிடைப்பான்.”
ஆகவே எதிர்பார்ப்பில்லாமல் வாழுங்கள்!
வருவது வரட்டும்
நடப்பது நடக்கட்டும்
இன்பம் துன்பம் எதுவந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்போம்
நம் சந்தோஷத்தை எதற்காகவும் அடகு வைக்க வேண்டாம்
பறி கொடுக்க வேண்டாம்.
பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டாம்
எந்தப் பறவையாவது கவலைப் படுகிறதா?
அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகிறதா?
கிடைத்த பழத்தின் மிச்சத்தைக் கொண்டுபோய் கூண்டில் வைத்துக் கொள்கிறதா?
கிடைக்கும் தானியத்தை லவட்டிக் கொண்டு போய்க் கூண்டில் ஒளித்து வைக்கிறதா?
கூடு கட்டும் கடனுக்காக வங்கியில் போய்க் கைகட்டி நிற்கிறதா?
அதைத்தான் கவியரசர் இப்படிப் பாட்டில் வைத்தார்:
“சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?”
+++++++++++++++++++++++++++++++++++
சரி, கவலைப் படாமல் இருக்க முடியுமா?
கவலைகள் தேடி வருகின்றனவே?
ஐந்தாம் வீடு கெட்டிருந்தால் கவலைகள் அலைபோல
நம்மைத் தேடி வரத்தான் செய்யும்!
Fifth house is the house of mind!
ஆகவே கவலைப் படாமல் இருக்க முடியாது!
ஆனால் அதில் நமக்குச் சாய்ஸ் உண்டு!
சாய்ஸ் உள்ள விஷயங்களுக்கு மட்டும் கவலைப் படுங்கள்
சாய்ஸ் இல்லாத விஷயங்களுக்குக் கவலைப் படாதீர்கள்!
முடிந்த விஷயங்களுக்கு மட்டும் கவலைப் படுங்கள்
நம்மால் முடியாத விஷயங்களுக்குக் கவலைப் படாதீர்கள்!
கவலைப் படுவது உங்கள் Choice
கவலையின்றி இருப்பதும் உங்கள் சாய்சே!
அன்புடன்
வகுப்பறை
வாத்தியார்!
வாழ்க வளமுடன்!

Dear Sir
ReplyDeleteKavalai Kollamal Irupadhadhu pattri kooda vathiyar choice koduthirupadhu sinthiga vendiya visayam....
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
இந்த பதிவு எனக்கு எழுதியது போல் இருக்கிறது, நொந்து நுலாகிய சமயதில் உஙகள் பதிவை படிக்கிறென். நன்றி
ReplyDeleteமனதுக்கு இதம் தரும் வரிகள்.
ReplyDeleteநிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் என்று அழகா சொல்லியிருக்கீங்க ஐயா.
நன்றி
நல்ல பதிவு அய்யா.
ReplyDeleteபதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி. ஒரு கிரகம் வக்கிரம் பெற்று நீச்சமும் அடைந்திருந்தால், அது உச்சர்த்திற்கு சமம் என்று சிலர் சொல்கிறார்களே? தங்கள் கருத்து என்ன அய்யா?
vidunga sir, ennaku 7 la suriyan which they say means dwi kalalthram or dushta kalathram. 7 am athipathi guru thulathil(2) pagai aaanal chandiranodu serthulaar...neega yenna sollriga ?
ReplyDeleteவணக்கம் ஐயா,முற்றிலும் உண்மையான கூற்று.அனைத்தும் தீர்மானிக்கப்பட்டது.இது பலர் ஏற்றுக்கொள்ளாதது,சிலர் ஏற்றுக்கொண்டது.அதுவும் விதி.பல்சுவை கார்டூனில் அனைத்தும் அருமை. நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்,
மதுரை தனா.
ஆஹா..
ReplyDeleteதத்துவ மழை பொழிஞ்சுட்டீங்க வாத்தியாரே..!
எல்லாம் விதியின் செயல்தான்..!
அருமை.. அருமை.. அருமை..!
gobi sonathu polathan nanum nonthu nulakijiruka nerathila nala oru vilakam sir...
ReplyDeleteenaku 5th house il kethu irukuthu athe neram kuru parkirathu 5th house i
ithu epadi pada amipu sir
"கவலை படுவதே கரு நரகம்மா!
ReplyDeleteகவலையற்று இருப்பதெ சொர்கம்!!"
மஹாகவி பாரதியார்
30ம் தேதி மதியம் ஓம்கார ஸ்வாமிகளுக்கான பதிவைப் பார்த்துவிட்டு திருச்செந்தூர் கும்பாபிசேகத்திற்காக கிளம்பினேன். இன்று 3ம் தேதி திரும்பி வந்து பார்த்தால் வரிசையாக 4 ப்திவுகள். சந்தோஷம் கலந்த ஆச்சர்யம். புத்தக வெளியீடு பற்றி அறிந்ததும் கடந்த வாரங்களில் ஆசிரியரின் வேலைப்பளு புரிந்தது. கூடிய விரைவில் புத்தகத்தை வாங்கி படித்துவிடுகிறேன் அய்யா. தங்களது எழுத்துக்கள் காலத்தால் அழியாவண்ணம் "காக்க காக்க கதிர்வேல் காக்க" என்று திருச்செந்திலாண்டவனை மனமாற பிரார்தனை செய்கிறேன்.
ReplyDeleteவிரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பவேண்டியதுதான். "த்ரிசா கிடைக்கலைன்னா திவ்யா" என்று வடிவேலு சொல்வதைப்போல.
ReplyDelete/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Kavalai Kollamal Irupadhadhu pattri kooda vathiyar choice koduthirupadhu sinthiga vendiya visayam....
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
பதிவின் தலைப்பே அதுதான் ராஜாராமன்! உங்களுக்குள்ள முக்கியமான சாய்ஸ் வித் கவலையா? வித் அவுட் கவலையா? எது முக்கியம் என்பதை வலியுறுத்தத்தான் பதிவு!
/////Blogger gopi said...
ReplyDeleteஇந்த பதிவு எனக்கு எழுதியது போல் இருக்கிறது, நொந்து நுலாகிய சமயதில் உஙகள் பதிவை படிக்கிறேன். நன்றி////
நானும் நொந்து வருந்திய காலம் உண்டு! அனுபவத்தைத்தான் எழுதினேன் கோபி!
/////Blogger புதுகைத் தென்றல் said...
ReplyDeleteமனதுக்கு இதம் தரும் வரிகள்.
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் என்று அழகா சொல்லியிருக்கீங்க ஐயா.
நன்றி/////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
/////Blogger chaks said...
ReplyDeleteநல்ல பதிவு அய்யா.
பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி. ஒரு கிரகம் வக்கிரம் பெற்று நீச்சமும் அடைந்திருந்தால், அது உச்சத்திற்கு சமம் என்று சிலர் சொல்கிறார்களே? தங்கள் கருத்து என்ன அய்யா?/////
நீசம் என்பது Totally out!
ஆளே இறந்து போய் விட்டான். சட்டை போட்டிருந்தால் என்ன? சட்டைபோடாவிட்டால் என்ன?
நீசமானதற்குப் பிறகு வக்கிரம் ஆனால் என்ன? வக்கிரம் ஆகாவிட்டால் என்ன?
////Blogger mike said...
ReplyDeletevidunga sir, ennaku 7 la suriyan which they say means dwi kalalthram or dushta kalathram. 7 am athipathi guru thulathil(2) pagai aaanal chandiranodu serthulaar...neega yenna sollriga ?////
நான் இங்கே சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது உங்களின் persanal matter. விளக்கத்திற்கு மின்னஞ்சலில் வாருங்கள் (with a specific question & birth details)
////Blogger dhanan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,முற்றிலும் உண்மையான கூற்று.அனைத்தும் தீர்மானிக்கப்பட்டது.இது பலர் ஏற்றுக்கொள்ளாதது,சிலர் ஏற்றுக்கொண்டது.அதுவும் விதி.பல்சுவை கார்டூனில் அனைத்தும் அருமை. நன்றிகள்.
அன்புடன்,
மதுரை தனா./////
நீங்கள் (என் வகுப்பறை மாணவர்கள்) ஏற்றுக் கொண்டால் போதும்!:-)))
/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஆஹா..
தத்துவ மழை பொழிஞ்சுட்டீங்க வாத்தியாரே..!
எல்லாம் விதியின் செயல்தான்..!
அருமை.. அருமை.. அருமை..!/////
நீங்கள் ஒரு தடவை சொன்னாலே 100 தடவை சொன்ன மாதிரி.
மூன்று முறை சொல்லியிருக்கிறீர்கள். அது 300 தடவை சொன்ன மாதிரி!
/////Blogger Nisha said...
ReplyDeletegobi sonathu polathan nanum nonthu nulakijiruka nerathila nala oru vilakam sir...
enaku 5th house il kethu irukuthu athe neraka kuru parkirathu 5th house i
ithu epadi pada amipu sir/////
The aspect of Guru will give you the power to overcome the problems and mental worries!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete"கவலை படுவதே கரு நரகம்மா!
கவலையற்று இருப்பதே சொர்கம்!!"
மஹாகவி பாரதியார்////
நன்றி கிருஷ்ணன்!
ஐயா,
ReplyDeleteநமது மாணவர்களுக்கு
இருக்கின்ற கவலைகளில் ஐந்தாம்வீடு கெட்டிருந்தால் என்ன செய்வது என்கின்ற புதிய கவலையும் வந்து சேர்ந்துள்ளது.
அருமையான விளக்கம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Simply superb advice, much needed for this time.
ReplyDelete5ம் இடம் கெட்டிருந்தாலும் மன காரகன் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான். இது தாங்கள் முந்தைய பாடத்தில் சொன்னதுதான். எனக்கு செவ்வாய், ராகு 5ல் மகரத்தில் இருக்கிறார்கள். ஆறுதல் என்னவென்றால் சந்திரன் சுயவர்கத்தில் 6 பரல்களோடு தசம கேந்திரதில் இருக்கிறார்.
ReplyDelete/////Blogger Krushna Cumaar said...
ReplyDelete30ம் தேதி மதியம் ஓம்கார ஸ்வாமிகளுக்கான பதிவைப் பார்த்துவிட்டு
திருச்செந்தூர் கும்பாபிசேகத்திற்காக கிளம்பினேன். இன்று 3ம் தேதி திரும்பி
வந்து பார்த்தால் வரிசையாக 4 ப்திவுகள். சந்தோஷம் கலந்த ஆச்சர்யம். புத்தக
வெளியீடு பற்றி அறிந்ததும் கடந்த வாரங்களில் ஆசிரியரின் வேலைப்பளு
புரிந்தது. கூடிய விரைவில் புத்தகத்தை வாங்கி படித்துவிடுகிறேன் அய்யா.
தங்களது எழுத்துக்கள் காலத்தால் அழியாவண்ணம் "காக்க காக்க கதிர்வேல்
காக்க" என்று திருச்செந்திலாண்டவனை மனமாற பிரார்தனை செய்கிறேன்.////
உங்கள் அன்பிற்கு நன்றி கிருஷ்ணகுமார்!
/////Blogger Krushna Cumaar said...
ReplyDeleteவிரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பவேண்டியதுதான். "த்ரிசா
கிடைக்கலைன்னா திவ்யா" என்று வடிவேலு சொல்வதைப்போல./////
திவ்யா கிடைக்கவில்லைன்னா ஒரு காந்திமதி! (16 வயதினிலே படத்தில் மயிலின் அம்மாவாகவே வருவாரே அவர்!):-))))))
////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
நமது மாணவர்களுக்கு
இருக்கின்ற கவலைகளில் ஐந்தாம்வீடு கெட்டிருந்தால் என்ன செய்வது
என்கின்ற புதிய கவலையும் வந்து சேர்ந்துள்ளது.
அருமையான விளக்கம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.////
கட்டுரை கெட்டிருப்பதைப் பற்றியல்ல! கவலைப்படுவதைப் பற்றியது வேலன்!
////Blogger krish said...
ReplyDeleteSimply superb advice, much needed for this time.////
உங்கள் புரிதலுக்கு நன்றி க்ரீஷ்!
///Blogger ananth said...
ReplyDelete5ம் இடம் கெட்டிருந்தாலும் மன காரகன் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால்
தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான். இது தாங்கள் முந்தைய பாடத்தில்
சொன்னதுதான். எனக்கு செவ்வாய், ராகு 5ல் மகரத்தில் இருக்கிறார்கள். ஆறுதல்
என்னவென்றால் சந்திரன் சுயவர்கத்தில் 6 பரல்களோடு தசம கேந்திரதில்
இருக்கிறார்.///
செய்திகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆனந்த்!
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅருமை.
GK, BLR.
sir ive got 4 malefic planets in 4 kendras and kendras are owned by 4 benefic planets. how to get rid of this dosham ?
ReplyDelete/////Blogger Geekay said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
அருமை.
GK, BLR.//////
நன்றி ஜீக்கே!
//////Blogger mike said...
ReplyDeletesir ive got 4 malefic planets in 4 kendras and kendras are owned by 4 benefic planets. how to get rid of this dosham ?/////
கட்டடம் என்றால் இடித்துவிட்டுக் கட்டலாம். ஜாதகத்தில் அதற்கு வழியில்லை!
அதற்குத் தோஷம் என்று பெயரில்லை. ஏன் கவலைப் படுகிறீர்கள்?. அதற்கான நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும். ஏனென்றால் எல்லோருக்குமே 337 மதிப்பெண்கள்தான்!
This comment has been removed by the author.
ReplyDeleteஅதில் ஒரு சந்தேகம்.
ReplyDeleteபாஞ்சாங்கத்திற்கும் இந்த மென்பொருளையும் ஒப்பீடு செய்து
பார்த்தால் அதிக வித்தியாசம் ஏற்படுகிறதே. அதிலும் லக்கினம்
மற்றும் நட்சத்திரம் மாறும் நேரங்கள் குறைந்தது ஒருமணி நேரம்
வித்தியாசப் படுகிறதே (latitude & longitude சரியாகத் தந்தாலும்)
எதை நம்புவது - பஞ்சாங்கத்தையா அல்லது இது போன்ற
மென்பொருளையா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.
ஐயா,
ReplyDeleteநான் தங்களுடைய பரிந்துறை மென்பொருளான ஜோஸ்யம்
பாக்ரது-வை டவுன்லோடு செய்து பார்த்தேன்.
அதில் ஒரு சந்தேகம்.
பாஞ்சாங்கத்திற்கும் இந்த மென்பொருளையும் ஒப்பீடு செய்து
பார்த்தால் அதிக வித்தியாசம் ஏற்படுகிறதே. அதிலும் லக்கினம்
மற்றும் நட்சத்திரம் மாறும் நேரங்கள் குறைந்தது ஒருமணி நேரம்
வித்தியாசப் படுகிறதே (latitude & longitude சரியாகத் தந்தாலும்)
எதை நம்புவது - பஞ்சாங்கத்தையா அல்லது இது போன்ற
மென்பொருளையா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.
நன்றாக சொன்னீர்கள் அய்யா. கவலை சந்தோசம் இரண்டும் நிலையாக இருப்பதில்லை. அதை நாம் தான் நம் மனதில் ஏற்படுதிகொள்கிறோம். கடிகாரத்தில் இருக்கும் பெண்டுளும் போல. நிலையான நிம்மதியை தேடி அதை மனதில் நிறைத்து கொள்வோம்.
ReplyDeleteBlogger Sivakumar said...
ReplyDeleteஅதில் ஒரு சந்தேகம்.
பாஞ்சாங்கத்திற்கும் இந்த மென்பொருளையும் ஒப்பீடு செய்து
பார்த்தால் அதிக வித்தியாசம் ஏற்படுகிறதே. அதிலும் லக்கினம்
மற்றும் நட்சத்திரம் மாறும் நேரங்கள் குறைந்தது ஒருமணி நேரம்
வித்தியாசப் படுகிறதே (latitude & longitude சரியாகத் தந்தாலும்)
எதை நம்புவது - பஞ்சாங்கத்தையா அல்லது இது போன்ற
மென்பொருளையா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.
மென்பொருளையே பயன்படுத்துங்கள். சில மென் பொருட்களில், இரண்டுவிதமான பஞ்சாங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது
/////Blogger Dinesh babu said...
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள் அய்யா. கவலை சந்தோசம் இரண்டும் நிலையாக இருப்பதில்லை. அதை நாம் தான் நம் மனதில் ஏற்படுதிகொள்கிறோம். கடிகாரத்தில் இருக்கும் பெண்டுளும் போல. நிலையான நிம்மதியை தேடி அதை மனதில் நிறைத்து கொள்வோம்.////
உங்கள் கருத்திற்கு நன்றி தினேஷ்பாபு!