கனவுக் கன்னிக்காக ஒரு பதிவு
கனவுக்கன்னி (Dream Girl) என்கிற தலைப்பைப் பார்த்துவிட்டு,
யாராக இருக்கும்?
பாவ்னா?
நயன்தாரா?
அனுஷ்கா சர்மா?
அல்லது தமன்னா? என்று ஆர்வத்துடன் பதிவிற்குள்
நுழைந்தவர்கள் பதிவை விட்டு விலகவும்.
ஏமாற்று வேலை இல்லை! இதுவும் ஒரு கனவுக் கன்னியின்
கதைதான். 1942ஆம் ஆண்டு தமிழகத்தில் கனவுக்கன்னியாக
இருந்தவரைப் பற்றிய சுவாரசியமான செய்தியைத்தான்
பதிவாக எழுதியுள்ளேன்
================================================
யாரந்த கனவுக்கன்னி?
பசுபலேட்டி கண்ணாம்பாதான் அவர்!
1942ஆம் ஆண்டு வெளிவந்த ‘கண்ணகி’ திரைப்படத்தில் கண்ணகியாக
நடித்து தனது சொந்தக் குரலில் அசத்தலாக தமிழில் வசனம் பேசியவர்
அவர்.
மனோகரா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னையாகவும்
(பொறுத்தது போதும், பொங்கியெழு மனோகரா’’ என்று வசனம் பேசியவர்)
படிக்காத மேதை படத்தில் நடிகர் திலகத்தின் வளர்ப்பு அன்னையாகவும்
நடித்தவர். அதெல்லாம் பின்னாளில்
அவர் தெலுங்கில் நடித்த படங்கள் 44 என்று பட்சி கூறுகிறது.
மொத்தம் நடித்த படங்கள் 150
நடித்த தமிழ்ப் படங்கள் எத்தனை?
விக்கி மகாராசா தெரியவில்லை என்று சொல்லி விட்டார்
நடித்த முதல் திரைப் படம் ஜ்யோதிஷ் சின்ஹா (Jyotish Sinha) என்னும்
தெலுங்கு மொழித்திரைப்படம்,உடன் கதாநாயகனாக நடித்தவர்.
S.R.Anjaneyulu (கேள்விப் படாத பெயராக இருக்கிறது)
அவர் சிறந்த பாடகி. சுந்தரத் தெலுங்கில் மட்டுமே பாடியுள்ளார்
என்று என் அறிவிற்கு எட்டின வரை ஞாபகம்.
தமிழில் அம்மையார் பாடிய பாடல் எதாவது நினவிற்கு வந்தால்
பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் தெலுங்கைத் தாய் மொழியாகக்
கொண்ட திருமதி கண்ணாம்பா அவர்கள் தான் கதாநாயகியாக
நடிக்கவிருந்த ’கண்ணகி’ திரைப்படத்தில் பேசி நடிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருந்த்தால் தமிழை மூன்றே மாதங்களில் கற்றுக் கொண்டு,
அச்சரசுத்தமாகக் தன்னுடைய கணீர்க் குரலுடன் அப்படத்தில்
தமிழில் பேசி நடித்தார்.
(அப்போதெல்லாம் டப்பிங் வசதி இல்லை)
அப்படத்தின் கதை வசனகர்த்தாவான திரு.இளங்கோவன் அவர்கள்
(அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற வசனகர்த்தா அவர். அதை
நினைவில் வையுங்கள்) மூன்றே மாதங்களில் செல்வி (அப்பொது அவர்
செல்விதான். நம்புங்கள்) கண்ணாம்பாவிற்கு மூன்றே மாதங்களில்
தமிழைக் கற்றுக் கொடுத்தார். அவரும் கற்றுக்கொண்டு தமிழிலேயே
பேசி நடித்தது இன்றையவரை ஒரு ஆச்சரியமான செய்தி மற்றும்
திரையுலக வரலாறு!
அந்தப் படத்தில் கோவலனாக நடித்தது.திரு.P.U.சின்னப்பா.
===================================================
“வாத்தியார், எதற்காக இது? இதையும் பாடக் கணக்கில்
சேர்க்க வேண்டுமா?”
“நிச்சயமாக! ஒரு இளம் பெண்ணால் மூன்று மாதங்களுக்குள் அசத்தலாக
ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறபோது, மாய்ந்து மாய்ந்து
இரண்டு ஆண்டுகளாக உங்களுக்கு ஜோதிடத்தைப் பாடமாக நடத்திக்கொண்டிருக்கிறேன். பாதிப்பேர்கள் சரியாகப் படிக்கவில்லை என்பதை வரும் பின்னூட்டங்களில் இருந்து அறிகிறேன். அதை உணர்த்தத்தான் இந்தக் கனவுக்கன்னி கதை!
இனிமேலாவது பாவனவும் சோபனாவையும் உதறிவிட்டு - கண்ணாம்பாவை மனதில் நிறுத்தி பாடத்தை ஒழுங்காகப் படியுங்கள்”
----------------------------------------------------
கண்ணாம்பாவை மனதில் நிறுத்துவதற்காக
(படிப்பதற்குத்தான் சாமிகளா!)
அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
* பிறந்த ஆண்டு: 1912. பிறந்த ஊர் ஆந்திரத்தில் உள்ள கடப்பா நகரம்.
* 7.5.1964ஆம் தேதியன்று சென்னையில் இயற்கை எய்திவிட்டார்.
தனது 52வது வயதிலேயே இறந்து போனார். அதுதான் சோகம்!
* கணவரின் பெயர்: இயக்குனர் திரு. நாக பூஷணம்.
வாழ்க வளமுடன்!
அது அவருடைய தொழில் அதனால் கற்று கொள்ள நேர்ந்தது ;) நல்ல ஒரு வசன கர்த்தா கிடைத்த தாக நீங்கள் எல்லோ சொல்லியிருந்தியல்.. எங்களுக்கு நீங்கள் எல்லோ கிடைத்திருக்கிறியல்.. :---))) ஜயா இன்டைக்கு பிரம்போடு மேசை மேல ஏற்றுவார் என்டு தெரியும் பரவாயில்லை மாறுதலாய் இருக்கட்டும்.. எனக்கு ஜயா முன் பாடத்தை படிக்க பின் பாடம் மறக்கும் .. :) வகுப்பில் இருந்து திறத்திவிட வேண்டாம்.
ReplyDelete//இதில் ஆச்சரியம் என்னவென்றால் தெலுங்கைத் தாய் மொழியாகக்
ReplyDeleteகொண்ட திருமதி கண்ணாம்பா அவர்கள் தான் கதாநாயகியாக
நடிக்கவிருந்த ’கண்ணகி’ திரைப்படத்தில் பேசி நடிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருந்த்தால் தமிழை மூன்றே மாதங்களில் கற்றுக் கொண்டு,
அச்சரசுத்தமாகக் தன்னுடைய கணீர்க் குரலுடன் அப்படத்தில்
தமிழில் பேசி நடித்தார்.
//
திராவிட மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, விரும்பினால் எளிதில் கற்றுக் கொள்ளலாம், வடநாட்டவர்களுக்குத் தான் தென்னிந்திய மொழிகள் வாயில் நுழையாது.
வடநாட்டவர்களுக்குத் தான் தென்னிந்திய மொழிகள் வாயில் நுழையாது.//
ReplyDeleteஎனக்கென்னவோ இது தவறுன்னு தோணுது.
குஷ்பு, சுவலட்சுமி, மும்தாஜ் ஆகியோர் வடநாட்டவர்களே, தமிழ் பேசுகிறார்கள். நாமும் ஹிந்தியை சுத்தமாக(!!) பேசுவதில்லை.
உதாரணத்திற்காக என்பதால் சினிமா நடிகைகள் பெயரைச் சொன்னேனே தவிர வடநாட்டவர் தெந்நிந்திய மொழி் கற்று அருமையாக பேசுவதைபார்த்திருக்கிறேன்.
:))
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஅது அவருடைய தொழில் அதனால் கற்று கொள்ள நேர்ந்தது ;) நல்ல ஒரு வசன கர்த்தா கிடைத்த தாக நீங்கள் எல்லோ சொல்லியிருந்தியல்.. எங்களுக்கு நீங்கள் எல்லோ கிடைத்திருக்கிறியல்.. :---))) ஜயா இன்டைக்கு பிரம்போடு மேசை மேல ஏற்றுவார் என்டு தெரியும் பரவாயில்லை மாறுதலாய் இருக்கட்டும்.. எனக்கு ஜயா முன் பாடத்தை படிக்க பின் பாடம் மறக்கும் .. :) வகுப்பில் இருந்து திறத்திவிட வேண்டாம்.////
வகுப்பில் இருந்து நிறுத்திவிட மாட்டேன். உங்களைப் போன்ற கண்மணிகளைப் படிக்க வைப்பதில்தான் என்னுடைய திறமை அடங்கியிருக்கிறது. தன்முனைப்புடன் படித்தால் எதுவும் மறக்காது இமானுவேல்!
////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//இதில் ஆச்சரியம் என்னவென்றால் தெலுங்கைத் தாய் மொழியாகக்
கொண்ட திருமதி கண்ணாம்பா அவர்கள் தான் கதாநாயகியாக
நடிக்கவிருந்த ’கண்ணகி’ திரைப்படத்தில் பேசி நடிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருந்த்தால் தமிழை மூன்றே மாதங்களில் கற்றுக் கொண்டு,
அச்சரசுத்தமாகக் தன்னுடைய கணீர்க் குரலுடன் அப்படத்தில்
தமிழில் பேசி நடித்தார்.
//
திராவிட மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, விரும்பினால் எளிதில் கற்றுக் கொள்ளலாம், வடநாட்டவர்களுக்குத் தான் தென்னிந்திய மொழிகள் வாயில் நுழையாது.//////
தன்முனைப்புடன் படித்தால் என்று சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!
////Blogger புதுகைத் தென்றல் said...
ReplyDeleteவடநாட்டவர்களுக்குத் தான் தென்னிந்திய மொழிகள் வாயில் நுழையாது.//
எனக்கென்னவோ இது தவறுன்னு தோணுது.
குஷ்பு, சுவலட்சுமி, மும்தாஜ் ஆகியோர் வடநாட்டவர்களே, தமிழ் பேசுகிறார்கள். நாமும் ஹிந்தியை சுத்தமாக(!!) பேசுவதில்லை.
உதாரணத்திற்காக என்பதால் சினிமா நடிகைகள் பெயரைச் சொன்னேனே தவிர வடநாட்டவர் தெந்நிந்திய மொழி் கற்று அருமையாக பேசுவதைபார்த்திருக்கிறேன்.
:))//////
உண்மைதான் சகோதரி! இங்கே கோவையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் இருக்கிறார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அவர்களின் தமிழ் பேச்சு அருமையாக இருக்கும்!
//தன்முனைப்புடன் படித்தால் என்று சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!//
ReplyDeleteவிரும்பினால் என்று சொல்லி இருக்கிறேனே. விருப்பம் இருந்தால் எல்லாம் இருக்கும்.
நான் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றதற்கு முன் யாரும் கன்னடம் பேசியதைக் கூட கேட்டது இல்லை.
நான் அங்கு சென்ற பிறகு ஒரு மாததில் பேசத் தொடங்கினேன். ஒரே ஒரு ஆண்டு தான் அங்கு இருக்க நேர்ந்தது, பிறகு சென்னை வந்துவிட்டேன். இன்னும் கூட தெளிவாகப் பேச முடியும், ஒரளவு படிக்கவும் தெரியும். அனுபவத்தை வைத்து தான் முதல் பின்னூட்டம் இட்டேன்.
////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//தன்முனைப்புடன் படித்தால் என்று சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!//
விரும்பினால் என்று சொல்லி இருக்கிறேனே. விருப்பம் இருந்தால் எல்லாம் இருக்கும்.
நான் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றதற்கு முன் யாரும் கன்னடம் பேசியதைக் கூட கேட்டது இல்லை.
நான் அங்கு சென்ற பிறகு ஒரு மாதத்தில் பேசத் தொடங்கினேன். ஒரே ஒரு ஆண்டு தான் அங்கு இருக்க நேர்ந்தது, பிறகு சென்னை வந்துவிட்டேன். இன்னும் கூட தெளிவாகப் பேச முடியும், ஒரளவு படிக்கவும் தெரியும். அனுபவத்தை வைத்து தான் முதல் பின்னூட்டம் இட்டேன்./////
ஆகா, உங்கள் அனுபவம் யாருக்கு வரும்! நான் சரண்டர்!
ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லுங்கள் இப்போது சிங்கையில் இரவு 12 மணி.
24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ் மணத்திலேயே வலம் வருகிறீர்கள்.
தினமும் தமிழ்மணத்தில் விழுகின்ற 2250 பின்னூட்டங்களில் சரிபாதி உங்களுடைய பின்னூட்டம்தான்!:-))))
தூங்குவது உண்டா? இல்லையா?
ஜயா படிக்கிறம் படிக்கிறம் உங்களை போல ஒரு வாத்தியாருக்காவது படிக்க மாட்டமா. நன்றி..
ReplyDeleteஉங்களையும் கன்னம்பாவையும் (தனி தனியாக) மனதில் வைத்து நன்கு படிக்கிறோம் வாத்தியார் அய்யா! :)
ReplyDelete////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஜயா படிக்கிறம் படிக்கிறம் உங்களை போல ஒரு வாத்தியாருக்காவது படிக்க மாட்டமா. நன்றி../////
படிப்பது மட்டுமில்லை. முதல் மாணவனாகத் தேர்வும் பெற வேண்டும். முயற்சியுங்கள் இமானுவேல்!
///Blogger Dinesh babu said...
ReplyDeleteஉங்களையும் கண்ணாம்பாவையும் (தனித் தனியாக) மனதில் வைத்து நன்கு படிக்கிறோம் வாத்தியார் அய்யா! :)/////
எங்கள் இருவரையும் மனதில் வைத்துப் படிக்கும்போது மனதில் பாடத்திற்கு இடப்பற்றாக்குறை வந்து விடாமல் பார்த்துக்கொள்ளூங்கள்!
ஐயா நான் ஒழுங்காக படிகின்ற பையன் தான் என்ன வீட்டுபாடம் (தங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இடல்) மட்டும் செய்வது குறைவு. என்னைப்போன்ற மாணவர்கள் சிலருக்காக வரும் சனி மாற்றம் எப்படியிருக்கும் என ஓரிரு வரிகளில் எழுதுங்கள். தற்போது அட்டமத்துச் சனி நடப்பதால் நொந்து நூடுல்ஸாப் போனேன்.
ReplyDelete////Blogger வந்தியத்தேவன் said...
ReplyDeleteஐயா நான் ஒழுங்காக படிகின்ற பையன் தான் என்ன வீட்டுபாடம் (தங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இடல்) மட்டும் செய்வது குறைவு. என்னைப்போன்ற மாணவர்கள் சிலருக்காக வரும் சனி மாற்றம் எப்படியிருக்கும் என ஓரிரு வரிகளில் எழுதுங்கள். தற்போது அட்டமத்துச் சனி நடப்பதால் நொந்து நூடுல்ஸாகிப் போனேன்./////
ஆகா, எழுதாமல் இருப்பேனா?
சனி இட மாற்றத்ததின்போது எழுதுகிறேன்.
இப்போது எழுதினால் சுவைக்காது!
குந்தவை வந்துவிட்டாரா, வந்தியத்தேவரே?
அல்லது இன்னும் உம்மிடம் வந்து சேரவில்லையா?
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஆகா, எழுதாமல் இருப்பேனா?
சனி இட மாற்றத்ததின்போது எழுதுகிறேன்.
இப்போது எழுதினால் சுவைக்காது!
குந்தவை வந்துவிட்டாரா, வந்தியத்தேவரே?
அல்லது இன்னும் உம்மிடம் வந்து சேரவில்லையா//
ஆமாம் ஐயா இப்போ வேண்டாம் சனி மாற்றக்காலத்தின்போது எழுதுங்கள்.
குந்தவையா? ஒன்றையும் காணோம். விடாமுயற்சி வெற்றிதரும் என்பதால் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும் காணவில்லை.
என்ன இருந்தாலும் உங்களது கனவுக்கன்னி கண்ணாம்பாவை தலைப்பு புகைப்படமாக வைக்காமல் எங்களது கனவுக்கன்னி பாவனா புகைப்படத்தை வைத்தமைக்காக எங்களது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா கண்ணாம்பா குறித்த தகவல்கள் இருக்கட்டும்... பேசணுமே என்று பேசுபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பதில்கள் தான் என்னை திகைக்க வைக்கின்றன...சரியான பதில்கள் கொடுப்பதால் வருகிற சந்தோஷ திகைப்பு அது.... அதனால உங்களையும் மனசுல வச்சுக்கிறேன்.... நல்லது அய்யா...
ReplyDeleteஐயா,
ReplyDeleteமுடிக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் முடியாதது எதுமில்லை....
வாழ்க வளமுடன்,
வேலன்.
//////Blogger வந்தியத்தேவன் said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
ஆகா, எழுதாமல் இருப்பேனா?
சனி இட மாற்றத்ததின்போது எழுதுகிறேன்.
இப்போது எழுதினால் சுவைக்காது!
குந்தவை வந்துவிட்டாரா, வந்தியத்தேவரே?
அல்லது இன்னும் உம்மிடம் வந்து சேரவில்லையா//
ஆமாம் ஐயா இப்போ வேண்டாம் சனி மாற்றக்காலத்தின்போது எழுதுங்கள்.
குந்தவையா? ஒன்றையும் காணோம். விடாமுயற்சி வெற்றிதரும் என்பதால் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும் காணவில்லை./////
சென்னையில்தான் எங்காவது இருப்பார். அடுத்த தைக்குப் பிறகு வந்து உங்கள் கரம் பிடிக்க வந்து விடுவார்.கவலையை விடுங்கள்
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஎன்ன இருந்தாலும் உங்களது கனவுக்கன்னி கண்ணாம்பாவை தலைப்பு புகைப்படமாக வைக்காமல் எங்களது கனவுக்கன்னி பாவனா புகைப்படத்தை வைத்தமைக்காக எங்களது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்..////
உங்கள் கனவுக்கன்னி என்பதற்காக சந்தோஷமல்லாவா பட்டிருக்க வேண்டும். கண்டனத்தில் நியாயமில்லை!
கண்ணாம்பாவின் படத்தை முகப்பில் போட்டிருந்தால் உள்ளே வருகிறவர் ஓடிவிடும் அபாயம் உண்டு.அதனால்தான் போடவில்லை!
1942ல் நான் பிறக்கவே இல்லை. ஆகவே கண்ணாம்பா என் தந்தை காலத்துக் கனவுக் கன்னி என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்றைய கனவுக்கன்னிகளில் T.R.ராஜகுமாரியும் ஒருவர். ஆனால் அவர் கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து, மறைந்து விட்டார். அதுதான் சோகம்!
/////Blogger அருண் பிரசங்கி said...
ReplyDeleteஅய்யா கண்ணாம்பா குறித்த தகவல்கள் இருக்கட்டும்... பேசணுமே என்று பேசுபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பதில்கள் தான் என்னை திகைக்க வைக்கின்றன...சரியான பதில்கள் கொடுப்பதால் வருகிற சந்தோஷ திகைப்பு அது.... அதனால உங்களையும் மனசுல வச்சுக்கிறேன்.... நல்லது அய்யா...////
திகைக்க வைக்கும் நோக்கத்தில் எழுதுவதில்லை. என் மொழியில் (பாணியில்) இயற்கையாக எழுதுவதுதான்!
////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் முடியாதது எதுமில்லை....
வாழ்க வளமுடன்,
வேலன்.////
வெற்றி வேலன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
Dear Sir
ReplyDeleteNalla Kadhai Solli Puriyavaithatharku Nandri Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Nalla Kadhai Solli Puriyavaithatharku Nandri Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///
நன்றி ராஜாராமன்
லவ்விங் வாத்தியார்!
கோவி.கண்ணன் சொன்னது:
ReplyDelete"திராவிட மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, விரும்பினால் எளிதில் கற்றுக் கொள்ளலாம், வடநாட்டவர்களுக்குத் தான் தென்னிந்திய மொழிகள் வாயில் நுழையாது."
அட, அப்படியா?
உள்ளூர்த் தமிழனிடம் வாயில் நுழையாமல் சிக்கிக் கொண்டு தவிப்பதை விடவா, தமிழ் வடநாட்டவரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது? காமடி, கீமடி ஒன்னும் பண்ணலையே:-))
@வாத்தியார் ஐயா!
வசன உச்சரிப்பு, சுத்தம், நடிப்பு எல்லாம் சரிதான்! ஆனால் அந்த கனவுக் கன்னி சமாசாரம்...?
கண்ணாம்பாவின் வசன உச்சரிப்பின் திறமை என்னை மிரட்டியிருக்கிறது, உண்மை! வெகுநாட்களுக்கு முன்பு திரைப்படங்களை விரும்பிப் பார்க்கிற பழக்கம் இருந்தது. அந்தக் காலத்து ஜாம்பவான்கள், P U சின்னப்பா, கண்ணாம்பா நடித்த கண்ணகி படத்தைப் பார்க்கப் போயிருந்தேன், போதாத நேரம், அது என்ன என்று நீங்கள் தான் கணித்துச் சொல்ல வேண்டும்!
ஒரு சீனில், கண்ணாம்பா வசனம் பேச ஆரம்பித்தார், கொஞ்சம் நீளமாக இருக்கிறதென்று,வெளியே போய்விட்டு முக்கால் மணி நேரம் கழித்து உள்ளே வந்தால், அந்த சீனில் மூச்சு விடாமல் கண்ணாம்பா இன்னும் வசனம் பேசிக் கொண்டிருந்தார்........பேசிக்கொண்டிருந்தார்..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
..வுடு ஜூட்! தியேட்டரை விட்டு எடுத்த ஓட்டம் வீடு வந்து சேருகிற வரை வேகம் குறையவில்லை!
வசனம் பேசியே........கண்ணாம்பாவைக் கனவுக் கன்னியாக.....?!
உங்களுக்கு நெஞ்சுரம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்!!
////Blogger கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDelete@வாத்தியார் ஐயா!
வசன உச்சரிப்பு, சுத்தம், நடிப்பு எல்லாம் சரிதான்! ஆனால் அந்த கனவுக் கன்னி சமாசாரம்...?
கண்ணாம்பாவின் வசன உச்சரிப்பின் திறமை என்னை மிரட்டியிருக்கிறது, உண்மை! வெகுநாட்களுக்கு முன்பு திரைப்படங்களை விரும்பிப் பார்க்கிற பழக்கம் இருந்தது. அந்தக் காலத்து ஜாம்பவான்கள், P U சின்னப்பா, கண்ணாம்பா நடித்த கண்ணகி படத்தைப் பார்க்கப் போயிருந்தேன், போதாத நேரம், அது என்ன என்று நீங்கள் தான் கணித்துச் சொல்ல வேண்டும்!
ஒரு சீனில், கண்ணாம்பா வசனம் பேச ஆரம்பித்தார், கொஞ்சம் நீளமாக இருக்கிறதென்று,வெளியே போய்விட்டு முக்கால் மணி நேரம் கழித்து உள்ளே வந்தால், அந்த சீனில் மூச்சு விடாமல் கண்ணாம்பா இன்னும் வசனம் பேசிக் கொண்டிருந்தார்........பேசிக்கொண்டிருந்தார்..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
..வுடு ஜூட்! தியேட்டரை விட்டு எடுத்த ஓட்டம் வீடு வந்து சேருகிற வரை வேகம் குறையவில்லை!
வசனம் பேசியே........கண்ணாம்பாவைக் கனவுக் கன்னியாக.....?!
உங்களுக்கு நெஞ்சுரம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்!!/////
அழகு அழியக்கூடியது. திறமையை வைத்தும் சிலர் நம் கனவில் வந்து போகக்கூடாதா என்ன நண்பரே?
வாத்தியார் ஐயா,
ReplyDeleteஇந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி.
டூப்ளிகேட் கண்ணாம்பான்னு எங்க அம்மாவைக் கேலி செய்வாங்க எங்க பாட்டி வீட்டுலே.
எங்க அம்மா அச்சு அசல் கண்ணாம்பா மாதிரி இருப்பாங்க.
இதுக்காகவே அவுங்க நடிச்சப் பழைய படங்களை வாங்கி வச்சுருக்கேன், அம்மா நினைவு வரும்போது முகம் பார்க்க.
ஆனால் ஒன்னு எங்க அம்மாவுக்கு அவுங்க மாதிரி அழுத்தம் திருத்தமாத் தமிழ் பேச வராது(-:
என் கனவில் வரமாட்டாங்களான்னு நான் ஏங்கும் கனவுக்கன்னிகள் இவுங்க ரெண்டு பேரும்தான்!
/////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteவாத்தியார் ஐயா,
இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி.
டூப்ளிகேட் கண்ணாம்பான்னு எங்க அம்மாவைக் கேலி செய்வாங்க எங்க பாட்டி வீட்டுலே.
எங்க அம்மா அச்சு அசல் கண்ணாம்பா மாதிரி இருப்பாங்க.
இதுக்காகவே அவுங்க நடிச்சப் பழைய படங்களை வாங்கி வச்சுருக்கேன், அம்மா நினைவு வரும்போது முகம் பார்க்க.
ஆனால் ஒன்னு எங்க அம்மாவுக்கு அவுங்க மாதிரி அழுத்தம் திருத்தமாத் தமிழ் பேச வராது(-:
என் கனவில் வரமாட்டாங்களான்னு நான் ஏங்கும் கனவுக்கன்னிகள் இவுங்க ரெண்டு பேரும்தான்!/////
ஆகா, வாங்க டீச்சர்!
உங்கள் கனவு ஏக்கம் தீர மயிலைக் கற்பகாம்பாளைப் பிரார்த்திக்கிறேன!
பின்னூட்டத்திற்கு நன்றி!