20.3.09

அறிவியலும் அழுக்குள்ள சமுதாயமும்!


அறிவியலும் அழுக்குள்ள சமுதாயமும்!

கனவுகள் கண்டு கண்டு
கண்களும் சலிச்சுப் போச்சு!
தினம் தினம் சபையில் நின்று
தேகமும் அலுத்துப் போச்சு!
உணவினில் ருசி பேதங்கள்
உணர்விலும் மறந்து போச்சு!
இனியென்ன, இளமைக் காலம்
இரூட்டுக்கே பலியாய் ஆச்சு!

++++++
அரசாங்க வேலைக்காரர்
'அரைலட்சம் கொண்டா' என்றார்!
மருத்துவ நிபுணர் வந்து
'மாடிவீ(டு) உண்டா' என்றார்
பொறியியற் பட்டதாரி
புதிய 'கார்' போதுமென்றார்!
அறிவியல் வளர்ந்து என்ன?
அழுக்குள்ள சமுதாயத்தில்!

++++++

ஜாதகம் பொருந்தினாலோ
ஜாதிகள் பொருந்தவில்லை!
ஜாதியில் பொருத்தமென்றால்
சம்மதம் பணத்தில் இல்லை!
தேதிகள் கிழித்தாற் போல
தினசரி கிழிந்தாயிற்று!
வீதியில் ஒளிவெள்ளங்கள்
வீட்டில்தான் வெளிச்சம் இல்லை!
- ஆக்கம்: குமரி அமுதன்

(முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.
-from my hard disc)

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. நல்லதொரு பகிர்வு! அன்பரே!

    ReplyDelete
  2. காலங்கள் கடந்தாலும் காட்சிகள் மாறவில்லை...வரதட்சணையும் குறையவில்லை.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. //அறிவியல் வளர்ந்து என்ன?
    அழுக்குள்ள சமுதாயத்தில்!//

    நச்

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா ,

    இலங்கைப் பிரச்சனையைப் பற்றிய தங்கள் கருத்து ?

    தமிழர் துன்பம் நீங்குமா ? நீங்காதா ?

    சிரிரங்கக்கோயில் கோபுரத்திற்க்கும் , இலங்கை தொடர்பு?

    ReplyDelete
  5. இந்த காலத்திலேயே பெண்களை மட்டமாக என்னுபவர்கள் இருக்கும்போது
    முப்பது,முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பெண்களை என்ன பாடு
    படுத்தி இருப்பார்கள்.

    ReplyDelete
  6. அறிவியல் வளர்ந்து என்ன?
    அழுக்குள்ள சமுதாயத்தில்..

    நல்ல பதிவு!அய்யா!

    ReplyDelete
  7. Dear Sir

    Varikal Atthanayum Nenchai Thodum..

    Nandri Sir

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  8. நமது சமுதாய அவலங்கள் சுருக்கமாக சில வரிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும், மாற்ற வேண்டும், மாற்றம் வேண்டும் என்று நினைத்தால்தான் எதுவும் மாறும். இல்லையேல் இன்னும் 1 நூற்றாண்டு என்ன சில நூற்றாண்டுகள் போனாலும் எதுவும் மாறாது.

    இன்று வேலை பழு காரணமாக பின்னூட்டம் இட தாமதமாகி விட்டது.

    ReplyDelete
  9. வாத்தியாரையா,

    கவிதை அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. /////Blogger ஷீ-நிசி said...
    நல்லதொரு பகிர்வு! அன்பரே!//////

    நன்றி நண்பரே! உங்கள் பெயர் மிகவும் புதுமையாக உள்ளது!

    ReplyDelete
  11. /////Blogger வேலன். said...
    காலங்கள் கடந்தாலும் காட்சிகள் மாறவில்லை...வரதட்சணையும் குறையவில்லை.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    எதுவும் குறையவில்லை. திருமணமாகும் வயது மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது!

    ReplyDelete
  12. /////Blogger புருனோ Bruno said...
    //அறிவியல் வளர்ந்து என்ன?
    அழுக்குள்ள சமுதாயத்தில்!//
    நச்/////

    நன்றி டாக்டர்!

    ReplyDelete
  13. /////Blogger வாய்ப்பாடி குமார் said...
    வணக்கம் அய்யா ,
    இலங்கைப் பிரச்சனையைப் பற்றிய தங்கள் கருத்து ?
    தமிழர் துன்பம் நீங்குமா ? நீங்காதா ?
    சிரிரங்கக்கோயில் கோபுரத்திற்க்கும் , இலங்கை தொடர்பு?

    எனது கருத்திற்கு எங்கே மதிப்பு இருக்கும்? அதனால் சொல்ல விருப்பமில்லை!

    ஸ்ரீரங்கம் கோவிலின் தெற்கு கோபுரத்தை முன் காலத்தில் கட்டாமல் விட்டது பற்றிச்
    சில செய்திகள் உண்டு. அதைக் கட்டிய பிறகு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்
    போது அது உண்மையாக இருக்கும் எனும் எண்ணமும் வருகிறது. அதைப் பதிவில்
    எழுத முடியாது. வீண் சர்ச்சைகளுக்கு ஆளாக நேரிடும். எனக்கு அதற்கெல்லாம்
    நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை (அதாவது சர்ச்சைகளுக்கு!)

    ReplyDelete
  14. //////Blogger sundar said...
    இந்த காலத்திலேயே பெண்களை மட்டமாக எண்ணுபவர்கள் இருக்கும்போது
    முப்பது,முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பெண்களை என்ன பாடு
    படுத்தி இருப்பார்கள்.///////

    இப்போது மகளிர் காவல் நிலையங்கள் வந்து விட்டதால். முன் அளவிற்கு
    இப்போது பெண்களின் பாடுகள் இல்லை! குறைந்துவிட்டன!

    ReplyDelete
  15. ////Blogger Geekay said...
    அறிவியல் வளர்ந்து என்ன?
    அழுக்குள்ள சமுதாயத்தில்..
    நல்ல பதிவு!அய்யா!/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  16. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Varikal Atthanayum Nenchai Thodum..
    Nandri Sir
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  17. /////Blogger ananth said...
    நமது சமுதாய அவலங்கள் சுருக்கமாக சில வரிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும், மாற்ற வேண்டும், மாற்றம் வேண்டும் என்று நினைத்தால்தான் எதுவும் மாறும். இல்லையேல் இன்னும் 1 நூற்றாண்டு என்ன சில நூற்றாண்டுகள் போனாலும் எதுவும் மாறாது.
    இன்று வேலை பழு காரணமாக பின்னூட்டம் இட தாமதமாகி விட்டது.////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. ////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    கவிதை அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.////

    வரிகள் உங்களைக் கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!
    வரிகள் வேறு ஒரு அன்பருடையது. பறிமாறியது மட்டுமே எனது பணி!

    ReplyDelete
  19. அய்யா,
    ஒரு விண்ணப்பம்

    02/03/09 அன்று இரவு 11.20 Pம் பிற ந்த ஒரு ஆண்குழ ந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?

    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன் .

    நன்றி.

    ReplyDelete
  20. ////Blogger வாய்ப்பாடி குமார் said...
    அய்யா,
    ஒரு விண்ணப்பம்
    02/03/09 அன்று இரவு 11.20 Pம் பிறந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?
    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன் .
    நன்றி./////

    ஊரைக் குறிப்பிடவில்லையே நீங்கள்?

    ReplyDelete
  21. முப்பது வருஷத்துக்கு முன்னாடி எழுதின கவிதை இன்னமும் ஞாபகமிருக்கா..?

    அப்ப உங்களோட ஹார்ட் டிஸ்க்கை பாராட்டியே ஆகணும்..

    கொடுத்து வைச்சவர் நீங்க..!

    எல்லாம் முருகன் செயல்தான்..!

    ReplyDelete
  22. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    முப்பது வருஷத்துக்கு முன்னாடி எழுதின கவிதை இன்னமும் ஞாபகமிருக்கா..?
    அப்ப உங்களோட ஹார்ட் டிஸ்க்கை பாராட்டியே ஆகணும்..
    கொடுத்து வைச்சவர் நீங்க..!
    எல்லாம் முருகன் செயல்தான்..!//////

    படித்ததில் பிடித்ததையெல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன். சில குறிப்புக்களாக உள்ளன
    சில கணினியில் உள்ளன!

    ReplyDelete
  23. அய்யா,

    ஒரு விண்ணப்பம்

    02/03/09 அன்று இரவு 11.20 Pm பிற ந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?

    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன் .

    நன்றி.

    ஊரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே? அது முக்கியமில்லையா?


    திருப்பூர் .

    ReplyDelete
  24. //////Blogger வாய்ப்பாடி குமார் said...
    அய்யா,
    ஒரு விண்ணப்பம்
    02/03/09 அன்று இரவு 11.20 Pm பிற ந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?
    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன்
    நன்றி.////
    ///// ஊரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே? அது முக்கியமில்லையா?////
    திருப்பூர் .
    >>>>>>>>>>>>>>>>>>>
    உங்கள் மகன் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ளான்.
    நட்சத்திரத்திற்கு உரிய எழுத்துக்கள்:

    அ, இ, உ, எ ஆகிய 4 எழுத்துக்கள்.

    அந்த எழுத்துக்கள் ஒன்றில் துவங்கும் பெயரை வையுங்கள்.

    அ என்ற எழுத்தில் அண்ணாமலை என்ற பெயர் என்னுடைய சாய்ஸ்!
    மற்றபடி அது உங்கள் விருப்பம்!

    ReplyDelete
  25. நன்றி அய்யா.

    என்னுடைய மகன் அல்ல , என் நண்பரின் மகன்.

    இதை அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன் .

    நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com