21.3.09

கேளேன்டா மாமூ இது indoor gameமு!

கேளேண்டா மாமூ இது indoor gameமு!

காலம் மாறிவிட்டது. காட்சிகளும் மாறிவிட்டன.

முன்பெல்லாம் பெண்களிடம் நாணம் நிறைந்து இருக்கும். இப்போது
பல பெண்களிடம் அது பெருமளவு குறைந்து விட்டது.

நாணமும், நளினமும் பெண்மைக்குரிய முக்கிய அம்சங்கள்!

இதை மகிழ்ச்சியுடன் எழுதவில்லை; வருத்தத்துடன் எழுதுகிறேன்.

எப்படி நீ இதைப் பதிவில் எழுதலாம் என்று சிலர் என்னிடம் சண்டை பிடிக்க
வரக்கூடும். முன் ஜாமீன் மாதிரி அவர்களிடம் இப்போதே முன் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டு விடுகிறேன்.

அய்யா, இந்தப் பதிவை நீங்கள் தவித்திருக்கலாம் என்று சிங்கைக்காரர் வந்து
சொல்வார். அவருக்கும் முன் வருத்தத்தை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்

என் ஆசான் கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.,"உண்மையை எங்கே
வேண்டுமென்றாலும் சொல்லலாம்".

ஆகவே எழுதுவதில் உண்மை இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்

எங்கள் பாட்டி காலத்தில் எல்லாம் முன்பின் தெரியாத ஆடவர்களுடன் பெண்கள்
அறவே பேச மாட்டார்கள்.

வீட்டுக் கதவைத் தட்டினால் கூட, யாரென்று கேட்டுவிட்டுத்தான் திறப்பார்கள்
அப்படித் திறந்தால்கூட, நேருக்கு நேர் எதிரில் நின்று பேச மாட்டார்கள்.
கதவிற்குப் பின் உடம்பை மறைத்துக் கொண்டு, தலையை மட்டும்
நீட்டிப் பேசுவார்கள்

இப்போது அப்படிப்பட்ட காட்சிகளைக் காண முடியாது.

இப்போது போட்டிருக்கும் இரவு உடையுடன் (Nighty) வந்து நின்று பேசுகிறார்கள்.
பால்காரன், பேப்பர்காரன், காய்கறி வண்டிக்காரன், பழைய சாமான் வியாபாரி
என்று யார் எந்த நேரத்தில் வந்தாலும், அதே இரவு உடையுடன் வெளியில் நின்று
பேசுவதற்குத் தயங்குவதில்லை. எதிரில் உட்கார்ந்து பேரம் பேசுவதற்குத் தயங்குவதில்லை.

சிலர் தங்கள் குழந்தைகளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றிவிடுவதற்குக் கூட அதே
நைட்டியுடன் பஸ் நிறுத்தம் வரை வந்து திரும்புவார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம். யாராவது மிகவும் தெரிந்தவர்கள் வந்து விட்டால் மட்டும்
ஓடிச் சென்று ஒரு துண்டை எடுத்து, மார்பின் குறுக்கே மறைக்கும்படி தோள்களின்
மீது போட்டுக் கொள்வார்கள்.

பால்காரனுக்கும், பழைய சாமான் வியாபாரிக்கும் கிடைக்கும் தரிசனம், தெரிந்த
ஆசாமிக்குக் கிடைக்காது:-)))))

என்ன புதுக் கலாச்சாரமோ அல்லது வளர்ந்து வரும் பண்பாடோ?

இன்றைய கலாச்சாரத்தைக் கொடிப்பிடித்துக் காட்டும் திரைப்படப் பாடல் ஒன்றைக்
கீழே கொடுத்துள்ளேன். பண்பலைகளில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்.

நாயகி:
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா

ஏய் கேளேன்டா மாமூ இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

நாயகன்:
ஏ அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

நாயகன்:
ஏய் அழகான சின்ன பாப்பு ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு

டாடி மம்மி.. ட..டா..டி மம்மீ..
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

படம் : வில்லு

பாடலின் அர்த்தத்தை அல்லது அனர்த்தத்தைப் பதிவில் எழுத முடியாது.
இரண்டு அல்லது மூன்று தடவைகள் படித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் எல்லோரும் ஆட்டுக்கல், அம்மி என்று உணவுபொருட்களை
அரைப்பதற்குப் பயன் படுத்துவார்கள். இனி அவைகளையெல்லாம் மியூஸியத்தில்தான்
பார்க்கவேண்டும்.

Wet Grinder, Mixie என்று எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது.

ஆட்டுகல்லில் கல் அப்படியே (fixedஆக) இருக்கும். குழவியைச் சுற்றுவோம்
வெட் கிரைண்டரில் குழவி அப்படியே இருக்கும். கல் பகுதி சுற்றும்.
எல்லாம் உல்டா!
-------------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் மண்டபம் எல்லாம் கிடையாது. திருமணங்களை வீட்டிலேயே
செய்வார்கள். வீடு சிறியதாக உள்ளவர்கள் கோவில் மண்டபங்களில் செய்வார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாத் திருமணங்களும் திருமண மண்டபங்களில்

அதனால் சில கலகலப்பான நிகழ்வுகள் நின்றுபோய்விட்டன.

வீடுகளில் செய்யும் காலங்களில், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்று
நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலங்கள் இருக்கும்.

இப்போது அதெல்லாம் இல்லை!
---------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊர்வலங்களில் முன்னால் செல்லும் நாதஸ்வரக் கோஷ்டி, ஊர்வலத்தில்
வருபவர்களை அனுசரித்துக் கொண்டு செல்வதற்காக இடையிடையே சற்று நின்று
செல்வார்கள்.

அதுபோல கிரகங்களும் மற்ற கிரகங்களை அனுசரித்துச் செல்ல வக்கிரத்தைக் கடைப்
பிடிக்கும். அதைத்தான் வக்கிரகதி என்பார்கள். ஆங்கிலத்தில் retrogation என்பார்கள்

வக்கிரம் என்றால் என்ன?

வக்கிரம் என்பது ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி
முதலியவை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி
முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை அல்லது மாறுப்பட்ட அல்லது
வேறுபட்ட நிலை!

அதேபோல ஒரு கிரகத்தின் வக்கிர நிலை என்பது மாறுபட்ட நிலை

செவ்வாய், புதன்,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் எப்போதும் 90 பாகைக்குள்ளாகவே
(90 degrees) இருக்கும். இதை நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் தெரியும்.

ஒன்றை ஒன்று இந்த அளவை விட்டுத் தாண்டிச் செல்லாது. தாண்டிச் செல்லும்
நிலையில் இந்த வக்கிரகதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

யாராக இருந்தாலும் இந்த மூன்று கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களில்,
அதாவது 90 பாகைக்குள் மட்டுமே இருக்கும். அப்படியில்லையென்றால்
ஜாதகம் தவறு!
----------------------------------------------------------------------------------------------------
வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம். சுபக்கிரகம்
வக்கிரகதியில் இருந்தால் பலன்கள் கிடைப்பது தாமதமாகும்.

7ற்கு உரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதமாகும்
10ற்குரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் வேலை கிடைப்பது அல்லது
கிடைத்த வேலையில் உயர்வு எல்லாம் தாமதப்படும்.

Planets like mars, jupitor, venus ,saturn retrogrates for certain time,
you can refer this in panchang , the dates and time will be given in particular
year when the planetrs go in retrogation and they will come to their original
place, this is called vakra gathi and vakra nivarthi

Retrograde motion is when an object (typically a planet) appears
to go backward in its orbit.

Basically, all the planets of the solar system turn around their axes
clockwise, except for Venus which goes counter - clockwise.

Retrograde motion is motion in the opposite direction.
(Counter-clockwise so to speak).

Retrogration of planets:
Mars retrogrades for 72 days every 25.6 months.
Jupiter for 121 days every 13.1 months.
Saturn for 138 days every 12.4 months.
Uranus for 151 days every 12.15 months and
Neptune for 158 days every 12.07 months.

Retrograde motion simply means that a planet ONLY appears to be moving
backwards in its orbit. This is only because planets orbit the sun
at different speeds.

More info about retograde motion in Wikipedia:

http://en.wikipedia.org/wiki/Retrograde_motion
-----------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

72 comments:

  1. திரைப்பட வக்ரங்களுடன் கிரக வக்ரங்களை விவரித்ததற்கு நன்றி

    ReplyDelete
  2. /////Blogger Sai said...
    திரைப்பட வக்ரங்களுடன் கிரக வக்ரங்களை விவரித்ததற்கு நன்றி///

    கிரக வக்கிரத்திற்கு நிவர்த்தி உண்டு! திரை வக்கிரங்களுக்கு நிவர்த்தி இல்லையே!

    ReplyDelete
  3. வக்கிர நிவர்த்தி என்பது என்ன ??? இந்த வக்கிர புத்தி காரர்களின் படங்களை பார்ப்பதை தவிர்பதா?

    ReplyDelete
  4. ஆஹா.. அசத்தல் முன்னுரை வாத்தியாரே..!

    இந்த வக்கிரக் கதி என்பதற்கு கிரகங்களின் நிலை என்ன மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்..?

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    நல்லவேளை என் ஜாதகத்தில் எந்த கிரகமும் வக்கிர கதியில் இல்லை.

    ReplyDelete
  6. /////Blogger பரமார்த்த குரு said...
    வக்கிர நிவர்த்தி என்பது என்ன ??? இந்த வக்கிர புத்திகாரர்களின் படங்களை பார்ப்பதை தவிர்பதா?////

    கிரக வக்கிரத்திற்கு நிவர்த்தி உண்டு! திரை வக்கிரங்களுக்கு நிவர்த்தி இல்லை!

    மனதில் வக்கிரம் இருந்தால் அதற்கு நிவர்த்தி இல்லை.
    எங்காவது செமத்தியாக அடிவாங்கினால் மட்டும் உண்டு!:-))))

    ReplyDelete
  7. ///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஹா.. அசத்தல் முன்னுரை வாத்தியாரே..!
    இந்த வக்கிரக் கதி என்பதற்கு கிரகங்களின் நிலை என்ன மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்..?/////

    ஜாதகத்தில் கிரகங்களுக்குப் பக்கத்தில் (வ) அல்லது (R) என்று போட்டிருக்கும். அதுதான் அடையாளம்
    இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களுக்கு மேல் வக்கிரமாக இருந்தால் ஆசாமி கிரிமினலாக இருப்பான்!

    ReplyDelete
  8. ////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    நல்லவேளை என் ஜாதகத்தில் எந்த கிரகமும் வக்கிர கதியில் இல்லை////

    பெயரும் ஜாதகமும் சுந்தரமாக இருக்கிறது!:-))))

    ReplyDelete
  9. Hi Sir,

    What will be the prediction, if 3rd lord retrograde in 3rd house from lagna (Thulam Lagna)

    Regards
    Vinodh.K

    ReplyDelete
  10. ஹலோ சார்,

    அது எப்படி இந்த பாட்டை மனனம் செய்து பின்னாடி எழுதினீங்களா?
    இந்த மாதிரி பாட்டையெல்லாம் கேக்கிற யூத்தும் இல்ல நான், அதுக்காக வருத்தப்படறது இல்லை நான்.

    சரி எனக்கு 4ல் சனி வக்கிரமாகிட்டாரே, எனக்கு என்ன அர்த்தம்னும் புரியலையே?கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  11. வக்கிரம் மனத்தில் வைத்து எழுதும் பாடல்களைப் பார்க்காமல் கேட்காமல் இருக்கப் பழகிக் கொள்ளலாம் சார். வேறு என்ன செய்ய. உலகமே இந்தக் கதியில் தான் சுழலுகிறது என்பதை நான் புரிந்து கொள்ள நேரமாகிறது.

    இதைக் குழந்தை ஒன்று ஆடுவதை, நல்ல வேளை அந்த நிகழ்ச்சியின் விருந்தினர் ஒருவர்,''பாப்பா நீ இதெல்லாம் ஆடக் கூடாதும்மா''ன்னு அருள்வாக்கு கொடுத்தார்.:(
    உண்மையாவே இதுதான் கலியோ!!

    ReplyDelete
  12. Dear Sir

    Nice to start with cinema and end with Subject. Excellent Explanation about Social Awarness and Retrogation.
    Thanks Sir.

    Ennudaya Jadhagathil No - Retrogation and No combust.

    What about Kadaga lagnam 2il Shani Vakkiram(Retrogation)..What about his Studies and What about his marriage life?.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  13. பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே (நன்னூல் 462)

    - இது புதுசு இல்லை பழசு, இதையும் அந்தகாலத்திலேயே சொல்லிட்டாங்க.

    - மாற்றம் என்பது மானிட தத்துவம்.

    :))))))))))

    பழசெல்லாம் மாறாமல் இருக்கனும் என்று நினைப்பது தன் சட்டையைத்தான் மகனும் போடனும் என்று ஒரு அப்பா நினைப்பதற்கு ஒப்பானது

    ReplyDelete
  14. பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் குணங்கள்(அச்சம்,மடம்,நாணம்)பெண் இனத்திடம் குறைந்து வருவது வருந்த தக்கதே!

    ReplyDelete
  15. கோவி.கண்ணன் said...
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே (நன்னூல் 462)

    - இது புதுசு இல்லை பழசு, இதையும் அந்தகாலத்திலேயே சொல்லிட்டாங்க.

    - மாற்றம் என்பது மானிட தத்துவம்.

    :))))))))))

    பழசெல்லாம் மாறாமல் இருக்கனும் என்று நினைப்பது தன் சட்டையைத்தான் மகனும் போடனும் என்று ஒரு அப்பா நினைப்பதற்கு ஒப்பானது//

    தன் ஜட்டியைத் தான் மகனும் போடனும்னு
    அப்பா நினைத்தால் தான் தப்பு.

    ReplyDelete
  16. அய்யா,

    ஒரு விண்ணப்பம்

    02/03/09 அன்று இரவு 11.20 Pm பிற ந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?

    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன் .

    நன்றி.

    ReplyDelete
  17. Sir,

    You told Mercury, Venus and Mars will be within 90 Deg. In my horoscope its within 90 Deg. But In my daughters horoscope it is not within 90 Deg. 1st - Mercury, 3rd Venus and 6th Mars. Is it wrong?
    DOB: 17/12/2005; 4:22AM; Pondicherry.

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா
    கண்டிப்பாக நீங்கள் சொல்வது பாரிய வருத்தற்குரிய விஷயம் தான்.கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லிஇருப்பார் 'இது நைட்டியா அல்லது டே அண்டு நைட்டா '.மேல் நாட்டு கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாமல்
    காப்பியடிப்பத்தின் விளைவு இதெல்லாம்.
    படத்தை முன்னாலேயே ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  19. //தன் ஜட்டியைத் தான் மகனும் போடனும்னு
    அப்பா நினைத்தால் தான் தப்பு.//

    அந்த காலத்து அப்பாக்கள் 'லங்கோடு' தான். பசங்க அப்படி இல்லை, அதனால் தான் சொன்னேன் சட்டை என்று

    ReplyDelete
  20. நோ கண்ட்ஸ் வாத்தியார் ஐயா... :)))) தலைப்பை பார்த்து ஓடோடி வந்தேன் :)

    ReplyDelete
  21. அசத்தல் முன்னுரை !

    Present Sir.

    ReplyDelete
  22. கோவி.கண்ணன் said...
    //தன் ஜட்டியைத் தான் மகனும் போடனும்னு
    அப்பா நினைத்தால் தான் தப்பு.//

    அந்த காலத்து அப்பாக்கள் 'லங்கோடு' தான். பசங்க அப்படி இல்லை, அதனால் தான் சொன்னேன் சட்டை என்று//

    புரிந்து கொண்டேன்.
    நன்றி திரு கோவிகண்ணன்

    ReplyDelete
  23. அய்யா, அருமையான பதிவு.

    //வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம்.//

    என்று நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்.

    என் ஜாதகத்தில் புதன் வக்கிரகதி. எனினும் http://www.janspiller.com/101_mercuryretrogradebirth.php இந்த வலை தளத்தில், அதுவும் ஒரு நன்மையே என கூற விழைந்திருக்கிரார்கள்.

    ஆகவே, நமது வகுப்பரை மானவர்கள் "பீதி" அடயவேண்டாம் என கேட்டுக்கொள்கிரேன். :)

    ReplyDelete
  24. ஐயா,
    ராகுவும்,கேதுவும்,எப்பொழுதும்வக்கிரகதியிலாஇருப்பார்கள்?

    ReplyDelete
  25. ///////Blogger Vinodh said...
    Hi Sir,
    What will be the prediction, if 3rd lord retrograde in 3rd house from lagna (Thulam Lagna)
    Regards
    Vinodh.K///////

    துலா லக்கினத்திற்கு 3 & 6ஆம் வீடுகளுக்கு உரியவர் குரு. குரு வக்கிரகதியில் உள்ளார் என்றால். அவரால் கிடைக்கக்கூடிய பலன்கள் தாமதப்படும். கிடைக்கும். தாமதப்பட்டாலும் கிடைக்கும்

    ReplyDelete
  26. ////Blogger sumathi said...
    ஹலோ சார்,
    அது எப்படி இந்த பாட்டை மனனம் செய்து பின்னாடி எழுதினீங்களா?
    இந்த மாதிரி பாட்டையெல்லாம் கேக்கிற யூத்தும் இல்ல நான், அதுக்காக வருத்தப்படறது இல்லை நான்.
    சரி எனக்கு 4ல் சனி வக்கிரமாகிட்டாரே, எனக்கு என்ன அர்த்தம்னும் புரியலையே?கொஞ்சம் சொல்லுங்களேன்./////

    இதியெல்லாம் மனனம் செய்ய முடியுமா? செய்து என்ன பலன் சகோதரி?
    பண்பலையில் 2 முறைகள் கேட்டேன். பாடல் வரிகள் இணையத்தில் கிடைத்தன. பிரதி எடுத்து ஒட்டினேன்.

    ReplyDelete
  27. ////Blogger வல்லிசிம்ஹன் said...
    வக்கிரம் மனத்தில் வைத்து எழுதும் பாடல்களைப் பார்க்காமல் கேட்காமல் இருக்கப் பழகிக் கொள்ளலாம் சார். வேறு என்ன செய்ய. உலகமே இந்தக் கதியில் தான் சுழலுகிறது என்பதை நான் புரிந்து கொள்ள நேரமாகிறது.
    இதைக் குழந்தை ஒன்று ஆடுவதை, நல்ல வேளை அந்த நிகழ்ச்சியின் விருந்தினர் ஒருவர்,''பாப்பா நீ இதெல்லாம் ஆடக் கூடாதும்மா''ன்னு அருள்வாக்கு கொடுத்தார்.:(
    உண்மையாவே இதுதான் கலியோ!!//////

    ஆமாம் சகோதரி, கலி முற்றிக் கொண்டிருக்கிறது! இன்னும் போகப்போக மோசமாக இருக்கும்!

    ReplyDelete
  28. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice to start with cinema and end with Subject. Excellent Explanation about Social Awarness and Retrogation.
    Thanks Sir.
    Ennudaya Jadhagathil No - Retrogation and No combust.
    What about Kadaga lagnam 2il Shani Vakkiram(Retrogation)..What about his Studies and What about his marriage life?.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    கல்வியையும், திருமணத்தையும் ஆராய்ந்து பார்க்க தலா பத்து வழிமுறைகள் உள்ளன. ஒரே கேள்வியில் இரண்டு பந்தை வீசியிருக்கிறீர்களே. பின்னூட்டத்தில் எப்படிப் பதில் எழுத முடியும்?

    ReplyDelete
  29. /////Blogger கோவி.கண்ணன் said...
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே (நன்னூல் 462)
    - இது புதுசு இல்லை பழசு, இதையும் அந்தகாலத்திலேயே சொல்லிட்டாங்க.
    - மாற்றம் என்பது மானிட தத்துவம்.
    :))))))))))
    பழசெல்லாம் மாறாமல் இருக்கனும் என்று நினைப்பது தன் சட்டையைத்தான் மகனும் போடனும் என்று ஒரு அப்பா நினைப்பதற்கு ஒப்பானது////////

    இந்தக் காலத்து இளைஞன் அப்பனைப் போடாமல் இருந்தால் போதாதா கோவியாரே?
    போடுதல் = போட்டுத்தாக்குதல்:-)))))

    ReplyDelete
  30. /////Blogger N.K.S.Anandhan. said...
    பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் குணங்கள்(அச்சம்,மடம்,நாணம்)பெண் இனத்திடம் குறைந்து வருவது வருந்த தக்கதே!/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. Blogger மாண்புமிகு பொதுஜனம் said...
    கோவி.கண்ணன் said...
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே (நன்னூல் 462)
    - இது புதுசு இல்லை பழசு, இதையும் அந்தகாலத்திலேயே சொல்லிட்டாங்க.
    - மாற்றம் என்பது மானிட தத்துவம்.
    :))))))))))
    பழசெல்லாம் மாறாமல் இருக்கனும் என்று நினைப்பது தன் சட்டையைத்தான் மகனும் போடனும் என்று ஒரு அப்பா நினைப்பதற்கு ஒப்பானது//
    தன் ஜட்டியைத் தான் மகனும் போடனும்னு
    அப்பா நினைத்தால் தான் தப்பு.///////

    ஆமாம், பொதுவாக வயதான அப்பாக்கள் தங்களுடைய மூளையைப் பயன் படுத்துவதே தப்பு!:-))))))

    ReplyDelete
  32. Blogger வாய்ப்பாடி குமார் said...
    அய்யா,
    ஒரு விண்ணப்பம்
    02/03/09 அன்று இரவு 11.20 Pm பிற ந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?
    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன் .
    நன்றி.//////

    ஊரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே? அது முக்கியமில்லையா?

    ReplyDelete
  33. /////Blogger Senthil Murugan said...
    Sir,
    You told Mercury, Venus and Mars will be within 90 Deg. In my horoscope its within 90 Deg. But In my daughters horoscope it is not within 90 Deg. 1st - Mercury, 3rd Venus and 6th Mars. Is it wrong?
    DOB: 17/12/2005; 4:22AM; Pondicherry./////

    உங்கள் பெண்னின் ஜாதகம் சரிதான்! கவலை வேண்டாம். செவ்வாய்க்கு சில இடங்களில் விதிவிலக்கு உண்டு. அது எதனால் என்பதை படத்துடன் தனிப்பதிவாக எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  34. /////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    கண்டிப்பாக நீங்கள் சொல்வது பாரிய வருத்தற்குரிய விஷயம் தான்.கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லிஇருப்பார் 'இது நைட்டியா அல்லது டே அண்டு நைட்டா '.மேல் நாட்டு கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாமல்
    காப்பியடிப்பத்தின் விளைவு இதெல்லாம்.
    படத்தை முன்னாலேயே ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே
    நன்றி
    கணேசன்//////

    நன்றி கணேசன்!

    ReplyDelete
  35. ///////Blogger கோவி.கண்ணன் said...
    //தன் ஜட்டியைத் தான் மகனும் போடனும்னு
    அப்பா நினைத்தால் தான் தப்பு.//
    அந்த காலத்து அப்பாக்கள் 'லங்கோடு' தான். பசங்க அப்படி இல்லை, அதனால் தான் சொன்னேன் சட்டை என்று//////

    லங்கோட்டிற்கு மேலாக வேட்டி அல்லது லுங்கி உண்டா, இல்லையா?:-)))))

    ReplyDelete
  36. ////Blogger VIKNESHWARAN said..
    நோ கண்ட்ஸ் வாத்தியார் ஐயா... :)))) தலைப்பை பார்த்து ஓடோடி வந்தேன் :)//////

    உங்களை வரவழைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படித்தலைப்பு!:-)))

    ReplyDelete
  37. //////Blogger Geekay said...
    அசத்தல் முன்னுரை! //////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  38. ////Blogger மாண்புமிகு பொதுஜனம் said..
    கோவி.கண்ணன் said...
    //தன் ஜட்டியைத் தான் மகனும் போடனும்னு
    அப்பா நினைத்தால் தான் தப்பு.//
    அந்த காலத்து அப்பாக்கள் 'லங்கோடு' தான். பசங்க அப்படி இல்லை, அதனால் தான் சொன்னேன் சட்டை என்று//
    புரிந்து கொண்டேன்.
    நன்றி திரு கோவிகண்ணன்/////

    வம்பு எதற்கு? நீங்கள் செய்ததுதான் சரி!:-)))

    ReplyDelete
  39. /////Blogger மென் தமிழன் said...
    அய்யா, அருமையான பதிவு.
    //வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம்.//
    என்று நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
    என் ஜாதகத்தில் புதன் வக்கிரகதி. எனினும் http://www.janspiller.com/101_mercuryretrogradebirth.php இந்த வலை தளத்தில், அதுவும் ஒரு நன்மையே என கூற விழைந்திருக்கிரார்கள்.
    ஆகவே, நமது வகுப்பரை மானவர்கள் "பீதி" அடயவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். :)/////

    எதற்காக பீதி? எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் இருக்கிறாரே! அதுதானே நமது முதல் பாடம்!

    ReplyDelete
  40. Blogger vino, canada said...
    ஐயா,
    ராகுவும்,கேதுவும்,எப்பொழுதும்வக்கிரகதியிலாஇருப்பார்கள்?////

    ஆமாம்! அவர்கள் சுற்றுவது கடிகாரத்தின் எதிர் சுற்றில்!

    ReplyDelete
  41. There are diffent views about Retrograde. Some astrologers think retrograde reduces bad effect of evil planets. Can you please give your experience.

    ReplyDelete
  42. நமது சென்சார்போர்ட் என்ன செய்கிறது என்று தெரியவில்லை...
    பாடல்களில் ஆபாசம் அளவுக்கு அதிகமாகஉள்ளது.இந்த பாடலின் ஆசிரியர் மகனோ - மகளோ வீட்டில் யாரும் இல்லாதபோது விளையாட விடுவாரா?
    காலம் கடந்து பிறந்ததற்காக வருத்தப்படுகின்றேன்.இன்னும் 30 வருடங்கள் முன் பிறந்திருந்தால் இந்த கன்றாவியெல்லாம் பார்க்கும்-கேட்கும்
    அவசியம் இருந்திருக்காது.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  43. My horoscope Guru is 3 & 12 athibathi.. Guru in retrograded in 7th place. I got the brother my 18th year age.. so I think Guru delay my 3rd place palan. Am i correct?

    ReplyDelete
  44. Blogger krish said...
    There are diffent views about Retrograde. Some astrologers think retrograde reduces bad effect of evil planets. Can you please give your experience.////

    Correct,retrogation reduces bad effect of evil planets. Like that retrogation also will reduces the effect of good planets

    ReplyDelete
  45. //////Blogger வேலன். said...
    நமது சென்சார்போர்ட் என்ன செய்கிறது என்று தெரியவில்லை...
    பாடல்களில் ஆபாசம் அளவுக்கு அதிகமாகஉள்ளது.இந்த பாடலின் ஆசிரியர் மகனோ - மகளோ வீட்டில் யாரும் இல்லாதபோது விளையாட விடுவாரா?
    காலம் கடந்து பிறந்ததற்காக வருத்தப்படுகின்றேன்.இன்னும் 30 வருடங்கள் முன் பிறந்திருந்தால் இந்த கன்றாவியெல்லாம் பார்க்கும்-கேட்கும்
    அவசியம் இருந்திருக்காது.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேலன்!

    ReplyDelete
  46. //////Blogger VA P RAJAGOPAL said...
    My horoscope Guru is 3 & 12 athibathi.. Guru in retrograded in 7th place. I got the brother my 18th year age.. so I think Guru delay my 3rd place palan. Am i correct?//////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி கோபால்!

    ReplyDelete
  47. //ஆட்டுகல்லில் கல் அப்படியே (fixedஆக) இருக்கும். குழவியைச் சுற்றுவோம்
    வெட் கிரைண்டரில் குழவி அப்படியே இருக்கும். கல் பகுதி சுற்றும்.
    எல்லாம் உல்டா!//

    இதை விட யாராவது வக்கிரத்தையும் காலத்தின் கோலத்தையும் சூசகமாகச் சொல்லமுடியுமா ,அருமை வாத்தியாரே.

    ReplyDelete
  48. sir, i think rahu and kethu also go around in the anti clockwise direction only

    ReplyDelete
  49. /////Blogger KS said...
    //ஆட்டுகல்லில் கல் அப்படியே (fixedஆக) இருக்கும். குழவியைச் சுற்றுவோம்
    வெட் கிரைண்டரில் குழவி அப்படியே இருக்கும். கல் பகுதி சுற்றும்.
    எல்லாம் உல்டா!//
    இதை விட யாராவது வக்கிரத்தையும் காலத்தின் கோலத்தையும் சூசகமாகச் சொல்லமுடியுமா ,அருமை வாத்தியாரே./////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. ////Blogger Mohan said...
    Nice post..thanks Sir
    Mohan//////

    நன்றி மோகன்!

    ReplyDelete
  51. //////Blogger RamKumar said...
    sir, i think rahu and kethu also go around in the anti clockwise direction only/////

    ராகுவும் கேதுவும் எப்பொதுமே பின்பக்க சுழற்சிதான்! (anti clockwise)

    ReplyDelete
  52. my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.
    1st house bhuthan,rahu
    2nd house sun,mars,
    4th moon,
    7th kethu,
    8th sani,
    10th guru,
    12th venus,

    ReplyDelete
  53. my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.
    1st house bhuthan,rahu
    2nd house sun,mars,
    4th moon,
    7th kethu,
    8th sani,
    10th guru,
    12th venus,

    ReplyDelete
  54. my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.

    mesham lagana

    1st house bhuthan,rahu
    2nd house sun,mars,
    4th moon,
    7th kethu,
    8th sani,
    10th guru,
    12th venus,

    ReplyDelete
  55. அய்யா,

    ஒரு விண்ணப்பம்

    02/03/09 அன்று இரவு 11.20 Pm பிற ந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?

    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன் .

    நன்றி.

    ஊரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே? அது முக்கியமில்லையா?


    திருப்பூர் .

    ReplyDelete
  56. ///////Blogger anandanm said...
    my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.
    mesham lagana
    1st house bhuthan,rahu
    2nd house sun,mars,
    4th moon,
    7th kethu,
    8th sani,
    10th guru,
    12th venus,//////

    என்ன ராசா தெரிய வேண்டும்?
    உன்னுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மூன்றையும் எழுதி உடன் ஒரு கேள்வியையும் கேள் ராசா!
    மின்னஞ்சலில் கேள். பதில் தருகிறேன். என் மின்னஞ்சல் முகவரி பதிவின் தலைப்பகுதில் உள்ளது

    ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக 'என் எதிர் காலம் எப்படி இருக்கும்? 'என்று மிகப் பெரிய கேள்வியாகக் கேட்காதே கண்ணா!
    எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதுபோன்ற சின்னக் கேள்வியாக கேள் ராசா!

    ReplyDelete
  57. //////Blogger வாய்ப்பாடி குமார் said...
    அய்யா,
    ஒரு விண்ணப்பம்
    02/03/09 அன்று இரவு 11.20 Pm பிற ந்த ஒரு ஆண்குழந்தைக்கு என்ன பெயர்
    வைக்கலாம் ?
    இக்கேள்விக்கு பதில் கொடுத்தால் அனைவரும் இதே போன்று கேட்பார்கள் என்று
    நினைத்தீர்கள் என்றால் எழுத்தைக் குறிப்பிட வேண்டுகிறேன்
    நன்றி.////
    ///// ஊரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே? அது முக்கியமில்லையா?////
    திருப்பூர் .
    >>>>>>>>>>>>>>>>>>>
    உங்கள் மகன் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ளான்.
    நட்சத்திரத்திற்கு உரிய எழுத்துக்கள்:

    அ, இ, உ, எ ஆகிய 4 எழுத்துக்கள்.

    அந்த எழுத்துக்கள் ஒன்றில் துவங்கும் பெயரை வையுங்கள்.

    அ என்ற எழுத்தில் அண்ணாமலை என்ற பெயர் என்னுடைய சாய்ஸ்!
    மற்றபடி அது உங்கள் விருப்பம்!

    ReplyDelete
  58. Madhippirkkuriya Iyya,

    Vakra gathi patriya paadam mikka arumai.Nangu purindhathu.
    Podhuvaaga , Mithuna lagna thirku,kataka sani vakram petrirundhaal paabha palangal kuraindhu,subha palangal kidaikkuma? avvidham irukkum podhu,suryan,sevvai, guruvin paarvai petraal palangal evvaru irukkum?

    anbu manavan.

    ReplyDelete
  59. நன்றி அய்யா.

    என்னுடைய மகன் அல்ல , என் நண்பரின் மகன்.

    இதை அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன் .

    நன்றி.

    ReplyDelete
  60. /////Blogger kandhiah said...
    Madhippirkkuriya Iyya,
    Vakra gathi patriya paadam mikka arumai.Nangu purindhathu.
    Podhuvaaga , Mithuna lagna thirku,kataka sani vakram petrirundhaal paabha palangal kuraindhu,subha palangal kidaikkuma? avvidham irukkum podhu,suryan,sevvai, guruvin paarvai petraal palangal evvaru irukkum?
    anbu manavan.//////

    மிதுன லக்கினத்திற்கு சனி பாக்கிய ஸ்தான (9th lord) அதிபதி. அவன் வக்கிரம் பெறுவது கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் தாமதப்பட்டுக் கிடைக்கும்!

    ReplyDelete
  61. /////Blogger வாய்ப்பாடி குமார் said...
    நன்றி அய்யா.
    என்னுடைய மகன் அல்ல , என் நண்பரின் மகன்.
    இதை அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன் .
    நன்றி.//////

    தெரிவித்ததற்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. அய்யா

    எனக்கு துலா லக்கினம் யோக காரகன் சனிஸ்வரர் 11ல வக்கிரம் பெறறு சிம்மத்தில் அமர்ந்துள்ளார் ,சிம்மம்(31 பரல்கள்) ,மகரம்(27 பரல்கள்) சனிஸ்வரர் (சிம்மம் -3 பரல்கள்,மகரம்-3 பரல்கள்) அவர் சூரியனுடன் பரிவர்த்தனமும் பெற்றுள்ளார், எனக்கு புத்திர ஸ்தானாதிபதியும் அவரே, இங்கிருந்து புத்திர ஸ்தானத்தை பார்கிறார், அவர் வக்கிரம் அடைந்தால் முழுப் பலன் கிடைக்குமா?

    அதே போல் ராகு 11ல் இருந்தால் தன்புதர ப்ராப்தி என்று குடும்ப ஜோதிட புத்தகத்தில் படித்துள்ளேன்,இன்று வரை குழந்தை இல்லை என்க்கு 11ம் வீடு சிம்மம். இப்போது பலன் எப்ப்டி இருக்கும்.



    இன்னும் ஒரே ஒரு கேள்வி, ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரம் அடைவத்ற்க்கும், நீசமாகி வக்கிரம் அடைவத்ற்க்கும் என்ன வித்தியாசம் (பலன் கொடுக்கும் வகையில்)

    ReplyDelete
  64. Blogger Slakshmanan said...
    அய்யா
    எனக்கு துலா லக்கினம் யோக காரகன் சனிஸ்வரர் 11ல வக்கிரம் பெறறு சிம்மத்தில் அமர்ந்துள்ளார் ,சிம்மம்(31 பரல்கள்) ,மகரம்(27 பரல்கள்) சனிஸ்வரர் (சிம்மம் -3 பரல்கள்,மகரம்-3 பரல்கள்) அவர் சூரியனுடன் பரிவர்த்தனமும் பெற்றுள்ளார், எனக்கு புத்திர ஸ்தானாதிபதியும் அவரே, இங்கிருந்து புத்திர ஸ்தானத்தை பார்கிறார், அவர் வக்கிரம் அடைந்தால் முழுப் பலன் கிடைக்குமா?//////

    வக்கிரம் அடைந்தால் தாமதம் ஆகும்!
    ==================================
    அதே போல் ராகு 11ல் இருந்தால் தன்புதர ப்ராப்தி என்று குடும்ப ஜோதிட புத்தகத்தில் படித்துள்ளேன்,இன்று வரை குழந்தை இல்லை என்க்கு 11ம் வீடு சிம்மம். இப்போது பலன் எப்ப்டி இருக்கும்.//////

    புத்திர பாக்கியத்திற்கு கணவன் & மனைவி இருவரது ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, புத்திரகாரகன் குரு அமர்ந்துள்ள வீடுகளின் பரல்களைப் பார்க்க வேண்டும்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இன்னும் ஒரே ஒரு கேள்வி, ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரம் அடைவத்ற்க்கும், நீசமாகி வக்கிரம் அடைவத்ற்க்கும் என்ன வித்தியாசம் (பலன் கொடுக்கும் வகையில்)

    வக்கிரம் அடைந்தால் பலன்கள் தாமதமாகும்!
    --------------------------------------------------------------------

    ReplyDelete
  65. Dear Sir,

    I am new visitor to this and I have noticed that you are doing great things here. Thanks.

    I have concern in some points, it will helpful if we can get clarification on this…

    You have mentioned if 4th lord sited in 3rd house, there will be some unfavorable since 3rd house is 12th house for 4.
    In same manner, if 4th lord sited in 8/12 there should be some favorable things right? (4, 8, 12 are Tirikona rasigal from 4th house)

    Senthilvel MK

    ReplyDelete
  66. ayya enakku sani 3 la ayur povathil vakkiram adaikirar. mosathil neesamaka ullar. kumba lakinam so lakinathibathi avarthan.

    ithu ethavathu pinvilavukalai erpaduthuma?

    ReplyDelete
  67. ayya nan enn pirantha details tharukiran enn jathagam parunkal niraiya achariayamana visayangal athil ullana.
    name : sudhakar (sudarsanan)
    place:Dharapuram
    time :7.55pm.
    date :23.08.1968.thamil avani 11
    year :kilaga varusam.
    natshiram:magam
    rasi:simmam.
    thesai iruppu: kethu

    ReplyDelete
  68. ////Blogger aks said...
    Dear Sir,
    I am new visitor to this and I have noticed that you are doing great things here. Thanks.
    I have concern in some points, it will helpful if we can get clarification on this…
    You have mentioned if 4th lord sited in 3rd house, there will be some unfavorable since 3rd house is 12th house for 4.
    In same manner, if 4th lord sited in 8/12 there should be some favorable things right? (4, 8, 12 are Tirikona rasigal from 4th house)
    Senthilvel MK////

    How can I analyse a personal horoscope in a open place and give reply. Please come to me through email

    ReplyDelete
  69. Blogger IMSAI ILAVARASAN said...
    ayya enakku sani 3 la ayur povathil vakkiram adaikirar. mosathil neesamaka ullar. kumba lakinam so lakinathibathi avarthan.
    ithu ethavathu pinvilavukalai erpaduthuma?//////

    Particulars are insufficient for giving any answer!

    ReplyDelete
  70. Blogger IMSAI ILAVARASAN said...
    ayya nan enn pirantha details tharukiran enn jathagam parunkal niraiya achariayamana visayangal athil ullana.
    name : sudhakar (sudarsanan)
    place:Dharapuram
    time :7.55pm.
    date :23.08.1968.thamil avani 11
    year :kilaga varusam.
    natshiram:magam
    rasi:simmam.

    Hallo Imsai...........! How can I analyse a personal horoscope in a open place and give reply. Please come to me through email.

    ReplyDelete
  71. செவ்வாய், புதன்,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் எப்போதும் 90 பாகைக்குள்ளாகவே
    (90 degrees) இருக்கும். இதை நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் தெரியும்.


    இதை சற்று விரிவாக விளங்க படுத்த முடியுமா ஐயா....?????????????

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com