26.9.24

Astrology படிப்பா, ட்ராப் அவுட்டா?

Astrology  படிப்பா, ட்ராப் அவுட்டா?

முற்காலத்தில் முனிவர்கள் ஜாதகங்களுக்கான நெறிமுறைகளை வகுத்தபோது இருந்த கல்விக்கூடங்கள் வேறு இப்போது உள்ள கல்வி அமைப்புக்கள் வேறு.

அன்று திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குருகுலமும் மட்டுமே இருந்தன. கல்வி இலவசமாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது.

கலை, அறிவியல், வணிகம், மருத்துவம்,பொறியியல், விஞ்ஞானம் என்று பல துறைக்கல்விகள். அதிலும் தலை சுற்றும் அளவிற்குப் பல பிரிவுகள் உள்ளன.

பொறியியலில் மட்டும் 36 பிரிவுகள் உள்ளன. நான் படித்த காலத்தில் பொறியியலில் 3 பிரிவுகள் மட்டுமே இருந்தன. (சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல்) மருத்துவத்தில் 60 வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன. மருந்தை விற்பதற்குக்கூட  இன்று படித்திருக்க வேண்டும். நிர்வாகவியலில் கூட பல பட்டப் படிப்புகள் உள்ளன. விவரித்தால் தலை சுற்றும்.ஏன் அனுபவ்த்தில் செய்யும் விவசாயம் மற்றும் சமையலுக்குக்கூட இப்போது படிப்புக்கள் வந்துவிட்டன.

அதனால் ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் பையன் கல்வியில் தேறுவானா அல்லது தேற மாட்டானா என்பதை மட்டும் சொல்லலாம். என்ன படிப்புப் படிப்பான் - எங்கே போய் உட்கார்ந்து பெஞ்சைத் தேய்ப்பான் என்பதை எல்லாம் கோடிட்டுக் காட்டலாமே தவிர துல்லியமாகச் சொல்ல முடியாது!
----------------------------------------------------
ஒரு ஜாதகனின் கல்வித் தகுதியை அல்லது கல்வியால் பெறவிருக்கும் மேன்மையை அலச முடியுமா?

நான்காம் வீடு கல்வி
ஐந்தாம் வீடு நுண்ணறிவு
இரண்டாம் வீடு பேச்சுத் திறமை

இம்மூன்று வீடுகளையும் அலச வேண்டும்.

அத்துடன் வித்யாகாரகன் புதன், நுண்ணறிவிற்கான காரகன் குரு, மருத்துவப் படிப்பிற்கான காரகன் செவ்வாய், தொழில்காரகன் சனி, கலைக்கான காரகன் சுக்கிரன் ஆகிய்யோரின் நிலைமையையும் அலச வேண்டும்!
-----------------------------------------------------
இந்த வீடுகளுக்கு உரிய அதிபதிகள், காரகர்கள், ஆகியோரின் வலிமை, பெறும் பார்வை, சேர்க்கை என்று எல்லாவற்றையும் அலச வேண்டும். அனுபவத்தில் நிறைய ஜாதகங்களைப் பார்த்துத் தெளிந்தவர்கள் மட்டுமே ‘டக்’ என்று சொல்லுவார்கள். பையன் டாக்டராக வருவான் அல்லது பொறியாளராக வருவான் என்று!

அதற்கு இன்னும் பல காம்பினேஷன்கள் உள்ளன. அது முழுச் சாப்பாடு. அதை இன்னொரு நாள் சமைத்து விரிவாக பறிமாறுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com