23.2.21

Astrology: ஜோதிடப் புதிர்: வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!!!!


Astrology: ஜோதிடப் புதிர்: வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!!!! 

கீழே ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகி பட்டப் படிப்பில் சிறப்பாகத் தேர்வு பெற்றார். பிறகு ..எஸ் படிக்க விரும்பினார். அதிலும் சுலபமாகத் தேர்வாகி, படித்துப் பட்டம் பெற்றார். சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு நல்ல இடத்தில் (மாவட்டத்தில்) வேலை கிடைத்து, அமர்ந்தார். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? 

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!! 

ஜாதகி துலா லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரனுடன் செவ்வாயும் (2 & 7ற்கு உரியவர்) சேர்ந்து லக்கினத்தை வலிமை மிக்கதாக்கினார்கள். 10ம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் குரு பகவானின் ஆதிக்கம், அந்த வீட்டிற்கு அதிபதி சந்திரன் 12ல் 9ம் வீட்டுக்காரர் புதன் மற்றும் 11ம் வீட்டுக்காரர் சூரியனுடன் சேர்க்கை. அத்துடன் ராகுவும் கூட்டாகச் சேர்ந்துள்ளார்  நடப்பு தசா நாதன் ராகு உச்சமான புதனுடன் கூட்டாகச் சேர்ந்து நல்ல பலன்களைக் கொடுக்கும் நிலையில் உள்ளார்  இக்காரணங்களால் ஜாதகிக்கு வெற்றி மீது வெற்றி தொடர்ந்து கிடைத்தது!!!!! 

இந்த ஜாதகத்தில் மிக்க பலம் பொருந்தியவர் குரு (8 பரல்) 10ம் வீட்டில் கடக ராசியில் உச்சம் பெற்று 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்க்கிறார் .ஜாதகி கல்வியில் மிக உயர்ந்த பட்ட படிப்பை பெற்று சிறந்து விளங்கியதற்கு இது தான் காரணம்

 

அன்புடன்

வாத்தியார்

-===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com