2.1.21

க்ளீன் பெளல்டிற்கு எதற்கு 3வது அம்பயர்?


க்ளீன் பெளல்டிற்கு எதற்கு 3வது அம்பயர்? 

ஆசாமி உயிரோடு இருக்கிறானா அல்லது இல்லையா

ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகன் உயிரோடு இருக்கிறானா அல்லது டிக்கெட் வாங்கிக்கொண்டு பரலோகம் போய்விட்டானா என்று சட்டென்று கண்டு பிடிக்க முடியுமா

ஆன்லைனில் சட்டென்று சினிமா டிக்கெட் அல்லது இரயில் டிக்கெட் வாங்குவதுபோல ஜோதிடத்தில் எல்லாவற்றிற்கும் சட்டென்ற வழி இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்

ஒரு ஜோதிடரிம் ஒரு ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்கும்போது, அவர் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் அல்லது எடுத்துக் கொடுத்திருக்கும் ஜாதகம் உயிரோடு இருப்பவனின் ஜாதகம் என்ற நம்பிக்கையில்தான் அதைப் புரட்டிப் பார்ப்பார். நடைமுறை வழக்கமும் அதுதான்

சில அகராதி பிடித்தவர்கள், ஜோதிடரைப் பரிசோதித்துப்பார்ப்பதற்காக (to check up the astrologer) சமயங்களில் அடாவடித்தனமாக அப்படிச் செய்வதும் உண்டு. அதாவது செத்துப்போன தங்கள் உறவினரின் ஜாதகத்தைக் கொடுத்து, பலன் கேட்பார்கள்

இஷ்ட தேவதையின் அருள் உள்ளவர்கள், தேவி உபாசகர்கள், மந்திர சித்தி உள்ளவர்கள், அதாவது inspiration power உள்ளவர்கள். பார்த்த உடனேயே கண்டுபிடித்து, கொண்டு வந்தவனை ஒரு விளாசு விளாசி, அனுப்பிவைத்துவிடுவார்கள்

கோவை புறநகர் பகுதியான எட்டிமடையில், முன்பு (அக்காலத்தில்) ஒரு ஜோதிடர் இருந்தார். அவர் ஜாதகத்தைக் கையில் வாங்கியவுடனேயே கண்டு பிடித்துவிடுவார். அத்துடன் வந்தவனை ஒரு பார்வை பார்த்து ஒடச் செய்துவிடுவார்

பொதுவாக 90 சதவிகிதம், சொன்னால்தான், எட்டாம் வீட்டை அலசி ஜாதகனின் ஆயுசைக் கணித்து, இப்போது அவன் இருக்கிறானா அல்லது இல்லையா என்று சொல்லுவார்கள். அதையும் சொல்லி, வந்தவனிடம் கேட்டு உறுதி செய்து கொள்வார்கள்

ஆகவே, தெய்வத்தையும், ஜோதிடர்களையும் சோதனைக்கு உள்ளாக்காதீர்கள். ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டுவிடுங்கள்

சரக்கடித்துவிட்டு, உத்திரத்தைப் பார்த்தவாறு வீட்டிலேயே படுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள்

க்ளீன் பெளல்டிற்கு எதற்கு 3வது அம்பயர்? 

ஆசாமி இறந்து விட்டான். பெளல்ட் அவுட்!!!! 

க்ளீன் பெளல்டிற்கு எதற்கு 3வது அம்பயர்? 

இறந்தவருடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு சேட்டை எதுவும் செய்யாதீர்கள்!!!

அன்புடன்

வாத்தியார்

=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com