18.7.18

நாம் இறந்த பிறகு கூட வருவது எது?


நாம் இறந்த பிறகு கூட வருவது எது?

*பட்டினத்தாரின் ஊசி..*

✨பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே.
ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.
         
*வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்.!!!!*
-------------------------------------------------------------------
படித்தத்தில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. எனக்கும் பிடித்தது.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அருமையான உபதேசம்!தன் வாழ்நாளில் ஒவ்வொருவரும் தான், தரமங்களின் பெருமையை உணர்ந்து
    நற்செயல்களில் ஈடுபட்டால் பட்டினத்தார் வாக்கும் பலிக்கும், மனிதரும் மேம்படுவர் என்பது உறுதி!

    ReplyDelete
  3. Good morning sir excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,நெற்றியடி உபதேசம்.நன்றி.

    ReplyDelete
  5. ஐயா நேற்றுதான் பட்டினத்தார் திரைப்படம் பார்த்தேன்.இன்று நீங்கள் பதிவிட்டு இருக்குறீர்கள்,என்ன சொல்வது?மிக்க மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  6. ////Blogger ஸ்ரீராம். said...
    எனக்கும் பிடித்தது./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அருமையான உபதேசம்!தன் வாழ்நாளில் ஒவ்வொருவரும் தான், தரமங்களின் பெருமையை உணர்ந்து
    நற்செயல்களில் ஈடுபட்டால் பட்டினத்தார் வாக்கும் பலிக்கும், மனிதரும் மேம்படுவர் என்பது உறுதி!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir excellent thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    Nice one Sir////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  10. //Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நெற்றியடி உபதேசம்.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  11. ///Blogger saravanan vpn said...
    ஐயா நேற்றுதான் பட்டினத்தார் திரைப்படம் பார்த்தேன்.இன்று நீங்கள் பதிவிட்டு இருக்குறீர்கள்,என்ன சொல்வது?மிக்க மகிழ்ச்சி ஐயா./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சரவணன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com