30.1.18

வேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி!!!


வேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி!!!

இராணுவத்தினர் காடு-மலைகளில் நீண்டகாலம், தூரம் பயணம் செய்யும் போதும், மலைச்சிகர பயணம் மேற்கொள்வோருக்கும் மிக முக்கியமாக கொடுக்கப்படும் உணவு என்ன தெரியுமா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்!!

அதுதான்.நம்மூர் வேர்க்கடலை மிட்டாய்

வேர்க்கடலையை ஒரு புரத வங்கி என்று சொன்னால் மிகையாகாது.

வெல்லமும் வேர்க்கடலையும் சேர்ந்த பர்பி தமக்குள்ளே ஒரு புரதக்கடலையே வைத்திருக்கிறது.

மிகக்குறைந்த எடையில் பெரிய சக்தியை கொடுப்பதால் தான் ராணுவத்தினரும், மலையேற்ற பயணிகளும் அதை கொண்டுச் செல்கிறார்கள்.

வெறும் புரதம் மட்டுமல்ல, முப்பது விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.

★வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு.

★வேர்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக்கூடிய வைட்டமின் B3, புரதம், லைசின் எனும் அமினோ அமிலம் உள்ளது.

★வேர்க்கடலை உடல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதுகாக்கும். இரத்தம் ஓட்டம் சீராக்கும். நரம்புகள் நன்றாகச் செயல்பட உதவும்.

★வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு #இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

★நீரிழிவு நோயாளிகள் தினமும் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும்.

★புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழிக்க உதவும்.

★பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக_மறதி நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் B3  அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவுப் பொருள் இந்த வேர்க்கடலை.

இப்படிப்பட்ட #வேர்க்கடலையை # வெல்லத்தோடு சேர்த்து நம் வீடுகளில் கடலை உருண்டை, மிட்டாய் செய்வார்கள். இதே முறையில் தான்  எள்ளுருண்டைகளையும் செய்கின்றார்கள். 

வெல்லப்பாகு காய்ச்சி அதில் வறுத்த வேர்க்கடலையை கொட்டி உருண்டை பிடித்தால் அதுவே வேர்க்கடலை உருண்டை.
---------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம் ஐயா,அருமையான தகவல்.நன்றி.

    ReplyDelete
  2. நம் முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர் நமக்குண்டு பண்பாடு என்பதை நினைவுபடுத்தும் மற்றுமொரு விஷயம். உபயோகமான பதிவு.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning.... Thanks for info... Very very useful and Its available at affordable cost.

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ///Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான தகவல்.நன்றி.///

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  5. ////Blogger ஸ்ரீராம். said...
    நம் முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர் நமக்குண்டு பண்பாடு என்பதை நினைவுபடுத்தும் மற்றுமொரு விஷயம். உபயோகமான பதிவு.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ////Blogger Subathra Suba said...
    Good morning sir,very good information/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.... Thanks for info... Very very useful and Its available at affordable cost.
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com