29.1.18

மண் பானைத் தண்ணீரின் மகத்துவம்!!!

மண் பானைத் தண்ணீரின் மகத்துவம்!!!

*மண் பானை தண்ணீர்.!*
**************************

*தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.*

*வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.*

*குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது? தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.*

*எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள். உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்..*

*மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.*

*உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.*

*1. மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.*

*மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும்.*

 *நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் WATER FILTER வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும்,*

*தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.*

*ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு WATER FILTER ஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.*

*2. வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.*

*வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால், வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*

*இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக் கிறார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.*

*3. வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்*

*நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது.*

*ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம்" தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.*

*4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம*்

*செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம்.*

*அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.*

*அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.*

*எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப் படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்? வாழ்வோம் ஆரோக்கியமாக...
--------------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன் 
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. நல்ல பதிவு, நல்ல பகிர்வு. எல்லோருக்கும் சொல்லலாம். யாரும் பின்பற்றத் துணிய மாட்டார்கள். அந்த அளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம். ஐம்பது வருடங்களுக்கு முன் வீட்டுக்கு குழாயில் வரும் குடிநீரைத்தான் அப்படியே குடித்துக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து விடுகிறோம்.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல பயனுள்ள தகவல்

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Thanks for sharing...very useful info...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. In those days, water was taken from well or river or pond. Now it is chemically treated, chlorine added, sent in aluminium or copper. So using just man paanai may not be sufficient. May be a basic filtering and then using pot would be appropriate.

    Moreover, in cities like Chennai you can't drink the water in chlorine or the mud from borewell.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள செய்திகள்.நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger ஸ்ரீராம். said...
    நல்ல பதிவு, நல்ல பகிர்வு. எல்லோருக்கும் சொல்லலாம். யாரும் பின்பற்றத் துணிய மாட்டார்கள். அந்த அளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம். ஐம்பது வருடங்களுக்கு முன் வீட்டுக்கு குழாயில் வரும் குடிநீரைத்தான் அப்படியே குடித்துக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து விடுகிறோம்.///

    உண்மைதான். நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. ///Blogger Subathra Suba said...
    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்/////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  8. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

  9. ///Blogger RPKN said...
    Arumai////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing...very useful info...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்ச்சந்திரன்!!!!!

    ReplyDelete
  11. ////Blogger selvaspk said...
    In those days, water was taken from well or river or pond. Now it is chemically treated, chlorine added, sent in aluminium or copper. So using just man paanai may not be sufficient. May be a basic filtering and then using pot would be appropriate.
    Moreover, in cities like Chennai you can't drink the water in chlorine or the mud from borewell.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா!!!!

    ReplyDelete
  12. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள செய்திகள்.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com