7.2.17

ஓட்ஸ்ஸூம், நூடூல்ஸூம், பெப்சியும் எப்படி வந்தது?


ஓட்ஸ்ஸூம்,  நூடூல்ஸூம், பெப்சியும் எப்படி வந்தது?

நாமும் நம் முன்னோர்களும்!

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல: விவசாயத்தை நன்கு அறிந்த மேதைகள்!

ஒரு விவசாயி ஒரு இடத்தை வாங்கும் முன்பாக, முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் அங்கே தங்குவார்.

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறதென்று அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லையென்று
அர்த்தம்.

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால், சேவல் மண்ணைக் கீறி அதனுள்
உள்ள புழுக்களைத் தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய
விடுவாராம். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால்
வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

”அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவர்கள் உயிரைக் காப்பாற்ற
அவர்களையே மிரட்டிக் காசு பறிப்பது எப்படி உண்மையான அறிவியல் வளர்ச்சியாகும்?

ஆனால் இயற்கையை கடவுளாகப் பாவித்து வணங்கி, இயற்கையோடு வாழும் மனிதனை படிப்பறிவில்லாதவன் என்கின்றார்கள். அது எப்படி நியாயம்!

நம் முன்னோர்கள் பல விஷயங்கள் நாம் கற்றுக்கொண்டு செய்வதற்காக அள்ளித் தெளிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம்தான் கற்றுக்கொள்ள
வேண்டும்!

களி சாப்பிடுவதைப் பெருமையாக நினைத்திருந்தால், ஓட்ஸ்ஸூம்,  நூடூல்ஸூம் வந்திருக்காது.

கூழையும்,  மோரையும் பருகியிருந்தால் கோக்கும் பெப்சியும் வந்திருக்காது.

கடலை மிட்டாயையும்,  எள்ளு உருண்டையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் 5 ஸ்டார் சாக்லேட்ஸ் வந்திருக்காது.

வேட்டி கட்டி பழகி இருந்தால் பீட்டர் இங்கிலாண்ட் வந்திருக்காது.

தாவணி கட்டி பழகியிருந்தால் ஜீன்ஸ் வந்திருக்காது.

மஞ்சள் பூசிப் பழக்கியிருந்தால் பன்றி கொழுப்பில் தயாரான முக கிரீம்கள் வந்திருக்காது.

எல்லாம் நம்மை அறியாமல் நம்மைப் பிடித்துக் கொண்டதாகும்.

மாற்றத்தின் விழைவு ஜல்லிக்கட்டில் வந்து நிற்கிறது. விவசாயம் தழைக்க இனியேனும் சூளுரைக்க வேண்டும்.  கலாச்சாரம் சார்ந்து பழக்கங்களை
மாற்றுவோம். ரோட்டோரங்களில் சீம வாத நாரயண மரத்திற்குப் பதிலாக வேப்பமரம் , புளியமரங்களை நடுவோம்.

இனியேனும் விழித்துக் கொண்டு, கடைக்குச் சென்று ப்ரஷ் என்பதை விட வாசலில் வரும் பாட்டியிடம் கீரை, காய்கறிகளை வாங்கலாம்.

வாடியிருந்தாலும் உண்மையில் அதுதான் ப்ரஷ். (Fresh)
--------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியா

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Respected Sir,

    Happy morning...Thanks for sharing...

    Old is gold.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. பிரமாதம் ஐயா ....
    நல்ல கருத்துக்கள்....

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    நெத்தியடி.தங்கள் பதிவில் குறிப்பிட்ட
    அத்தனையும் நம்மை நாமே ஏமாற்றிக்
    கொண்ட விஷயங்கள்.விழித்துக் கொள்வோம்.இனிவரும் காலம் நமதாகட்டும்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    உபயோகமான தகவல்
    நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,மெய் சிலிர்க்கிறது.இயற்க்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் அறிவாற்றல் பெருமிதம் கொள்ள வைக்கிறது.குறிப்பாக பசுக்கள் படுத்து அசைபோடும் இடத்தை வைத்து நீரோட்டம் அறிவது ஆச்சரியப்பட வைத்தது.நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger siva kumar said...
    உண்மை ஐயா நன்றி./////

    நல்லது. நன்றி சிவகுமார்!!!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...Thanks for sharing...
    Old is gold.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger Sakthi Balan said...
    பிரமாதம் ஐயா ....
    நல்ல கருத்துக்கள்..../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    VERY INFORMATIVE.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நெத்தியடி.தங்கள் பதிவில் குறிப்பிட்ட
    அத்தனையும் நம்மை நாமே ஏமாற்றிக்
    கொண்ட விஷயங்கள்.விழித்துக் கொள்வோம்.இனிவரும் காலம் நமதாகட்டும்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  11. ////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    உபயோகமான தகவல்
    நன்றி
    மூர்த்தி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மெய் சிலிர்க்கிறது.இயற்க்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் அறிவாற்றல் பெருமிதம் கொள்ள வைக்கிறது.குறிப்பாக பசுக்கள் படுத்து அசைபோடும் இடத்தை வைத்து நீரோட்டம் அறிவது ஆச்சரியப்பட வைத்தது.நன்றி./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com