6.2.17

எடுத்துக் கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்?

எடுத்துக் கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்?

பழநிமலை முருகப் பெருமானைப் பற்றிய சில அதிசயத் தகவல்கள்

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது

முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி
தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகதலிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

15. பழனியில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு

பழநிமலை முருனுக்கு அரோகரா...

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் குருவே!
    ஆவலைத் தூண்டும் அற்புதத் தகவல்கள்!
    முருகனின் சிலையிலிருந்து இரவு முழுவதும் வெளிப்படும் நீர் பிரஸாதத்துடன் கலந்து காலையில் தரப்படுகிறது.
    சிரசு விபூதி விசேஷம்.
    முருகனின் வலது புறமுள்ள மரகத லிங்கம்.
    அம்பாள், முருகன், அகத்தியர் அருள்படி 4000க்கும் மேற்பட்ட மூலிகைகள்,81 சித்தர்கள், நவபாஷாணம்,9 ஆண்டுகள் உழைப்பு
    கொண்டு போகர் செய்து, மேற்கு நோக்கி பிரதிஷ்டை.
    அனைத்துமே பழனிக்கு விரைவில் செல்ல ஒரு உந்துதல் தந்துள்ளது!
    அப்பன் முருகன் அதற்கு வழி காட்டி
    அருள் வேண்டும்!
    நன்றி குருநாதா!

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Thanks for the holy information.

    Have a good day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. எம்பெருமான் முருகன் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,பரவசமானேன்.நன்றி.

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆவலைத் தூண்டும் அற்புதத் தகவல்கள்!
    முருகனின் சிலையிலிருந்து இரவு முழுவதும் வெளிப்படும் நீர் பிரஸாதத்துடன் கலந்து காலையில் தரப்படுகிறது.
    சிரசு விபூதி விசேஷம்.
    முருகனின் வலது புறமுள்ள மரகத லிங்கம்.
    அம்பாள், முருகன், அகத்தியர் அருள்படி 4000க்கும் மேற்பட்ட மூலிகைகள்,81 சித்தர்கள், நவபாஷாணம்,9 ஆண்டுகள் உழைப்பு
    கொண்டு போகர் செய்து, மேற்கு நோக்கி பிரதிஷ்டை.
    அனைத்துமே பழனிக்கு விரைவில் செல்ல ஒரு உந்துதல் தந்துள்ளது!
    அப்பன் முருகன் அதற்கு வழி காட்டி அருள் வேண்டும்!
    நன்றி குருநாதா!/////

    முருகப் பெருமானை இருந்த இடத்தில் இருந்தே பிரார்த்தனை செய்யுங்கள். தன்னைக் காண அவர் அருள் செய்வார்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாக்குப்படி என் மனம்
      ஒப்பி பழனியாண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.பின்னாளில்
      முடிந்தால் தரிசனம் செய்கிறேன்.
      நன்றி வாத்தியாரையா?

      Delete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for the holy information.
    Have a good day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  7. ////Blogger பரிவை சே.குமார் said...
    எம்பெருமான் முருகன் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா.../////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பரவசமானேன்.நன்றி.////

    உங்கள் பரவசத்திற்கு பாராட்டுக்கள்!அதுதான் இறைவனை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடியாகும்! நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  9. அந்த பேரதிசயத்தையும் மனிதன் சிதைத்து உள்ளானே? முருகா...

    ReplyDelete
  10. ////Blogger SELVARAJ said...
    அந்த பேரதிசயத்தையும் மனிதன் சிதைத்து உள்ளானே? முருகா...///

    கவலையை விடுங்கள். சிதைத்தவர்களை பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான்!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    தங்களின் வாக்குப்படி என் மனம்
    ஒப்பி பழனியாண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.பின்னாளில்
    முடிந்தால் தரிசனம் செய்கிறேன்.
    நன்றி வாத்தியாரையா?//////

    முடிந்தால் என்ன? முடியும். நம்பிக்கை வையுங்கள். வாய்ப்பு கிடைக்கும் வரதராஜன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com