6.12.16

எதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்?


எதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்?
--------------------------------
சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில்
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'.

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை

ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால், உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும்
உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால் வாழப் பழகுவாய்.இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே!
    மிக நல்ல நீண்ட பட்டியலுடன் கூடிய சிந்தனைக்கு விருந்தான பதிவு.
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  2. எது எது எப்போ எப்போ எப்படி நடக்கணுமோ
    அதுஅது அப்போஅப்போ அப்படி நடக்கும்

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,காத்திருக்க பழகினால் வாழ்கையை ரசிக்கலாம்.காத்திருப்பையே ரசிக்க பழகினால் காத்திருப்பின் கஷ்டம் எளிதாகும்.உதாரணமாக ஒரு க்யூவில் நிற்க்கும்போது புத்தகம் படிக்கலாம்.கண்களுக்கான எளிய பயிற்ச்சியையோ,எளிதான மூச்சு பயிற்ச்சியையோ செய்யலாம்.நிற்க்கும் ஒவ்வொருவரின் நடையுடை பாவனைகளை அவதானிக்கலாம்.இப்படி பலப் பல.உயிர் உடல் பற்றி பதிவில் இருப்பதால் ஒரு சந்தேகம்.7இல் ஆட்சி பலத்துடன் இருக்கும் 7ம் அதிபதி தசா.1,4க்கு அதிபதியான லக்னாதிபதி புதன் புத்தி.பூர்வ புண்ணியத்தில் அமர்ந்த கேதுவின் அந்தரம் ஒருவருக்கு மாரகத்தை கொடுக்கிறது.லக்னாதிபதி புத்தியில் மாரகம் கொடுக்குமா என்பதே சந்தேகம்.நன்றி.

    ReplyDelete
  4. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக நல்ல நீண்ட பட்டியலுடன் கூடிய சிந்தனைக்கு விருந்தான பதிவு.
    நன்றி வாத்தியாரையா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    எது எது எப்போ எப்போ எப்படி நடக்கணுமோ
    அதுஅது அப்போஅப்போ அப்படி நடக்கும்/////

    கரெக்ட். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,காத்திருக்க பழகினால் வாழ்கையை ரசிக்கலாம்.காத்திருப்பையே ரசிக்க பழகினால் காத்திருப்பின் கஷ்டம் எளிதாகும்.உதாரணமாக ஒரு க்யூவில் நிற்க்கும்போது புத்தகம் படிக்கலாம்.கண்களுக்கான எளிய பயிற்ச்சியையோ,எளிதான மூச்சு பயிற்சியையோ செய்யலாம்.நிற்கும் ஒவ்வொருவரின் நடையுடை பாவனைகளை அவதானிக்கலாம்.இப்படி பலப் பல.உயிர் உடல் பற்றி பதிவில் இருப்பதால் ஒரு சந்தேகம்.7இல் ஆட்சி பலத்துடன் இருக்கும் 7ம் அதிபதி தசா.1,4க்கு அதிபதியான லக்னாதிபதி புதன் புத்தி.பூர்வ புண்ணியத்தில் அமர்ந்த கேதுவின் அந்தரம் ஒருவருக்கு மாரகத்தை கொடுக்கிறது.லக்னாதிபதி புத்தியில் மாரகம் கொடுக்குமா என்பதே சந்தேகம்.நன்றி.////

    மாரகத்திற்கு பல அமைப்புக்கள் உள்ளன. பின்னொரு நாளில் விரிவாகப் பார்க்கலாம். பொறுத்திருங்கள் ஆதித்தன்!

    ReplyDelete
  7. ///Blogger smruthi sarathi said...
    Super////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com