10.8.16

நல்ல பாடல் ஒன்றைப் பதிவிட்டுள்ளேன் நீங்களும் கேளுங்கள்!


நல்ல பாடல் ஒன்றைப் பதிவிட்டுள்ளேன் நீங்களும் கேளுங்கள்!

பாடலை எழுதியவரும் சரி, இசை அமைத்தவரும் சரி, பாடியவரும் சரி கூட்டாகச் சேர்ந்து ஒரு நல்ல பாடலைக் கொடுத்திருக்கிறார்கள். பாடலின் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள். பாட்டையும் கேளுங்கள்

படம்: லிங்கா (வெளியான தேதி 14-12-2014)
நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்!
பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: ஹரிச்சரண்


--------------------------------------
பாடல் வரிகள்:

உண்மை ஒருநாள் வெல்லும் - இந்த 
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று 
ஊரே போற்றும் மனிதன் 
நீயே நீயடா நீயடா 

பொய்கள் புயல்போல் வீசும் - ஆனால் 
உண்மை மெதுவாய்ப் பேசும் - அன்று நீயே 
வாழ்வில் வெல்வாய் 
கலங்காதே 
கலங்காதே 
கரையாதே 

ராமனும் அழுதான் 
தர்மனும் அழுதான் 
நீயோ அழவில்லை 
உனக்கோ அழிவில்லை 

ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு 
அடிகள் புதிதில்லை 
கலங்காதே 
கலங்காதே 
கரையாதே 

சிரித்துவரும் சிங்கமுண்டு 
புன்னகைக்கும் புலிகளுண்டு 
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு 
பொன்னாடை போர்த்திவிட்டு 
உன்னாடை அவிழ்ப்பதுண்டு 

பூச்செண்டில் ஒளிந்திருக்கும் 
பூநாகம் உண்டு 
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் - அதன் 
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது 

சுட்டாலும் சங்கு நிறம் 
எப்போதும் வெள்ளையடா 
மேன்மக்கள் எந்நாளும் 
மேன்மக்கள் தானே 
கெட்டாலும் நம்தலைவன் 
இப்போதும் ராஜனடா 
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் 
வீழாது தானே! 

பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன் 
புன்னகையைக் கொள்ளையிட முடியாது 
====================================================



===========================================================
2

Talgo Trains 

High Speed Talgo Trains Coming to India. Last Trial 14th August.Test Speed 150kmph to 180kmph. In the long run 250kmph.Luxury of Spanish Coaches on the Rajdhani & Shatabdi Express Trains.

1


2


3


4

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

4 comments:

  1. Vanakkam aiya, Nalla paadal and news.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா, ஒருபக்கம் இதுபோல் ஹைடெக் வரவுகள்,மறுபக்கம் சிசிடிவி கேமரா கூட வைக்கமுடியாத நிலை.செயற்கை கோள்,ராக்கட் எல்லாம் அனுப்புறோம்,ஒருவேளை சோற்றுக்குகூட வழிஇல்லாமல் இருப்போர் ஏராளம் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.இரண்டும் கெட்டான் நிலை என்பது இதுதானோ?.நன்றி.

    ReplyDelete
  3. /////Blogger saadu said...
    Vanakkam aiya, Nalla paadal and news./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, ஒருபக்கம் இதுபோல் ஹைடெக் வரவுகள்,மறுபக்கம் சிசிடிவி கேமரா கூட வைக்கமுடியாத நிலை.செயற்கை கோள்,ராக்கட் எல்லாம் அனுப்புறோம்,ஒருவேளை சோற்றுக்குகூட வழிஇல்லாமல் இருப்போர் ஏராளம் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.இரண்டும் கெட்டான் நிலை என்பது இதுதானோ?.நன்றி./////

    நம்பிக்கையோடு இருங்கள். காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும்! நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com