16.5.14

Devotional: வினையைத் தீர்ப்பது யாருடைய வேலை?

 
Devotional: வினையைத் தீர்ப்பது யாருடைய வேலை?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் பாடலைப் படித்து/பாராயணம் செய்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------
கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு

துணை என்று ... ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை ... தீர்ப்பது ... குகன் வேலை
வேலைப் போற்றுதல் ... நாவின் வேலை

கருணை ... முகங்கள் ... ஓராறு

அடியார்கள் ... அகமே அவன் கோயில்
அன்பே ... ஆலயத் தலைவாயில்
குடியாய் ... இருப்பான் ... குறை தீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

கந்தன் ...

கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு.

பக்திப் பரவசத்துடன் பாடலைப் பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள் 
 ---------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. முருகா என்று ஓதுவார் முன் அஞ்சசேல் என வேல் தோன்றும்...
    முருகா முருகா

    ReplyDelete
  2. எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
    அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
    சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
    பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

    ReplyDelete
  3. நன்றி முருகா. நாட்டின் ஆட்சி பொறுப்பு தெய்வ பக்தியும் தேச பக்தியும் உள்ளவர்களிடம் வந்துள்ளது. இனி இந்தியாவிற்கு நல்ல காலம் ஆரம்பமாகட்டும்.

    ReplyDelete
  4. ////Blogger Healthcare Raja Nellai said...
    mikavm arumai sir/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger Healthcare Raja Nellai said...
    முருகா என்று ஓதுவார் முன் அஞ்சசேல் என வேல் தோன்றும்...
    முருகா முருகா///////

    திருமுருகாற்றுப்படைப் பாடல் ஒன்றில் நக்கீரரும் அதைத்தான் கூறுகிறார். நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. //////Blogger venkatesh r said...
    எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
    அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
    சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
    பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger thozhar pandian said...
    நன்றி முருகா. நாட்டின் ஆட்சி பொறுப்பு தெய்வ பக்தியும் தேச பக்தியும் உள்ளவர்களிடம் வந்துள்ளது. இனி இந்தியாவிற்கு நல்ல காலம் ஆரம்பமாகட்டும்./////

    உண்மைதான். நன்றி பாண்டியரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com