7.3.13

Humour நகைச்சுவை: ஜானிவாக்கர் சிங்கிளும், டபுளும்!

 Humour நகைச்சுவை: ஜானிவாக்கர் சிங்கிளும், டபுளும்!
எல்லாம் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றவை. சிடுமூஞ்சிகள் வெளியேறி விடவும்!
+++++++++++++++++++++++++++++++++++
1
கணவன் மனைவியிடம்:

"என்கூட நீ ஒரு விஷயத்தில கூட ஒத்துப்போக மாட்டேங்கிறியேடி?
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஆறு வருஷத்தில, என்ன
சுகத்தைக் கண்டேன்?"

மனைவி: "தப்பாச்சொல்றே! நமக்குக் கல்யாணமாகி ஏழு வருடமாகிறது!

==================================
2

பஸ்ஸில இருந்த மத்தவனெல்லாம் கத்திக்கிட்டே செத்தானுங்கடா ;
எங்க தாத்தா மட்டும் தூக்கத்திலேயே செத்துப்போனார்டா!"

"எப்படீடா?"

"பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப்போனதே அவருதான்டா!"
========================
3
நம்ம தேனிக்கார அரசியல்வாதி ஒருவர் முதன் முதலிலாக ஃபைவ் ஸ்டார்
ஹோட்டலில் உள்ள பார் ஒன்றிற்குப் போனார்.

வலது பக்க மேஜையில் இருந்தவன் பார்டெண்டரிடம் சொன்னான்:
"ஜானிவாக்கர் சிங்கிள்"

இடது பக்க மேஜையில் இருந்தவன் பார்டெண்டரிடம் சொன்னான்:
"பீட்டர் ஸ்காட் சிங்கிள்"

நம்ம ஆள் பார்டெண்டரிடம் சொன்னார்:
தமிழரசன் மேரீட் (Married)!
=========================
4

விவாகரத்துக் கோரி வந்திருந்த தம்பதிகளைப் பார்த்து நீதிபதி கேட்டார்:

"உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதே? என்ன செய்யப்போகிறீர்கள்"

கணவன் சொன்னான்,"சொத்துக்களைப்போலவே, பிள்ளைகளையும் பங்கு
அய்யா?"

"மூன்று குழந்தைகளை எப்படிப் பங்கு வைப்பது?"

"சரி, அடுத்த வருடம் வந்து மனுக் கொடுக்கிறோம்!"
+++++++++++++++++++++++++++++++++
நான்கில் எது நன்றாக உள்ளது?
இது மீள் பதிவு. என்னுடைய பல்சுவை வலைப் பூவில் 28.10.2008 அன்று வெளியானது. உங்களுக்கு (வகுப்பறைக் கண்மணிகளுக்கு) அதை இன்று அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. அய்யா வணக்கம் 2, 4 சிரிக்க , அனைத்தும் ரசிக்க

    ReplyDelete
  2. சிடு மூஞ்சிகளை அனுப்பியதால்
    சிரிச்ச மூஞ்சிகளுடன்

    ஒத்துப் போகாத தம்பதிகள்
    ஓட்டுனர் உறங்கியது

    பாரில் நடந்தது நீதி மன்ற
    பாரில் நடந்தது என படித்தோம்

    விவாகரத்துக்கள் கேட்பது பெண்களே
    விவரம் இதுக்கு மேல் வேணுமா..?

    இன்று "உலக மகளிர் தினம்"
    இதற்காகவே வந்ததோ 4வது..?

    மணிரத்தினம் இயக்கிய
    மவுனராகம் போன்ற ப(பா)டங்கள்

    விஷம் போல் ஊறிப்போன
    விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி தரும்



    ReplyDelete
  3. இரசித்துப் படித்து, சிரித்தேன். நன்றி.

    ReplyDelete
  4. இரண்டு மாதத்திற்கு பிறகு இன்று தான் வகுப்புக்கு வந்துள்ளேன்.

    எல்லாம் நல்ல சிரிப்பை தந்தது, அதில் நம் தமிழரசன் தான் டாப்.

    ReplyDelete
  5. ////Blogger Gnanam Sekar said..
    அய்யா வணக்கம் 2, 4 சிரிக்க , அனைத்தும் ரசிக்க/////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  6. Blogger அய்யர் said...
    சிடு மூஞ்சிகளை அனுப்பியதால்
    சிரிச்ச மூஞ்சிகளுடன்
    ஒத்துப் போகாத தம்பதிகள்
    ஓட்டுனர் உறங்கியது
    பாரில் நடந்தது நீதி மன்ற
    பாரில் நடந்தது என படித்தோம்
    விவாகரத்துக்கள் கேட்பது பெண்களே
    விவரம் இதுக்கு மேல் வேணுமா..?
    இன்று "உலக மகளிர் தினம்"
    இதற்காகவே வந்ததோ 4வது..?

    மணிரத்தினம் இயக்கிய
    மவுனராகம் போன்ற ப(பா)டங்கள்
    விஷம் போல் ஊறிப்போன
    விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி தரும்//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  7. /////Blogger kg gouthaman said...
    இரசித்துப் படித்து, சிரித்தேன். நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  8. //////Blogger thanusu said...
    இரண்டு மாதத்திற்கு பிறகு இன்று தான் வகுப்புக்கு வந்துள்ளேன்.
    எல்லாம் நல்ல சிரிப்பை தந்தது, அதில் நம் தமிழரசன் தான் டாப்/////.

    சரி, பழைய விட்டுப்போன பாடங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் படியுங்கள் தனுசு!

    ReplyDelete
  9. ஐய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கு நிரூபனமே இன்றைய நகைச்சுவை பகுதி.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  10. பஸ் ஜோக் மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  11. //////Blogger GOWDA PONNUSAMY said...
    ஐய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கு நிரூபனமே இன்றைய நகைச்சுவை பகுதி.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி!

    ReplyDelete
  12. /////Blogger sasikrr said...
    பஸ் ஜோக் மிகவும் பிடித்திருக்கிறது./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com