21.3.13

கவிதைச் சோலை: நீரிலே சாவதேன்?


கவிதைச் சோலை: நீரிலே சாவதேன்?

நீரிலே வாழ்கின்ற மீன்களும் நததையும்
             நிலத்திலே சாவ தென்ன?
       நிலத்திலே வாழ்கின்ற மனிதனும் மிருகமும்
             நீரிலே சாவ தென்ன?
சீருலாப் பேருலாச் சிறபுலாக் கொண்டாரும்
             சிறுமையில் அழிவ தென்ன?
      சேரிடம் அறியாமற் சேர்ந்ததோ, இல்லையேல்
             சிறுமதிப் போக்கி னாலோ?
மார்புலாஞ் சேலையில் மணமுலாம் மாலையை
              மகிழ்வுலா விட்ட மயிலே!
      மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
             மதுரை மீனாட்சி உமையே!

- கவியரசு கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. அவர்கள் இங்கேயும்
    இவர்கள் அங்கேயும் என

    போவதென்பது உறுதியென
    போகிறபோக்கில் சொன்ன கவிஞரு

    போகமலிருக்கவோ..
    போனவர்கள் வராமலிருக்கவோ

    சொல்லவில்லை எனினும்
    சொக்கன் மனையாளை சொன்னதால்

    தலைவணங்குகிறோம்
    தந்த பாடலுக்கும் பதிவிட்ட விரலுக்கும்

    ReplyDelete
  2. சேரிடம் அறியாமல் சேர்ந்து பட்டதுன்பம் பல. இறையருள் ஒவ்வொரு முறையும் காத்தது.அருமையான பாடலுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. அய்யாஅவர்களுக்கு வணக்கங்கள்.
    நீரிலே சாவதேன்? - படிக்கும் பொழுது ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் படலின் வரிகள் நினைவுக்கு வந்தன.
    “தண்ணீரில் மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வச்சா தீர்ந்துவிடும் கணக்கு”
    நன்றியுடன்,
    -Peeyes

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நல்ல பாடல், அருமையாக இருந்தது
    நன்றி

    ReplyDelete
  5. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை ஐயா... நன்றி...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////Blogger அய்யர் said...
    அவர்கள் இங்கேயும்
    இவர்கள் அங்கேயும் என
    போவதென்பது உறுதியென
    போகிறபோக்கில் சொன்ன கவிஞரு
    போகமலிருக்கவோ..
    போனவர்கள் வராமலிருக்கவோ
    சொல்லவில்லை எனினும்
    சொக்கன் மனையாளை சொன்னதால்
    தலைவணங்குகிறோம்
    தந்த பாடலுக்கும் பதிவிட்ட விரலுக்கும்/////

    நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    சேரிடம் அறியாமல் சேர்ந்து பட்டதுன்பம் பல. இறையருள் ஒவ்வொரு முறையும் காத்தது.அருமையான பாடலுக்கு நன்றி ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யாஅவர்களுக்கு வணக்கங்கள்.
    நீரிலே சாவதேன்? - படிக்கும் பொழுது ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் படலின் வரிகள் நினைவுக்கு வந்தன.
    “தண்ணீரில் மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வச்சா தீர்ந்துவிடும் கணக்கு”
    நன்றியுடன்,
    -Peeyes/////

    ஆமாம். கவியரசர் தனது தனிப்பாடல்களில் உள்ள கருத்துக்களையும், தத்துவங்களையும், திரைப்படப்பாடல்களிலும் எழுதியுள்ளார். நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல பாடல், அருமையாக இருந்தது
    நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!1

    ReplyDelete
  10. அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com