22.6.12

Devotional மூதாட்டி பாடிய முருகன் பாடல்


Devotional மூதாட்டி பாடிய முருகன் பாடல்

பக்தி மலர்

தமிழ் மூதாட்டி பாடிய முருகன் பாடல் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பலமுறை கேட்டதுதான். இருந்தாலும் இன்றும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
காணொளி:
http://youtu.be/cqiTqFaDveQ
Our sincere thanks to the person who uploaded the song




ஒளவையார் பாடிய பாடல் வரிகள்:

1. அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல்

2. கொடியது
கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே!

3.பெரியது
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

4. இனியது
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!
-----------------------------------
கீழே உள்ள பாடல் கந்தன் கருணை படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதியது

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன்...என்ற பெயரில்... வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கும் வேலும்... மயிலும்...புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது...
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவது (முடிவு அது)
முடிவில் முதல் அது
முதலில் முடிவது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

21 comments:

  1. ஐயா, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், தெவிட்டாத இசை. ஏற்கனவே பதிவில் வந்துள்ளது.
    ஆனாலும் எத்தனை முறை வந்தாலும் படிக்க/கேட்க தயார். பாடலை நினைவுபடுத்துவதற்கு நன்றி.
    ஐயா வரிசைப் படுத்திப் பாடுவதில் குளறுபடி :)))
    அரியது
    கொடியது
    பெரியது
    இனியது
    இதுதான் பாடலிலும் இடம் பெரும் வரிசை.

    ReplyDelete
  2. /////////////////// 1. கொடியது
    கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
    கொடிது கொடிது வறுமை கொடிது;
    அதனினும் கொடிது இளமையில் வறுமை;
    அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
    அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
    அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே!

    2. இனியது
    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
    இனிது இனிது ஏகாந்தம் இனிது;
    அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
    அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
    அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
    கனவினும் நனவினும் காண்பது தானே!

    3.பெரியது
    பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
    பெரிது பெரிது புவனம் பெரிது;
    புவனமோ நான்முகன் படைப்பு;
    நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
    கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
    அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
    குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
    கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
    அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
    உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
    இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
    தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

    4. அரியது
    அரியது கேட்கின் வரிவடி வேலோய்
    அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
    மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
    பேடு நீங்கிப் பிறந்த காலையும்
    ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
    ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
    தானமும் தவமும் தான்செயல் /////////////////////

    பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக தொடங்கிய உடனே சேனல் மாற்றி விடுவேன். ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் இதே பாடல் ஒளிபரப்பானபோது ரிமோட் ரிப்பேர் ஆகி இருந்ததால் பாடலை முழுமையாக கேட்டேன். ஒருவன் வாழ்வு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை கோடிட்டு காட்டிய பாடலாக அமைந்தது கண்டு இவ்வளவு நாள் இதை தவறவிட்டுவிட்டோமே என்று நினைத்தேன்.

    அந்த பாடலை இப்போது நினைவு படுத்தியதற்கு வாத்தியாருக்கு நன்றி.

    ReplyDelete
  3. /////Blogger தேமொழி said...
    ஐயா, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், தெவிட்டாத இசை. ஏற்கனவே பதிவில் வந்துள்ளது.
    ஆனாலும் எத்தனை முறை வந்தாலும் படிக்க/கேட்க தயார். பாடலை நினைவுபடுத்துவதற்கு நன்றி.
    ஐயா வரிசைப் படுத்திப் பாடுவதில் குளறுபடி :)))
    அரியது
    கொடியது
    பெரியது
    இனியது
    இதுதான் பாடலிலும் இடம் பெரும் வரிசை./////

    Cut & Pasteஆல் ஏற்பட்ட குளறுபடி. சரி செய்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  4. ''ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
    தானமும் தவமும் தான்செயல் ''

    ''அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
    அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே!''

    ''உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
    இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
    தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே! ''

    ''அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
    கனவினும் நனவினும் காண்பது தானே!''

    அன்னையவள்; மூதாட்டி ஒளவையவள்; சீராட்டி
    பண்ணையவள் தமிழ முதூட்டி - விண்ணையவள்
    மண்ணில் காட்டி; ஞானக் கண்ணில் - அவள்
    கந்தனையே நிறுத்திக்கொட்டிய அமுதகவி.

    முத்தையாவும் தன்பங்கிற்கு அசத்தி இருக்கிறார் அருமை...
    அப்படியே அள்ளி உண்ணும் உணர்வைத் தருகிறது...
    ''அறிவில் அறியது...
    அருளில் பெரியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது''

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. //புவனமோ நான்முகன் படைப்பு;
    நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
    கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
    அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
    குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
    கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
    அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
    உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;//

    இந்த வரிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட‌ புராணக்கதை உள்ளது. அதை ஒரு வரியில் சுருங்கச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாட்டின் தவப்பயனான தமிழ்மூதாட்டி.

    //அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
    அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
    கனவினும் நனவினும் காண்பது தானே!//

    'சத் சங்கத்தி'ன் பெருமை அற்புதமாகச் சொல்லப்படுகிறது.

    கவியரசரின் வரிகளில்
    //முதலில் முடிவது (முடிவு அது)
    முடிவில் முதல் அது
    முதலில் முடிவது
    முடிவில் முதல் அது
    மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது//

    'கௌமாரம்' முழுதும் அடங்கிவிட்டது.

    கொடுமுடி கோகிலத்தின் குரலும், கே.வி.எம்மின் இசையும் பாலோடு கலந்த தேன் போல. அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. நல்லதொரு பாடல். மீண்டும் கேட்டு மகிழ வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்
    ஒளவையாரின் பாடல் கலையில் மெய்மறந்து உனறசெய்தது முருகன் அருள்கிடைக்க தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. இப்பாடலை முன்பே கேட்டிருந்தும் இன்று பதிவில் வரும்போது புதிதாகவே இருக்கிறது .

    நிறைவைப் பெற்ற மனிதன் எந்த குறையையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ தமிழ் பாட்டி பாடும் பாட்டு, உலகுக்கு நான்கு திசையைப்போல் மனிதனுக்கு நான்கு நிலை . மீண்டுன் நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  9. பதிவிற்கு மிக்க நன்றிகளும் அன்பு வணக்கங்களும், வாத்தியாரே.


    அம்பிகை அருளால் அவள் பாலன் மீது எனக்கும் ஒரு கவி வந்தது திடீரென்று,

    +++++

    முருகனின் அன்புடைய பக்தர்களான வாத்தியாருக்கும் நண்பர் திரு போகர் அவர்களுக்கும் இது சமர்ப்பணம்.

    +++++

    காரிருள் குழலாள் குழவி
    ஆறிரு வந்தோள் போற்றி;
    சீறிடு முறுபகை மாற்றும்
    தாரணி வோன்வேல் போற்றி;
    மாறிடு மனத்தோர் வஞ்சம்
    காறிடுங் குழந்தை போற்றி;
    சோறிடும் எந்தை போல்வான்
    ஆறுவாய் குடக்கோ போற்றி!

    ஆறிரு வந்தோள்: ஆறு + இரு + வன் + தோள் = பன்னிரண்டு வழிய தோள்கள்
    தாரணி வோன்: தார் + அணிவோன் (தார் - முனை கட்டப்படாத மாலை; திருச்செந்தூர் வேலன் படம் காணவும்)
    ஆறுவாய் குடக்கோ: ஆறு முகம் உடைய, மலைகளுக்கு (குடம் - மலை) அரசன் (முகத்துக்கு வாய் எனும் சொல்லையே பயன்படுத்துவது வடமிழியின் இயல்பு)

    ஐந்தலைப் பொதிகை தங்கும்
    பைந்தமிழ் பிள்ளை முனிவன்
    மைந்தனாக் கொண்டு லகோர்க்கு
    நைந்திடாத் தென்மொழி யீந்த
    அஞ்சிறை மயில் மீதேகி
    அஞ்சிடும் மான்விழி எழுவர்
    மிஞ்சிடும் பிள்ளையி னன்பால்
    கொஞ்சிடும் கோவே போற்றி;

    மைந்தன் = சீடன்;
    அஞ்சிறை: அம் + சிறை = அழகிய சிறகு
    அஞ்சிடும் மான்விழி எழுவர்: மருண்டு விழிக்கும் மான் போன்ற கண்களை உடைய பெண்கள் எழுவர் - கார்த்திகை பெண்டிர்
    கோ: அரசன் - பிள்ளையை ராஜா என கொஞ்சும் பொருளில்.

    ReplyDelete
  10. கார்த்திகை பெண்டிர் அறுவர் தான். எழுவர் என எழுத காரணம் பார்வதீ தேவியையும் சேர்த்து நோக்கியமையால்

    ReplyDelete
  11. //////Blogger சரண் said...
    பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக தொடங்கிய உடனே சேனல் மாற்றி விடுவேன். ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் இதே பாடல் ஒளிபரப்பானபோது ரிமோட் ரிப்பேர் ஆகி இருந்ததால் பாடலை முழுமையாக கேட்டேன். ஒருவன் வாழ்வு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை கோடிட்டு காட்டிய பாடலாக அமைந்தது கண்டு இவ்வளவு நாள் இதை தவறவிட்டுவிட்டோமே என்று நினைத்தேன்.
    அந்த பாடலை இப்போது நினைவு படுத்தியதற்கு வாத்தியாருக்கு நன்றி.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சரவணன்!

    ReplyDelete
  12. Blogger ஜி ஆலாசியம் said...
    ''ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
    தானமும் தவமும் தான்செயல் ''
    ''அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
    அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே!''
    ''உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
    இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
    தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே! ''
    ''அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
    கனவினும் நனவினும் காண்பது தானே!''

    அன்னையவள்; மூதாட்டி ஒளவையவள்; சீராட்டி
    பண்ணையவள் தமிழ முதூட்டி - விண்ணையவள்
    மண்ணில் காட்டி; ஞானக் கண்ணில் - அவள்
    கந்தனையே நிறுத்திக்கொட்டிய அமுதகவி.
    முத்தையாவும் தன்பங்கிற்கு அசத்தி இருக்கிறார் அருமை...
    அப்படியே அள்ளி உண்ணும் உணர்வைத் தருகிறது...
    ''அறிவில் அறியது...
    அருளில் பெரியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது''
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!//////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. Blogger Parvathy Ramachandran said...
    //புவனமோ நான்முகன் படைப்பு;
    நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
    கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
    அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
    குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
    கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
    அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
    உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;//
    இந்த வரிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட‌ புராணக்கதை உள்ளது. அதை ஒரு வரியில் சுருங்கச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாட்டின் தவப்பயனான தமிழ்மூதாட்டி.
    //அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
    அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
    கனவினும் நனவினும் காண்பது தானே!//
    'சத் சங்கத்தி'ன் பெருமை அற்புதமாகச் சொல்லப்படுகிறது.
    கவியரசரின் வரிகளில்
    //முதலில் முடிவது (முடிவு அது)
    முடிவில் முதல் அது
    முதலில் முடிவது
    முடிவில் முதல் அது
    மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது//
    'கௌமாரம்' முழுதும் அடங்கிவிட்டது.
    கொடுமுடி கோகிலத்தின் குரலும், கே.வி.எம்மின் இசையும் பாலோடு கலந்த தேன் போல. அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.////////

    காட்சியை வடிவமைத்து இயக்கிய இயக்குனர் திலகம் ஏ.பி.நாகராஜன் அவர்களையும் சேர்த்துக்கொள்ளூங்கள் சகோதரி. பாடலின் மேன்மைக்கு அவரும் ஒரு காரணம்!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    நல்லதொரு பாடல். மீண்டும் கேட்டு மகிழ வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ஐயா!////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    ஒளவையாரின் பாடல் காலையில் மெய்மறந்து உணரச் செய்து, முருகன் அருள்கிடைக்க தந்தமைக்கு நன்றி ஐயா./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger thanusu said...
    இப்பாடலை முன்பே கேட்டிருந்தும் இன்று பதிவில் வரும்போது புதிதாகவே இருக்கிறது .
    நிறைவைப் பெற்ற மனிதன் எந்த குறையையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ தமிழ் பாட்டி பாடும் பாட்டு, உலகுக்கு நான்கு திசையைப்போல் மனிதனுக்கு நான்கு நிலை . மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள் அய்யா.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger Bhuvaneshwar said...
    பதிவிற்கு மிக்க நன்றிகளும் அன்பு வணக்கங்களும், வாத்தியாரே.
    அம்பிகை அருளால் அவள் பாலன் மீது எனக்கும் ஒரு கவி வந்தது திடீரென்று,
    +++++
    முருகனின் அன்புடைய பக்தர்களான வாத்தியாருக்கும் நண்பர் திரு போகர் அவர்களுக்கும் இது சமர்ப்பணம்.
    +++++
    காரிருள் குழலாள் குழவி
    ஆறிரு வந்தோள் போற்றி;
    சீறிடு முறுபகை மாற்றும்
    தாரணி வோன்வேல் போற்றி;
    மாறிடு மனத்தோர் வஞ்சம்
    காறிடுங் குழந்தை போற்றி;
    சோறிடும் எந்தை போல்வான்
    ஆறுவாய் குடக்கோ போற்றி!
    ஆறிரு வந்தோள்: ஆறு + இரு + வன் + தோள் = பன்னிரண்டு வழிய தோள்கள்
    தாரணி வோன்: தார் + அணிவோன் (தார் - முனை கட்டப்படாத மாலை; திருச்செந்தூர் வேலன் படம் காணவும்)
    ஆறுவாய் குடக்கோ: ஆறு முகம் உடைய, மலைகளுக்கு (குடம் - மலை) அரசன் (முகத்துக்கு வாய் எனும் சொல்லையே பயன்படுத்துவது வடமிழியின் இயல்பு)
    ஐந்தலைப் பொதிகை தங்கும்
    பைந்தமிழ் பிள்ளை முனிவன்
    மைந்தனாக் கொண்டு லகோர்க்கு
    நைந்திடாத் தென்மொழி யீந்த
    அஞ்சிறை மயில் மீதேகி
    அஞ்சிடும் மான்விழி எழுவர்
    மிஞ்சிடும் பிள்ளையி னன்பால்
    கொஞ்சிடும் கோவே போற்றி!
    மைந்தன் = சீடன்;
    அஞ்சிறை: அம் + சிறை = அழகிய சிறகு
    அஞ்சிடும் மான்விழி எழுவர்: மருண்டு விழிக்கும் மான் போன்ற கண்களை உடைய பெண்கள் எழுவர் - கார்த்திகை பெண்டிர்
    கோ: அரசன் - பிள்ளையை ராஜா என கொஞ்சும் பொருளில்.

    இறைவனுக்காக எழுதிய பாடலை இறைவனுக்கே சமர்ப்பணம் செய்யுங்கள்!

    ReplyDelete
  18. //////Blogger Bhuvaneshwar said...
    கார்த்திகை பெண்டிர் அறுவர் தான். எழுவர் என எழுத காரணம் பார்வதீ தேவியையும் சேர்த்து நோக்கியமையால்/////

    பக்தி மிகுதியால், கார்த்திகைப் பெண்களுடன் பராசக்தியையும் சேர்த்துள்ளீர்கள். அவர் என்ன கோபித்துக்கொள்ளவா போகிறார்? கருணையே வடிவானவரல்லவா அவர்!

    ReplyDelete
  19. /////Blogger அய்யர் said...
    முருகா... முருகா..//////

    கந்தா! கடம்பா! கதிவேலா!

    ReplyDelete
  20. இறைவனை விட அவன் அடியார்கள் பெரியவர்கள் அல்லவா? :-)))

    கார்த்திகைப்பெண்டிர் மற்றும் பராசக்தி தேவி முருகனாகிய குழந்தைக்கு தாயார்கள்.... அந்த முறையில் சேர்த்தேன் ஐயா........ :-)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com