25.8.11

Astrology என்ன (டா) செய்யும் விதி?

-------------------------------------------------------------------------------------------
Astrology என்ன (டா) செய்யும் விதி?

"Everything is 'Prewritten' and nothing can be rewritten in our life. So live the best and leave the rest to The Almighty"  என்று நான் அடிக்கடி சொல்வேன்.

“எல்லாமே விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டபடிதான் எதுவுமே நடக்கும் எனும்போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகபோகிறது. ஆகவே கவலையை விட்டொழி” என்பார் கவியரர் கண்ணதாசன்

விதியைப் பற்றி அதிரடியாக, விளக்கமாக, எளிமையாக, இரத்தினச் சுருக்கமாக இரண்டு இரண்டு வரிகளில் எழுதிவைத்து விட்டுப்போனவர் திருவள்ளுவர். திருக்குறளின் 38ஆவது அதிகாரத்தில் பத்துக் குறள்கள் உள்ளன. படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்

“என்ன(டா) செய்யும் விதி?”
“விதி என்று ஒன்று உண்டா?”

என்று கேட்பவர்களுக்கெல்லாம், நான் வள்லுவரின் இந்தக் குறளைத்தான் அடையாளம் காட்டுவேன்:

  “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
     சூழினுந் தான்முந் நுறும்”

இந்தக் குறளுக்கு திரு மு.வரதராசனார் அவர்கள் எழுதிய விளக்க உரை

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் அது தானே முன் வந்து நிற்கும்.

பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள், இந்தக் குறளை மொழிமாற்றம் செய்யும்போது இப்படி எழுதினார்:

Nothing is stronger than destiny.If you try to forfeit destiny, It won't allow and it will come in your way again and again
-----------------------------------------------------------------------------
“சரி, வாத்தி (யாரே) அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”

  “நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று 
விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு 
நடத்துவாய். ஆனால்  மாட்டின் எண்ணிக்கையை இறைவன் 
நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது 
மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது.  அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”
-----------------------------------------------------------------------------
இன்றையப் பாடம் பாடல் வடிவில் உள்ளது. இரவல் வாங்கியது. எழுதியவர் ஒரு மாபெரும் கவிஞர். பாடலின்  எழுத்தாக்கத்தைப் பார்த்தாலே எழுதிய வரைக் கண்டு பிடித்து விடலாம். முயண்ரு பாருங்கள். முடியாதவர்கள்

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள். எழுதியவரின் படத்தைக் கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------
ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
ஆறிரண் டானபின் பள்ளியும் பாடமும்
    ஆரவா ரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
    எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
    தன்நினை வெண்ணியே வாடும்!

காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றம்வரும் குணத்தில்மாற் றம்வரும்
    கொள்கைமாற் றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
    நல்லதாய்க் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநாள் வாழ்ந்தபின்
    வாழ்ந்ததை எண்ணியே வாடும்!

விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
    கவலைகள் உண்டெனக் கண்டோம்
முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
    முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
    தேவனின் லீலைகள் அலவோ!

எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
    வேறென்ன செய்வதோ இதிலே!

தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விழும் பள்ளமே
    உயர்ந்ததோர் நாயகன் கதையே

சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
    சாவினை வென்றவர் இலையே

ஈன்றவள் ஒருத்திபோல் எடுப்பவன் ஒருவனாம்
    இதன்பெயர் ஆண்டவன் விதியே!

பாடலை எழுதியவரின் புகைப்படம் கீழே உள்ளது
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

27 comments:

  1. உண்மை தான் ஐயா,
    எனக்கும் திருமணம் செய்து பார்த்து விடவேண்டும் என என் பெற்றோர்கள் கடந்த3 வருடங்களுக்கும் மேலாக முயற்சிக்கின்றனர். விதியின் பிடியில் இருப்பதால் ஒன்றும் அமைய மாட்டேன் என்கின்றது....
    "விதி வலியது" என்று தினமும் நொந்து கொள்வொம்.
    உண்மையை விளக்கும் அருமையான பதிப்பு.....நன்றிகள் பல.....

    ReplyDelete
  2. ஊழ்... அது தெரியவிட்டால் வாழ்வே
    பாழ்..என சொல்ல யாருக்கு துணிவு.

    சர்ச்சைக்குரிய தலைப்பு.. இதை
    சாட்சிக்குரியதாக மாற்றலாமா..?

    பிறந்த நாட்கள் எல்லாம்
    சிறந்த நாட்களாக அமைய எடுக்கும்

    முயற்சி ஒவ்வொன்றிக்கும்
    தளர்ச்சியில்லா பயணத்திற்கும்

    வளமான வாழ்த்துக்கள்..
    வழக்கமான திருக்குறள் சிந்தனையுடன்

    "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்."

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்.
    கவியரசு கண்ணதாசனின் மிகவும் அற்புதமான பாடல்.

    ///ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
    -------------------------------------------------------------////
    அந்த வரிகளிலே மனித பரிமாண எண்ணங்களை செதுக்கி இருக்கிறார்.

    ////காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
    -------------------------------------------------------------////

    இங்கே மனிதனின் கால சூழலில் அதாவது அவனது விதிப் படி அவனின் கர்ம வினைப் படி ஏற்படும் மன மாற்றங்களை எல்லாம் எடுத்தாண்டிருக்கிறார்.

    விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
    --------------------------------------------------------------

    இவை மனித உடல் பற்றியது... எப்படிப் போற்றினும் கட்டையில் கட்டையாய்ப் போகப் போகுது என்கிறார்.

    எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
    நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
    உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
    ----------------------------------------------------------------

    அத்தனையும் கூறி வந்தக் கவிஞர் வேதாந்தம் பேசுகிறார்... எப்படி! எங்கும் நிறைந்தவன்..எல்லோரிலும் எல்லாமாகி குணம் குறி இல்லாமல் இருப்பவன் அந்த ஈஸ்வரன் அவனே எல்லாம் செய்கிறான் என்கிறார். இதில் நீ என்றும் நானென்றும் சொல்வது அறிவீனம்... நீயும் நானும் சிவமே என்று...

    தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
    ------------------------------------------------------------------

    சரி கடைசியாக என்ன! செய்த கர்மம் தீராது... அவைகளை பட்டுத் தீராது பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் மானிடா... அந்த பேரொளியின் பற்று கோலே ஊன்றுகோல் பள்ளத்தில் இருந்து மேலேற.. அது வரை ஈஸ்வரனை அடைய முடியாது... அது தான் விதி. அந்த விதி யாவருக்கும் ஒன்றே... என்று அற்புதமாக இந்த பிரபஞ்ச தத்துவத்தைஎக் கூறி இருக்கிறார்...

    அருமை.. அற்புதம்.. முதன் முறையாக இப்பாடலை படிக்கிறேன்.

    நன்றிகள் ஐயா!

    வகுப்பறை மாணவன் என்ற தகுதி தேர்வில் தேர்வாகி விட்டேனா ஐயா! ஹி... ஹி.. ஹி... சும்மாத் தான் வர வர எல்லோரும் ரொம்ப சீரியசாவே இருக்காங்க...

    ReplyDelete
  4. ஐயா கும்பிடுகிறேன்னுங்க!

    விதி வசத்தால் பட்ட காயதீர்க்கு உற்ற மருந்து போட்ட வாத்தியார் சாமிக்கு என்னில் அடங்காத கும்பிடுங்க.

    ஆனாலும் ஒன்றை மற்றும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாதுங்க, அது வேறு ஒன்றும் இல்லைங்க , அது தானுங்க மருந்து போட்டு குணபடுத்திய "தலும்புங்க".

    புற தலும்பிர்க்கு மருந்து உண்டு ஆனால் அக தலும்பிர்க்கு உற்ற மருந்து இருந்தா தெரிந்த மேதைகள் கூறவும் தயவு செய்து ?

    ReplyDelete
  5. ////kannan said...

    புற தலும்பிர்க்கு மருந்து உண்டு ஆனால் அக தலும்பிர்க்கு உற்ற மருந்து இருந்தா தெரிந்த மேதைகள் கூறவும் தயவு செய்து ?////

    யார் அந்த அகம் அவனின் தன்மை தான் என்ன என்று கண்ணதாசனார் தெளிவாக சொல்லி விட்டாரே "ஈஸ்வரனே எல்லாம் என்று" நண்பரே.
    அந்த அகம் அழிவில்லாதது, அழுக்குப் படியாதது, அதை எந்தத் தீயும் தீண்ட முடியாது.... அந்த அகம் தானே இந்த பிரபஞ்சத்தின் மனம். அது தானே இந்த பிற பஞ்சத்தின் பிறப்பிடம். அப்படி இருக்க அகத் தழும்பு என்பது மாயை. "நான் கடவுள் என்று உணர்"

    நண்பரே பாரதியாரின் கவிதைகள் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள். தங்களின் மனம் தெளிவுறும்.

    நேரம் இருப்பின் "அன்னைத் தமிழுக்கு" http://tamizhvirumbi.blogspot.com/ வந்து செல்வீர்.

    "சென்றதினி மீளாது;மூடரே,நீர்
    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
    இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
    அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.

    மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
    மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
    மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
    மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
    ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
    அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
    மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
    வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்".

    நண்பர் கண்ணன் அவர்களே தாங்கள் மேதை பதில் அளிக்க வேண்டியிருந்தீர்.... அடியேன் சிறுவனே என்று அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன்.
    நீண்டப் பின்னூட்டம் வாத்தியார் பொருத்தருள வேண்டும். நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. தமிழ் விரும்பி அவர்கள் வரிக்கு வரி இந்த பாடலை சிலாகித்து படித்திருக்கிறார் போலும். அவருடைய பின்னூட்டத்திலிருந்து இது தெரிகிறது.

    //அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”//

    இதற்கும் வள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறாரே. தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். விதிவசத்தால் ஒரு காரியம் கைகூடாமல் போனாலும் செய்த முயற்சியின் அளவிற்காகவாவது (அல்லது மெய் வருந்திய அளவிற்கு) ஏதாவது கிடைக்கலாம்.

    நீண்ட ஓய்வில் இருப்பதால் இந்த வகுப்பறைக்கு தினமும் வர முடிகிறது. விரைவில் என் வகுப்பறையிலும் விட்ட இடத்திலிருந்து தொடர எண்ணியுள்ளேன்.

    ReplyDelete
  7. வாத்தியார் சாமிக்கு வணக்கம்.

    இப்பாலகனின் கேள்விக்கு நட்சுன்னு பதில் கூறிய தமிழ் விரும்பி
    அவர்களுக்கு மனதார எம்முடைய நன்றியுடன் கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

    ReplyDelete
  8. //// ananth said...
    இதற்கும் வள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறாரே. தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். விதிவசத்தால் ஒரு காரியம் கைகூடாமல் போனாலும் செய்த முயற்சியின் அளவிற்காகவாவது (அல்லது மெய் வருந்திய அளவிற்கு) ஏதாவது கிடைக்கலாம்.//////

    உண்மைதான் நண்பரே...
    எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் உண்டு... நாம் செய்யும் காரியம் காரணத்தோடு கூடியது.... அந்தக் காரணம் முந்தையக் கர்மாவால் தோன்றுவது. நாம் செய்யும் காரியம் புத்தியில் இருந்து மனத்திற்கும் மனத்தில் இருந்து மூளைக்கும், மூளையிலிருந்து பொறிகளின் புலன்களின் வழியாக பொறிகளை அடைகிறது. கடைசியாக அந்த செயல் பொறிகள் என்னும் கருவியால் செய்து முடிக்கப் படுகிறது. பொறி, புலன் மூளை இவைகள் நமது உடலில் உள்ளன.. மனமும் புத்தியும் மிக நுண்ணிய தூல உடலில் உள்ளன... அந்த தூல உடலையும் இயக்குவது ஆன்மா. வலது பக்கம் இருக்கக் கூடிய ஒளிமயமான இதயம்.

    அது பூர்வ ஜன்ம வினையை விதியாகக் கொண்டு செயல் படுகிறது. அதன் படியே அவனின் கர்மாவை நடத்தி முடிப்பதற்கான வாய்ப்பை பெறக் கூடிய இடத்திலே பிறக்க வைப்பது விதி.... இப்படி இருக்க விதி நடக்க அங்கே செயல் நடந்து தானே ஆக வேண்டும்... பலன் என்னவோ விதியின் கையில் என்றாலும்... அதனால் ஒரு அனுபவம் கிடைக்கும்.. அல்லது வேறொருவருக்குப் பலனாக முடியும் அல்லவா! அதோடு கர்மமும் எப்படித்தான் தீர்வது அதனால் தான் வள்ளுவன் செய் செய்து கொண்டே இரு... அது நீ எதிபார்க்கும் பலனாக இருக்குமா என்பதை விதி நிர்ணயிக்கும்.. ஆனால் செயலை நிறுத்தாதே.... அது தெய்வம் (உன் ஆத்மா / அதுவும் தெய்வத்தின் ஒருதுளியே) செய்யும் காரியத்திற்கான உடல் உழைப்பிற்கான பலனது மிஞ்சும் என்கிறார்.

    விதி படி நடப்பது செயலின் பலனே... செயலே இல்லாமல் இருந்தால் முடிவு எப்படித் தெரியும். எல்லா செயலுக்கும் பலன் உண்டு அது நமக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம் அதற்காக பலன் இல்லை என்பதில்லை.
    தாங்கள் கூறிய அந்தக் குறளின் முன்னும் பின்னும் அய்யன் வள்ளுவன் சொல்லியுள்ளான் பாருங்கள்....

    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.

    நல்ல விதி உனக்கு இல்லாவிட்டால் பழி இல்லை... அதற்காக அறிய வேண்டியதை அறிந்து கொண்டு முயற்சி செய்யாமல் இருப்பதே பழி என்கிறான்...

    அதன் பிறகு அதற்கு அடுத்து பாருங்கள்... நீ சோம்பி இருக்காதே செய்ய வேண்டியதை செய்து கொண்டே இரு.... அதுவும் முயற்சியில் தாளாமல் தொடர்ந்து முயற்சி செய் அப்போது அது அந்த இடையூறு செய்யும் உனது ஊழையும் ஒரு பக்கம் தள்ளிவிடும் வெற்றிக் கிட்டும் என்கிறான் இது தன முனைப்பே.. விதி தீராதது என்று அவ நம்பிக்கையில் இடையிலே பொய் விடுவான் மனிதன் அதனாலே மன இயல் சார்ந்த விஷயத்தை சொல்லி விட்டான்... அவனும் அறிவான் விதி வலியது.. அதன் படியேத் தான் நடக்கும் என்று... ஆக, பலனை எதிர்பார்க்காதே கடமையை செய் தொழில் செய்... நீ சந்தோசமாக இருக்க வேண்டும் அதனால் அதன் மீது பற்றில்லாமல் முனைப் போடு செய் என்றான் கீதையிலே கண்ணன். பற்றில்லாமல் என்பது தோற்றால் அங்கே உட்கார்ந்து ஒப்பாரி வைக்காமல் அடுத்த நிலைக்குப் போவது... என்பது. நிச்சயம் பலன் உண்டு அது நல்லதா, கெட்டதா விதி நிர்ணயிக்கும். ஒரு பரிசு இரு போட்டியாளர் ஒருவரின் வெற்றி மற்றொருவரின் தோல்வி... தொடர்ந்து போராடு சென்ற முறை உடல் வலிக்க ஆடித் தோற்ற அனுபவம் இம்முறை கைகொடுக்கலாம்.
    நன்றிகள் நண்பரே!

    வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
    கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
    விண்ணுறுவார்க் கில்லை விதி.

    ஒளவை பாட்டி இன்னும் நிறைய சொல்லி இருக்கிறார் நல்வழியிலே..

    ReplyDelete
  9. ரசித்து வாசித்தேன்...

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,

    நான் உங்களுடைய கட்டுரைகளை நீண்ட நாட்களாக வாசித்து வருகின்றேன். புரிந்தது பாதி புரியாதது பாதி, மனதில் நிற்பது பாதி மறந்து போவது பாதியாக உள்ளது. தயவு செய்து உங்கள் வகுப்பறையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றன்.

    உண்மையுடன்
    Sky Moon

    ReplyDelete
  11. நான் எதுவும் சொன்னால் கொல்லர் பட்டறையில் ஊசி விற்பது போல் ஆகிவிடும் சாமியோவ்!ஜூட்....!

    ReplyDelete
  12. ஆனந்து சார்,
    வாங்கோ வாங்கோ ரொம்ப பாடம் போடுங்க ரொம்ப எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

    வாத்தியார் சார்,
    தங்கள் எப்பொழுது அஷ்டவர்க்கம் தொடங்குவிங்கோ நான் எதிர்பார்த்துகொண்டிருப்பேன்.

    ReplyDelete
  13. /////Blogger Ramachandran S said...
    உண்மை தான் ஐயா,
    எனக்கும் திருமணம் செய்து பார்த்து விடவேண்டும் என என் பெற்றோர்கள் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக முயற்சிக்கின்றனர். விதியின் பிடியில் இருப்பதால் ஒன்றும் அமைய மாட்டேன் என்கின்றது....
    "விதி வலியது" என்று தினமும் நொந்து கொள்வொம்.
    உண்மையை விளக்கும் அருமையான பதிப்பு.....நன்றிகள் பல...../////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. Blogger தமிழ் விரும்பி said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    கவியரசு கண்ணதாசனின் மிகவும் அற்புதமான பாடல்.
    ///ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
    -------------------------------------------------------------////
    அந்த வரிகளிலே மனித பரிமாண எண்ணங்களை செதுக்கி இருக்கிறார். ////காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
    -------------------------------------------------------------////
    இங்கே மனிதனின் கால சூழலில் அதாவது அவனது விதிப் படி அவனின் கர்ம வினைப் படி ஏற்படும் மன மாற்றங்களை எல்லாம் எடுத்தாண்டிருக்கிறார்.
    விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
    --------------------------------------------------------------
    இவை மனித உடல் பற்றியது... எப்படிப் போற்றினும் கட்டையில் கட்டையாய்ப் போகப் போகுது என்கிறார்.
    எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
    நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
    உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
    ----------------------------------------------------------------
    அத்தனையும் கூறி வந்தக் கவிஞர் வேதாந்தம் பேசுகிறார்... எப்படி! எங்கும் நிறைந்தவன்..எல்லோரிலும் எல்லாமாகி குணம் குறி இல்லாமல் இருப்பவன் அந்த ஈஸ்வரன் அவனே எல்லாம் செய்கிறான் என்கிறார். இதில் நீ என்றும் நானென்றும் சொல்வது அறிவீனம்... நீயும் நானும் சிவமே என்று...
    தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
    ------------------------------------------------------------------
    சரி கடைசியாக என்ன! செய்த கர்மம் தீராது... அவைகளை பட்டுத் தீராது பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் மானிடா... அந்த பேரொளியின் பற்று கோலே ஊன்றுகோல் பள்ளத்தில் இருந்து மேலேற.. அது வரை ஈஸ்வரனை அடைய முடியாது... அது தான் விதி. அந்த விதி யாவருக்கும் ஒன்றே... என்று அற்புதமாக இந்த பிரபஞ்ச தத்துவத்தைஎக் கூறி இருக்கிறார்...
    அருமை.. அற்புதம்.. முதன் முறையாக இப்பாடலை படிக்கிறேன்.
    நன்றிகள் ஐயா!
    வகுப்பறை மாணவன் என்ற தகுதி தேர்வில் தேர்வாகி விட்டேனா ஐயா! ஹி... ஹி.. ஹி... சும்மாத் தான் வர வர எல்லோரும் ரொம்ப சீரியசாவே இருக்காங்க../////////////.

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ///////Blogger kannan said...
    ஐயா கும்பிடுகிறேன்னுங்க!
    விதி வசத்தால் பட்ட காயத்திற்கு உற்ற மருந்து போட்ட வாத்தியார் சாமிக்கு எண்ணில் அடங்காத கும்பிடுங்க.
    ஆனாலும் ஒன்றை மற்றும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாதுங்க, அது வேறு ஒன்றும் இல்லைங்க , அது தானுங்க மருந்து போட்டு குணபடுத்திய "தழும்புங்க".
    புறத் தழும்பிற்க்கு மருந்து உண்டு ஆனால் அகத் தழுலும்பிற்கு உற்ற மருந்து இருந்தா தெரிந்த மேதைகள் கூறவும் தயவு செய்து?/////

    அகத் தழும்புகளுக்கு இறைவழிபாடுதான் இயற்கை மருந்து! Take it easy என்னும் அலோபதி மருந்தும் உண்டு.

    ReplyDelete
  16. ///////Blogger தமிழ் விரும்பி said...
    ////kannan said...
    புற தலும்பிர்க்கு மருந்து உண்டு ஆனால் அக தலும்பிர்க்கு உற்ற மருந்து இருந்தா தெரிந்த மேதைகள் கூறவும் தயவு செய்து ?////
    யார் அந்த அகம் அவனின் தன்மை தான் என்ன என்று கண்ணதாசனார் தெளிவாக சொல்லி விட்டாரே "ஈஸ்வரனே எல்லாம் என்று" நண்பரே.
    அந்த அகம் அழிவில்லாதது, அழுக்குப் படியாதது, அதை எந்தத் தீயும் தீண்ட முடியாது.... அந்த அகம் தானே இந்த பிரபஞ்சத்தின் மனம். அது தானே இந்த பிற பஞ்சத்தின் பிறப்பிடம். அப்படி இருக்க அகத் தழும்பு என்பது மாயை. "நான் கடவுள் என்று உணர்"
    நண்பரே பாரதியாரின் கவிதைகள் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள். தங்களின் மனம் தெளிவுறும்.
    நேரம் இருப்பின் "அன்னைத் தமிழுக்கு" http://tamizhvirumbi.blogspot.com/ வந்து செல்வீர்.
    "சென்றதினி மீளாது;மூடரே,நீர்
    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
    இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
    அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.
    மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
    மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
    மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
    மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
    ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
    அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
    மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
    வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்".
    நண்பர் கண்ணன் அவர்களே தாங்கள் மேதை பதில் அளிக்க வேண்டியிருந்தீர்.... அடியேன் சிறுவனே என்று அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன்.
    நீண்டப் பின்னூட்டம் வாத்தியார் பொருத்தருள வேண்டும். நன்றிகள் ஐயா!//////

    ஆகா, உங்களுக்கு எப்போதுமே, எல்லாவிதத்திலுமே, வாத்தியாரின் அருள் உண்டு. அதை மனதில் கொள்க!

    ReplyDelete
  17. //////Blogger ananth said...
    தமிழ் விரும்பி அவர்கள் வரிக்கு வரி இந்த பாடலை சிலாகித்து படித்திருக்கிறார் போலும். அவருடைய பின்னூட்டத்திலிருந்து இது தெரிகிறது.
    //அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”//
    இதற்கும் வள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறாரே. தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். விதிவசத்தால் ஒரு காரியம் கைகூடாமல் போனாலும் செய்த முயற்சியின் அளவிற்காகவாவது (அல்லது மெய் வருந்திய அளவிற்கு) ஏதாவது கிடைக்கலாம்.
    நீண்ட ஓய்வில் இருப்பதால் இந்த வகுப்பறைக்கு தினமும் வர முடிகிறது. விரைவில் என் வகுப்பறையிலும் விட்ட இடத்திலிருந்து தொடர எண்ணியுள்ளேன்./////

    நன்றி, அப்படியே செய்யுங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  18. ///////Blogger kannan said...
    வாத்தியார் சாமிக்கு வணக்கம்.
    இப்பாலகனின் கேள்விக்கு நச்சென்று பதில் கூறிய தமிழ் விரும்பி அவர்களுக்கு மனதார என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன்.///////

    நல்லது. கண்ணன்!

    ReplyDelete
  19. /////////Blogger தமிழ் விரும்பி said...
    //// ananth said...
    இதற்கும் வள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறாரே. தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். விதிவசத்தால் ஒரு காரியம் கைகூடாமல் போனாலும் செய்த முயற்சியின் அளவிற்காகவாவது (அல்லது மெய் வருந்திய அளவிற்கு) ஏதாவது கிடைக்கலாம்.//////
    உண்மைதான் நண்பரே...
    எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் உண்டு... நாம் செய்யும் காரியம் காரணத்தோடு கூடியது.... அந்தக் காரணம் முந்தையக் கர்மாவால் தோன்றுவது. நாம் செய்யும் காரியம் புத்தியில் இருந்து மனத்திற்கும் மனத்தில் இருந்து மூளைக்கும், மூளையிலிருந்து பொறிகளின் புலன்களின் வழியாக பொறிகளை அடைகிறது. கடைசியாக அந்த செயல் பொறிகள் என்னும் கருவியால் செய்து முடிக்கப் படுகிறது. பொறி, புலன் மூளை இவைகள் நமது உடலில் உள்ளன.. மனமும் புத்தியும் மிக நுண்ணிய தூல உடலில் உள்ளன... அந்த தூல உடலையும் இயக்குவது ஆன்மா. வலது பக்கம் இருக்கக் கூடிய ஒளிமயமான இதயம்.
    அது பூர்வ ஜன்ம வினையை விதியாகக் கொண்டு செயல் படுகிறது. அதன் படியே அவனின் கர்மாவை நடத்தி முடிப்பதற்கான வாய்ப்பை பெறக் கூடிய இடத்திலே பிறக்க வைப்பது விதி.... இப்படி இருக்க விதி நடக்க அங்கே செயல் நடந்து தானே ஆக வேண்டும்... பலன் என்னவோ விதியின் கையில் என்றாலும்... அதனால் ஒரு அனுபவம் கிடைக்கும்.. அல்லது வேறொருவருக்குப் பலனாக முடியும் அல்லவா! அதோடு கர்மமும் எப்படித்தான் தீர்வது அதனால் தான் வள்ளுவன் செய் செய்து கொண்டே இரு... அது நீ எதிபார்க்கும் பலனாக இருக்குமா என்பதை விதி நிர்ணயிக்கும்.. ஆனால் செயலை நிறுத்தாதே.... அது தெய்வம் (உன் ஆத்மா / அதுவும் தெய்வத்தின் ஒருதுளியே) செய்யும் காரியத்திற்கான உடல் உழைப்பிற்கான பலனது மிஞ்சும் என்கிறார்.
    விதி படி நடப்பது செயலின் பலனே... செயலே இல்லாமல் இருந்தால் முடிவு எப்படித் தெரியும். எல்லா செயலுக்கும் பலன் உண்டு அது நமக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம் அதற்காக பலன் இல்லை என்பதில்லை.
    தாங்கள் கூறிய அந்தக் குறளின் முன்னும் பின்னும் அய்யன் வள்ளுவன் சொல்லியுள்ளான் பாருங்கள்...
    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.
    நல்ல விதி உனக்கு இல்லாவிட்டால் பழி இல்லை... அதற்காக அறிய வேண்டியதை அறிந்து கொண்டு முயற்சி செய்யாமல் இருப்பதே பழி என்கிறான்...
    அதன் பிறகு அதற்கு அடுத்து பாருங்கள்... நீ சோம்பி இருக்காதே செய்ய வேண்டியதை செய்து கொண்டே இரு.... அதுவும் முயற்சியில் தாளாமல் தொடர்ந்து முயற்சி செய் அப்போது அது அந்த இடையூறு செய்யும் உனது ஊழையும் ஒரு பக்கம் தள்ளிவிடும் வெற்றிக் கிட்டும் என்கிறான் இது தன முனைப்பே.. விதி தீராதது என்று அவ நம்பிக்கையில் இடையிலே பொய் விடுவான் மனிதன் அதனாலே மன இயல் சார்ந்த விஷயத்தை சொல்லி விட்டான்... அவனும் அறிவான் விதி வலியது.. அதன் படியேத் தான் நடக்கும் என்று... ஆக, பலனை எதிர்பார்க்காதே கடமையை செய் தொழில் செய்... நீ சந்தோசமாக இருக்க வேண்டும் அதனால் அதன் மீது பற்றில்லாமல் முனைப் போடு செய் என்றான் கீதையிலே கண்ணன். பற்றில்லாமல் என்பது தோற்றால் அங்கே உட்கார்ந்து ஒப்பாரி வைக்காமல் அடுத்த நிலைக்குப் போவது... என்பது. நிச்சயம் பலன் உண்டு அது நல்லதா, கெட்டதா விதி நிர்ணயிக்கும். ஒரு பரிசு இரு போட்டியாளர் ஒருவரின் வெற்றி மற்றொருவரின் தோல்வி... தொடர்ந்து போராடு சென்ற முறை உடல் வலிக்க ஆடித் தோற்ற அனுபவம் இம்முறை கைகொடுக்கலாம்.
    நன்றிகள் நண்பரே!
    வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
    கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
    விண்ணுறுவார்க் கில்லை விதி.
    ஒளவை பாட்டி இன்னும் நிறைய சொல்லி இருக்கிறார் நல்வழியிலே../////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு மீண்டும் ஒரு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger ரெவெரி said...
    ரசித்து வாசித்தேன்...//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  21. /////Blogger Sky Moon said...
    வணக்கம் ஐயா,
    நான் உங்களுடைய கட்டுரைகளை நீண்ட நாட்களாக வாசித்து வருகின்றேன். புரிந்தது பாதி புரியாதது பாதி, மனதில் நிற்பது பாதி மறந்து போவது பாதியாக உள்ளது. தயவு செய்து உங்கள் வகுப்பறையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றன்.
    உண்மையுடன்
    Sky Moon//////

    இது திறந்தவெளி இணைய வகுப்பறை. யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். அனுமதிக்கெல்லாம் இங்கு வேலையே இல்லை!

    ReplyDelete
  22. ////////Blogger kmr.krishnan said...
    நான் எதுவும் சொன்னால் கொல்லர் பட்டறையில் ஊசி விற்பது போல் ஆகிவிடும் சாமியோவ்!ஜூட்....!//////

    விற்பது வெள்ளி ஊசி அல்லது தங்க ஊசி என்றால் வேண்டாம் என்றா சொல்லிவிடுவார்கள்?

    ReplyDelete
  23. ///////Blogger sundari said...
    ஆனந்து சார்,
    வாங்கோ வாங்கோ ரொம்ப பாடம் போடுங்க ரொம்ப எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
    வாத்தியார் சார்,
    தங்கள் எப்பொழுது அஷ்டவர்க்கம் தொடங்குவிங்கோ நான் எதிர்பார்த்துகொண்டிருப்பேன்.///////

    அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து துவங்கும் சகோதரி!

    ReplyDelete
  24. Ayya,

    Even me too tried to win Destiny so many times, but Destiny won the race always..:(

    Arumaya sonnerkalll..

    Sincere Student,
    Ravi

    ReplyDelete
  25. அருமையான பாடலைப்பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  26. நண்பர் கண்ணன் அவர்களே தாங்கள் மேதை பதில் அளிக்க வேண்டியிருந்தீர்.... அடியேன் சிறுவனே என்று அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன்.//

    இந்த கமெண்ட் க்கு ஏதாவது எழுதலாம்னு யோசிச்சிகிட்டே படிச்சா கடைசில இத எழுதி தப்பிச்சிட்டீங்க. நல்ல தொலைநோக்குப்பார்வை உங்களுக்கு!!!

    ReplyDelete
  27. ///
    இது திறந்தவெளி இணைய வகுப்பறை. யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். அனுமதிக்கெல்லாம் இங்கு வேலையே இல்லை! ///

    உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி ஐயா,

    நான் பாடங்களைப் படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை, நீங்கள் மற்றவர்களின் சந்தேகங்களிற்கு அளித்திருக்கும் விளக்கங்களிலிருந்து ஓரளவிற்கு தீர்த்துக்கொள்வேன். நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகளிற்கு நேரடியாக சந்தேகங்களை கேட்பதற்கும் பின்னூட்டல் இடுவதற்கும் விருப்படுவதால்தான் உங்கள் வகுப்பறையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். சந்தேகங்களை கேட்பதற்கும் பின்னூட்டல் இடுவதற்கும் முன்னதாக அறிமுகம் செய்து கெள்வது முறையாக இருக்கும் என்பதால் எனது அறிமுகத்தை உங்கள் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கின்றேன்.

    உண்மையுடன்
    Sky Moon.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com