11.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3

முந்தைய பகுதிகள் இங்கே!

1. பகுதி 1

2. பகுதி 2

அவற்றைப் படித்துவிட்டு வாருங்கள் - இல்லையென்றால்
இந்தப் பகுதி சத்தியமாகப் புரியாது! மற்றும் சுவைக்காது!
-----------------------------------------------------------------------
'நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,
அனுமதிச் சீட்டை வழங்கினார்' என்ற சென்ற பதிவின் கடைசி வரிகளைப் படித்து
விட்டு நம் வலையுலக 40 பக்க நோட்டுப் பதிவர் சற்றுக் கன்ஃபியூஸாகி விட்டார்
----------------------------------------------------------------------------------------------
(அவருடைய ஒவ்வொரு பதிவையும் - 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் நுணுக்கி
நுணுக்கி 1 Page x 32 lines x 40 pages = Total Lines 1,280 எழுதிப் பிறகு அதை
மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்து இடுகையைப் பதிவிடும் அற்புதமான பதிவர்
அவர்.

ஒவ்வொரு பதிவும் Mary Brown Chain Shoppe யின் Stuffed Burger மாதிரி
சுவையாக இருக்கும் படிப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

அவர் எழுதும் சினிமா ரிவியூ'வெல்லாம் படத்தை நேரில் பார்ப்பதைவிட
அற்புதமாகக் கண்முன் வந்து நிற்கும். அந்த ஆங்கிலப் படங்களின் இயக்குனர்கள்
எல்லால் இவருடைய ரிவ்யூக்களைப் படித்தால், உடனே தாங்கள் இருக்கும்
நாட்டில் இருந்து அடுத்த ப்ளைட்டைப் பிடித்து இங்கே வந்து இவரைக் கட்டித்
தழுவி தங்கள் பாராட்டைத் தெரிவித்து விட்டுதான் அடுத்த வேலையைப்
பார்ப்பார்கள்.

அப்படியொரு திறமைசாலி. அடுத்தவர்களைப் பாராட்டும் நல்ல உள்ளம்
படைத்தவர் அவர். அவருக்கு நம் வலையுலகக் கண்மணிகள் வைத்திருக்கும்
பெயர்தான் அந்தப் பெயர் - எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை?

எனக்கும் அப்படி எழுத ஆசை. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டால்
மட்டுமே அது சாத்தியப்படும். - அதற்கு அவர் சம்மதிக்கவும் வேண்டுமே?
விளக்கம் போதுமா?)
-------------------------------------------------------------------------------------------------------------------
//நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,
அனுமதிச் சீட்டை வழங்கினார்.// இங்கனதான் 'சனி' அவரைப் பிடிச்சிருப்பான்னு
நினைக்கிறேன்..கரீக்ட்டா வாத்தியாரே..? என்று அவர் கேட்டிருந்தார்

அதற்கு நான் உடனே பதில் சொல்லி விட்டேன்.

“கரீக்ட் இல்லை தமிழரே!நீங்கள் பதிவை மறுபடியும் ஒரு தடவை படிப்பது நல்லது!
சனி படிக்க வந்தாரா? பிடிக்க வந்தாரா? பிடிக்க வேண்டுமென்றால் அவர் அதை
தன் இடத்திலிருந்தே சும்மா just like that' பிடித்து விடுவாரே! இங்கே வந்தது
படிக்க அல்லவா?”

உங்களுக்கும் அதைத்தான் சொல்கிறேன்.

அவர் வந்தது படிக்க மட்டுமே! ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டு மேலே
படிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்
---------------------------------------------------------------------------------------------------------------------
நினைத்ததைச் சாதித்துப் பள்ளியில் சீட் வாங்கிவிட்ட சனீஸ்வரனுக்கு அன்றையப்
பொழுது சாதாரணமாகக் கழிந்து விட்டது.

பள்ளி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி, உணவு விடுதி, வகுப்புக்கள், நூலகம்,
மற்ற ஆசிரியர்களின் அறிமுகம் என்று பகல் பொழுது ஓடிவிட்டது. இரவில்
அங்கங்கே பெரிய தீப்பந்த வெளிச்சம் மட்டும்தான். எல்லோரும் எட்டு மணிக்கே
உறங்க ஆரம்பித்து விடுவார்கள்.

முதல் முறையாக சனி பகவானும் கயிற்றுக் கட்டிலில் படுத்து நன்றாக உறங்கி
விட்டார்.

அடுத்த நாள் முதல் சிரத்தையாக வகுப்புக்குச் சென்று படிக்க ஆரம்பித்தார்.
மூன்று வாரங்கள் வரை எல்லாம் சுமுகமாக இருந்தது.

அந்த மாத இறுதியில் நடந்த பரீட்சையில், சனி பகவான் ஒரு கலக்குக் கலக்கி
விட்டார். வகுப்பு ஆசிரியர் மிரண்டு போய்விட்டார். வாழ்க்கை நெறிமுறைகள்
பாட ஆசிரியர் கேட்டிருந்த கேள்விகளுக்கு படித்த பாடத்திலிருந்து சரியான
பதிலைக் கச்சிதமாக எழுதியதுடன், அதற்குப் பொருத்தமாக வேறு ஒரு விடை
விகிதம் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு கூடுதல் விடையையும் எழுதி வைத்திருந்
தார். ஆசிரியர் நடத்தியிருந்த பாடப்படியான விடை சிறந்த விடைதான் என்றா
லும், சனீஸ்வரன் எழுதிய விடை டபுள் சிறப்பாக இருந்தது. அதைக்கண்ட
ஆசிரியர் வியந்து போய்விட்டார்.

அதுபோல அந்த மூன்று வாரகாலத்தில் அந்தப் பள்ளியின் சக மாணவர்கள்
பாதிப் பேர்களுக்குமேல் சனீஸ்வரனோடு நட்பாகிவிட்டார்கள்.

முதல் மூன்று நாட்கள், குருகுலத்தின் பின்புறம் ஓடிக்கொண்டிருந்த ஆற்றிற்கு
அவர்களுடன் குளிக்கச் சென்ற சனீஸ்வரன், குளித்ததோடு என்ன நடக்கிறது
என்று பார்த்துவிட்டு மட்டும் திரும்பினார்.

அங்கே சில வம்படி மாணவர்கள் தங்கள் கில்லாடித்தனத்தை நீச்சலில்
காண்பிப்பதுடன், பயந்த சுபாவம் உள்ள மாணவர்களிடம் சேட்டைகள்
செய்வதும் வழக்கம். எல்லாம் அந்த வயதிற்காக குறும்பு. அவ்வளவுதான்

ஆனால் நான்காம் நாள் குளிக்கச் சென்ற சனீஸ்வரன் அந்த அடாவடிகளை
எல்லாம் தண்ணீருக்குள்ளேயே வைத்துப் புரட்டி எடுத்து விட்டார்.

அவர்களுடைய சேட்டைகள் எல்லாம் அன்றே களையப்பட்டு, அனைவரிடமும்
சமத்துவம் நிலவ ஆரம்பித்தது. அதோடு சனீஸ்வரன், நீர் விளையாட்டு முதல்
மற்ற விளையாட்டுக்களில் உள்ள நுணுக்கங்களையும் அவ்வப்போது அனைவ
ருக்கும் சொல்லிக் கொடுத்தார். நாளும் பொழுதுமாக நட்பு வளர்ந்தது.

அதேபோல் இறைவழிபாடு பயிற்சி வகுப்புக்களிலும் சனீஸ்வரன் கலக்க
ஆரம்பித்து விட்டார். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடல்களை அவர்கள்
சொல்லிய கனமே மனதில் வாங்கிப் பதிய வைத்ததோடு, கேட்கப்படும்
போது எழுந்து, தடுமாற்றம் இன்றி அசத்தலாகப் பாடியும் காட்டினார்

அதுவும் எப்படி? ஒரு திறமையான மிமிக்கிரி கலைஞர் போல, ஒரே பாட்டை
சிர்காழியைப்போன்ற குரலிலோ அல்லது யேசுதாஸ் போன்ற மெலடியான
குரலிலோ அல்லது உதித் நாராயணனின் எழரைக் கட்டைக் குரலிலோ
பாடிக்காட்டி அசத்தினார்.

பள்ளி முழுவதும் - ஒரே ஒருவரைத்தவிர - சனீஸ்வரனின் புகழ் பரவிவிட்டது.

அந்த ஒருவரான த்ரைவேதி எனப்படும் தலைமை ஆசிரியருக்கும் ஒருநாள்
நம்ம அரவிந்தசாமி சனீஸ்வரனின் புகழ் தெரிய வந்தது.

உதவி அசிரியர் ஒருவர் தலைமையைச் சந்தித்து, நடந்ததையெல்லாம் விவரித்து,
அந்தப் பையன் ஒரு பிறவி மேதை (Born Genius) என்று போட்டுக் கொடுக்க,
வேத பாடங்களை மட்டும், அதுவும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு
மட்டுமே நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், சனீஸ்வரனை அழைத்து
எதிரில் உட்கார வைத்து விசாரிக்க, சனீஸ்வரன், தன்னைப்பற்றிய சில விஷயங்
களை உடனே தெளிவு படுத்தினார்.

வாழ்க்கையின் தர்மங்களும், கர்மங்களும் தனக்கு அத்துபடி என்றும், அதோடு
இறைவழிபாட்டின் அத்தனை சாராம்சங்களும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும்
தன் தந்தை அவற்றை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார் என்றும்,
தான் அங்கே வந்த நோக்கம் வேதங்களை மட்டுமே கற்றுக் கொள்ள என்றும்
சொல்லி முடித்தார்.

சனீஸ்வரனின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, அவை அனைத்தையும்
கேட்ட தலைமை அசிரியர், கிஞ்சித்தும் பொய் இல்லை என்பதை உணர்ந்து,
கேட்டார்.

“தம்பி, இங்கே சேர்ந்தபோது அதைச் சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்ல
வில்லை!”

“ஒரு பாடத்திற்காக மட்டும் என்னை எப்படிச் சேர்த்துக் கொள்வீர்கள்? அதனால்
தான் சொல்ல வில்லை. என்ன அறியாமல் என்னுடைய மேதாவித்தனம் மற்ற
வகுப்புக்களில் வெளிப்பட்டு விட்டது. தவறுதான் அய்யா”

தலைமையும் ஒரு அறிவுஜீவியல்லவா? உடனே முடிவெடுத்தார்.

”இன்று முதல் உனக்கு வேதபாடங்கள் மட்டுமே! காலையில் ஒரு மணி நேரம்,
மாலையில் ஒரு மணிநேரம் நானே நடத்துகிறேன். என்னுடைய இந்த அறைதான்
இனி உன்னுடைய வகுப்பு அறை. மற்ற நேரங்களில் நீ இங்குள்ள ஓலைச்
சுவடிகளை எடுத்துப்படி! அதோடு உனக்கு ஆறு மாதகாலத்திற்குள் எல்லா
வேதங்களையும் சொல்லிக் கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு ஒருதினம்
கூட நீ இங்கே தங்க வேண்டாம். உன் ஊருக்கு நீ புறப்பட்டுப் போய் விடலாம்.
இவ்வளவு அருமையான பிள்ளையைப் பிரிந்து உன்னுடைய பெற்றோர்கள்
எப்படித் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ?” என்று சொன்னதோடு அதை
நடைமுறைப் படுத்தவும் செய்தார்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமானதுதான் என்றாலும், பதிவின்
நீளத்தைக் கருதியும், உங்களின் பொறுமையைக் கருதியும், நான் இப்போது
அவை எல்லாவ்ற்றையும் ஸ்கிப் செய்து விட்டு, கதையின் முதல் க்ளைமாக்ஸ்
காட்சிக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகிறேன்.

ஆமாம், கதையில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள். இப்போது முதல்
க்ளிமாக்ஸ் காட்சி!
---------------------------------------------------------------------------------------------------------------
(தொடரும்)

14 comments:

  1. இரண்டு கிளைமாக்ஸ்ஸையும் சேர்த்து ஒரே பதிவாக போடவும்.

    ஆவல் அதிகமாக உளது ஐயா.

    ReplyDelete
  2. அருமை ஐ யா, ஜோதிடம் கூட கதைகள் மூலம் சொல்லும் உங்கள் நடை முறை என்னை பரம விசிறி ஆகிவிட்டது, எண்னாக்கு இது வரை இல்லாத உங்கள் தொகுப்பு தவிர்த்து, கதை மூலம் பாடல் சொல்லும் நடை பிடித்தித்து இருக்கிறது, அமீர் காண் போல, தமாதத்திற்கு மாணிக்கவும் என்றும் உங்கள் அன்புடன் மக்கு மாணவன் விமல்

    ReplyDelete
  3. Kathaiyin aduththa paguthiyai aavaludan ethirparkirom. Engalai ungal ezhuththaal katti poattu vidugireergal aiyya.

    Regards,
    Sara,
    CMB

    ReplyDelete
  4. கணிப்பொறியின் முன்னால் அமர்ந்ததும் இணையத்தில் வகுப்பறையை தேட வைத்துள்ளது உங்கள் எழுத்து.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  5. அன்புடையீர்

    மிகநன்றாக உள்ளது
    கிளைமாக்ஸ் எதிர்பார்த்தி காத்துள்ளேன்.

    ReplyDelete
  6. வாத்தியாரே..

    எனக்குப் போய் இவ்ளோ பெரிய அறிமுகம் தேவையா..? போயும் போயும் ஒரு சுண்டைக்காய்க்கு பட்டுத் துணியா போர்த்தணும்.. போதும் வாத்தியாரே.. ரொம்பப் புகழாதீங்க.. எனக்கு குளிர் விட்டுப் போயிரும்..

    அப்புறம் நானும் வில்லங்கம்மாத்தான் அதைச் சொல்லிருந்தேன் வாத்தியாரே..

    சனி பகவான் படிப்பது போல் வந்து பிடித்துவிட்டான் என்று சொல்ல வந்தேன்.

    அந்த வாத்தியாருக்கு சனி பகவானால் ஒரு பிரச்சினை உருவானால்கூட அது படிக்க வந்து பிடித்த சனியினால்தானே.. அதைத்தான் சொன்னேன்..

    அம்புட்டுத்தான்.. சீக்கிரமா ரெண்டு கிளைமேக்ஸையும் சொல்லிருங்க.. இல்லாட்டி எனக்குத் தலை வெடிச்சிரும்..

    ReplyDelete
  7. மிக நன்றாக உள்ளது

    ReplyDelete
  8. /////அகில் பூங்குன்றன் said...
    இரண்டு கிளைமாக்ஸ்ஸையும் சேர்த்து ஒரே பதிவாக போடவும்.
    ஆவல் அதிகமாக உளது ஐயா.////

    அப்படிப் போட்டால் சுவைக்காதே நண்பரே!
    பருப்பு + நெய், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று வரிசையாகத் தானே
    சாப்பிட வேண்டும்?

    ReplyDelete
  9. //////vimal said...
    அருமை ஐயா, ஜோதிடம் கூட கதைகள் மூலம் சொல்லும் உங்கள் நடை முறை என்னை பரம விசிறி ஆகிவிட்டது, எனக்கு இதுவரை இல்லாத உங்கள் தொகுப்பு தவிர்த்து, கதை மூலம் பாடம் சொல்லும் நடை பிடித்திருக்கிறது, அமீர் கான் போல, தாமதத்திற்கு மான்னிக்கவும், என்றும் உங்கள் அன்புடன் மக்கு மாணவன் விமல்.////

    என் வகுப்பு மாணவர்தானே நீங்கள்?
    எங்கே போய்விட்டது உங்கள் தன்னம்பிக்கை?
    மக்கு என்று உங்களை நீங்களே சொல்வது எனக்கு அல்லவா இழுக்கு?
    சரி, போகட்டும், இனி புத்திசாலி என்று சொல்லிப் பாருங்கள். மக்கு மார்க்கெட் இழந்துவிடும்!

    ReplyDelete
  10. /////Anonymous said..
    Kathaiyin aduththa paguthiyai aavaludan ethirparkirom. Engalai ungal ezhuththaal katti poattu vidugireergal aiyya.
    Regards,
    Sara,
    CMB/////

    அடடா, என்ன சொல்கிறீர்கள்? இனி கட்டிப்போடுவதை அதிகமாக்கும் விதமாக எழுதுகிறேன். அதாவது
    அந்தக்கட்டே ஒரு மயக்கம் தரும்படி, கட்டியதே தெரியாமல் இருக்கும்படி.......சரிதானே மிஸ்டர் சரவணன்?

    ReplyDelete
  11. ////Anonymous said...
    கணிப்பொறியின் முன்னால் அமர்ந்ததும் இணையத்தில் வகுப்பறையை
    தேட வைத்துள்ளது உங்கள் எழுத்து.
    அன்புடன்
    இராசகோபால்/////

    நானும் கணினியில் அமர்ந்தவுடன் தேடுவேன் - உங்கள் பின்னூட்டங்களை!:-))))

    ReplyDelete
  12. /////scssundar said...
    அன்புடையீர்
    மிகநன்றாக உள்ளது
    கிளைமாக்ஸ் எதிர்பார்த்துக் காத்துள்ளேன்.///

    உங்களை அதிக நேரம் காக்க வைக்காமல் ஒரு க்ளைமாக்ஸைச் சொல்லி விட்டேன்
    அடுத்த பதிவைப் பாருங்கள் அன்பரே!

    ReplyDelete
  13. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    எனக்குப் போய் இவ்ளோ பெரிய அறிமுகம் தேவையா..? போயும் போயும் ஒரு சுண்டைக்காய்க்கு பட்டுத் துணியா போர்த்தணும்.. போதும் வாத்தியாரே.. ரொம்பப் புகழாதீங்க.. எனக்கு குளிர் விட்டுப் போயிரும்./////

    அதைப் பழநியப்பன் பார்த்துக் கொள்வான்!

    //////அம்புட்டுத்தான்.. சீக்கிரமா ரெண்டு கிளைமேக்ஸையும் சொல்லிருங்க.. இல்லாட்டி எனக்குத் தலை வெடிச்சிரும்./////

    இதையும் அவ்வாறு நடக்காமல் இருந்து பார்த்துக் கொள்ள, பழநியப்பன் துணையையே நாடுகிறேன்!:-))))))
    .

    ReplyDelete
  14. /////Anonymous said...
    மிக நன்றாக உள்ளது////

    ப்ளாக்கர் கணக்கு இல்லையென்றால் பரவாயில்லை!
    உங்களுக்குப் பெயர் கூடவா இல்லை நண்பரே?;-((((((

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com