11.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 2

================================================

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1


உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 2


இதன் முதல் பகுதி இங்கே!


அதைப் படித்துவிட்டு வாருங்கள் - இல்லையென்றால்
இந்தப் பகுதி சற்றும் புரியாது!

தனது சக்தியால் ஒரே நொடியில் தன்னுடைய உருவத்தை - மணி ரத்தினத்தின்
ரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி - அவருடைய பதினைந்து வயதில் எப்படி
இருந்திருப்பாரோ அப்படிப் பட்ட உருவத்திற்கு மாற்றிக் கொண்டார். அவர்
எத்தனை பேர்களுக்கு சர்டிஃபிகெட் கொடுத்தவர், அதனால் அவர் கையில்
ஒரு ஆரம்பப் பள்ளிச் சான்றிதழும் வந்து விட்டது.

உடனே குஷியாகி நேராகப் பள்ளிக்குச் சென்று வாசலில் காவலுக்கு நின்ற
கிராமத்தானை ஒரு பார்வையில் மயங்க வைத்துவிட்டு நேராக பிரின்சிபால்
இருக்கும் அறையை நோக்கி நடந்தார்....!

அப்படி நடந்த சனீஸ்வரன், தான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் காலத்தில்
தன்னுடைய அதீத சக்தியால், தலைமை ஆசிரியருக்கோ அல்லது உதவி ஆசிரியர்
களுக்கோ அல்லது அங்கே படிக்கும் மற்ற மாணவர்களுக்கோ கடுகளவுகூட
எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக தன்னுடைய Powerஐ முதலில் Sitch Off செய்தார்.

பள்ளிக்கூடத்துத் தோட்டத்தில் மான்கள் விளையாடிக் கொண்டிருந்தன! மயில்கள் நடமாடிக்
கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் ரசித்தவாறு, சனீஸ்வரன் தலைமை ஆசிரியரின் குடிலை
அடைய, அவர் அப்போதுதான் தனது காலைப் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார்.

திடுதிப்பென்று ஒரு அழகான யுவன் தன் கண் எதிரே காட்சி கொடுத்ததும் இல்லாமல்,
ஒளி பொருந்திய கண்களால் தன்னை உற்று நோக்குவதையும் கண்டவர், கணீரென்ற
குரலில் கேட்டார்,” யார் தம்பி நீ? இங்கே யாரைப் பார்க்க வந்திருக்கிறாய்?”

“மகான் த்ரைவேதி அவர்களைப் பார்க்க வந்துள்ளேன் அய்யா!”

“மகான் என்று இங்கு யாரும் இல்லை. வெறும் த்ரைவேதிதான் இங்கே இருக்கிறார்.
அது நான்தான்! என்ன வேண்டும் உனக்கு?”

”அய்யா, நான் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவன். உங்கள் பள்ளியில் படிக்கும் ஆசையில்
நீண்டதூரம் பயணித்து வந்துள்ளேன். என்னை நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும் அய்யா!”

புன்னகைத்த தலைமை ஆசிரியர், கணீரென்று குரல் கொடுத்துச் சொன்னார்

“அட்மிசன் எல்லாம் முடிந்து, வகுப்புக்கள் ஆரம்பமாகி விட்டனவே தம்பி! நீ பத்து நாட்கள்
தாமதமாக வந்துள்ளாய். இப்போது நோ சான்ஸ். நீ அடுத்த கல்வியாண்டில் வந்து பார்!”

யாரை எப்படி மடக்குவது என்பதை அறியதவரா சனீஸ்வரன்?

“அய்யா, நான் இந்த பூமியில் இருக்கப்போவது இன்னும் இரண்டு ஆண்டுகள்தான். அதற்குப் பிறகு
மேலே போய்விடுவேனாம். என் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். இருக்கிற அந்தக்
கொஞ்ச நாளில் வேதங்களைக் கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற ஆசையில்தான் நான் இங்கே
வந்திருக்கிறேன். அந்த வேதங்கள்தான் ஒருவனின் பிறவியைச் செம்மைப் படுத்தக்கூடிய சக்தி
கொண்டவை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். என் பிறவி செம்மைப் படவேண்டும்.அதற்கு நீங்கள்
தான் உதவ வேண்டும்.” என்று சொன்ன சனீஸ்வரன் தலைமை ஆசியரை எதுவும் பேசவிடாமல்
திகைக்க வைத்ததோடு, மேலும் அவரைச் சங்கடப்பட வைக்கும் விதமாக, அவர் காலில் விழுந்து
வணங்கவும் செய்தார்..

திகைப்பிலிருந்து மீண்ட ஆசிரியர் மெல்லிய குரலில் சொன்னார், “முதலில் எழுந்திரு தம்பி!”

சணீஸ்வரன் எழுந்திரிக்கவில்லை; ஆசிரியர் மீண்டும் ஒருமுறை சொல்ல, சனீஸ்வரன்,”அய்யா
என்னை நீங்கள் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னால் மட்டுமே, எழுவேன். இல்லையென்றால்
இங்கேயே கிடப்பேன். மற்றது என் விதிப்படி நடக்கட்டும்” என்றார்.

நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,
அனுமதிச் சீட்டை வழங்கினார்.

(தொடரும்)

அடுத்த பகுதி நாளை!

7 comments:

  1. வாத்தியாரய்யா,

    அட, இந்த கதை எனக்கு புதுசா இருக்கு. ஆனா படிக்க நல்லாவும் விறுவிறுப்பாகவும் இருக்கு. சீக்கிரமா அடுத்த பகுதியையும் போடுங்களேன்.

    ReplyDelete
  2. //நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே, அனுமதிச் சீட்டை வழங்கினார்.//
    இங்கனதான் 'சனி' அவரைப் பிடிச்சிருப்பான்னு நினைக்கிறேன்..

    கரீக்ட்டா வாத்தியாரே..

    ReplyDelete
  3. /////Sumathi. said...
    வாத்தியாரய்யா,
    அட, இந்த கதை எனக்கு புதுசா இருக்கு. ஆனா படிக்க நல்லாவும் விறுவிறுப்பாகவும் இருக்கு. சீக்கிரமா அடுத்த பகுதியையும் போடுங்களேன்.////

    இதோ அடுத்த பகுதி தயாராகிக் கொண்டிருக்கிறது சகோதரி!

    (தட்டச்ச வேண்டாமா? அதுவும் என் பொருளீட்டும் பணிகளுக்கு நடுவே!)

    பொருளீட்டும் பணி = My Business Work

    ReplyDelete
  4. உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
    //நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே, அனுமதிச் சீட்டை வழங்கினார்.//
    இங்கனதான் 'சனி' அவரைப் பிடிச்சிருப்பான்னு நினைக்கிறேன்..
    கரீக்ட்டா வாத்தியாரே..///

    கரீக்ட் இல்லை தமிழரே!

    நீங்கள் பதிவை மறுபடியும் ஒரு தடவை படிப்பது நல்லது!

    சனி படிக்க வந்தாரா? பிடிக்க வந்தாரா?

    பிடிக்க வேண்டுமென்றால் அவர் அதை தன் இடத்திலிருந்தே சும்மா just like that' பிடித்து விடுவாரே!

    இங்கே வந்தது படிக்க அல்லவா?

    What you say now?

    ReplyDelete
  5. பிடிக்கும் சனிபகவான் தன்சக்தி மறைத்து
    படிக்கும் சரியான முடிவுடன் திறமையாய்
    காலில் விழுந்து கராரான த்ரைவேதிஐ
    கணநேரத்தில் கவிழ்த்து என்ன செயயப்போகிறாறோ?

    அடுத்த பதிவு நாளைதானா?
    சனியே (நாளை சனிக் கிழமை) போற்றி
    போற்றி.

    ReplyDelete
  6. ////Blogger nellai said...
    பிடிக்கும் சனிபகவான் தன்சக்தி மறைத்து
    படிக்கும் சரியான முடிவுடன் திறமையாய்
    காலில் விழுந்து கராரான த்ரைவேதிஐ
    கணநேரத்தில் கவிழ்த்து என்ன செயயப்போகிறாறோ?////

    நீங்கள் பதிவை மறுபடியும் ஒரு தடவை படிப்பது நல்லது!

    சனி படிக்க வந்தாரா? பிடிக்க வந்தாரா?

    பிடிக்க வேண்டுமென்றால் அவர் அதை தன் இடத்திலிருந்தே சும்மா just like that' பிடித்து விடுவாரே!

    இங்கே வந்தது படிக்க அல்லவா?

    ReplyDelete
  7. ஆசிரியர் ஐயா
    நான் பிடிக்கும் குணம் உள்ள சனீஸ்வரன் படிக்கத்தான் வந்துள்ளார் என்று தான் பதிந்துள்ளேன்.ஆனால் அடுத்து என்ன ?
    -----------------------------
    "படிக்கும் சரியான முடிவுடன் திறமையாய்
    காலில் விழுந்து கராரான த்ரைவேதிஐ
    கணநேரத்தில் கவிழ்த்து என்ன செயயப்போகிறாறோ?"
    -----------------------
    நான் சொல்வது தவறென்றால் பொருத்தருள்க

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com