22.4.25

Astrology: லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.

Astrology: லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள். 
The results of planets aspecting Lagna
-------------------------------------------
லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.

சூரியன் லக்கினத்தைப் பார்க்க வீரம் மிக்கவர். பெண்களிடம் எளிதில் கோபம் கொள்வார். அரசு உத்தியோகம் அமையும். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

சந்திரன் லக்கினத்தைப் பார்க்க மனிவியின் சொல்லுக்குக் கட்டுப்படுவார். செல்வந்தராக, மன தைரியம் உடையவராக, அமைதியானவராக  இருப்பார்.

செவ்வாய் லக்கினத்தைப் பார்க்க முன்கோபமும், சண்டை, சச்சரவில் பிரியமும், பிரிந்து வாழும் எண்ணமும் உடையவர்.

புதன் லக்கினத்தைப் பார்க்க சிறந்த அறிவாற்ரலும், கலைஞானமும், புகழ், மதிப்பும் உடையவராக இருப்பார்.

குரு லக்கினத்தைப் பார்க்க ஆன்மீக உணர்வும், புகழும், அரசாங்கத் தொடர்பும் உடையவராக இருப்பார்.

சுக்கிரன் லக்கினத்தைப் பார்க்க, பல பெண்களிடம் தொடர்பும், அழகான கவர்ச்சியான தோற்ரமும் வசதி வாய்ப்புக்களும், செல்வமும் உடையவர்.

சனி லக்கினத்தைப் பார்க்க, முன் கோபமும், சுத்தம் இல்லாதவராகவும், அறிவாற்ரல் இல்லாதவராகவும், தீராத நோய் நொடிகள் உடையவராகவும், வயதான பெண்கள் தொடர்புடையவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com