Astrology - பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?
மொழி என்பது நம் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. பேசுவதாகட்டும், படிப்பதாகட்டும் அல்லது எழுதுவதாகட்டும் சிலருக்கு மட்டுமே மொழியில் ஆளுமை இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் அந்தத் திறமை இருக்கும்.
முதலில் நம் தாய்மொழி நமக்கு வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது அதிகம் பேர்களுக்குத் தெரிந்த ஆங்கிலமும் வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து கூடுதலாக இன்னும் ஒரு மொழி தெரிந்திருந்தால், அவர்களால் சிறப்பாகச் செயல்படமுடியும். உதாரணத்திற்கு வட இந்திய மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியும் தெரிந்திருந்தால், அவர்களால் பிற மாநிலங்களுக்கும் சென்று பணியாற்ற முடியும்.
மொழியின் மேன்மை நாம் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று தங்கும்போதோ அல்லது அங்கே பயணிக்கும் போதே தெரியவரும்!
ஒருவர் பன்மொழிகளில் திறமை பெற்று விளங்க ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்?
அதை இன்று பார்ப்போம்!
----------------------------------
1. குரு பகவான் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் ஒன்பதாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும், ஜாதகனுக்குப் பன் மொழித் திறமை இருக்கும்.
2. வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது இருந்தாலும் ஜாதகனுக்கு மொழிகள் வசப்படும்.
3. இரண்டாம் வீட்டுக்காரன், தன்னுடைய வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் ஜாதகனுக்குப் பன்மொழித்திறமை இருக்கும்
மலேசியாவில் இருக்கும் தமிழர்களுக்கு மலேயா மொழியில் பேசத் தெரியும். அதுபோல இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கும். மும்பை, தில்லி போன்ற நகரகங்களில் இருக்கும் தமிழர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்கும். ஆனால் பிறருடன் பேசுவதற்கு மட்டுமே தெரிந்த நிலை என்பது, அடிப்படை நிலைதான். அந்த மொழிகளில் படிப்பதற்கும், தவறின்றி எழுதுவதற்கும் திறமை இருக்கும் நிலையில்தான் அந்த மொழி அவர்களுக்கு வசப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள முடியும்.
ஆகவே ஒருவருக்குப் பன்மொழிகளில் பேசும் திறமை இருக்கலாம். எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே உங்களுக்கு எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது. ஜாதகப்படி அது கிடைத்துள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா? என்று ஒரு கவிஞர் அசத்தலாக பல்லவியைத் துவக்கினார். இன்னொரு கவிஞர் பெண்ணின் பார்வை ஒருகோடி அது பேசிடும் வார்த்தை பலகோடி என்று எழுதினார். பெண்ணின் கண்கள் பேசும் மொழிக்கெல்லாம் கணக்குக் கிடையாது. ஜாதகமும் கிடையாது:-)))))
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com