2.10.24

Astrology - எது மேலானது ? கையா அல்லது காலா?

Astrology - எது மேலானது ? கையா அல்லது காலா?

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் ஆகிய இரண்டிலும் எது மேலானது? எது நம்பகத்தன்மை மிகுந்தது? எது உயர்வானது?

இரண்டுமே மேலானதுதான். பிரித்துச் சொல்ல முடியாது!

கைகள், கால்களில் எது மேலானது? அல்லது எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டுமே மேலானதுதான். இரண்டு முக்கியமானதுதான். அவைகளில் ஒன்று இல்லாதவர்களை அல்லது ஒன்றில் குறைபாடு உள்ளவர்களைக்கேளுங்கள் அற்புதமாகப் பதில் தருவார்கள்.

மருத்துவத்தில் எது மேலானது அலோபதியா அல்லது ஹோமியோபதியா அல்லது ஆயுர்வேதமா அல்லது நாட்டு வைத்தியமா எது மேலானது என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் உயர்ந்ததுதான்! அந்தத்துறையில் உள்ள விற்பன்னர்களின் (Experts) கையில் அவைகள் எல்லாமுமே மேலானதுதான்

பிறந்த நேரத்தில் தவறு இருந்தால், ஜாதகம் தவறாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் கைரேகை தவறாகிப் போவதற்கு வாய்ப்பே இல்லை. நோ சான்ஸ்!

ஆனால் ஜோதிடத்தின் பிரம்மாண்டம் கைரேகை சாஸ்திரத்தில் இல்லை. அது மட்டும் உண்மை!
-----------------------------------------------------------------------------------------------
கைரேகை சாஸ்திரத்தில் மேதை ஒருவர் இருந்தார். உலகம் அறிந்த, உலகமே போற்றிய மனிதர் அவர்

அவருடைய பெயர் ’சீரோ’ (Cheiro)

வில்லியம் ஜான் வார்னர் என்பது அவரது முழுப்பெயர்.
வாழ்ந்த காலம்: 1.11.1866 முதல் 8.10.1936 வரை
சுமார் 70 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.
ஐரீஷ்காரர்.
கைரேகை சாஸ்திரம், ஜோதிடம் எண்கணிதம் என்று எல்லாவற்ரையும் ஒருகை பார்த்தவர்.
வாழ்ந்த காலத்தில் பல உலகப்பிரமுகர்கள் அவருடைய அபிமானிகளாகவும், வாடிக்கையாளராகவும் இருந்தார்கள்.
அதிரடியாக பலரது எதிர்காலத்தைக் கணித்து துல்லியமாகச் சொல்லியவர் அவர்.
இந்தக் கலைகளை எல்லாம் தான் கற்றுத் தேர்ந்தது இந்தியாவில்தான். இந்தியர்களுக்கு என்றும் கடைமைப்பட்டுள்ளேன் என்று தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசின் கையைப் பார்த்துவிட்டு, இவன் அரியணை ஏறமாட்டான் என்று அதிரும்படியாகச் சொன்னவர் அவர். அதுபோலவே நடந்தது. தன் காதலிக்காக நாட்டையே துறந்துவிட்டுச் சென்ற இளவரசன் அவன்.

அதுபோல தன் மரணத்தைத் துல்லியமாகச் சொன்னவர் அவர். தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் பெரிய விருந்து கொடுத்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றவர் அவர். அன்று இரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இதுபோன்று அவரைப்பற்றிப் பல செய்திகள் உள்ளன. பிறகு ஒரு நாள் அதை விரிவாக எழுதுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com