23.3.20

அடங்கிப்போன உலகம்!!!!


அடங்கிப்போன உலகம்!!!!

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றது,
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன

தவளை கூட துள்ளி ஆடுகின்றது,
பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,
சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல,
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றன்
என்னன்னெவோ உலக நியதி என்றான்

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்

ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான்,
கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்

அவன் வீட்டில் முடங்கி கிடக்க,
வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்.,
கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

அவமானத்திலும் வேதனையிலும்
கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து
கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்...
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. Excellent sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. அவமானத்திலும் வேதனையிலும்
    கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து
    கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்...
    -----------------------------------------------------
    ஆம், மனிதம் செத்து மனிதன் வாழ்ந்ததால் இந்த நிலை ஏற்ப்பட்டது.


    அருமை ஐயா.

    அன்பும் நன்றியும்.
    ==============
    அன்புடன்
    விக்னசாயி.
    ===========================

    ReplyDelete
  3. மனிதனின் அகங்காரத்திற்க்கு விடப்பட்ட சவால.

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    Well said//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!


    ReplyDelete
  5. ////Blogger Shanmugasundaram said...
    Excellent sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. /////Blogger Sabarinaathan said...
    :) ha ha ha true truth./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. //////Blogger vicknasai said...
    அவமானத்திலும் வேதனையிலும்
    கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து
    கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்...
    ஆம், மனிதம் செத்து மனிதன் வாழ்ந்ததால் இந்த நிலை ஏற்ப்பட்டது.
    அருமை ஐயா.
    அன்பும் நன்றியும்.
    அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!!!!!

    ReplyDelete
  8. /////Blogger Unknown said...
    மனிதனின் அகங்காரத்திற்க்கு விடப்பட்ட சவால்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. இதுவும் சில காலம்தான்

    ReplyDelete
  10. Good but nobody is under tension
    God has made it for good

    ReplyDelete
  11. /////Blogger Unknown said...
    இதுவும் சில காலம்தான்/////

    ஆமாம்.நன்றி அன்பரே!!!

    ReplyDelete
  12. /////Blogger TEXTILE CONSULTANTS said...
    Good but nobody is under tension
    God has made it for good///////

    உண்மை. எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று இருப்பதே நிம்மதிக்கான வழி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com