22.3.20

Astrology: Quiz: புதிர்: 20-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 20-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகதைக் கொடுத்து,
அன்பர் திருவோண நட்சத்திரக்காரர். படிக்கிறகாலத்தில் ஒழுங்காகப் படிக்கவுமில்லை, வேலையில் சேர்ந்தால் ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்கவுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன் தன்னுடைய பெற்றோர்களுக்கு
பாரமாக இருந்தார்.அவரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: 14 வயதில் ராகு திசை ஆரம்பித்தது. லக்கினமும் ஏழாம் வீடும்
கேது மற்றும் ராகுவின் பிடியில் உள்ளது, அந்த அமைப்பு சின்ன வயதில் நிலையில்லாத வாழ்க்கையைத்தான் கொடுக்கும். ராகு திசை முடியும்
போது - அதாவது ஜாதகரின் 31வது வயது வரை நிலைமை அப்படித்தான் நீடித்தது.அதற்குப் பிறகு குரு மகா திசை துவங்கியவுடன் நிலைமை
தலை கீழாக மாறிவிட்டது.3 & 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் குரு பகவானின் சேர்க்கை நல்ல மாற்றங்களை உண்டாக்கியது.
அத்துடன் 2ல் இருக்கும் லக்கினாதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ள
2 & 11ம் அதிபதி புதன் ஜாதகனுக்கு நல்ல பணவரவையும் உண்டாக்கினார். ஜாதகன் மேன்மையுற்றான். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 4 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். (ஏன் எண்ணிக்கை குறைந்து விட்டது?)

அடுத்த வாரம் 27-3-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில்
1. சிம்ம லக்கினம், திருவோண நக்ஷத்திரம், மகர ராசி ஜாதகர் பொறுப்பு இல்லாமல் இருந்ததற்கான காரணங்கள்
2. ஜாதகரின் லக்கினத்திலேயே செவ்வாய் அமர்ந்து யார் சொல்லையும் கேளாமல் இருக்க செய்தார் மேலும் ராகு பார்வை
மற்றும் கேதுவின் லக்கினத்தில் அமர்ந்த நிலை இதனை அதிக படுத்தியது.
3. மாதா ஸ்தான காரகன் சுக்கிரன் நான்காம் இடத்திற்கு பனிரெண்டில் மறைந்து தாய் சொல்லையும் கேட்க மறுத்தார்,
மேலும் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்த பிதா காரக ஸ்தானத்தில் நீச சனி
தந்தை சொல்லையும் மதிக்காத நிலை செய்தார்.
4. இவரின் செவ்வாய் தசை முதல் ராகு தசை வரை அவ்வாறு இருக்க செய்தார், இவற்றின் 32 ஆம் வயதில் வந்த குரு
தசையில் இருந்து இவர் பொறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பித்தார் ஏனென்றால் குருவின் நேரடி பார்வை நீச சனி மீதும்
பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் அதன் சொந்த வீட்டில் வெற்றி ஸ்தானத்தில் உள்ளதாலும் அதை செய்தார், குரு
இவரின் லக்கினத்திற்கு சுப கிரகமாகும்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, March 20, 2020 10:51:00 AM
-----------------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 அக்டோபர் 1970 அன்று அதிகாலை 2 மணி 51 நிமிடம் 30 வினாடி போலப் பிறந்தவர் .பிறந்த இடம் சென்னை  என்று எடுத்துக்கொண்டேன்.
கல்விக்கான காரகன் புதன் உச்சம் பெற்று இருந்தாலும் சூரியனால் எரிக்கப்படது. நான் காம் இடத்திற்கான செவ்வாய்
லக்கினத்திலே இருந்தாலும் கேதுவின் பாதிப்பால் படிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும்.நான்காம் இடத்தின் அதிபதி கேது சூரியனுக்கு
இடையில் அகப்பட்டுக்கொண்டு படிப்பைக்கெடுத்தது.சந்திரன்
ஒன்றைத்தவிர மற்ற எல்லா கோள்களும் சுய வர்கத்தில் 4ம் அதற்குக்குறைவாகவும்.எனவே படிப்பில் கவனக்குறைவு.
எட்டாம் இடம் ராகுவாலும் சனியினாலும் சூழப்பட்டதால்
கவுரக்குறைவு ஏற்படும்படி நடக்கும் செயல்களில் ஈடுபாடு
ஏற்பட்டிருக்கும்.
அவருடைய 14 வயதில் ராகு தசா துவங்கிவிட்டது.32 வயதுவரை நீடித்தது.அந்தக்காலம் அவர் சரியான வேலையில்லாமலும் ,படிப்பைமுடிக்காமலும் சோம்பேறியாக இருந்திருப்பார்.
வேலைக்கான காரகன் சனைச் சரன் நீசம் பெற்று வக்கிரமும்
அடைந்ததால் வேலையில் நிலை பெறமுடியவில்லை.
குருதசாவில் எழுந்திருந்திருப்பார். சுயமான வியாபாரர்த்தில்
ஈடுபட்டு நன்கு முன்னேறியிருப்பார்.கஜகேசரி யோகம்
கைகொடுத்திருக்கும்.
Friday, March 20, 2020 4:27:00 PM
-----------------------------------------------------------
3
Blogger C Jeevanantham said...
Dear Sir,
4th lord is responsible for studies. 4th lord mars is along with kethu in lagna. since
4th lord is with kethu it is bad for studies. Also Saturn is neecham. Hence the native is
not showing interest in studies and rounding. Since lagna lord is in
2nd, he become responsible person after the age 30.
Thanking you sir.
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, March 20, 2020 6:16:00 PM
---------------------------------------------------------
4
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி இரண்டில் தனாதிபதி புதனுடன்
2 .கர்மகாரகன் சனி நீசம்
3 .ஜாதகரின் ராகு திசை வரை பயன் அளிக்கவில்லை (25 வயது வரை )
4 .பின் வந்த குரு திசை சனி புத்தியில் முப்பது வயதில் வெற்றிக்கான மூன்றாம் இடத்தில சுக்கிரனுடன் அமர்ந்த குரு சனி தன பார்வையால் சனீஸ்வரனை கட்டுப்படுத்தி வியாபாரத்தை அமைத்து கொடுத்திருக்கிறார்,
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, March 20, 2020 7:08:00 PM
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com