6.3.20

Astrology நல்ல செயல்களுக்கான நாட்கள்


Astrology நல்ல செயல்களுக்கான நாட்கள்
Auspicious days for good deeds

நல்ல செயல்கள் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

புது மனை வாங்குவது, நிலம் வாங்குவது, திருமணத்திற்கு வரன் பார்ப்பது, புதுத் தொழில் துவங்குவது. வேலைக்கு மனுப் போடுவது போன்று எண்ணற்ற செயல்கள் உள்ளன. அவைகள் நமக்கு சாதகமாக வெற்றிகரமாக முடிவதற்கு நல்ல நாட்களில் துவங்க வேண்டும்.

இடைஞ்சல் இல்லாமல், தோல்விகள் இல்லாமல், முடிவதற்கு நல்ல நாட்களில் அவற்றைச் செய்யத் துவங்க வேண்டும்.

அது மட்டுமா? ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போதும், மருத்துவரை முதன் முதலில் பார்க்கப் போகும்போதும், ஒரு சுற்றுலாப் பயணம் செல்லும்போதும் கூட நேரம், காலம் பார்த்துத்தான் துவங்க வேண்டுமாம்.

பாடலைப் பாருங்கள்:

ஆதிரை பரணி கார்த்திகை
    ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதரு விசாகஞ் சோதி
    சித்திரை மகமீ ராறும்
மாதனங் கொண்டார் தாரார்
    வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
    பாம்பின் வாய்த்தேரை தானே!

பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களிலும் கடன் வாங்கிக் கொண்டவர் திருப்பித் தருவதும், பிரயாணம் போனவர் திரும்புவதும், நோயாய்ப் படுத்தவர் தேறுவதும் அரிதாம்.

பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொண்ட தேரை போல் ஆகிவிடுமாம்! அதாவது அதிகச் சிக்கலாகுமாம்.

இதெல்லாம் சாத்தியமா என்று கேட்காதீர்கள்? முயன்றால் சாத்தியப்படும்!

நாள் நட்சத்திரங்களைப் பார்த்துக் காரியங்களைச் செய்யுங்கள் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தப் பாடம்!

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir good information for starting activities thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Thank you for the useful information sir.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா🙏
    இவற்றில் வரும் நட்சத்திரங்கள் தாராபலன் உள்ளவையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டுமா என்பதை விளக்குங்கள்.

    நன்றி

    முருகன் ஜெயராமன் புதுச்சேரி

    ReplyDelete
  4. ஐயா
    சுந்தர சீனிவாசன் அவர்களின் blogger link address இருந்தால் கூறவும். நன்றி.

    ReplyDelete
  5. நன்றி ஐயா. பொதுவாக இதில் பரணி, பூரம், ஆயில்யம்,விசாகம், பூராடம், பூரட்டாதி மட்டுமே நல்ல காரியம் செய்ய படுவது இல்லை. மேலும் சுப கிரகங்கள் எனப்படும் சுக்கிரன், குரு, சூரியன், நட்சத்திரங்களில் சுப நிகழ்ச்சிகள் குறிப்பது இல்லையே ஏன் ஐயா?

    ReplyDelete
  6. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir good information for starting activities thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger sundari said...
    Good evening sir,/////

    வணக்கம் சகோதரி!!!!!

    ReplyDelete
  8. ////Blogger C Jeevanantham said...
    Thank you for the useful information sir./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!!!!!!

    ReplyDelete
  9. ////Blogger வகுப்பறை said...
    வணக்கம் ஐயா🙏
    இவற்றில் வரும் நட்சத்திரங்கள் தாராபலன் உள்ளவையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டுமா என்பதை விளக்குங்கள்.
    நன்றி
    முருகன் ஜெயராமன் புதுச்சேரி/////

    ஆமாம்.தவிர்க்க வேண்டும்!!!!!

    ReplyDelete
  10. /////Blogger senthilmahesh said...
    ஐயா
    சுந்தர சீனிவாசன் அவர்களின் blogger link address இருந்தால் கூறவும். நன்றி./////

    இணையத்தில் தேடிப் பாருங்கள் சாமி!!!!!

    ReplyDelete
  11. /////Blogger seethalrajan said...
    நன்றி ஐயா. பொதுவாக இதில் பரணி, பூரம், ஆயில்யம்,விசாகம், பூராடம், பூரட்டாதி மட்டுமே நல்ல காரியம் செய்ய படுவது இல்லை. மேலும் சுப கிரகங்கள் எனப்படும் சுக்கிரன், குரு, சூரியன், நட்சத்திரங்களில் சுப நிகழ்ச்சிகள் குறிப்பது இல்லையே ஏன் ஐயா?//////

    ஆராய்ந்து பதில் அளிக்க வேண்டிய கேள்வி. நேரம் கிடைக்கும்போது செய்கிறேன் சாமி
    பொறுத்துக்கொள்ளுங்கள்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com