3.1.20

Astrology: Quiz: புதிர்: எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த குழந்தையின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த 
குழந்தையின் ஜாதகம்!!!

ஒரு குழந்தையின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம்.
பிறந்து 8 மாதங்கள்வரைதான் உயிரோடு இருந்தது. 8வது மாத
முடிவில் தன் பெற்றோர்களை  துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு,
குழந்தை இறைவனடி சேர்ந்த்துவிட்டது.

எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 5-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் வாத்தியாரே ,மீன லக்கனம் குழந்தை ,லக்னினத்தை முன் பின் பாபகிரகம் ,லக்கனம் பபாகத்திரி யோகம் பெற்று உள்ளது லகினத்தின் அதிபதி 8-இல் மறைவு கூடவே மாந்தி வேறு லக்கனம் முழமையாக பாதிப்பு உள்ளது அதுவே குழந்தையின் மரணத்திற்கு காரணமாக அமைத்து விட்டது .அதேபோல் சந்திரனின் மீதி எந்த ஒரு சுப பார்வையும் இல்லை .

    நன்றி ஸ்ரீ குமரன்
    9655819898

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்!
    1.லக்னா அதிபதி 8ல் மறைவு
    2.லக்னாதிபதி ராகு சாரம் ராகு 12ல்
    3.லக்ன அசுபர் சூரியன் புதன் சனி 2ல் அமர்ந்து 7ஆம் பார்வை லக்னாதிபதி குருவின் மேல் பார்வை
    4.6ஆம் அதிபதி,பாதகாதிபதி பார்வை குருவின் மேல்
    5.லக்னாதிபதி குரு பகை வீட்டில்.வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சி பெற்று தன் வீட்டிற்கு 8ல்
    6.அதிக கிரகங்கள் லக்ன அசுபர் சாரத்தில்


    ReplyDelete
  3. அய்யா வணக்கம்!
    குழந்தை ஏப்ரல் 29, 1970 ல் காலை 5-00 மணியளவில் பிறந்துள்ளது.மீனம் லக்கினம்.மகர ராசி. 2,11 அதிபதிகள் மாரகாதிபதிகள். 7ம் அதிபதி பாதகாதிபதி. லக்கினாதிபதி 8ல் அமர்ந்துள்ளார். 6ம்பதி சூரியன், 11ம்பதி சனியும் பாதகாதிபதி புதனுடன் சேர்ந்து 2ல் அமர்ந்து லக்கினாதிபதி குருவை பார்த்து கெடுத்து விட்டனர். லக்கினம் சுபர் பார்வையின்றி பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளது. ராசி 8ல் கேது.ராச்சிக்கு 2, லக்கினத்திற்கு 12ல் ராகு. சந்திர தசையில் புதன் புத்தியில் (பாதகாதிபதி) ராகு அந்திரத்தில் குழந்தை இறந்திருக்கும்.
    அன்புடன்
    - பொன்னுசாமி.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா🙏

    மீன இலக்கினம், மகர இராசி ஜாதகம்.

    லக்கினம் ஒருபுறம் சூரியன் சனி மறுபுறம் ராகு என பாபகர்த்தாரி யோகத்தால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது.

    லக்னாதிபதி குரு எட்டில் மறைந்து உள்ளார் மேலும் லக்னாதிபதி குருவின் மேல் ஆறாம் அதிபதி பார்வையும் பாதகாதிபதியின் பார்வையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தில் ஆறாம் அதிபதியின் பார்வை பாதகாதிபதியின் பார்வை ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    எட்டாம் அதிபதி சுக்கிரனும் மூன்றில் மறைந்து மற்றும் ஆயுள் காரகனான சனீஸ்வரனும் நீச்சம் அடைந்துள்ளார்.

    இந்த காரணங்களால் ஆயுள்பலம் அதிகம் பெற முடியாமல் போனது.

    பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...


    பணிவுடன்,
    முருகன் ஜெயராமன்,
    புதுச்சேரி.


    ReplyDelete
  5. பிறந்த குழந்தையின் லக்னாதிபதி (குரு) 8 ல் மறைந்திருக்க,மாரகாதிபதிகள் (செவ்வாய், சனி) வலிமை குறைந்து மற்றும் ஆயுள் காரகன் சனி நீசமடைந்து, சந்திர தசையில் புத்தி, கோட்சாரம் (குரு, செவ்வாய் சனி) என்பவற்றால் எட்டப்பட்ட தாக்கம் அற்பாயுள் முடிவை கொடுத்துள்ளது.

    ReplyDelete
  6. ஜாதகர் 29 ஏப்ரல் 1970 அன்று காலை 4 மணி 50 நிமிடங்களுக்குப் பிறந்தவ்ர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    லக்கினாதிபதி குரு எட்டில் மறைந்து மாந்தியுடன் கூட்டணி.லக்கினம் ராகு, சனி, சூரியனால் சூழப்பட்டுள்ளது.ஆயுள் காரகன் சனி நீசம் அடைந்து சூரியனால் அஸ்தங்கதம்.

    நோய்க்கான 6ம் அதிபதி சூரியன் இரண்டில் அமர்ந்தது.உச்சம் பெற்றது. வியாதியைக்குறிக்கிறது.எட்டாம் இடத்திற்கு 22 பரல் மட்டுமே.எட்டாம் அதிபதி சுக்கிரன் 3ல் அமர்ந்து மறைந்தது.செவ்வயுடன் கூட்டணி

    சந்திரனுக்கு சனியின் பார்வை.
    இவையெல்லாம் அற்ப ஆயுளைக்குறிக்கிறது.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,1) லக்னாதிபதியும் ,கர்ம ஸ்தானாதிபதியுமான குரு 8ல் மறைவு.2)நீசமடைந்த ஆயுள் காரகன் சனி,உச்சம் பெற்ற 6ம் அதிபதி சூரியன்,4,7க்குடைய புதன் 2ல் அமர்ந்து,8ம் இடத்தை வலுவிலக்க செய்தன.3)இங்கு சனி 12ம் அதிபதியாகவும்,உபய லக்ன மாரக ஸ்தானமான 11 ம் இடத்தின் அதிபதியாகவும் வருகிறது.சரி,8ம்அதிபதியின் நிலையை பார்ப்போம்.அவர் 8க்கு எட்டாமான 3ல் ஆட்சி பெற்றிருக்கிறார்.நல்லதுதானே என்றால்,கூடவே 2ம் அதிபதி வர்கோத்தமம் பெற்ற செவ்வாய்.4)எனவே மாரக ஸ்தானத்தில் அமர்ந்த சந்திரன் தசாவில்,உபய லக்ன மற்றோரு மாரக ஸ்தானமான 7ம் அதிபன் புதன் புத்தியில்,கொடுத்தவனே,பறித்துக் கொண்டான்.நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம்

    தங்கள் கேட்டு இருந்த எட்டே மாதத்தில் இறைவனடி சேர்ந்த குழந்தையின் இறப்பிற்கான காரணங்கள்

    திருவோண நக்ஷத்திரம், மகர ராசி , மீன லக்கின ஜாதக குழந்தை லக்கின அதிபதி குரு எட்டாம் இடத்தில் மறைந்தது மட்டுமல்லாமல் மாந்தி உடன் கூட்டணி சேர்ந்து ஆயுள் ஸ்தான பலனை குறைத்தது

    மேலும் ஆயுள் காரகன் சனி உச்ச சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் ஆனது மட்டுமல்லாமல் , நீசமாகவும் உள்ளது. இந்த அமைப்பு அற்ப ஆயுளை உறுதி செய்கிறது.

    அதனால் இந்த குழந்தை சந்திரா தசையில் சந்திரன் அமர்ந்த மகர ராசியின் அதிபதி நீச சனியின் புக்தியில் இறைவன் அடி சேர்ந்தது.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  9. மிதுன லக்கினம், மகர ராசி.
    எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
    பாலாரிஷ்ட தோசமுள்ள ஜாதகம்.
    லக்கினாதிபதி குரு எட்டில் மறைவு. அவர் மேல் 6ம் அதிபதி உச்ச சூரியனின் பார்வை. 6மிடத்தில் கேது அமர்வு.ல‌க்கினமும் பாப கர்த்தாரியில் சிக்கியுள்ளது. சந்திரனுக்கு 2ல் ராகு அமர்வு மற்றும் ஆயுள்காரகன் 2ல் நீசம் மற்றும் 6ம் அதிபதி சூரியனுடன் கூட்டு.
    மேறகண்ட காரணங்களால் குழந்தையின் ஆயுள் 8ம் மாதத்தில் முடிந்து விட்டது.

    ReplyDelete
  10. இந்த ஜாதகத்தில் அற்ப ஆயுள் காரணம்,
    1. லக்கினாதிபதி பகை வீட்டில் மேலும் 8ல் மறைந்து லக்கின தொடர்பு இல்லை.
    2. 8ம் அதிபதி லக்னத்துக்கு 3ல் மறைந்து 8ம் வீட்டுக்கும் மறைந்து செய்வாய்யோடு சேர்ந்து கெட்டு போய் உள்ளார்.
    3. ராசி அதிபதி மற்றும் ஆயுள் காரகன் சனி நீச்சம்.
    4. குருவின் லக்கினம் ஆகி
    சுப கிரகம் அனைத்தும் பாப கிரக பிடியில், லக்கின சுபர் அனைவரும் லக்கின பாபர் உடன் சேர்க்கை. ஒரு கிரகம் கூட சரியில்லை. ஆகையால் ஜாதகம் வலுவிழந்து இருக்கிறது.

    ReplyDelete
  11. Pirantha kulanthaiku 12 vayathu varai suya jathakam velai seiyathu.....☺

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com