16.7.19

ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?


ஏன்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?
-------------------------------------------------
1
"டேய் மண்டையா, அங்க என்னடா லோலாயி?”

“நீங்க திடீர்ன்னு செத்துப்பொய்ட்டா, அன்னி என்ன செய்யும்னு
தெரிஞ்சுக்கிறதுக்காக போய்க் கேட்டேன்”

“அந்தக் கருமாந்திரம் புடிச்சவ என்னடா சொன்னா?”

“அவங்க தங்கச்சியோட போயி தங்கிருவாங்களாம்!”

“ஓஹோ”

“இப்ப அதே கேள்விய உங்ககிட்ட கேக்கிறேன் - அன்னி திடீர்ன்னு செத்துப்பொய்ட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“இதில யோசனை பண்றதுக்கு என்னடா இருக்கு? நானும் சந்தோஷமாப்
போயி அவ தங்கச்சியோட தங்கிருவேன்டா!”
--------------------------------------------------------
2
”டேய் மண்டையா?”

”என்ன அண்ணே?”

”அந்த சைக்கிள் கடைக்காரன் பொண்ணு வந்து உன்னிய லவ்ஸ்
பண்றேன்னு சொன்னுச்சாமே?”

”ஆனா, நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”

”ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?”

”எங்க வீட்டில எல்லோருக்கும் சொந்தத்திலதாண்ணே கண்ணாலம்
ஆகியிருக்கு அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

”எல்லோருக்குமே சொந்தத்திலேயா? அதிசயமாயிருக்கேடா!”

”ஆமாண்ணே, எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கட்டிக்கிட்டாரு.
எங்க அத்தை மாமாவைத்தான் கட்டிக்கிட்டிருக்கு. அதைவிடுங்க
எங்க அண்ணி எங்க அண்ணனைத்தான் கட்டிக்கிட்டிருக்கு!”
-------------------------------------------------------------------
3
ஒரு பள்ளி ஆசிரியர் தன்னுடைய உந்து வண்டியில் (CYCLE) பக்கத்திலிலுள்ள கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார்

அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பாழும் கிணற்றின் கைப்பிடிச்சுவற்ரில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு "டொன்ட்டியெய்ட்" - "டொன்ட்டியெய்ட்" என்று கத்திக் கொண்டிருந்தான்.

ஆசிரியரின் போதாத நேரம், அவர் அதைக்கண்டு கொள்ளாமல் சும்மா போயிருக்கலாம். அனால் அவர் அப்படிப்போகவில்லை .

தன்னுடைய சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவர்,
அவன் மனனோயாளி என்பது தெரியாமல், அவன் அருகில் சென்று மெதுவாகக் கேட்டார்.

"ஏன் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கத்திக் கொண்டிருக்கின்றாய்?"

"நான் ஒன்னும் கத்தவில்லை - மறந்து விடக்கூடாது என்பதற்காகத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்"

"ஏன் டொன்ட்டியெய்ட்டிற்கு மேலே உனக்கு ஒன்றும் தெரியாதா?"

இந்த இடத்தில் ஒன்றும் சொல்லாமல் ஆசிரியரை உற்றுப்பார்த்த, ஆஜானுபகவான தோற்றத்தைக் கொண்ட அவன், எழுந்து நின்றான் எழுந்து நின்றவன், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, ஆசிரியரைத் தன் தலைக்கு மேலே தன்னுடைய இரண்டு கைகளாலும் தூக்கிப் பிடித்தான்

இப்போது ஆசிரியர் தன்னை மறந்து "டேய், விடுடா, விடுடா!" என்று கத்த ஆரம்பித்தார்.

அவன் விட்டானா?

இல்லை! அதே அசுர வெகத்தில் ஆசிரியரைக் கொண்டுபோய் அந்தக் கிணற்றில் போட்டான்

மீண்டும் அதே இடத்திற்கு வந்து அமர்ந்தவன், அமைதியாகச் சொல்ல ஆரம்பித்தான்.

"டொன்ட்டிநைன்,டொன்ட்டிநைன்,டொன்ட்டிநைன்.........,,,,,,,,,,,,,,,,,,,,!"
============================================================
மூன்றில் எது பெஸ்ட் கண்ணா பெஸ்ட்?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வாத்தியாருக்கு வணக்கம்.இன்று குரு பூர்ணிமா குருவிற்கு நன்றி செலுத்தும் நாள்.அடியவனுக்கு குருவாகிய தாங்கள் பழனியப்பனின் அருளால் ஆரோக்கியமாக நீண்ட ஆயுலுடன் வாழ்ந்து இன்னும் நிறைய மாணவர்களை உருவாக்க தங்கள் பணி மேலும் சிறக்க பிராத்திக்குறேன்.அடியவனின் நன்றிகள்.தங்களின் ஆசி வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... First one is best sir....

    Have a great day,

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வகுப்பறையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
    வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா...

    ReplyDelete
  4. //////Blogger Shanmugasundaram said...
    வாத்தியாருக்கு வணக்கம்.இன்று குரு பூர்ணிமா குருவிற்கு நன்றி செலுத்தும் நாள்.அடியவனுக்கு குருவாகிய தாங்கள் பழனியப்பனின் அருளால் ஆரோக்கியமாக நீண்ட ஆயுலுடன் வாழ்ந்து இன்னும் நிறைய மாணவர்களை உருவாக்க தங்கள் பணி மேலும் சிறக்க பிராத்திக்குறேன்.அடியவனின் நன்றிகள்.தங்களின் ஆசி வேண்டுகிறேன்//////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... First one is best sir....
    Have a great day,
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  6. ////Blogger விசு அய்யர் said...
    வகுப்பறையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
    வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா.../////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சுவாமி!!!!!

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    All are good .Happy you are back again///////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com