15.7.19

தலைமை ஆசிரியர் சொன்ன தீர்ப்பு!


தலைமை ஆசிரியர் சொன்ன தீர்ப்பு!

நேற்று வகுப்பில் அடியேன் பாடம் நடத்திக்
கொண்டிருந்தபோது, வகுப்பில் காச்சு மூச்சென்று ஒரே சத்தம்!

அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அதைக்கேட்டு, திடிரென்று என் வகுப்பிற்குள் நுழைந்து விட்டார்.

கப் சிப்பென்று சப்த நாடிகளும் ஒடுங்க, சப்தம் ஒரே
வினாடியில் அடங்கி விட்டது

எல்லாப் பையன்களும் (கண்மணிகளும்) எழுந்து நின்று
அவருக்கு வணக்கம் சொன்னார்கள். அதெல்லாம் சரியாகச் செய்து விடுவார்கள்
(கலாய்ப்பது வகுப்பு ஆசிரியரான என்னை மட்டும்தான்)

தலைமை ஆசிரியர் கணீரென்று குரல் கொடுத்துக் கேட்டார்

"என்னய்யா சண்டை? ஒரே சத்தமாக இருக்கிறது?"

"அதெல்லாம் ஒரு சண்டையும் இல்லை சார்! விவாத மேடை வகுப்பு - அதான் பிள்ளைகளோடு சேர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தேன்"

"தலைப்பு என்ன?"

"தலைப்பு பெரிசா ஒன்னுமில்லை சார்! சண்டைங்கிற
சொல்லிற்கு இரண்டு சுழி '' போடுவதா அல்லது மூன்று சுழி '' என்பது பற்றித்தான் விவாதம்"

"இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? சின்னச் சண்டையாக இருந்தால் இரண்டு சுழி '' போடுங்கள் - அதுவே பெரிய சண்டையாக இருந்தால் மூன்று சுழி '' போடுங்கள்!" என்று சொன்னவர், டக் கென்று வகுப்பை
விட்டு வெளியேறி விட்டார்

ஆகா! என்ன கெட்டிக்காரத்தனம் பார்த்தீர்களா?

இவர் தலைமை ஆசிரியராக வந்திருக்கக் கூடாது. இந்த
ஊருக்கே நாட்டாமையாக வந்திருக்க வேண்டுமய்யா,
வந்திருக்க வேண்டும்!!

என்ன, நான் சொல்வது சரிதானே?
--------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir absolutely correct sir vazhga valamudan

    ReplyDelete
  2. ///Blogger kmr.krishnan said...
    Vefy nice humour!////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  3. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir absolutely correct sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  4. நாட்டாமை....தீர்ப்பு மாத்ததே!.....

    ReplyDelete
  5. /////Blogger S.Shanmuganandam M.A.B.Ed., said...
    நாட்டாமை....தீர்ப்பு மாத்ததே!.....

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com