கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!
திரைப் பாடல்களில் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தந்த கவியரசர்....
காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலினின் மேலே*
எவ்வளவு நாகரிகமான , நாசுக்கான , மென்மையான வரிகள் ...
இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா இந்த காலத்தில் என்று மலைக்க வைக்கும் வார்த்தைகள் ...
அந்த வரிகள் மென்மையாக இருந்தும் பார்க்கும் பார்வையில் ஒருவர் கொச்சை படுத்தி இருக்கலாம் ...
காம கணைகளை கண்கள் மூலம் அள்ளி வீசி இருக்கலாம் ...
ஆனால் நம்மவர் கண்ணதாசன் வரிகளுக்கு அமரத்துவம் வாங்கி கொடுத்தார் ...
அதை சொல்லும் விதம் , அதில் அடங்கியுள்ள பெருமை , ஆண்மை என்ற கர்வம் அதே சமயத்தில் பெண்மையை மதிக்கும் பார்வை
, அவள் அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று கண்களில் தேக்கும் ஏக்கம் எல்லாமே அரை நொடியில் ...
*அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே*
நானும் உனக்கு சற்றும் இளைத்தவள் அல்ல ...
நீயோ எனக்கு உன் பரிசை பரந்து விரிந்து இருக்கும் இந்த கட்டிலின் மேலே தந்தாய் ...
அதற்கு நான் உயிர் கொடுத்தேன் உடல் கொடுத்தேன் , பேசும் சக்தி கொடுத்தேன் , பரிசு ஒரு சின்ன தொட்டிலுக்குள் அடங்கி
விட்டது என்று எண்ணாதே ...
அந்த பரிசுக்கு விலை ஏதும் இல்லை என்கிறாள் துணைவி ...
நாணம் ஒரு புறம் பெருமை ஒரு புறம் அதே உணர்ச்சிகளில் அந்த பரிசை பார்க்கிறாள் ...
அந்த பரிசும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறது ...
பெண்மையை மதிக்கும் ஒருவனுக்கும் ஆண்மையை ஆதரிக்கும் ஒரு பெண்ணுக்கும் பரிசாக வந்ததை எண்ணி பெருமை படுகிறது
முழு பாடலை அலச வேண்டிய அவசியம் இல்லை ... இந்த இரண்டு வரிகள் போதும் ...
எங்கிருந்தோ என் நினைவுகளை தொந்தரவு செய்ததைப்போல் சில பாடல் வரிகள் காற்றில் இருக்கும் அசுத்தத்துடன் பறந்து
வந்தன ...
கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு .... பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு .
கைகள் என்னை கேட்காமல் ஓடிச்சென்று என் இரு காதுகளையும் பொத்திக்கொண்டன ...
கண்கள், தான் சேர்த்து வைத்த உப்பு நீரை கீழே கொட்டிக்கொண்டிருந்தன ...
வாய் மட்டும் ... அந்த நாளும் வந்திடாதா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன ....😰😰
----------------------------------------------------------------------
2
அந்த காலத்திலேயே கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசனத்தோடு internet and online shopping பத்தி ஒரு பாட்டு எழுதி இருக்கார்.
தேடினேன் வந்தது - Google search
நாடினேன் தந்தது - Amazon / online shops
வாசலில் நின்றது - UBER / SWIGGY / ZOMOTO
வாழ வா என்றது - Matrimony dot com🌹
--------------------------------------------------------------------
படித்து பரவசப்பட்டது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
good emotions.
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஇன்றும் நம்முடன் வாழும் கவியரசரின் வார்த்தைகளுக்கு
என்றுமே உயிர்ப்பு உண்டு! போற்றிப் புகழ்வோம்.
ஐயா வணக்கம்
ReplyDeleteநகைச்சுவை கலந்த ஆதங்கம் தங்கள் எழுத்து நடையில் ......
அருமை ஐயா
கண்ணன்
Respected Sir,
ReplyDeleteHappy morning... Nice....
Have a great day.
With regards,
Ravi-avn
இன்றைய பாடல்களை கேட்பதே இல்லை..
ReplyDeleteஎங்கள் வீட்டில் டிவி இல்லை; ரேடியோ, fm ரேடியோ இல்லை..
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ..
Respected sir
ReplyDeleteKannadasan is a great poet
Last portion amazing.... Great one
ReplyDelete