12.3.18

இன்பத்தின் மறைவிடம்!!!


இன்பத்தின் மறைவிடம்!!!

மனிதா...! துன்பத்தின் பின்னால்  இறைவன் இன்பத்தை மறைத்து வைத்துள்ளான்....!!!*

மனிதா...!

ஓடு உடைந்தால் தான் "குஞ்சு"....
மெழுகு உருகினால் தான் "வெளிச்சம்"....
சிற்பி வெடித்தால் தான் "முத்து"....
நதி பாய்ந்தால் தான் "அருவி"....
கறும்பு சப்பினால் தான் "இனிப்பு"....
சுட்டால் தான் அது "நெருப்பு".....

மனிதா...!

இயற்கையின் நியதியும் ஒன்றை இழந்து ஒன்றை அடைவது தான்....
இதில் உன் வாழ்க்கை மட்டும் "விதிவிலக்கல்ல".....

சோதனைகள்,
கவலைகள்,
ஏமாற்றங்கள்,
தோல்விகள்,
இழப்புக்கள்,
காத்திருப்புக்கள்.....

மனிதா...!

இவற்றையெல்லாம் நீ
கடந்தால் தான் வாழ்க்கை "அர்த்தமான வாழ்க்கை....."
உனக்கு வாழ்க்கை நிஜங்கள் புரியும்...
பிறர் உணர்வுகளை மதிப்பாய்.....
இறையன்பு கிட்டும்....
எதிர்பார்ப்புக்கள் குறையும்.....
ஏமாற்றங்கள் பழகிப் போகும்.....
வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்....

மனிதா...!

என்றாயினும் உள்ளக் குமுறல்கள் ஓய்வதில்லை....
இழந்தவற்றையே ,இதய அறைகள் மீட்டி பார்க்கும்....அது இதயங்களின் இயல்பாகவே இருக்கலாம்.....

மனிதா...!

"இது நடந்திருத்தால், வாழ்க்கை இப்படி இருந்திருக்கும்...."

"அநியாயமாக வாய்ப்ப இழந்துவிட்டோம்...."

"எல்லாம் எங்க துரதிஷ்டம்....."

"தலையால வந்ததை காலால உதைந்துட்டம்...."

"அப்ப கொஞ்சம் யோசித்திருந்தால் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது..."

மனிதா...!
இது தான்  உன் இதய அறைகளின் மெளனமான ஓசை....

 நீ மறந்துவிட்டாய் உன்னைப் படைத்த மறையோனை....!!!

வாழ்க்கையை அளித்தவன் அவன்....!!
இன்பங்களை அள்ளித் தந்தவன் அவன்....!!
உடலின் இயக்கத்தின் உரிமையாளன் அவன்.....!!
நீ மறைத்து வைத்துள்ள இரகசியங்களை அறிந்தவன் அவன்....!!
இழப்புக்களை தருபவனும் அவன்...!!
வாழ்க்கையின் முடிவும்  அவனிடமே....!!

மனிதா...!

இவ்வாறாக எல்லாவற்றிற்கும் அவன் காரணகர்த்தாவாக இருக்கும் போது....
உன்னுடைய வாழ்க்கை மட்டும் அவன் நாட்டமின்றி நடப்பதற்கில்லை....!!!
ஏதோ ஒரு வகையில் உனக்கும் நலவை நாடியிருப்பான்....

மனிதா...!

நதியில் செல்லும் இலைகளுக்கு தெரியாது,நதியின் பாதை முடிவு...
உன் இறைவன் எங்கு உனக்கு நலவை நாடியிருப்பான் என உனக்கும் தெரியாது...
மறைவை அறிந்தவன் "அவனே...."
சில போது உன் சங்கடங்களும்,
இழப்புக்களும் அவன் பக்கம் உன்னை ஈர்ப்பதற்கே...!!!

மனிதா...!

உனக்காக நிச்சயிக்கப்பட்ட ஒன்று தவறுதலாகக் கூட இன்னொருவருக்கு சென்று விடாது....
எது உனக்காதோ அதை நீ அடைந்தே தீருவாய்....!!!
இன்னும் உன் வாழ்க்கையை மற்றவருடன் ஒப்பிட்டு பயனில்லை....
பொறாமை படுவதற்கும் ஒன்றுமில்லை.....
ஆத்திரப்பட்டோ,
ஆவேசப்பட்டோ அர்த்தமில்லை....

மனிதா...!
வாழ்க்கையில் எமக்கே எல்லாம் என்று கண்ணீருடன் உன் காலம் நகரலாம்....
ஒரே ஒரு முறை .....
ஒரு தடவை ,
வைத்தியசாலையின்
வாசலில் நின்றுபார்....
நீ...
உணர தேவையில்லை
உன் உள்ளம் உணர்த்தும்,உதடுகள் நிஷப்தமாக இறையோனை புகழும்....!!!
"நான் தான் வாழ்க்கையின் அதிஷ்டசாலி"
 என....

ஏனென்றால்....

👉🏻பலரின் வாழ்க்கையின் ஆரம்பமாகவும் இருக்கலாம்....
👉🏻உறவின் உயிருக்கு துடிக்கும் உயிர்களும் அங்கு தான்....
👉🏻துடிக்க துடிக்க உயிர் பிரியும் இடமும் தான்...
👉🏻கதறி அழுதும்,கண்ணீர் மட்டும் மிஞ்சும் இடமும் தான்....

🔺பணத்தின்
மோகமும்....
🔺ஏழ்மையின்
     கோரமும்....
🔺உயிரிழந்த.   உள்ளங்களும்....
🔺கண்ணீரின் ஆழமும்...
🔺ஆரோக்கியத்தின் அருமையும்....
🔺நிரந்தரமற்ற இன்பமும்....

ஏன், "இறைவனின் அருளும் "உணரும் தருணம் அங்கே தான்.....

மனிதா....!

உணர்ந்து கொள்வாய்
தெரிந்து விழுந்து விட்டோம்....
உலக ஆசையில் நழுவியல்லயென....!!!

ஒரு நாள்வரும் இழந்தவற்றின் நலவை உணர்வாய்...

அதுவரையில்.....
வாழ்க்கையில் கொஞ்சம் சகித்துக்கொள்...!
சோதனைகளைப் பொறுத்துக்கொள்....!

நிச்சயமாக துன்பங்களின் பின்  இறைவன் இன்பத்தை மறைத்து வைத்துள்ளான் என்பது நிச்சயமாகும் வரை......!!!

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Good morning sir very excellent post about life thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    பெரும்பான்மையான மனிதர்களின் மனக் குமுறல்களைத்
    தெள்ளத் தெளிவாக வெள்ளைத்
    தாளில் அள்ளிக் குளித்து விட்ட, அம்
    மாமனிதனுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்! வாழ்க்கையில் மனிதன்
    என்னவெல்லாம் நினைககக் கூடுமோ, அவற்றைப் படம் பிடித்தாற்போல், செதுக்கி விட்டானே
    செம்மல்!
    ஒரே ஒருகணம் வாழ்க்கையின்
    உண்மையான தத்துவம் என்னவென்பதை உணரும் எவனும்
    ஞானியல்லவா! அத்தனை பேரும்
    உணர்ந்து விட்டால் பின் "மாயை"ககும் வேலையில்லை,
    இறைவன் புத்துலகம் படைக்கச்
    சென்றிருடுவான் அன்றோ!!?
    வாத்தியாரைமா, படித்ததைப் பகிர்ந்தீர், அறிந்தோம், பெருமகிழ்வு
    கொண்டோம், நன்றி ஏற்பீர்!

    ReplyDelete
  3. உண்மை. சத்யமேவ் ஜெயதே...

    ReplyDelete
  4. அன்பின் குருவே ஐயா..........

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............ஐயா.

    மிக்க நன்றி................துன்பத்தில் தவிக்கும் மக்களுக்கு...மிக அருமையான வைட்டமின் டொனிக்..........

    என்றும் அன்புடன்
    விக்னசாயி.

    ==========================

    ReplyDelete
  5. அய்யா வணக்கம்.
    இன்பமா துன்பத்தின் மறைவிடம்? இன்ப துன்பங்கள் மாறி மாறி வருபவை. மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டுபவை.
    ஞான நிலையைத்தான் தேடுதல் வேண்டும். அதைத்தான் இறைவன் ஒளித்து வைத்துள்ளான் இறைவன்.
    இதையல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    well saiD Sir//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent post about life thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  8. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பெரும்பான்மையான மனிதர்களின் மனக் குமுறல்களைத்
    தெள்ளத் தெளிவாக வெள்ளைத்
    தாளில் அள்ளிக் குளித்து விட்ட, அம்
    மாமனிதனுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்! வாழ்க்கையில் மனிதன்
    என்னவெல்லாம் நினைககக் கூடுமோ, அவற்றைப் படம் பிடித்தாற்போல், செதுக்கி விட்டானே
    செம்மல்!
    ஒரே ஒருகணம் வாழ்க்கையின்
    உண்மையான தத்துவம் என்னவென்பதை உணரும் எவனும்
    ஞானியல்லவா! அத்தனை பேரும்
    உணர்ந்து விட்டால் பின் "மாயை"ககும் வேலையில்லை,
    இறைவன் புத்துலகம் படைக்கச்
    சென்றிருடுவான் அன்றோ!!?
    வாத்தியாரைமா, படித்ததைப் பகிர்ந்தீர், அறிந்தோம், பெருமகிழ்வு
    கொண்டோம், நன்றி ஏற்பீர்!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  9. /////Blogger SELVARAJ said...
    உண்மை. சத்யமேவ் ஜெயதே.../////

    நல்லது. நன்றி செல்வராஜ்!!!

    ReplyDelete
  10. /////Blogger Vicknaa Sai said...
    அன்பின் குருவே ஐயா..........
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............அருமை அருமை அருமை............ஐயா.
    மிக்க நன்றி................துன்பத்தில் தவிக்கும் மக்களுக்கு...மிக அருமையான வைட்டமின் டொனிக்..........
    என்றும் அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. நன்றி விக்னசாயி!!!!

    ReplyDelete
  11. ////Blogger venkatesh r said...
    அய்யா வணக்கம்.
    இன்பமா துன்பத்தின் மறைவிடம்? இன்ப துன்பங்கள் மாறி மாறி வருபவை. மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டுபவை.
    ஞான நிலையைத்தான் தேடுதல் வேண்டும். அதைத்தான் இறைவன் ஒளித்து வைத்துள்ளான் இறைவன்.
    இதையல்லவா சொல்லியிருக்க வேண்டும்?//////

    நல்லது. ஞான நிலையைத் தேடுங்கள். நன்றி வெங்கடேஷ்!!!!

    ReplyDelete

  12. இனி ஒரு வார்த்தை இல்லை சொல்வதற்கு
    எல்லா புகழும் இறைவன் இறைவனுக்கு
    நன்றி

    ReplyDelete
  13. //Blogger csubramoniam said...
    இனி ஒரு வார்த்தை இல்லை சொல்வதற்கு
    எல்லா புகழும் இறைவன் இறைவனுக்கு
    நன்றி/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com