6.2.18

எது நிஜம்?


எது நிஜம்?

ஏன் மீசை முளைக்கிறது
ஆணுக்கு தெரியாது.

ஏன் பெண்மை பூக்கிறது
பெண்ணுக்கு தெரியாது.

குழந்தை எப்போது பிறக்கும்
மருத்துவருக்கு தெரியாது.

ஏன் பற்கள் முளைக்கிறது
மழலைக்கு தெரியாது.

எங்கு யாருக்கு என்ன நடக்கும்
எவருக்கும் தெரியாது.

எப்போது எந்த நோய் வரும்
எவருக்கும் தெரியாது.

ஏன் மரணம் அழைக்கிறது
முதுமைக்கு தெரியாது.

மரணத்திற்கு பின் எங்கு
போவோம் ஒருத்தருக்கும் தெரியாது.

ஏன் மனிதன் அழுகின்றான்
கடவுளுக்கு தெரியாது.

கடவுள் எங்கு இருக்கிறான்
மனிதனுக்கு தெரியாது.

எல்லாமும் எல்லோருக்கும்
எப்போதும் தெரியாது.

என்றாலும் வாழ்கின்றோம்
ஏன் என்று தெரியாது.

நாளைக்கு என்ன ஆகும்
என்பது தெரியவே தெரியாது.

இன்று தான் நிஜம்.
இந்த நேரம்தான் நிஜம்.
இந்த நொடி நிஜம்.

நாளை பற்றி
கவலைப்படாமல்
நிம்மதியாக வாழ்வோம் .....💗
-----------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. வணக்கம் குருவே!
    எத்தகைய உண்மைகள்! யாருக்கும் தெரியவேணடி நடக்கும் உண்மைகள்
    அல்ல எதுவும்! ஆனால், அவை எதுவுமே நடக்காமல் இருக்கவும்
    வாய்ப்பில்லை! காரணம் இறைவன் ஒருவனே அறிவான்!
    நடக்கவேண்டியவற்றை நடத்தவும், அல்லாதவர்களை நடந்துவிடாமல்
    தடுக்கவும் தெரிந்த காரணகர்த்தா அவனல்லவா!
    ஆகவே,நம்மை நடாத்தி வளர்க்கும்
    அவனை எப்போதும் நினைந்து வணங்குவோம்...நாளும் அவனே, நாளையும் அவனே!!

    ReplyDelete
  2. Good morning sir very nice sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Good morning iyya migavum super pazhamozhigal

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. நிதர்சணமான உண்மை....

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,மனவளத்திற்கு மற்றுமோர் டானிக்.நன்றி.

    ReplyDelete
  7. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    எத்தகைய உண்மைகள்! யாருக்கும் தெரியவேணடி நடக்கும் உண்மைகள்
    அல்ல எதுவும்! ஆனால், அவை எதுவுமே நடக்காமல் இருக்கவும்
    வாய்ப்பில்லை! காரணம் இறைவன் ஒருவனே அறிவான்!
    நடக்கவேண்டியவற்றை நடத்தவும், அல்லாதவர்களை நடந்துவிடாமல்
    தடுக்கவும் தெரிந்த காரணகர்த்தா அவனல்லவா!
    ஆகவே,நம்மை நடாத்தி வளர்க்கும்
    அவனை எப்போதும் நினைந்து வணங்குவோம்...நாளும் அவனே, நாளையும் அவனே!!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. ///Blogger ஸ்ரீராம். said...
    அருமை.////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice sir thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  10. ////Blogger Subathra Suba said...
    Good morning iyya migavum super pazhamozhigal/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  11. ////ravichandran said...
    Respected Sir,
    Happy morning...
    Have a great day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  12. /////Blogger kausalya muralikannan said...
    நிதர்சணமான உண்மை..../////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  13. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மனவளத்திற்கு மற்றுமோர் டானிக்.நன்றி./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  14. வணக்கம். உன்மை. ஆநாலும் எல்லாம் தெரியும் என்று சொல்வதில் மனிதர்களுக்கு சந்தோஷம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com