1.2.18

கடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும்!!!!


கடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும்!!!!

மனவளக் கட்டுரை!

கடலில் பெய்யும் மழை பயனற்றது,

பகலில் எரியும் தீபம் பயனற்றது,

வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,

நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.

அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.

ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,

சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,

பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.

பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.

அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,

குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.

கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.

ஆனால் . . .

உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள்.

வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.

காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
கோபத்தை விடக் கொடிய நெருப்பு இல்லவே இல்லை....

இருபது ரூபாயை  பிச்சைக்காரனுக்கு போடுவதற்கு  யோசிக்கின்ற நாம் அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்கின்றோம்...

ஜிம்மில் ஒரு நாள் பூராவும் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வருகிறோம்...

காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

ஜோக்கை எல்லாம் பார்வேர்ட் பண்ணுற நாம இந்த மாதிரி மெசஜை கண்டும் காணாமல்  விட்டுடுறோம்...
அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்.
=====================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir very useful information,it gives lot of self confidence and enthusiasm, thanks for posting valuable information vazhga valamudan sir

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... beautiful lines...

    Thanks for sharing...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information,it gives lot of self confidence and enthusiasm, thanks for posting valuable information vazhga valamudan sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... beautiful lines...
    Thanks for sharing...
    With kind regards,
    Ravi-avn//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    Very nice/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  6. ////Blogger kittuswamy palaniappan said...
    Very nice information sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com