நாம் அதிகம் கேட்டிராத மகாபாரத நிகழ்வு!!!!
மகாபாரதத்தில் நடந்த ஒரு நிகழ்வு இதுவரை நாம் அதிகம் கேட்டிராதது.!
பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான்.
திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள் அதேநேரம் அங்கு தோன்றினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன்,எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன், அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.
நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான்.
உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல், அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி, துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று "தக்ஷகன் முறை" என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.
திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள்.
கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.
துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.
திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.
ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.
பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன்,
அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய
பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.
கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.
உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள்.
துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.
தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.
அதே நேரம், அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.
அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான்.
இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.
*"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்!."*
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாத்தியார் 3 நாட்கள் காரைக்குடிக்குப் பயணம்.
பாடங்கள் தொடர்ந்து வரும். அது கூகுள் ஆண்டவர் உபயம்
ஆனால் உங்களுடைய பின்னூட்டங்களும் (comments), அதற்கான வாத்தியாரின் பதில்களும் 2-12-2017 சனிக்கிழமை அன்றுதான் வெளியாகும்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
இதுபோல பல உபகதைகள் உண்டு. மூலக்கதையின் போக்கை மாற்றாமல் புனையப்பட்ட கதைகளிவை.யார் இவற்றை எழுதியவர்கள் என்று கூறமுடியாது. பலவும் புராணம் சொல்பவர்களின் இட்டுக்கட்டு. ஆனாலும் நன்றாகவே உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ReplyDeleteGood morning sir excellent Mahabharata story thanks sir vazhga valamudan
ReplyDeleteஇரு நாட்களுக்கு முன்புதான் பிதாமகர் பீஷமர் தருமருக்கு கூறிய 'காலகவிருஷியர்' கதை படித்தேன். இன்று ஒரு புதிய கதை. எத்தனை சிறு, கிளை கதைகளை உட்கொண்டுள்ளதோ தெரியவில்லை. பாரதத்தின் பொக்கிஷம்.
ReplyDeleteவணக்கம் ஐயா,tit for tat.புதிய தகவல்.நன்றி.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Thanks for sharing...
Have a great day.
With kind regards,
Ravi-avn
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇதுபோல பல உபகதைகள் உண்டு. மூலக்கதையின் போக்கை மாற்றாமல் புனையப்பட்ட கதைகளிவை.யார் இவற்றை எழுதியவர்கள் என்று கூறமுடியாது. பலவும் புராணம் சொல்பவர்களின் இட்டுக்கட்டு. ஆனாலும் நன்றாகவே உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.////
நல்லது. உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir excellent Mahabharata story thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteஇரு நாட்களுக்கு முன்புதான் பிதாமகர் பீஷமர் தருமருக்கு கூறிய 'காலகவிருஷியர்' கதை படித்தேன். இன்று ஒரு புதிய கதை. எத்தனை சிறு, கிளை கதைகளை உட்கொண்டுள்ளதோ தெரியவில்லை. பாரதத்தின் பொக்கிஷம்./////
உண்மைதான். நல்லது. நன்றி செல்வராஜ்!!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,tit for tat.புதிய தகவல்.நன்றி.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
///Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Thanks for sharing...
Have a great day.
With kind regards,
Ravi-avn//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!