அஷ்டமி, நவமி திதிகளை ஏன் தவிர்க்கிறோம்?
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வாதிகள் கேட்பார்கள்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்க்கு என்ன காரணம் ?
அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.
கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.
ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ?
இல்லை !!!!
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.
அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.
அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.
அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.
பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.
அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.
நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.
அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.
இப்போது சொல்லுங்கள் நம் முன்னோர்கள் சொல்வது சரிதானே?
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very useful information about astami thithi and navami thithi, thanks sir vazhga valamudan
ReplyDeleteஅதில் என்ன சந்தேகம்.
ReplyDeleteVery nice information Sir.
ReplyDeleteVanakkam Guruve,
ReplyDeleteExcellent article!
Very good information!! Thanks!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Excellant explanation...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn
வணக்கம் ஐயா:
ReplyDeleteஇந்த பதிவில் உள்ளவை எங்கோ இதற்கு முன்னரே படித்திருக்கிறேன். அப்போது வந்த ஐயங்கள் இவை:
1. நிலா பூமியை 27 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. 15 நாட்கள் வளர்பிறை 15 நாட்கள் தேய்பிறை என்று எப்படி வருகிறது?
2. அந்த 27 (அல்லது 30 என்றே வைத்துக்கொள்வோம்) நாட்களில், ஒரே ஒரு முறை அல்லவா பூமி நிலாவிற்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்? மற்றொரு முறை இவை மூன்றும் நேர் கோட்டில் இருக்கும்போது நிலா அல்லவா சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருக்கும்? இந்த இரண்டு முறையும் எப்படி ஒரே மாதிரியான vibration ஏற்படும்?
3. முக்கியமாக, பூமி நிலவிற்கும் சூரியனுக்கும் நடுவில் வரும் நாள் பௌர்ணமி. நிலா பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும் நாள் அமாவாசை. அப்படி என்றால், அஷ்டமி, நவமி தினங்களில் எப்படி இங்கே சொல்லப்படும் Vibration ஏற்படும்?
அன்புடன்,
மகேஷ் குமார்
வணக்கம் ஐயா,முன்னோர்கள் கடைபிடித்த வாழ்வியல் முறைகள் ஒவ்வொன்றிலும்,அறிவியல் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.நன்றி.
ReplyDeleteவணக்கம் அய்யா , நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம் , மனிதன் செய்கிற தவறுக்கு அவன் காரணமா ? இல்லை கிரகம் காரணமா ? இதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அய்யா
ReplyDelete///////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information about astami thithi and navami thithi, thanks sir vazhga valamudan//////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteஅதில் என்ன சந்தேகம்./////
நல்லது. நன்றி நண்பரே!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery nice information Sir.////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteVanakkam Guruve,
Excellent article!
Very good information!! Thanks!//////
நல்லது. நன்றி வரதராஜன்!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Excellant explanation...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
////Blogger Mahesh Kumar said...
ReplyDeleteவணக்கம் ஐயா:
இந்த பதிவில் உள்ளவை எங்கோ இதற்கு முன்னரே படித்திருக்கிறேன். அப்போது வந்த ஐயங்கள் இவை:
1. நிலா பூமியை 27 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. 15 நாட்கள் வளர்பிறை 15 நாட்கள் தேய்பிறை என்று எப்படி வருகிறது?
நட்சத்திரக் கணக்கு வேறு. திதி வேறு. Thithi is the distance between Sun and Moon
...................................
2. அந்த 27 (அல்லது 30 என்றே வைத்துக்கொள்வோம்) நாட்களில், ஒரே ஒரு முறை அல்லவா பூமி நிலாவிற்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்? மற்றொரு முறை இவை மூன்றும் நேர் கோட்டில் இருக்கும்போது நிலா அல்லவா சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருக்கும்? இந்த இரண்டு முறையும் எப்படி ஒரே மாதிரியான vibration ஏற்படும்?
3. முக்கியமாக, பூமி நிலவிற்கும் சூரியனுக்கும் நடுவில் வரும் நாள் பௌர்ணமி. நிலா பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும் நாள் அமாவாசை. அப்படி என்றால், அஷ்டமி, நவமி தினங்களில் எப்படி இங்கே சொல்லப்படும் Vibration ஏற்படும்?
அன்புடன்,
மகேஷ் குமார்//////
சந்திரன் பூமியைத்தான் சுற்றி வருகிறது. அதை ஏன் மறந்து விட்டீர்கள்? அதை நினைத்துப் பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும் நண்பரே!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,முன்னோர்கள் கடைபிடித்த வாழ்வியல் முறைகள் ஒவ்வொன்றிலும்,அறிவியல் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.நன்றி.////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!
/////Blogger jay kumar said...
ReplyDeleteவணக்கம் அய்யா , நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம் , மனிதன் செய்கிற தவறுக்கு அவன் காரணமா ? இல்லை கிரகம் காரணமா ? இதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அய்யா/////
மனிதன் செய்கின்ற தவறுகளுக்கு அவனே காரணம்!!!!
Dear Sir
ReplyDeleteThis info may be wrong. During new moon( Amaavasai) the moon will be in between sun and earth.
During full moon ( Pournami) earth in between moon and sun. During Ashtami and Navami moon will not be in between sun and earth. Please see the below link
https://www.thinglink.com/scene/880874939425488898