27.3.17

வாழ்க்கையில் சிறந்தவைகளைப் பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.


வாழ்க்கையில் சிறந்தவைகளைப் பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.

மனவளக் கட்டுரை

படித்து  வியந்த  உரையாடல்

சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.

சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)

சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.

சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….

இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)

சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?

பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.

சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?

 பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.

சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?

பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?

 பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
---------------------------------------------------
படித்து  வியந்த  உரையாடல்: உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Thanks for giving a self confidence article sir thanks a lot

    ReplyDelete
  2. ஐயா,

    எல்லாருக்கும் தனது பள்ளி படிப்பு மிகவும் இன்றிமையாத நாட்கள். சுற்றிருத்த குழந்தைகள் ஆங்கிலேஇந்தியா கல்வி பயில ஆரம்பித்த சமயத்தில், நாங்கள் ராமகிருஷ்ண மிஷன் நடத்திய கல்விகூடத்தில் பயின்றது, எங்களது தந்தையின் உயர்ந்த சிந்தனை மட்டுமே காரணம். பள்ளில் வெள்ளிக்கிழமை தோறும் பஜனை தொடருந்து, ஆன்மிக சொற்பொழிவு நடக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தர் கதைகள் கேட்டு வளர்ந்த அனுபவம் உண்டு.

    இன்றய வாரம் பழைய பள்ளி நினைவுகளுடன் தொடங்குகிறது.

    ராகினி

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Wonderful article.

    EYES SHOW THE SIGHT. HEART SHOWS THE WAY.

    Thanks for sharing.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    தெளிவான விளக்கம்
    நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,அட்டகாசம்.படிக்கும்போதே மனதில் யானை பலம் வந்துவிடுகிறது.நன்றி.

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Thanks for giving a self confidence article sir thanks a lot/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger koindu Jr said...
    ஐயா,
    எல்லாருக்கும் தனது பள்ளி படிப்பு மிகவும் இன்றிமையாத நாட்கள். சுற்றிருத்த குழந்தைகள் ஆங்கிலேஇந்தியா கல்வி பயில ஆரம்பித்த சமயத்தில், நாங்கள் ராமகிருஷ்ண மிஷன் நடத்திய கல்விகூடத்தில் பயின்றது, எங்களது தந்தையின் உயர்ந்த சிந்தனை மட்டுமே காரணம். பள்ளில் வெள்ளிக்கிழமை தோறும் பஜனை தொடருந்து, ஆன்மிக சொற்பொழிவு நடக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தர் கதைகள் கேட்டு வளர்ந்த அனுபவம் உண்டு.
    இன்றய வாரம் பழைய பள்ளி நினைவுகளுடன் தொடங்குகிறது.
    ராகினி////

    நல்லது. உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட மேன்மைக்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Wonderful article.
    EYES SHOW THE SIGHT. HEART SHOWS THE WAY.
    Thanks for sharing.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  9. /////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    தெளிவான விளக்கம்
    நன்றி
    மூர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அட்டகாசம்.படிக்கும்போதே மனதில் யானை பலம் வந்துவிடுகிறது.நன்றி./////

    நல்லது. உங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com