5.1.17

அடுத்த அதிரடி.....!


அடுத்த அதிரடி.....!  

ஆதார் அட்டையின் மூலம் பணம் செலுத்துதல்
(Aadhar Enabled Payment .......!)

பே டி எம் முதலான வாலெட் கம்பெனிகளுக்கும் கார்டு வழங்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவான நடவடிக்கை என்று பேசினவங்க,  கார்டு இல்லாத சாதாரண மனுஷங்க என்ன செய்வாங்கன்னு பொங்கினவங்க – எல்லாருக்கும் ஆப்புதான் இது.

இது எப்படி செயல்படுகிறது?  ரொம்ப சுலபம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு.  ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் எண். இவ்வளவுதான். உங்களது வங்கிக்கணக்கில் உங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதுதான் நீங்கள் செய்ய வேண்டியது.  செஞ்சாச்சா?  அவ்வளவுதாங்க....

கடைக்காரர்கள் செய்ய வேண்டியது என்ன?  இந்த ஜியோ சிம் வாங்கும்போது கட்டை விரலை வெச்சோமே ஒரு தம்மாத்தூண்டு மெஷின் – பயோமெட்ரிக் சென்ஸார் – விலை (500 முதல்) ரூ.2000/- ...  இதை வாங்கி வெச்சிக்க வேண்டியது...  இதன் கூட ஒரு சின்ன டெர்மினல் இருக்கும்.  இதற்கு மாத வாடகை கிடையாது...

அதுக்கப்புறம்?

நீங்க கடையிலே போய் சாமான் வாங்கறீங்க.... ரூ68/- குடுக்கணும்.  இப்போ கடைக்காரர் என்ன செய்வார்னா உங்களோட ஆதார் எண்ணைக் கேட்பார். இதனை நீங்களே கீ இன் செய்யலாம், அல்லது அட்டையைக் காட்டி கடைக்காரரையும் கீ இன் செய்யச் சொல்லலாம்.  இது தற்போதைய டெபிட் / க்ரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது போல.  அதுக்கப்புறம் கடைக்காரர் உங்களோடது எந்த வங்கி என்று கேட்பார்.  ஸ்க்ரீனில் தெரியும் பட்டியலில் இருந்து உங்களது வங்கியைத் தேர்ந்தெடுப்பார்.  அப்புறம் ரூ.68/- என்பதை அழுத்துவார்.  இப்போ நீங்க உங்க கட்டை விரலையோ அல்லது பத்து விரலில் வாஸ்துப்படி எந்த விரல் பிடிக்குமோ அதை வைத்து அழுத்தினால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.68/- கழிக்கப்பட்டு கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதில் உங்கள் ஆதார் எண்தான் உங்களது டெபிட் / க்ரெடிட் கார்டு.  டெபிட் கார்டின் பின் அல்லது க்ரெடிட் கார்டின் சிப் தான் உங்களது கை விரல்.

டெபிட் / க்ரெடிட் கார்டு போல தொலைந்து விடுமோ என்ற கவலையில்லை -  உங்கள் ஆதார் எண் தெரிந்தாலும் உங்கள் கைவிரல் இல்லாமல் அது செல்லாது.

முக்கியமாக இதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்துக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. கிடையவே கிடையாது. இதனால் விசா / மாஸ்டர் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு நமது பணம் போவது தடுக்கப்படுகிறது.

கடைக்காரர்களுக்கு மாதாந்திரக் கட்டணமும் கிடையாது.

1. முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங்:
50% இந்தியர்கள் ஏழைகள்.அவர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை.

2. ராகுல்        60% சதவீத இந்தியர்கள் படிப்பறிவற்றவர்கள்.
 அவர்களால் எப்படி டிஜிட்டல் பணப்பறிமாற்றம்
  செய்ய முடியும்?

3.மணிசங்கர்ஐயர் : இந்தியாவில் பாதிபேருக்குமேல் வேலையற்றவர்கள்.

4. பசிதம்பரம்: இந்தியாவில் 50% கிராமங்களுக்குமேல் மின்சாரமே கிடையாது.பிறகெப்படி மின்ணணு பணப்பறிமாற்றம் சாத்தியம்.

5. மணீஷ்திவாரி: இந்தியமக்களுக்கு உணவு,துணி போன்ற அடிப்படை வசதிகளே இன்னும் கிடைக்கவில்லை.

காங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக   அவர்களே  ஒத்துகிட்டாங்க  பாருங்க... !!!!!
----------------------------------------------------
படித்தேன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. நல்ல பதிவு ஐயா,
    உண்மையில் ஆதார் கார்ட் எதுக்கு என்று தெரியாமல் இருந்தேன். குழப்பமாகவும் இருந்தது. தங்களது பதிவின் மூலம் புரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. புதிய அதிரடி திட்டம் அருமை மற்றும் எளிது.

    வாழ்க பிரதமர்.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    செய்தி.. செயலில் இறங்கும் வரை காத்திருப்போம்...

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    நாடு, மக்கள், முன்னேற்றம், சேவை ,மனபான்மை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து ஏமாந்தோம் நாடு மக்கள் முன்னேற ஒத்துழைத்து முன்னேறுவோம்
    நன்றி .
    மூர்த்தி

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா
    நாடு, மக்கள், முன்னேற்றம், சேவை ,மனபான்மை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து ஏமாந்தோம் நாடு மக்கள் முன்னேற ஒத்துழைத்து முன்னேறுவோம்
    நன்றி .
    மூர்த்தி

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,ஒற்றை வார்த்தையில் சொல்லுவதென்றால் "சபாஷ்". வெளிநாடுகளில் அனைத்தும் வங்கி பரிவர்த்தனைதான்.டிஜிடல் பரிவர்த்தனை வந்தால் வியாபாரிகளுக்கும்,லஞ்சம் வாங்குபவர்களுக்கும்தான் கஷ்டம்.கணக்கில் வராத கருப்பு பணத்தை சேர்க்க முடியாது.சாதாரண மக்களுக்கு உள்ள ஒரே தற்காலிக கஷ்டம் வங்கியிலும் ஏடிம் களிலும் காத்திருப்பதும் மற்றும் தேவையான அளவு பணம் கிடைக்காததும்தான்.மக்களும்,சிறு வியாபாரிகளும் வங்கி பரிவர்த்தனைக்கு பழகி விட்டால் பணம் என்பது ஒரு காகிதம்தான்.மாற்றங்கள் வரும்போது எதிர்ப்புகள் வருவதென்பது உலக வரலாறு.பெரிய வர்த்தகர்களும்,ரியல் எஸ்டேட் அதிபர்களும்,கறுப்பு பணம் சேர்க்க நினைக்கும் அரசியல்வாதிகளும்,லஞ்சம் வாங்க நினைக்கும் அரசு ஊழியர்களும் சாதரண மக்களை கேடயமாக பயன்படுத்தி எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.மோடி உறுதியாக இருந்து இதில் இருந்து பின்வாங்கக்கூடாது என்பதே எனது எண்ணம்.நன்றி.

    ReplyDelete
  7. Iyya vanakkam
    Thankyou for your information
    Kannan

    ReplyDelete
  8. ////Blogger VM. Soosai Antony said...
    நல்ல பதிவு ஐயா,
    உண்மையில் ஆதார் கார்ட் எதுக்கு என்று தெரியாமல் இருந்தேன். குழப்பமாகவும் இருந்தது. தங்களது பதிவின் மூலம் புரிந்து கொண்டேன்.
    நன்றி.////

    உங்களின் புரிந்துணர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  9. ////Blogger C Jeevanantham said...
    புதிய அதிரடி திட்டம் அருமை மற்றும் எளிது.
    வாழ்க பிரதமர்./////

    உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  10. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    செய்தி.. செயலில் இறங்கும் வரை காத்திருப்போம்.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  11. /////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    நாடு, மக்கள், முன்னேற்றம், சேவை ,மனப்பான்மை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து ஏமாந்தோம் நாடு மக்கள் முன்னேற ஒத்துழைத்து முன்னேறுவோம்
    நன்றி .
    மூர்த்தி/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஒற்றை வார்த்தையில் சொல்லுவதென்றால் "சபாஷ்". வெளிநாடுகளில் அனைத்தும் வங்கி பரிவர்த்தனைதான்.டிஜிடல் பரிவர்த்தனை வந்தால் வியாபாரிகளுக்கும்,லஞ்சம் வாங்குபவர்களுக்கும்தான் கஷ்டம்.கணக்கில் வராத கருப்பு பணத்தை சேர்க்க முடியாது.சாதாரண மக்களுக்கு உள்ள ஒரே தற்காலிக கஷ்டம் வங்கியிலும் ஏடிம் களிலும் காத்திருப்பதும் மற்றும் தேவையான அளவு பணம் கிடைக்காததும்தான்.மக்களும்,சிறு வியாபாரிகளும் வங்கி பரிவர்த்தனைக்கு பழகி விட்டால் பணம் என்பது ஒரு காகிதம்தான்.மாற்றங்கள் வரும்போது எதிர்ப்புகள் வருவதென்பது உலக வரலாறு.பெரிய வர்த்தகர்களும்,ரியல் எஸ்டேட் அதிபர்களும்,கறுப்பு பணம் சேர்க்க நினைக்கும் அரசியல்வாதிகளும்,லஞ்சம் வாங்க நினைக்கும் அரசு ஊழியர்களும் சாதரண மக்களை கேடயமாக பயன்படுத்தி எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.மோடி உறுதியாக இருந்து இதில் இருந்து பின்வாங்கக்கூடாது என்பதே எனது எண்ணம்.நன்றி.//////

    உண்மைதான். எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதுதான்! நன்றி ஆதித்தன்!


    ReplyDelete
  13. /////Blogger Kannan L R said...
    Iyya vanakkam
    Thankyou for your information
    Kannan/////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  14. can govt giv scanner for each shop or who will bare the service cost if shop keeper purchased from his pocket.Petty shop owners are not like MORE or Reliance

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com