6.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான்.

அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அத்ற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது. மணந்து கொள்ள ஒரு மகராசி வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஒரு ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார்.

என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:

சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.

லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்)
இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.

லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள். அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.

அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.

இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதகத்தில் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24 comments:

  1. Sir how angaragan became weak in this horoscope sir... It's angaraga s own house

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    அஸ்தமன கிரகங்கள் சுய பரல் 4, 5 இருந்தாலும் நன்மை செய்யாதா? எனது ஜாதகத்தில் அஸ்தமம் ஆன புதன் 5பரல் பெற்றுள்ளார். நவாம்சத்தில் உச்சம் அதனால் கேட்கிறேன்.

    ReplyDelete
  3. Dear Sir,

    Thanks for today's class. Understood the reason for denial of Marriage.

    C. Jeevanantham.

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா,

    முனிகள் சொன்னவை பொய்யாகுமா?

    Quote :

    1. Varahamihira in his `Bruhajjataka`says,”If there is a mix of good and bad planets in the 7th house, the native will have more than one marriage.”

    2.Kalyana Varma in his “Phaladeepika” says “If Venus or the seventh lord is hemmed between malefics or conjunct with malefic or aspected by malefic, then one loses a partner”. It also happens when 7th house is aspected by malefic planets or occupied by them.

    Unquote :
    நல்ல அலசல். களத்திராதிபதி நல்ல நிலையில் அமர்ந்து 2ம் திருமணத்தை தடை செய்துது விட்டாரோ? நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,2ல் அமர்ந்த ராகு தசாவில் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.திரிகோணத்தில் அமர்ந்த 7ம் அதிபன் தசாவில் வயது போயிருக்கும் ஆதலால் இரண்டாம் திருமண வாய்ப்பு இல்லை.முதல் திருமணம் கெட்டதற்க்கும் காரணங்களை தனியே சொல்லியிருந்தால் இன்னும் விளக்கமாய் இருந்திருக்கும்.அலசல் அற்ப்புதம்.நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!

    லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்)
    இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
    களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
    யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.

    லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்
    அலசல் அற்புதம்!
    நல்ல விளக்கங்கள்!
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  7. /////Shruthi Ramanath said...
    Sir how angaragan became weak in this horoscope sir... It's angaraga s own house////

    சூரியனோடு நெருங்கி அஸ்தமனமாகிவிட்டார். அதைக் கவனித்தீர்களா?

    ReplyDelete
  8. ////Blogger Subathra Suba said...
    Good morning sir.nice explanation/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    அஸ்தமன கிரகங்கள் சுய பரல் 4, 5 இருந்தாலும் நன்மை செய்யாதா? எனது ஜாதகத்தில் அஸ்தமம் ஆன புதன் 5பரல் பெற்றுள்ளார். நவாம்சத்தில் உச்சம் அதனால் கேட்கிறேன்.//////

    சொந்த ஜாதகத்தை வைத்து உதிரியான கேள்விகளைக் கேட்டால் எப்படிப் பலன் சொல்வது? முழு ஜாதகத்தையும் அலசித்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  10. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Thanks for today's class. Understood the reason for denial of Marriage.
    C. Jeevanantham.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!~

    ReplyDelete
  11. /////Blogger venkatesh r said...
    வணக்கம் அய்யா,
    முனிகள் சொன்னவை பொய்யாகுமா?
    Quote :
    1. Varahamihira in his `Bruhajjataka`says,”If there is a mix of good and bad planets in the 7th house, the native will have more than one marriage.”
    2.Kalyana Varma in his “Phaladeepika” says “If Venus or the seventh lord is hemmed between malefics or conjunct with malefic or aspected by malefic, then one loses a partner”. It also happens when 7th house is aspected by malefic planets or occupied by them.
    Unquote :
    நல்ல அலசல். களத்திராதிபதி நல்ல நிலையில் அமர்ந்து 2ம் திருமணத்தை தடை செய்து விட்டாரோ? நன்றி.///////

    எங்கே நல்ல நிலைமை? பாபகர்த்தாரியில் மாட்டிக் கொண்டுள்ளாரே! அதைக் கவனித்தீர்களா?

    ReplyDelete
  12. /////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல அலசல் ஐயா...////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  13. ////adithan said...
    வணக்கம் ஐயா,2ல் அமர்ந்த ராகு தசாவில் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.திரிகோணத்தில் அமர்ந்த 7ம் அதிபன் தசாவில் வயது போயிருக்கும் ஆதலால் இரண்டாம் திருமண வாய்ப்பு இல்லை.முதல் திருமணம் கெட்டதற்கும் காரணங்களை தனியே சொல்லியிருந்தால் இன்னும் விளக்கமாய் இருந்திருக்கும்.அலசல் அற்புதம்.நன்றி.////

    அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தி (12ல் மாந்தி) படுக்கை சுகம் இல்லாமல் பண்ணிவிட்டான். அதனால் முதல் திருமணம் கெட்டு விட்டது!

    ReplyDelete
  14. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்)
    இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
    களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
    யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.
    லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்
    அலசல் அற்புதம்!
    நல்ல விளக்கங்கள்!
    நன்றி வாத்தியாரையா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    good analysis,Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ஐயா வணக்கம்
    பாபகர்தாரி யோகத்தின் தீவிரம் புரிந்த்து.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  17. Blogger Subbiah Veerappan said...
    ////adithan said...
    வணக்கம் ஐயா,2ல் அமர்ந்த ராகு தசாவில் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.திரிகோணத்தில் அமர்ந்த 7ம் அதிபன் தசாவில் வயது போயிருக்கும் ஆதலால் இரண்டாம் திருமண வாய்ப்பு இல்லை.முதல் திருமணம் கெட்டதற்கும் காரணங்களை தனியே சொல்லியிருந்தால் இன்னும் விளக்கமாய் இருந்திருக்கும்.அலசல் அற்புதம்.நன்றி.////

    அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தி (12ல் மாந்தி) படுக்கை சுகம் இல்லாமல் பண்ணிவிட்டான். அதனால் முதல் திருமணம் கெட்டு விட்டது!

    வணக்கம் ஐயா,தாமிரபரணி தண்ணீர் போல் விளக்கம் அவ்வளவு தெளிவு.12ல் மாந்தி,திடீர் மற்றும் பெரிய இழப்பு என்று படிப்பித்துள்ளீர்கள்.காரணம் மிகத் தெளிவாக புரிந்தது. நன்றி.

    ReplyDelete
  18. So if any planet joins with Sun in any house then the power of that planet nullifies... Is this right sir

    ReplyDelete
    Replies
    1. For me suriyan buthan & guru in 5th house (simman) suriyan atchi veedu. But sun only 2 paral, Mercury 4 parals & Jupiter 7 parals. Using horoscope just be prepared to face the life as it comes. Nothing in our hands.. Fate is already decided when we were born. Count the blessings & be happy.

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com