4.7.16

அப்போது இருந்தது ஒரு காலம்!!!!


அப்போது இருந்தது ஒரு காலம்!!!!

💥ஒரு காலம் இருந்தது.

💥மனிதாபிமானத்தையும் மனச்சாட்சியையும் எம்மில் பெரும்பான்மையினர் நேசித்த ஒரு காலம் இருந்தது.

💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.
💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.
💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.
💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.
💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.
💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.
💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத ஒரு காலமிருந்தது.
ஒரு காலமிருந்தது.
💥அது நாங்களெல்லோரும்  அன்பில் திளைத்திருந்த காலம்.
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் குருவே!
    ஆஹா! அசத்திவிட்டீர்கள்!சிறிது நேரம் மதிமயங்கி அந்தக் காலத்திற்குப் போய் வந்தேன்!எத்துனை மாற்றங்கள்! கவிஞர் அவர்கள் பாடினாரே " மனிதன் மாறி விட்டான்" என்று!அன்று "பெற்றோருக்குக் பயந்திருந்த காலம்"!
    மலரும் நினைவுகள் எத்தனை எத்தனை
    இனியில்லை அவ்வாழ்வு!?
    அந்நாளை இந்நாளில் நினைக்க வைத்தமைக்கப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. தினமும் இரவில் பிச்சைக்காரனுக்கு சாப்பாடு போட்டகாலம்
    திருவிழா காலங்களில் ஊர்மக்கள் சேர்ந்து அன்னமிட்ட காலம்
    கோடைகாலங்களில் குடை விசிறி என்று தர்மம் செய்தகாலம்
    கை ரிஷ்ஷாவில்மனிதனை மனிதன் இழுத்து சென்று காலம்.
    குழந்தைகளை தலையில் தூக்கி சென்ற காலம்.


    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆஹா! அசத்திவிட்டீர்கள்!சிறிது நேரம் மதிமயங்கி அந்தக் காலத்திற்குப் போய் வந்தேன்!எத்துனை மாற்றங்கள்! கவிஞர் அவர்கள் பாடினாரே " மனிதன் மாறி விட்டான்" என்று!அன்று "பெற்றோருக்குக் பயந்திருந்த காலம்"!
    மலரும் நினைவுகள் எத்தனை எத்தனை
    இனியில்லை அவ்வாழ்வு!?
    அந்நாளை இந்நாளில் நினைக்க வைத்தமைக்கப் பாராட்டுக்கள்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  4. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    தினமும் இரவில் பிச்சைக்காரனுக்கு சாப்பாடு போட்டகாலம்
    திருவிழா காலங்களில் ஊர்மக்கள் சேர்ந்து அன்னமிட்ட காலம்
    கோடைகாலங்களில் குடை விசிறி என்று தர்மம் செய்தகாலம்
    கை ரிஷ்ஷாவில்மனிதனை மனிதன் இழுத்து சென்று காலம்.
    குழந்தைகளை தலையில் தூக்கி சென்ற காலம்/./////

    ஆமாம்.ஆமாம். அதெல்லாம் இனிமேல் கிடைக்காது. காணவும் முடியாது. நன்றி நண்பரே!.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா சிறிது நேரம் சிறு வயது நினைவு வந்து மன நிறைவு தந்தது நன்றி

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,வயதானவர்களுக்கு மலரும் நினைவுகள்.வாலிபர்களுக்கு வரலாறு.பிஞ்சுகளுக்கு மாயாஜாலம்.நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம் குருவே!,
    உங்கள் பதிவுக்கு நன்றி.!
    அந்த பொற்காலம் திரும்ப வருமா.. என்ற ஏக்கத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்!. அதில் ஒரு சிலவற்றைவையாது இப்பொழுது நடக்குமா.. கடவுளுக்கு தான் வெளிச்சம்.!

    நன்றி! பன்னீர்செல்வம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com