14.7.16

பிறந்த வீடு என்னும் சொர்க்கம்!

பிறந்த வீடு என்னும் சொர்க்கம்!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கைபெண்களை...புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்_பெண்களை.
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25 comments:

  1. சொந்தங்கள் கொடுத்த சொர்க்கத்தைத் தொலைத்து
    புதுவொரு சொர்க்கம் புக்ககத்தில் படைக்கும்
    ஒவ்வொரு பெண்ணும் 'விஸ்வாமித்திரன்'தான்!
    இவளின் படைப்போ திரிசங்கினும் திடமானது!

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அருமை,உண்மையான உணர்வுகள்! சூப்பர், ஐயா!

    ReplyDelete
  3. Ippo, Aanuukum and pennukum happening same. Because male also works out of his native. there is no much difference other than change in kothiram...
    otherwise both are getting new relatives, good friends....

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்
    பிறந்த வீடு, பிறந்த வீடு தான் ஐயா

    கண்ணன்

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Good post.


    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. GREAT.EVERY HUMAN MAN OR A LADY ENTERING A NEW PHASE OF LIFE THAT NOT TO GET AWAY FROM THAT .EVERYONE SHOULD UNDERSTAND HOW TO MAKE IT FULL AND HAPPIER. PLEASE UNDESTSND ONE SO AS TO UNDERSTAND OTHER.. GRAEAT MESSAGE THROUGH A SMALL STORY.GREAT. Regards.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,அவ்வப்போது ஆண்களுக்கு ஆதரவாகவும் எழுத வேண்டுகிறேன்.நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger Srinivasa Rajulu.M said...
    சொந்தங்கள் கொடுத்த சொர்க்கத்தைத் தொலைத்து
    புதுவொரு சொர்க்கம் புக்ககத்தில் படைக்கும்
    ஒவ்வொரு பெண்ணும் 'விஸ்வாமித்திரன்'தான்!
    இவளின் படைப்போ திரிசங்கினும் திடமானது!//////

    நல்லது. நன்றி ஸ்ரீனிவாசராஜூலு!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அருமை,உண்மையான உணர்வுகள்! சூப்பர், ஐயா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  10. /////Blogger Karthikraja K said...
    Ippo, Aanuukum and pennukum happening same. Because male also works out of his native. there is no much difference other than change in kothiram...
    otherwise both are getting new relatives, good friends..../////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    Very good, Sir/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    பிறந்த வீடு, பிறந்த வீடு தான் ஐயா
    கண்ணன்/////

    உங்களின் எண்ணப்பகிர்விற்கு நன்றி கண்ணன்!!!

    ReplyDelete
  13. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Good post.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  14. /////Blogger kittuswamy palaniappan said...
    GREAT.EVERY HUMAN MAN OR A LADY ENTERING A NEW PHASE OF LIFE THAT NOT TO GET AWAY FROM THAT .EVERYONE SHOULD UNDERSTAND HOW TO MAKE IT FULL AND HAPPIER. PLEASE UNDESTSND ONE SO AS TO UNDERSTAND OTHER.. GRAEAT MESSAGE THROUGH A SMALL STORY.GREAT. Regards.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அவ்வப்போது ஆண்களுக்கு ஆதரவாகவும் எழுத வேண்டுகிறேன்.நன்றி.////

    ஆஹா... அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் சாமி!

    ReplyDelete
  16. /////Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. அன்பு ஆசிரியரே!,
    வணக்கம்.! நல்ல பதிவு. இந்த நிலமை, இந்த காலகட்டத்தில் ஆண்களுக்கும் தான் ஆசிரியரே.! இந்த கணினியுலகத்தில், பெரும்பாண்மையனர் சொந்த ஊரில், ஏன் சொந்த நாட்டிலே! வசிப்பதில்லை. நான் UK வில் வசிக்கிறேன். தாய், தந்தையை, நண்பர்களை, உறவிணர்களை விட்டு, ஆண்களும், பெண்களும் இருவரும் வெளி ஊரிலே, வெளிநாட்டிலோ வசிக்க வேண்டிய சூழ்நிலை. ஆக ஆண்களுக்கும் இதே நிலைமை தான் குருசாமி!
    நான் விவாசய குடும்பத்தில் பிறந்தவன். சிறு (5) வயதிலே மாமா வீட்டில் தங்கி படித்தேன், பிறகு 10 வயதில் விடுதியில். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து எப்படியே கடினப்பட்டு படித்து. பொறியாளராகி. 3 சகோதிரிகளை கல்யாணம் செய்து வைத்து. எனக்கு கல்யாணம் செய்ய கடன் பட்டு. அந்த கடனை அடைக்க வெளிநாடு வந்தேன் 9 வருடம் ஆகிவிட்டது. இப்பொழுது நம் நாட்டுக்கு திரும்ப 2 வருடமாக முயல்கிறேன்.! அது எப்பொழுது நடக்குமே என்று என்று ஒவ்வொரு நாளும் ஏங்குகிறேன்!. என்ன செய்ய மனைவிக்கு அயல்நாட்டு ஈர்ப்பு. எனக்கு என் நாட்டு ஈர்ப்பு. சமுக சேவை செய்ய ஆசை.
    எனக்கு குரு திசை ஆரம்பாகிவிட்டது, ஆனால் குரு 8ல், நவாம்சத்தில் குரு நீசம். எப்பொழுது நான் இந்தியா வருவேன்.. தட்சணாமூர்த்தியாகிய சிவன்பெருமானுக்கு தான் வெளிச்சம். என்னை போன்று பல ஆண்கள் இருக்கலாம். அவர்களுக்கு இந்த பின்னூட்டம்.
    நன்றி! ஐயா!

    ReplyDelete
  18. அருமையான பதிவு..
    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

    ReplyDelete
  19. ////Blogger Subathra Suba said...
    Miga arumai iyya.////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger வேப்பிலை said...
    வருகை பதிவு////

    நன்றி!

    ReplyDelete
  21. /////Blogger Selvam R said...
    அன்பு ஆசிரியரே!,
    வணக்கம்.! நல்ல பதிவு. இந்த நிலமை, இந்த காலகட்டத்தில் ஆண்களுக்கும் தான் ஆசிரியரே.! இந்த கணினியுலகத்தில், பெரும்பாண்மையனர் சொந்த ஊரில், ஏன் சொந்த நாட்டிலே! வசிப்பதில்லை. நான் UK வில் வசிக்கிறேன். தாய், தந்தையை, நண்பர்களை, உறவினர்களை விட்டு, ஆண்களும், பெண்களும் இருவரும் வெளி ஊரிலே, வெளிநாட்டிலோ வசிக்க வேண்டிய சூழ்நிலை. ஆக ஆண்களுக்கும் இதே நிலைமை தான் குருசாமி!
    நான் விவாசய குடும்பத்தில் பிறந்தவன். சிறு (5) வயதிலே மாமா வீட்டில் தங்கி படித்தேன், பிறகு 10 வயதில் விடுதியில். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து எப்படியே கடினப்பட்டு படித்து. பொறியாளராகி. 3 சகோதிரிகளை கல்யாணம் செய்து வைத்து. எனக்கு கல்யாணம் செய்ய கடன் பட்டு. அந்த கடனை அடைக்க வெளிநாடு வந்தேன் 9 வருடம் ஆகிவிட்டது. இப்பொழுது நம் நாட்டுக்கு திரும்ப 2 வருடமாக முயல்கிறேன்.! அது எப்பொழுது நடக்குமே என்று என்று ஒவ்வொரு நாளும் ஏங்குகிறேன்!. என்ன செய்ய மனைவிக்கு அயல்நாட்டு ஈர்ப்பு. எனக்கு என் நாட்டு ஈர்ப்பு. சமுக சேவை செய்ய ஆசை.
    எனக்கு குரு திசை ஆரம்பாகிவிட்டது, ஆனால் குரு 8ல், நவாம்சத்தில் குரு நீசம். எப்பொழுது நான் இந்தியா வருவேன்.. தட்சணாமூர்த்தியாகிய சிவன்பெருமானுக்கு தான் வெளிச்சம். என்னை போன்று பல ஆண்கள் இருக்கலாம். அவர்களுக்கு இந்த பின்னூட்டம்.
    நன்றி! ஐயா!/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி செல்வம்!

    ReplyDelete
  22. /////Blogger Somasundaram said...
    அருமையான பதிவு..
    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்../////

    உண்மைதான்! நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com