30.5.16

Humour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது?

Humour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது?

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
1
வாசனை வராம கோழிக்குழம்பு வைக்கணுமா, ஏங்க?

பக்கத்து வீட்டுக்காரன் கோழியை தேடிட்டு இருக்கான்…!

--------------------------------------------
2
Wife : நீ தான் husband டா வர போறேனு  school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

Husband : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!

Wife : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!

--------------------------/-----//------
3
என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?

பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!

- --------------------------/-----//------
4
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!”

“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா!”

-------------------------------------------/-
5
ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!

பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
--------------------------/-----//------
6
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
-
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க...!
--------------------------/-----//------
7
எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”

“நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”

------------------------------------------/-
8
கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே நீயெல்லாம்
ஒரு மனுஷனா?

கயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை அடிச்சிருப்பா.…!!

------------------------------------------/-
9
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறதை
ஏன் என்கிட்ட சொல்லல?"

"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"

------------------------------------------/-
10
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
-
‘108’_லே..!

------------------------------------------/-
11
"என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து
வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "

------------------------------------------/-
12
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!

ராணி சத்தம் போடவில்லையா?

''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!

------------------------------------------/-
13
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு

வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..

------------------------------------------/-!”
-படித்ததில் சிரித்தது -

இவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. குருவே வந்தனம்!
    1,2,4,5,11,12,13 இவையனைத்தும் நல்ல நகைச்சுவையுடன் கூடியவை!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும்,9 மற்றும் 13க்கு முதல் இரண்டு இடங்கள்.நன்றி.

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Nine is the best./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ////Blogger Premanandhan Narayanan said...
    2,10th & 12th Guruve/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger Subathra Suba said...
    All jokes very nice sir/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்!
    1,2,4,5,11,12,13 இவையனைத்தும் நல்ல நகைச்சுவையுடன் கூடியவை!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும்,9 மற்றும் 13க்கு முதல் இரண்டு இடங்கள்.நன்றி/////.

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  8. ////Blogger Sanjai said...
    2 and 7/////

    நல்லது. நன்றி சஞ்சை!

    ReplyDelete
  9. ////Blogger dhana lakshmi said...
    5 & 13 sir/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com