மனத்தெளிவு எப்போது பிறக்கும்?
ஒரு உண்மையான.... இறைபக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.
“பார்த்தேன்” என்றார் பரமன்.
பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட,அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை.ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
வணக்கம், முனிவரே! என வணங்கினர் அம்மையும் அப்பனும்.
முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான்.
மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள்
விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள்
'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.
அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார். வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.
அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.
'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.
நீதி!
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது. 🔯🙏🙏
-------------------------------------------------
2
காந்தி சொர்க்கதில் கடவுளிடம் போய் நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு எனக் கேட்டார்.
கடவுள் சொன்னார்:
கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது🙊🙉🙈
======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

குருநாதா வந்தனம்!
ReplyDeleteமனத்தெளிவைப் பற்றி மிக நேர்த்தியாக முனிவர் விளக்குகிறார்.
எவ்வளவு மனத்தெளிவு முனிவருக்கு!
பரமனே எதிரில் வந்தாலும் பரவாயில்லை, நியதி தன் வேலையைத் தடையின்றிச் செய்யும், என்கிறார்!
வாழ்க முனிவர்!
வணக்கம் ஐயா,கதையும்,கதையின் நீதியும் அருமை.காந்தி பொம்மைக்கு நிகழ்கால விளக்கம் மிகவும் பொருத்தம்.நன்றி.
ReplyDeletearumaiyana pathil , vazumpadi vazthal varuvadu thana varum arumai elimai
ReplyDeletevanakam nan ungalidam oru varam ketu konde irukiren, puthagam pera vazhi, class room @2007 nukku mail anipi konde irukiren ferroformindustries@gmail.com il irundu vandada varavillaya theriya villai, varam kodungal, vaguparai sera vaipaliyingal, vanakkam
2 is the best.
ReplyDeleteayya vanakkam ,arumaiyana pathi, vazumpadi vazthanl varuvadu thane varum, arumai elimai, nan ayyanidam oru varam kettukonde irukiren puthagam vendum endru class room@2007 nukku mail anipiukonde ullen vantahtha varavillaya thereyavill ferroformindustries@gmail.com ilirundu vagauparaikku vaipalikkavum varam kodutahrulavum
ReplyDelete///தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும்///
ReplyDeleteஅய்யர் சொல்லும் வார்த்தை
அப்படியே சொல்கிறீர்களே...
நீதிக்கதை அருமை !!!
ReplyDeleteநன்றி,
செ.ஆறுமுகவேல்
ஆசிரியர்க்கு வணக்கம்,
ReplyDeleteநல்ல பதிவு. மருள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெறியாமல் இருந்தேன். மருள் என்றால் "மயக்கம், பேயாட்டம்" என்று கூகுல் ஆண்டவர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
காந்தி : 3 குரங்கி நிலை நகசுவையாகவும், உன்மையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!!
பன்னீர்செல்வம்.இரா
hello sir , eppadi irrukinga? i used to visit your astro blogs regularly in 2009 2010 n 11.
ReplyDeletethats when i started learning astrology. then i lost interest , i remember u stopped posting lessons openly coz some1 stole ur posts n used it in his books.
ok neenga books release pannitingala ? entha pathipagam? private lessons thru mail innum poitueruka? jus curious to know? thanks. hope all the old students are fine. ungalakku shani dasa epo mudiyum? best wishes to u ayya. vannakam
Nice sir..I requested you to permit me for galaxy classroom..i sent mail too..please consider mine sir
ReplyDelete///////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருநாதா வந்தனம்!
மனத்தெளிவைப் பற்றி மிக நேர்த்தியாக முனிவர் விளக்குகிறார்.
எவ்வளவு மனத்தெளிவு முனிவருக்கு!
பரமனே எதிரில் வந்தாலும் பரவாயில்லை, நியதி தன் வேலையைத் தடையின்றிச் செய்யும், என்கிறார்!
வாழ்க முனிவர்!////
கரெக்ட். நன்றி வரதராஜன்!
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,கதையும்,கதையின் நீதியும் அருமை.காந்தி பொம்மைக்கு நிகழ்கால விளக்கம் மிகவும் பொருத்தம்.நன்றி./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!
//////Blogger Raghu k r said...
ReplyDeletearumaiyana pathil , vazumpadi vazthal varuvadu thana varum arumai elimai
vanakam nan ungalidam oru varam ketu konde irukiren, puthagam pera vazhi, class room @2007 nukku mail anipi konde irukiren ferroformindustries@gmail.com il irundu vandada varavillaya theriya villai, varam kodungal, vaguparai sera vaipaliyingal, vanakkam//////
உடல்நிலை காரணமாக உடனடி பதில் அனுப்ப இயலவில்லை. இரண்டொரு நாட்களில் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதில் வரும். பொறுத்துக்கொள்ளுங்கள்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete2 is the best./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Raghu k r said...
ReplyDeleteayya vanakkam ,arumaiyana pathi, vazumpadi vazthanl varuvadu thane varum, arumai elimai, nan ayyanidam oru varam kettukonde irukiren puthagam vendum endru class room@2007 nukku mail anipiukonde ullen vantahtha varavillaya thereyavill ferroformindustries@gmail.com ilirundu vagauparaikku vaipalikkavum varam kodutahrulavum//////
உடல்நிலை காரணமாக உடனடி பதில் அனுப்ப இயலவில்லை. இரண்டொரு நாட்களில் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதில் வரும். பொறுத்துக்கொள்ளுங்கள்!
//////Blogger வேப்பிலை said...
ReplyDelete///தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும்///
அய்யர் சொல்லும் வார்த்தை
அப்படியே சொல்கிறீர்களே.../////
உண்மைதான். நன்றி வேப்பிலையாரே!
/////Blogger Arumugavel said...
ReplyDeleteநீதிக்கதை அருமை !!!
நன்றி,
செ.ஆறுமுகவேல்///////
நல்லது நன்றி நண்பரே!
/////Blogger Selvam R said...
ReplyDeleteஆசிரியர்க்கு வணக்கம்,
நல்ல பதிவு. மருள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெறியாமல் இருந்தேன். மருள் என்றால் "மயக்கம், பேயாட்டம்" என்று கூகுல் ஆண்டவர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
காந்தி : 3 குரங்கி நிலை நகசுவையாகவும், உன்மையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!!
பன்னீர்செல்வம்.இரா////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பன்னீர்செல்வம்!
/////Blogger Unknown said...
ReplyDeletehello sir , eppadi irrukinga? i used to visit your astro blogs regularly in 2009 2010 n 11.
thats when i started learning astrology. then i lost interest , i remember u stopped posting lessons openly coz some1 stole ur posts n used it in his books.
ok neenga books release pannitingala ? entha pathipagam? private lessons thru mail innum poitueruka? jus curious to know? thanks. hope all the old students are fine. ungalakku shani dasa epo mudiyum? best wishes to u ayya. vannakam////
சனி திசை முடிந்து புதன் திசை நடந்து கொண்டிருக்கிறது சாமி! புத்தகம் முதல் தொகுதி வந்துள்ளது! மற்ற தொகுதிகளும் விரைவில் வரும்!
/////Blogger Lekha Chandran said...
ReplyDeleteNice sir..I requested you to permit me for galaxy classroom..i sent mail too..please consider mine sir//////
கேலக்ஸி வகுப்பெல்லாம் முடிந்து மாதக்கணக்காகிறது தாயே!!