திருமணத்தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய
சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக்
குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை
வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி
அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ
தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை
கொண்டதாகக் கருதப்படுகின்றது.
முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்”
என முன்னர் அழைக்கப்பட்டது.
தல வரலாறு
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற
சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான
வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக
அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை.
பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.
முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்'
என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என
மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
கோயில் அமைப்பு
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும்
கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளன.
150 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட
பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார்.
இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு
முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது.
இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில்
மட்டுமே காண முடியும்.
பஞ்சலிங்க தரிசனம்
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக
ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர,
தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க
தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு
வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள
பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில்
சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல்
அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.
ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு
நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில்
கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக
இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி
விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள்
மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே
செல்ல அனுமதி கிடையாது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொதுத தகவல்கள்
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும்
தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான்,
படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர்,
வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது
வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு
மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது
அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர்
பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள்
அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள
நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம்
உள்ளது.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும்
9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி,
அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு
குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
கந்த சஷ்டி
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக
கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது.
எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.
கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி
விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக
மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள்
சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம்
ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி,
ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து,
ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார்.
இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள்,
அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும்
ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி
அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
சஷ்டி யாகம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில்,
ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி,
தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.
அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன்,
வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள்
என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.
கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள
மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே
ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.
"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற
முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை,
முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.
தெய்வானை திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக
இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு
தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம்
முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்,
தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி
தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர்
வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு
திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில்
ஊஞ்சலில் காட்சி தருவார்.
முருகனுக்கு மஞ்சள் நீராட்டு
கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு
முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது,
பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும்
விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.
மும்மூர்த்தி முருகன்
திருச்செந்தூர் கோயில் யானை
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து
உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை,
சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின்
மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்தி
களின் அம்சமாக காட்சி தருகிறார்.
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா
என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று
மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில்
பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
நான்கு உற்சவர்கள்
பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை
மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு
உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை
சுவாமி' என்றழைக்கின்றனர்.
சந்தனமலை
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும்
கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே
ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்
போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின்
இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
குருப் பெயர்ச்சி
திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய
வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம்,
அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு
ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள
கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன்
காட்சி தரும் தெட்சிணா மூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருப் பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.
இரண்டு முருகன்
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியாக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து,
சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம்
கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது.
மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.
தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்
மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும்
அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார
தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று,
அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும்,
அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
திருவிழா
பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில
தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து
ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை. என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில்
தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்
தொல்காப்பியம்
முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)
புறநானூறு
வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)
அகநானூறு
திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)
திருமுருகாற்றுப்படை
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்
சிலப்பதிகாரம்
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
தேவாரப் பதிகம்
நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே
அருணகிரிநாதர் பாடல்
இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.
அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.
Source: vikipedia
===================================================================
இன்றைய பக்தி மலர் எப்படி உள்ளது? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.
அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
ReplyDeleteமுக்கியமான விஷயம் .
ஆங்கிலேயர்கள் படையெடுப்பில் ஸ்ரீ ஷன்முகரை படகில் நாட்டுக்கு கொண்டு சென்றார்கள் ..
செல்லும் வழியிலேயே சுவாமி கடலில் அமர்ந்து கொண்டார் எடுத்து சென்றவர்கள் ..???
பின்னர் சில காலம் கழித்து அவ்வூர் தனவந்தர் **பிள்ளை**[பெயர் ஞாபகம் இல்லை ] கனவில் எம்பெருமான் முருகன் .கடலில் தாம் இருக்குமிடம் மேல் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் தம்மை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்க ..அதே போல் ஷண்முகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது ...ஷண்முகர் திருமுகம் புள்ளி புள்ளியாக அரிக்க பட்டிருக்கும் ....
கட்ட பொம்மன் அதிகமான நிபந்தங்கள் இக்கோவிலுக்கு செய்திருக்கிறார்...உச்சிகால பூஜை நடைபெறும் நேரம் பெரிய மணி [அவரால் கொடுக்க பட்டது ] அடிக்க படும் அதன் ஓசை தொடர்ச்சியாக அடுத்து அடுத்து
மணிகள் [பக்கத்து ஊர்களில் இருந்து ]அடிக்க பெற்று மணி ஓசை கேட்டா பின் கட்ட பொம்மன் உணவு உண்பதாக செய்தி..
இக்கோவில் .முழுக்க முழுக்க சிதர்களாக கட்டப்பட்டது அடியார்களின் பொருள் உதவியோடு ..!!!
கோவிலின் தெற்கே அக்கோவிலை கட்டிய மூவர் சமாதி உள்ளது .
நாழி கிணறு எனும் நன்னீர் கடலுக்கு அருகே ..இதில் நீராடி விட்டுதான் சமுத்ரத்தில் நீராட வேண்டும் ..
கந்த ஷஷ்டி ஆரம்ப வேளை முருகனை பற்றிய திருசெந்தூர் கருத்து பதிவுக்கு நன்றி.
வணக்கம் .
ReplyDelete2ம் வீடு திருசெந்தூர் நீண்ட கட்டுரை மிகவும் அற்புதம் .
சஷ்டி திருநாட்களில் படித்தற்கு மிகவும் நன்றி.
அருணகிரிநாதர் திருசெந்தூரில் பாடிய முழுபாடல்
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
முந்து தமிழ் மாலை ... மொழிகளில் முந்தியுள்ள தமிழில்
பாமாலைகளை
கோடிக் கோடி சந்தமொடு ... கோடிக்கணக்காக சந்தப்பா வகையில்
நீடு பாடிப் பாடி ... நீண்டனவாகப் பாடிப்பாடி,
முஞ்சர் மனை வாசல் ... அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள்
தேடித் தேடி ... எங்கே உள்ளன என்று தேடித் தேடி
உழலாதே ... அலையாமல்,
முந்தை வினையே ... முன்ஜென்ம வினை என்பதே
வராமற் போக ... என்னைத் தொடராமல் ஓடிப்போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக ... பெண்ணாசை என்பது தூரத்தே
ஓடிப்போக
முந்தடிமை யேனை ... முந்தவேண்டும் என்ற ஆசைகொண்ட
அடிமையேனை
ஆளத் தானு முனைமீதே ... ஆண்டருளும் பொருட்டு என்
முன்னிலையில்,
திந்திதிமி தோதி தீதித் தீதி, தந்ததன தான தானத் தான,
செஞ்செணகு சேகு ... (அதே ஒலி) என்ற
தாளத் தோடு நடமாடும் ... தாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும்
செஞ்சிறிய கால் ... சிவந்த சிறிய கால்களை உடையதும்,
விசாலத் தோகை ... விரித்த தோகையை உடையதும்,
துங்க அநுகூல பார்வை ... பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வை
கொண்டதும்,
தீர செம்பொன்மயில் மீதிலே ... தீரமும், செம்பொன் நிறத்தையும்
கொண்ட மயில்மீது,
எப்போது வருவாயே ... எப்போது தான் வரப்போகிறாயோ?
அந்தண் மறை வேள்வி ... அழகிய அருள்மிக்க வேத
வேள்விக்கெல்லாம்
காவற் கார ... காவல் புரியும் பெருமானே,
செந்தமிழ் சொல் பாவின் ... செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை
மாலைக் கார ... மாலைகளாக அணிந்துகொள்பவனே,
அண்டர் உபகார ... தேவர்களுக்கெல்லாம் உபகாரியே,
சேவற் கார ... சேவலைக் கொடியாக உடையவனே,
முடிமேலே அஞ்சலி செய்வோர்கள் ... சிரத்தின்மேல் கைகூப்பித்
தொழுவோரின்
நேயக் கார ... அன்பு பூண்டவனே,
குன்றுருவ ஏவும் ... (கிரெளஞ்ச) மலையை ஊடுருவும்படி ஏவின
வேலைக் கார ... வேற் கரத்தோனே,
அந்தம் வெகுவான ... அழகு மிகப் பொலியும்
ரூபக் கார ... திருவுருவம் கொண்டவனே,
எழிலான சிந்துரமின் மேவு ... அழகு நிறைந்த தேவயானை விரும்பும்
போகக் கார ... இன்பம் வாய்ந்தவனே,
விந்தை குறமாது ... அழகிய குறப்பெண் வள்ளியுடன்
வேளைக் கார ... பொழுதுபோக்கும் மெய்க்காவலனே,
செஞ்சொல் அடியார்கள் ... இன்சொற்களால் போற்றும் அடியார்கள்
மீது
வாரக் கார ... அன்பு கொண்டவனே,
எதிரான செஞ்சமரை மாயு ... எதிர்த்துவரும் பெரும்போரில்
பகைவரை மாய்க்கும்
மாயக் கார ... மாயக்காரனே,
துங்கரண சூர ... பெரும் போரில் சூரனை
சூறைக் கார ... சூறாவளிக் காற்றுப் போல் அடித்துத் தள்ளியவனே,
செந்தினகர் வாழும் ... திருச்செந்தூர் நகரில் வாழும்
ஆண்மைக் கார பெருமாளே. ... ஆட்சித் திறன் படைத்த பெருமாளே.
(நன்றி: கௌமாரம் )
அருமை வாத்தியாரே
ReplyDeleteமிக மிக அருமை.
ReplyDeleteதிருசெந்தூர் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், இன்னும் பல செய்திகளுடனும், மிக நேர்த்தியாக எழுத ப்பட்டுள்ளது. அதுவும் காலை 4-40!
நன்றி.
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ReplyDeleteஇவ்வளவு அருமையான ஒரு கட்டுரையை, திருச்செந்தூர் ஆண்டவனைப் பற்றி விளக்கமாக வடித்துக் கொடுத்துவிட்டு, இது வரை பல மக்கள் (என்னையும் சேர்த்து)அறியாத பல அற்புதமான உண்மைகளை, நிகழ்வுகளை மிக அழகாக வடித்துக் கொடுத்து விட்டு, இன்றைய பக்திமலரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போங்கள் என்று கூறியுள்ளீர்கள்!!!
இதைப் பற்றி சொல்வதற்க்கு ஒரு வார்த்தை பத்தாது.இந்த பக்கமும் பத்தாது.
முண்டியடித்து கொவிலுக்குள் நுழைந்து தீபாராதனை காட்டும்போது கண்களை இறுக மூடிக்கொண்டு,செயற்கை குருடனாகிவிடும் குருட்டு பக்தனுக்கு (அது நான்தான் - ஆனாலும் திருத்திக் கொண்டேன்) முருகப் பெருமானுக்கு சந்நதியிலேயே சிவபெருமான் இடப்புறமாக வீற்றிருப்பது எப்படி தெரியும்???
இன்றைய பக்தி மலர், அழகான் படைப்பு, அருமயான தோற்றம், சிறப்பான விருந்து!!!!.
நன்றிகளுடனும் அன்புடனும்,
-பொன்னுசாமி.
பக்தி மலர் அருமை வாத்தியாரே!!!
ReplyDeleteதிருசெந்தூரின் பலரும் அறியாத சிறப்பம்சங்களை எடுத்து காட்டியுள்ளீர்கள். மிக அருமை. நான் கூட பல முறை ஏன் மேற்கு வாயில் எப்போதும் மூடப்பட்டுள்ளது என அங்குள்ள என் மாமாவை கேட்டதுண்டு. அவர் மௌனம் மட்டுமே சாதிப்பார். இந்த விபரம் வாத்தியார் மூலமாகத்தான் அறியவேண்டும் என இருக்கும் போது மற்றவர்கள் கூற விதி உண்டோ!!!
முருகா! முருகா! முருகா!
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Respected Sir
ReplyDeleteArumai... Arumai... Arumai....
இராவணனை
ReplyDeleteஇராமன் "கொன்று" விட்டார்
ஹிரன்யஹசிபுவை
நரசிம்ஹர் "கொன்று" விட்டார்
கம்சனை
கிருஷ்ணன் "கொன்று" விட்டார் ஆனால்
சூரபத்மனை
முருகன் கொள்ளவில்லை
சேவலும் மயிலுமாக
சேவித்து மகிழ அருள புரிந்தார்
கூடுதலாக ஒரு செய்தி
ReplyDeleteகுறித்து கொள்ளுங்கள்
பிரம்மாவை சிறை
பிடித்த தலம்
"இரும்பறை" என்னும் பெயருடன்
இன்னமும் உள்ளது
ஓதிமலை ஆண்டவராக மலை
உச்சியில் இருந்து அருள் பாலிக்கிறார்
மலை ஏறும் போது நம்மை
மறக்காமல் பெயர் சொல்லி அழைக்கும் அற்புதம்
இப்பவும் பார்க்கலாம் கேட்கலாம்
இது இந்த 21ம் நூற்றாண்டில்..
அயிந்து திருக்கரங்களுடன் இருக்கும்
ஆண்டவர் உதடு அசைத்து பேசுவதையும்
பார்க்கலாம் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை
பயணம் சென்று வாருங்கள்
முருகன் அருள்
முன் நிற்கும்
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் .
ReplyDeletevery informative .
நல்ல விஷயங்களை நம்மோடு பகிர்வது வாத்தியாரின் சிறப்புக்களில் ஒன்று .
திருச்செந்தூர் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரியச் செய்தமைக்கு மிக்க நன்றி
அதிலும் சஷ்டி விரதம் இருப்போர் இந்த நாட்களில் முருகன் பற்றி படிக்க வேண்டும் கேட்க வேண்டும் . புண்ணியம் என்பர்
எங்களை படிக்க வைத்து புண்ணியம் தேடித்தந்தமைக்கு நன்றி அய்யா
-சுதர்சன் குமார்
Respected Sir,
ReplyDeleteHappy afternoon. Every friday has become holy friday due to teacher's ( spiritual master-SP.VR.S) informative post... We come to know many things which can be useful and follow
in our life.
Great service.
Have a holy day.
With kind regards,
Ravichandran M
ஐயா வணக்கம்
ReplyDeleteதிருசெத்தூர் வேலனையும் கோயில் பற்றியும் நன்கு அறிந்து கொண்டேன்.
நன்றி ஐயா
கண்ணன்
அய்யா,
ReplyDeleteமிக மிக அருமையான பதிவு. இதுவரை நான் கேட்டிராத நல்ல விசயங்களை சொன்னதற்கு மிக்க நன்றிகள் அய்யா.
ராம்குமார்
அருமை வாத்தியரே .
ReplyDeleteஐயா,
ReplyDeleteபலே பக்தி மலர். மிக அழகாக, அற்புதமாக, தித்திக்கும் சுவையுடன் உள்ளது. இதுவரை பல சமயங்களில் முருகனைத் தொழுதிருக்கிறேன். ஒரு முறையும் சிவ தரிசனம் அங்கே செய்ததில்லை, ஏனெனில் பின்புறம் உள்ள விஷயம் தெரியாது!? அதேபோல மேற்கு கோபுர வாசல் மூடியிருப்பதின் காரணமும் அறிந்திலன். ஒவ்வொரு செய்தியும் காரணங்களுடன் விரிவாகத் தரப்பட்டுள்ளன. நுணுக்கமுள்ள அணுக்கச் சொற்கள். அனுபவித்தேன் அங்கே திருச்சீரலைவாய்க்கே கொண்டு போய் விவரித்தது போல!! நீவீர் நீடூழி வாழ்க, வாத்தியாரையா!
Awesome.
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியாரிற்கு வணக்கங்கள்
ReplyDeleteகற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. நல்ல simpleஆக எழுதியிருக்கின்றீர்கள்.You have educated me today about Thirusenthur.
Thanks
Rajam Anand
Hello Sir,
ReplyDeleteNo words.. I am speechless.. manthirkkul muruganai konduvanthuvidirkal.
Regards
Prakash.K
/////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
முக்கியமான விஷயம் .
ஆங்கிலேயர்கள் படையெடுப்பில் ஸ்ரீ ஷன்முகரை படகில் நாட்டுக்கு கொண்டு சென்றார்கள் ..
செல்லும் வழியிலேயே சுவாமி கடலில் அமர்ந்து கொண்டார் எடுத்து சென்றவர்கள் ..???
பின்னர் சில காலம் கழித்து அவ்வூர் தனவந்தர் **பிள்ளை**[பெயர் ஞாபகம் இல்லை ] கனவில் எம்பெருமான் முருகன் .கடலில் தாம் இருக்குமிடம் மேல் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் தம்மை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்க ..அதே போல் ஷண்முகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது ...ஷண்முகர் திருமுகம் புள்ளி புள்ளியாக அரிக்க பட்டிருக்கும் ....
கட்ட பொம்மன் அதிகமான நிபந்தங்கள் இக்கோவிலுக்கு செய்திருக்கிறார்...உச்சிகால பூஜை நடைபெறும் நேரம் பெரிய மணி [அவரால் கொடுக்க பட்டது ] அடிக்கப்படும் அதன் ஓசை தொடர்ச்சியாக அடுத்து அடுத்து மணிகள் [பக்கத்து ஊர்களில் இருந்து ]அடிக்க பெற்று மணி ஓசை கேட்டா பின் கட்ட பொம்மன் உணவு உண்பதாக செய்தி..
இக்கோவில் .முழுக்க முழுக்க சித்தர்களாக கட்டப்பட்டது அடியார்களின் பொருள் உதவியோடு ..!!!
கோவிலின் தெற்கே அக்கோவிலை கட்டிய மூவர் சமாதி உள்ளது .
நாழி கிணறு எனும் நன்னீர் கடலுக்கு அருகே ..இதில் நீராடி விட்டுதான் சமுத்திரத்தில் நீராட வேண்டும் ..
கந்த ஷஷ்டி ஆரம்ப வேளை முருகனை பற்றிய திருசெந்தூர் கருத்து பதிவுக்கு நன்றி./////
உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கணபதியாரே!
Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteவணக்கம் .
2ம் வீடு திருசெந்தூர் நீண்ட கட்டுரை மிகவும் அற்புதம் .
சஷ்டி திருநாட்களில் படித்தற்கு மிகவும் நன்றி.
அருணகிரிநாதர் திருசெந்தூரில் பாடிய முழுபாடல்
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
முந்து தமிழ் மாலை ... மொழிகளில் முந்தியுள்ள தமிழில்
பாமாலைகளை
கோடிக் கோடி சந்தமொடு ... கோடிக்கணக்காக சந்தப்பா வகையில்
நீடு பாடிப் பாடி ... நீண்டனவாகப் பாடிப்பாடி,
முஞ்சர் மனை வாசல் ... அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள்
தேடித் தேடி ... எங்கே உள்ளன என்று தேடித் தேடி
உழலாதே ... அலையாமல்,
முந்தை வினையே ... முன்ஜென்ம வினை என்பதே
வராமற் போக ... என்னைத் தொடராமல் ஓடிப்போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக ... பெண்ணாசை என்பது தூரத்தேஓடிப்போக
முந்தடிமை யேனை ... முந்தவேண்டும் என்ற ஆசைகொண்ட
அடிமையேனை
ஆளத் தானு முனைமீதே ... ஆண்டருளும் பொருட்டு என்
முன்னிலையில்,
திந்திதிமி தோதி தீதித் தீதி, தந்ததன தான தானத் தான,
செஞ்செணகு சேகு ... (அதே ஒலி) என்ற
தாளத் தோடு நடமாடும் ... தாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும்
செஞ்சிறிய கால் ... சிவந்த சிறிய கால்களை உடையதும்,
விசாலத் தோகை ... விரித்த தோகையை உடையதும்,
துங்க அநுகூல பார்வை ... பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வை
கொண்டதும்,
தீர செம்பொன்மயில் மீதிலே ... தீரமும், செம்பொன் நிறத்தையும்
கொண்ட மயில்மீது,
எப்போது வருவாயே ... எப்போது தான் வரப்போகிறாயோ?
அந்தண் மறை வேள்வி ... அழகிய அருள்மிக்க வேத
வேள்விக்கெல்லாம்
காவற் கார ... காவல் புரியும் பெருமானே,
செந்தமிழ் சொல் பாவின் ... செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை
மாலைக் கார ... மாலைகளாக அணிந்துகொள்பவனே,
அண்டர் உபகார ... தேவர்களுக்கெல்லாம் உபகாரியே,
சேவற் கார ... சேவலைக் கொடியாக உடையவனே,
முடிமேலே அஞ்சலி செய்வோர்கள் ... சிரத்தின்மேல் கைகூப்பித்
தொழுவோரின்
நேயக் கார ... அன்பு பூண்டவனே,
குன்றுருவ ஏவும் ... (கிரெளஞ்ச) மலையை ஊடுருவும்படி ஏவின
வேலைக் கார ... வேற் கரத்தோனே,
அந்தம் வெகுவான ... அழகு மிகப் பொலியும்
ரூபக் கார ... திருவுருவம் கொண்டவனே,
எழிலான சிந்துரமின் மேவு ... அழகு நிறைந்த தேவயானை விரும்பும்
போகக் கார ... இன்பம் வாய்ந்தவனே,
விந்தை குறமாது ... அழகிய குறப்பெண் வள்ளியுடன்
வேளைக் கார ... பொழுதுபோக்கும் மெய்க்காவலனே,
செஞ்சொல் அடியார்கள் ... இன்சொற்களால் போற்றும் அடியார்கள்
மீது
வாரக் கார ... அன்பு கொண்டவனே,
எதிரான செஞ்சமரை மாயு ... எதிர்த்துவரும் பெரும்போரில்
பகைவரை மாய்க்கும்
மாயக் கார ... மாயக்காரனே,
துங்கரண சூர ... பெரும் போரில் சூரனை
சூறைக் கார ... சூறாவளிக் காற்றுப் போல் அடித்துத் தள்ளியவனே,
செந்தினகர் வாழும் ... திருச்செந்தூர் நகரில் வாழும்
ஆண்மைக் கார பெருமாளே. ... ஆட்சித் திறன் படைத்த பெருமாளே.
(நன்றி: கௌமாரம் )/////
அமெரிக்காவில் உங்களுடைய வேலைப் பளுக்களுக்கு நடுவே அருணகியாரின் பாடலைப் பிடித்துப் பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே
////Blogger durai said...
ReplyDeleteஅருமை வாத்தியாரே////
நல்லது. நன்றி துரை
////Blogger nerkuppai thumbi said...
ReplyDeleteமிக மிக அருமை.
திருசெந்தூர் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், இன்னும் பல செய்திகளுடனும், மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் காலை 4-40!
நன்றி.////
நெற்குப்பை தும்பி, வணக்கம்! உங்களின் உண்மைப் பெயர் என்ன சாமி?
//////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
இவ்வளவு அருமையான ஒரு கட்டுரையை, திருச்செந்தூர் ஆண்டவனைப் பற்றி விளக்கமாக வடித்துக் கொடுத்துவிட்டு, இது வரை பல மக்கள் (என்னையும் சேர்த்து)அறியாத பல அற்புதமான உண்மைகளை, நிகழ்வுகளை மிக அழகாக வடித்துக் கொடுத்து விட்டு, இன்றைய பக்திமலரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போங்கள் என்று கூறியுள்ளீர்கள்!!!
இதைப் பற்றி சொல்வதற்க்கு ஒரு வார்த்தை பத்தாது.இந்த பக்கமும் பத்தாது.
முண்டியடித்து கொவிலுக்குள் நுழைந்து தீபாராதனை காட்டும்போது கண்களை இறுக மூடிக்கொண்டு,செயற்கை குருடனாகிவிடும் குருட்டு பக்தனுக்கு (அது நான்தான் - ஆனாலும் திருத்திக் கொண்டேன்) முருகப் பெருமானுக்கு சந்நதியிலேயே சிவபெருமான் இடப்புறமாக வீற்றிருப்பது எப்படி தெரியும்???
இன்றைய பக்தி மலர், அழகான படைப்பு, அருமையான தோற்றம், சிறப்பான விருந்து!!!!.
நன்றிகளுடனும் அன்புடனும்,
-பொன்னுசாமி./////
உங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பொன்னுசாமி அண்ணா!
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteபக்தி மலர் அருமை வாத்தியாரே!!!
திருசெந்தூரின் பலரும் அறியாத சிறப்பம்சங்களை எடுத்து காட்டியுள்ளீர்கள். மிக அருமை. நான் கூட பல முறை ஏன் மேற்கு வாயில் எப்போதும் மூடப்பட்டுள்ளது என அங்குள்ள என் மாமாவை கேட்டதுண்டு. அவர் மௌனம் மட்டுமே சாதிப்பார். இந்த விபரம் வாத்தியார் மூலமாகத்தான் அறியவேண்டும் என இருக்கும் போது மற்றவர்கள் கூற விதி உண்டோ!!!
முருகா! முருகா! முருகா!
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////
நல்லது. உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger Dallas Kannan said...
ReplyDeleteRespected Sir
Arumai... Arumai... Arumai....////
நல்லது. நன்றி கண்ணன்!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஇராவணனை இராமன் "கொன்று" விட்டார்
ஹிரன்யஹசிபுவை நரசிம்ஹர் "கொன்று" விட்டார்
கம்சனை கிருஷ்ணன் "கொன்று" விட்டார் ஆனால்
சூரபத்மனை முருகன் கொல்லவில்லை
சேவலும் மயிலுமாக
சேவித்து மகிழ அருள் புரிந்தார்//////
நல்லது. உங்களுடைய மாற்றுச் சிந்தனைக்கும் அதை எழுதியமைக்கும் நன்றி வேப்பிலையாரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteகூடுதலாக ஒரு செய்தி குறித்து கொள்ளுங்கள்
பிரம்மாவை சிறைப் பிடித்த தலம்
"இரும்பறை" என்னும் பெயருடன் இன்னமும் உள்ளது
ஓதிமலை ஆண்டவராக மலை உச்சியில் இருந்து அருள் பாலிக்கிறார்
மலை ஏறும் போது நம்மை மறக்காமல் பெயர் சொல்லி அழைக்கும் அற்புதம்
இப்பவும் பார்க்கலாம் கேட்கலாம்
இது இந்த 21ம் நூற்றாண்டில்..
அயிந்து திருக்கரங்களுடன் இருக்கும் ஆண்டவர் உதடு அசைத்து பேசுவதையும்
பார்க்கலாம் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை
பயணம் சென்று வாருங்கள்
முருகன் அருள்
முன் நிற்கும்//////
ஓதிமலை எங்கே உள்ளது என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சுவாமி!
//////Blogger J Sudarsan Kumar said...
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கு வணக்கம் .
very informative .
நல்ல விஷயங்களை நம்மோடு பகிர்வது வாத்தியாரின் சிறப்புக்களில் ஒன்று .
திருச்செந்தூர் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரியச் செய்தமைக்கு மிக்க நன்றி
அதிலும் சஷ்டி விரதம் இருப்போர் இந்த நாட்களில் முருகன் பற்றி படிக்க வேண்டும் கேட்க வேண்டும் . புண்ணியம் என்பர்
எங்களை படிக்க வைத்து புண்ணியம் தேடித்தந்தமைக்கு நன்றி அய்யா
-சுதர்சன் குமார்/////
நல்லது உங்களின் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy afternoon. Every friday has become holy friday due to teacher's ( spiritual master-SP.VR.S) informative post... We come to know many things which can be useful and follow
in our life.
Great service.
Have a holy day.
With kind regards,
Ravichandran M//////
நல்லது. நன்றி! எந்த ஊர் ரவிச்சந்திரன் நீங்கள் -----திருவண்ணாமலைக்காரரா அல்லது அவனாசிக்காரரா? பெயருடன் அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!
/////Blogger lrk said...
ReplyDeleteஐயா வணக்கம்
திருசெத்தூர் வேலனையும் கோயில் பற்றியும் நன்கு அறிந்து கொண்டேன்.
நன்றி ஐயா
கண்ணன்////
நன்றி கண்ணன்!
////Blogger Ram Kumar said...
ReplyDeleteஅய்யா,
மிக மிக அருமையான பதிவு. இதுவரை நான் கேட்டிராத நல்ல விசயங்களை சொன்னதற்கு மிக்க நன்றிகள் அய்யா.
ராம்குமார்////
நல்லது. நன்றி ராம்குமார்!
////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
ReplyDeleteஅருமை வாத்தியரே .////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteஐயா,
பலே பக்தி மலர். மிக அழகாக, அற்புதமாக, தித்திக்கும் சுவையுடன் உள்ளது. இதுவரை பல சமயங்களில் முருகனைத் தொழுதிருக்கிறேன். ஒரு முறையும் சிவ தரிசனம் அங்கே செய்ததில்லை, ஏனெனில் பின்புறம் உள்ள விஷயம் தெரியாது!? அதேபோல மேற்கு கோபுர வாசல் மூடியிருப்பதின் காரணமும் அறிந்திலன். ஒவ்வொரு செய்தியும் காரணங்களுடன் விரிவாகத் தரப்பட்டுள்ளன. நுணுக்கமுள்ள அணுக்கச் சொற்கள். அனுபவித்தேன் அங்கே திருச்சீரலைவாய்க்கே கொண்டு போய் விவரித்தது போல!! நீவீர் நீடூழி வாழ்க, வாத்தியாரையா!//////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி வரதராஜன்!
/////Blogger Kumanan Samidurai said...
ReplyDeleteAwesome.////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Rajam Anand said...
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியாரிற்கு வணக்கங்கள்
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. நல்ல simpleஆக எழுதியிருக்கின்றீர்கள்.You have educated me today about Thirusenthur.
Thanks
Rajam Anand////
நல்லது. நன்றி சகோதரி!
////Blogger Prakash Kumar said...
ReplyDeleteHello Sir,
No words.. I am speechless.. manthirkkul muruganai konduvanthuvidirkal.
Regards
Prakash.K////
நல்லது. நன்றி பிரகாஷ்குமார்!
migavum arumai aiya. Nandri
ReplyDelete////Blogger padhu said...
ReplyDeletemigavum arumai aiya. Nandri/////
நல்லது. நன்றி நண்பரே!
Thanks Sir,
ReplyDeleteHighly informative article about Thiruchendur Murugan.
Regards
Ashok Kumar