1.11.15

புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை

புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை
--------------------------------------------
புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்
(புத்தம்)
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ - இளம்
பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்)
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ - பனி
வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
வரிகள்: வைரமுத்து 
=================================================
1.11.2015 ஞாயிற்றுக்கிழமை

வாத்தியாரின் வேண்டுகோள்!

மாணவக் கண்மணிகளுக்கு, வாத்தியாரின் அன்பு கலந்த வணக்கம்

புதிர்கள், அலசல் பாடங்கள், முக்கிய ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடப் பாடங்கள் போன்றவற்றை பிரதான வகுப்பறையில் எழுதுவதில் பல பிரச்சினைகள் உள்ளதால், இனி அவைகள் தனி வகுப்பறையில் மட்டுமே வெளியாகும்.

ப்ளாக்கில் இதுவரை ஜோதிடத்தில் மட்டும் 900 பாடங்கள் எழுதியுள்ளேன். மற்ற பாடங்கள் (கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைகள் ஆகியவைகள்)
சுமார் 1,100. ஆக மொத்தம் 2,000 பாடங்கள் (பதிவுகள்) கடந்த ஒன்பது ஆண்டுகால எழுத்தாக்கங்கள் அவைகள்

ஆரம்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 100 பேர்கள்.  எண்ணிக்கையில் இன்று அது 5,000 ஆக உயர்ந்துள்ளது

வழக்கம்போல ப்ளாக்கில் எழுதுவது தொடரும். வாரம் 5 பதிவுகளுக்குக் குறையாமல் இருக்கும். சுவாரசியத்திற்காக அவ்வப்போது ஜோதிடத் துணுக்குகள் (Tit bits) வெளியாகும்

சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

கேலக்ஸி என்ற பெயரில் X என்ற எழுத்து உள்ளதால் அடிக்கடி எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு அதில் எழுதுவதற்குத் தடங்கல் ஏற்படுகிறது. ஒவ்வொருமுறையும் பழநிஅப்பன் அருளால் மீண்டு வந்தாலும், அது தொடரக்கூடாது என்று தனிவகுப்பிற்கு ஒரு புதிய பெயரைத் தெரிவு செய்து, எனது இணையதள சேவையாளர்களிடம் சொல்லி domain name registration, fixing of hosting server and site page designs போன்றவற்றைச் செய்யச் சொல்லியிருக்கிறேன். இன்னும்  ஒருவாரத்தில் அந்த வேலைகள் முடிவடைந்துவிடும்.

புதிய வகுப்பறையின் பெயர் stars2015

எனது வகுப்பறை மாணவர்களான நீங்கள்தான் எனது நட்சத்திரங்கள். அதனால்தான் அந்தப் பெயர்

11.11.2015 அன்று அந்த வகுப்பறை துவங்கும். உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஒரு ஆண்டாக மேல்நிலைப் பாட வகுப்பில் இடம் கேட்டு வந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவைகளையும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஆகவே விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 6 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். உங்களுக்குத்தான் முன்னுரிமை.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
 spvrsubbiah@gmail.com

இன்று சஷ்டி தினம். பழநிஅப்பனுக்கு உகந்த நாள்! ஆகவே இன்றே நீங்கள் பதில் அளித்தாலும் நல்லதுதான்!

என்றென்றும் அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம் குரு
    மிக்க மகிழ்ச்சி ஐயா எனது விண்ணப்பம் அனுப்பி விட்டேன் .

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning to all... It's happy to read that our classroom viewed by 5000 members
    and my personal wishes to our master to give this vedic knowledge.

    God bless you and your family.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    புத்தம் புதுக் காலை பொன்னிற வேளையில் குமரி முனையில்உதயாமாகும் சூரியனையும், புத்தம் புதியதாக உருவாகவுள்ள "STARS2015" புதிய வகுப்பறை அறிவிப்பையும் அய்யன் திருவள்ளுவரும், வீரத்துறவி விவேகானந்தரும் ஆசிர்வதிக்கின்றனரே!!!.
    சஷ்டி தினமான இன்று முதல் ஈடுயிணையில்லா சுப்பிரமணியக் கடவுளான பழநியப்பன் என்றென்றும் தங்கள் கூடவே இருந்து,தங்களின் உடல்,மனம்,எண்ணம்,எழுத்து,அறிவு, ஆற்றல், திறமை அனைத்திலும் எந்தக் குறைவுமின்றி இனிமேலும் காக்கவேண்டும் என மனம் உருகி பிரார்த்திக்கின்றோம்.
    “தொட்டனைத்தூரும் மனற்கேணி ஆங்கே
    கற்ற னைத்தூரும் கல்வி” என்ற குறளை வள்ளுவர் சொல்லியதன் விளக்கம் தங்களின் பதிவுகளை படித்து வரும் 5000 மாணவக் கண்மனிகளுக்கும் புரிய வைத்துள்ளதாலேயே!!!
    தங்களின் ஆரம்ப பதிவில் ”என் எழுத்து ஒரு சிலருக்கேனும் பயன்படுமானால் நான் பாக்கியம் அடைந்தவனாவேன்” என்ற குறிப்பு இன்று 5000 மாணவர்கள் தினமும் ஆவலுடன் எதிர்பார்த்து படித்துத் தெளிந்து, புரிந்து கொண்டு, மேலும் மேலும் தங்களுடன் பயணிக்க தயாராக உள்ளனர் என்பது ஒரு சாதனையே!!!.
    பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஆசிரியனாக, ஒரு சாதனையாளராக திகழும் தங்களின் இந்த பணி சிறக்க எல்லாம் வல்ல பரம்பொருளான இறையருள் சித்திக்க வேண்டுகின்(றேன்)றோம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    stars2015க்காக விண்ணப்பித்தது தங்கள் அனுமதியை கோரியுள்ளேன்.

    நன்றி ஐயா

    ஸ்ரீராம்

    ReplyDelete
  5. /////Blogger siva kumar said...
    வணக்கம் குரு
    மிக்க மகிழ்ச்சி ஐயா எனது விண்ணப்பம் அனுப்பி விட்டேன் ./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning to all... It's happy to read that our classroom viewed by 5000 members
    and my personal wishes to our master to give this vedic knowledge.
    God bless you and your family.
    With kind regards,
    Ravichandran M./////

    உங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  7. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    புத்தம் புதுக் காலை பொன்னிற வேளையில் குமரி முனையில்உதயாமாகும் சூரியனையும், புத்தம் புதியதாக உருவாகவுள்ள "STARS2015" புதிய வகுப்பறை அறிவிப்பையும் அய்யன் திருவள்ளுவரும், வீரத்துறவி விவேகானந்தரும் ஆசிர்வதிக்கின்றனரே!!!.
    சஷ்டி தினமான இன்று முதல் ஈடுயிணையில்லா சுப்பிரமணியக் கடவுளான பழநியப்பன் என்றென்றும் தங்கள் கூடவே இருந்து,தங்களின் உடல்,மனம்,எண்ணம்,எழுத்து,அறிவு, ஆற்றல், திறமை அனைத்திலும் எந்தக் குறைவுமின்றி இனிமேலும் காக்கவேண்டும் என மனம் உருகி பிரார்த்திக்கின்றோம்.
    “தொட்டனைத்தூரும் மனற்கேணி ஆங்கே
    கற்ற னைத்தூரும் கல்வி” என்ற குறளை வள்ளுவர் சொல்லியதன் விளக்கம் தங்களின் பதிவுகளை படித்து வரும் 5000 மாணவக் கண்மனிகளுக்கும் புரிய வைத்துள்ளதாலேயே!!!
    தங்களின் ஆரம்ப பதிவில் ”என் எழுத்து ஒரு சிலருக்கேனும் பயன்படுமானால் நான் பாக்கியம் அடைந்தவனாவேன்” என்ற குறிப்பு இன்று 5000 மாணவர்கள் தினமும் ஆவலுடன் எதிர்பார்த்து படித்துத் தெளிந்து, புரிந்து கொண்டு, மேலும் மேலும் தங்களுடன் பயணிக்க தயாராக உள்ளனர் என்பது ஒரு சாதனையே!!!.
    பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஆசிரியனாக, ஒரு சாதனையாளராக திகழும் தங்களின் இந்த பணி சிறக்க எல்லாம் வல்ல பரம்பொருளான இறையருள் சித்திக்க வேண்டுகின்(றேன்)றோம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி/////

    உங்கள் அனைவரின் அன்பிற்கும், பாசத்திற்கும் அடியவன் மீது கொண்டுள்ள அக்கறைக்கும் தலை வணங்குகிறேன். நன்றி பொன்னுச்சாமி அண்ணா!

    ReplyDelete
  8. //////Blogger sriram1114 said...
    வணக்கம் ஐயா
    stars2015க்காக விண்ணப்பித்தது தங்கள் அனுமதியை கோரியுள்ளேன்.
    நன்றி ஐயா
    ஸ்ரீராம்/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. Sir,

    I am Sundar Raj aged about 62 years, coming from Kanchi Thondaimandala Vellala family,after serving 30 years in Several Banks as an officer took VRS. At present I am working as a Senior Manager-Admin in a 100 crore US Based company at Electronic City Bangalore. My father aged about 95 years living with me, and my grand father died at the age of 103, father and Grand father both are good scholar and Astrologers, due to frequent transfers and staying away from my family members i am unable to learn Astrology from my father. However, through internet, I am reading all your postings in your blog Classroom 2007 since 2010, you can also find my photo in your blog as a member.

    I would like to apply for Stars 2015, kindly approve and accept me as a member.

    Yours truley,

    Sundar Raj.G
    Mobile No.098450 31826

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com